Sunday, August 2, 2009

ஸூர்யகிரகணோத்ஸ்வம் 7/22/2009 8:10 AM

ஸூர்யகிரகணோத்ஸ்வம் 7/22/2009 8:10 AM

இன்று சென்னையில் அதிகாலையில் கதிரோன் பிறந்ததே அரைகுறை பிரசவத்தில் என்று ஒரு மாயை. விஞ்ஞான மையத்தில் கணிசமான அளவில் மக்கள் கூட்டம். ஒரு மூதாட்டி, ரொம்ப ஃபேஷனபிலாக தொலைநோக்கி கருவிகள் சகிதம் மும்மரமாக அலைந்து கொண்டிருந்தாள். ஒரு இரண்டு வயது சிறுவன் கும்மாளமிட்டு கொண்டிருந்தான். வெள்ளைக்காரப்பையன். அவனது தந்தையின் ஆர்வத்தை மெச்சினேன். நானும், என் பங்குக்கு, இரு சிறுமிகளையும், ஒரு காலேஜ் பையனையும், ஒரு ஆஃபிஸரையும், அழைத்து கொண்டு அங்கு விரைந்தேன். ஒருவரின் (இளம் விஞ்ஞானியோ!) குடுமியையும், அதை அவர் கோடாலி முடிச்சு போட்டு இருந்ததையும் ரசித்தேன்.

ஏற்பாடு நன்றாக இருந்த்தது. நிர்வாகி திரு. அய்யம்பெருமாள், அங்குமிங்குமாக அலைந்தபடி, யாவருக்கும் ஊக்கம் அளித்துக்கொண்டிருந்தார். நல்ல தரிசனம், எல்லாருக்கும். தரெக்னாவில் மேகமூட்டம் எல்லாரையும் ஏமாற்றிவிட்டதாம்.

முழு விவரங்களுக்கும், படங்களுக்கும் பார்க்கவும்:

http://www.hindu.com/2007/03/20/stories/2007032017700200.htm

மூடநம்பிக்கைகள் தகர்ந்த்தே ஹிலாரயிஸ் தான்.

இன்னம்பூரான்

No comments:

Post a Comment