Sunday, March 3, 2013

அன்றொரு நாள்: நவம்பர் 30 கேரட் பட்ட பாடு.



அன்றொரு நாள்: நவம்பர் 30 கேரட் பட்ட பாடு.
8 messages

Innamburan Innamburan Wed, Nov 30, 2011 at 5:19 PM
To: mintamil , thamizhvaasal

அன்றொரு நாள்: நவம்பர் 30
கேரட் பட்ட பாடு.
ஸுபாஷிணி கேரட்டை படுத்திய பாடு என்னை 1914க்கு இழுத்துச் சென்றது.
நடப்பு ஆண்டு 1914:
கிடுக்கியால் பிடித்தால் திடுக்கிடுகிறது; கட்டிப்போட்டதால் நடுங்கிற நடுக்கத்தில் ஒரு சின்ன கண்ணாடி ஆடுகிறது; அதன் வெளிச்சத்தில் நடுக்கம் தெளிவாக தெரிகிறது; ஒரு கிள்ளு கிள்ளினால், வெளிச்சம் வலது பக்கத்தில் ஆடுகிறது. வேக வைத்து, கசக்கி நசுக்கினால், அது இடது பக்கம் மயங்கி வீழ்கிறது. இவ்வாறு ‘ கேரட் பட்ட பாடு’ என்று இங்கிலாந்தில் மைடா வேல் என்ற இடத்தில் கண்டதை பற்றி, வியந்து, வியந்து எழுதினார், ஒரு இதழாளர்.  இதை செய்து காட்டிய விஞ்ஞானி பலதுறைகளில் விற்பன்னர். அமெரிக்காவில் பேடண்ட் வாங்கிய முதல் இந்தியர். இங்கிலாந்தின் ராயல் சொசைட்டியில் 1920லேயே அங்கத்தினராக தேர்ந்தடுக்கப்பட்ட முதல் இந்திய விஞ்ஞானி. டெஸ்லா, மார்க்கோனி, போப்போவ் ஆகியோருடன், ரேடியோ அமைப்பின் தந்தை என்று கருதப்படுபவர்,  ஆச்சார்ய ஸர் ஜகதீஷ் சந்திர போஸ். அவரது ஜன்ம தினம், நவம்பர் 30, 1858.
இவருக்கு தாவர இயல் மீதும் ஆர்வம் அதிகம். அதான் கேரட் டார்ச்சர்! 1900ம் வருடத்திலிருந்து தொடர்ந்த ஆய்வுக்களம். மனித இனத்தின் மேன்மையை பற்றி அதீதமாக எழுதப்பட்டால், ஊர்வன முதல் எந்த உயிரினமும் தாழ்ந்ததில்லை, நெல் கதிருக்கும், ஆல மரத்திற்கும், கல்லுக்கும், பாறைக்கும் ஆத்மா உண்டு என்று நான் சொல்வதுண்டு. அதன் ஆதாரம் 1902 ல் வெளி வந்த Jagadis Chunder Bose: Response in the Living and Non-Living என்ற நூல். இணைய தளத்தில் இங்கே. சுருங்கச்சொல்லின் அவர் நிரூபணம் செய்தவை:1. விஞ்ஞானம் எல்லாம் கண்ணுக்கு தெரிந்தவை மட்டுமல்ல; 2.தாவரங்களுக்கும் நரம்பு மண்டலமுண்டு.3. தாவரங்கள் செய்தியனுப்பிய வண்ணம் உள்ளன. நமக்குத் தான் நுண்ணறிவு போதாது.4.தாவரங்களின் மரணவேதனை கடுமையானது; மின்சாரம் வெளிப்படும்.5. மேற்படி நூலின் ஐந்தாவது அத்தியாயத்தில், தவளையும், பல்லியும், ஆமையும், தக்காளியும், திராக்ஷையும் ஒரே மாதிரி தான் வேதனையை, வலியை உணர்த்துகின்றன என்று நிரூபித்திருக்கிறார். 6. தாவரங்கள் இசைக்கு இசைந்து வளர்கின்றன என்றார். 7.தாவரங்களுக்கு மகிழ்ச்சி, வலி, உணர்வு எல்லாம் உண்டு.
இவருடைய பிரத்யேக பரிசோதனைசாலைக்கு விஞ்ஞானிகள் வந்த வண்ணம் இருந்தனர். கொதிக்கும் போது காபேஜ் படும் வேதனையைக்கண்டு ஆனானப்பட்ட பெர்னார்ட் ஷா கலங்கினார்.ஆனல், இவருடைய ஆராய்ச்சிக்கு அக்காலம் மதிப்பு கிடைக்கவில்லை.அவர் மறைந்து பல வருடங்கள் ஆயின. இப்போது தான் விஞ்ஞானிகள், மேற்படி நூல் வந்து ஒரு நூற்றாண்டு கழிந்த பின்னரும், போஸ் அவர்களின் வழி நடந்து புதிய ஆய்வுகளை வெளியிடுகின்றனர்:
நடப்பு ஆண்டு 2011: 
ஸைய்ன்ட் லூயிஸ்ஸிலிருக்கும் வாஷிங்க்டன் பல்கலைகழகத்தைச் சார்ந்த எலிஸெபத் ஹாஸ்வெல், மேலும் மியா மஸோகா போன்றவர்கள் 2011ல் இதை உறுதி செய்தனர். மஸோகா பொது ஜனங்களே இதை நேரில் உணருமாறு ஏற்பாடு செய்து அசத்தினார். அதா அன்று. ந்யூயார்க் டைம்ஸ், பீ.பீ.சி. ஆகிய ஊடகங்கள் 100 வருடங்களுக்கு முன் போஸ் அவர்கள் சொன்னதை, இப்போது கொட்டை எழுத்தில் பிரசுரிக்கின்றன.
ஸர் ஜகதீஷ் சந்திர போஸ் அவர்கள் உணர்வும், உணர்ச்சியும், அவற்றை உணர்வதும் தான் பிரதானம் என்றார். நம்மை சுற்றி அன்றாடம் கண்ணுக்குப் புலப்படாத,  சத்தமின்றி நடந்து வரும் நிகழ்வுகளை புரிந்து கொள்ளும் அனுபவம் உன்னதமானது என்று செய்து காட்டினார். ‘ ஒரு செடி எழுதிய கதை’ என்ற சொற்பொழிவில் 1918ல் அவர் சொன்னதின் சாராம்சம்:
‘...அறிவை பெருக்க இரு வகைகள் உளன. மேலெழுந்தவாரியான வேற்றுமைகளின் மீது மட்டும் கவனம் காட்டுவது ஒன்று. உன்னதமான வழியோ, ‘என்ன தான் வேற்றுமைகள் தென்பட்டாலும் ஒரு அத்தியாவசியமான ஒருமைப்பாடு அடித்தளத்தில் இருப்பதை புரிந்து கொள்வது...’ஒரே மாதிரியான தொடர்ந்து வரும் ஒருமைப்பாடு’ இயற்கையின் விதி என்க...
இது அவருடைய கொள்கை மட்டுமல்ல. அவர் விஞ்ஞானரீதியாக நிரூபித்த உண்மை, இது. அதா அன்று. இந்தியாவின் தொன்மை தத்துவங்களை மிகவும் மதித்தவரும், சாதி வேற்றுமையை கண்டித்தவரும் ஆன ஆச்சாரிய ஜகதீஷ் சந்திர போஸ் எல்லைகளை கடந்த ஒருமைப்பாடு ஒன்று இயற்கையை இயங்க வைத்தது என்பது பற்றி சொன்ன கருத்து,
” மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் என் முன்னோர்கள் கங்கை நதிக்கரையிலிருந்து ‘அனவரதமும் மாறிக்கொண்டே இருக்கும் பிரபஞ்சத்தின் பரிமாணங்களில் ஒரே ஒரு தத்துவத்தை காண்போர்கள் சிரஞ்சீவி உண்மையை அறிவார்கள்; மற்றவர்கள் அதை அறியார்கள்’ என்று சொன்னது இப்போது எனக்கு புரிகிறது.”
ஆச்சாரிய ஜகதீஷ் சந்திர போஸ், கல்லின் மேலும், உலோகங்கள் மீதும் தன்னுடைய பரிசோதனைகளை நிகழ்த்தினார். ஸர் மைக்கேல் ஃபோஸ்டர் என்ற உடலியல் (veteran physiologist) வல்லுனருடன் ஒரு உரையாடலில், விஷமிடப்பட்ட ஒரு வஸ்துவின் தாக்கத்தை தான் செய்த பதிவை காண்பிக்க, அவரும் அது ஒரு தசையின் தாக்கம் என்று சொல்ல, இவர் அது ஒரு தகரத்துண்டின் அவஸ்தை என்பதை காண்பித்தார்!  மனிதனின் குணாதிசயங்களை கண்டு வியக்கும் நமக்கு, அழுந்த நடந்தால், புல்லுக்கும் ஆங்கே வலிக்குமாம், பாறையும் சோகத்தில் வாடுமாம் என்றெல்லாம் சொன்னால், கேலி செய்யத்தான் தோன்றும். ஆனால், யஜுர்வேதமே மூலிகை (ஒளஷதம்), செடி கொடிகள் (வனஸ்பதி), மரம் (வ்ருக்ஷம்) என்றெல்லாம் பாகுபாடு செய்தது, சிந்தனையை தூண்டுகிறது. 
இந்த இழை எனக்கு சந்துஷ்டி அளிக்கிறது. ஆச்சாரிய ஜகதீஷ் சந்திர போஸ் அவர்களின் நூற்றாண்டில் பிறந்த மகனுக்கு அவருடைய பெயர். வாஷிங்க்டன் பல்கலைகழகத்தில் என் மருமகன் உதவி பேராசிரியர் என்பதால், அங்கு அடிக்கடி சென்று வந்த பாக்கியம். அதற்கெல்லாம் மேலாக: உசாத்துணைகள் தேட எனக்கு பல மணிகள் பிடிக்கும், தினந்தோறும். இன்றைய இழைக்கான உசாத்துணை என்னை தேடி வந்தது.
இன்னம்பூரான்
30 11 2011
420_JC_Bose%25255B3%25255D.jpg

உசாத்துணை:
If You Pick Us, Do We Not Bleed?
Understanding the plant experience helps us understand the human one, too.
By Stefany Anne Golberg

Geetha Sambasivam Wed, Nov 30, 2011 at 7:25 PM
Reply-To: mintamil@googlegroups.com
To: thamizhvaasal@googlegroups.com

இந்த இழை எனக்கு சந்துஷ்டி அளிக்கிறது. //

எங்களுக்கும் சந்துஷ்டி அளித்த பதிவு.  நம் முன்னோர்கள் தெரியாமலா மரத்தையும், செடிகொடிகளையும் கடவுளாக வணங்கி இருக்கிறார்கள்?  காரணம் இருக்குமே! 
2011/11/30 Innamburan Innamburan <innamburan@gmail.com>
அன்றொரு நாள்: நவம்பர் 30
கேரட் பட்ட பாடு.
  மனிதனின் குணாதிசயங்களை கண்டு வியக்கும் நமக்கு, அழுந்த நடந்தால், புல்லுக்கும் ஆங்கே வலிக்குமாம், பாறையும் சோகத்தில் வாடுமாம் என்றெல்லாம் சொன்னால், கேலி செய்யத்தான் தோன்றும். ஆனால், யஜுர்வேதமே மூலிகை (ஒளஷதம்), செடி கொடிகள் (வனஸ்பதி), மரம் (வ்ருக்ஷம்) என்றெல்லாம் பாகுபாடு செய்தது, சிந்தனையை தூண்டுகிறது. 
இந்த இழை எனக்கு சந்துஷ்டி அளிக்கிறது. 
30 11 2011

rajam Thu, Dec 1, 2011 at 2:12 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
Cc
நம்ம தொல்காப்பியர் "ஓரறிவுயிர், ஈரறிவுயிர், ..."  அப்படியெல்லாம் சொல்லி வச்சிருக்காரே ...
[Quoted text hidden]
[Quoted text hidden]

Subashini Tremmel Fri, Dec 2, 2011 at 7:55 PM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com



2011/11/30 Innamburan Innamburan <innamburan@gmail.com>
அன்றொரு நாள்: நவம்பர் 30
கேரட் பட்ட பாடு.
ஸுபாஷிணி கேரட்டை படுத்திய பாடு என்னை 1914க்கு இழுத்துச் சென்றது.
நான் எங்கே படுத்தினேன்..  நல்லா சமைச்சு சாப்பிட்டேன். அவ்வளவு தானே :-)
 
நடப்பு ஆண்டு 1914:
..
ஆச்சாரிய ஜகதீஷ் சந்திர போஸ், கல்லின் மேலும், உலோகங்கள் மீதும் தன்னுடைய பரிசோதனைகளை நிகழ்த்தினார். ஸர் மைக்கேல் ஃபோஸ்டர் என்ற உடலியல் (veteran physiologist) வல்லுனருடன் ஒரு உரையாடலில், விஷமிடப்பட்ட ஒரு வஸ்துவின் தாக்கத்தை தான் செய்த பதிவை காண்பிக்க, அவரும் அது ஒரு தசையின் தாக்கம் என்று சொல்ல, இவர் அது ஒரு தகரத்துண்டின் அவஸ்தை என்பதை காண்பித்தார்!  மனிதனின் குணாதிசயங்களை கண்டு வியக்கும் நமக்கு, அழுந்த நடந்தால், புல்லுக்கும் ஆங்கே வலிக்குமாம், பாறையும் சோகத்தில் வாடுமாம் என்றெல்லாம் சொன்னால், ..

ஆகா.. மனதைத் தொடும் வரிகள்..

சுபா
..


Innamburan Innamburan Fri, Dec 2, 2011 at 9:48 PM
To: mintamil@googlegroups.com


2011/12/2 Subashini Tremmel <ksubashini@gmail.com>


2011/11/30 Innamburan Innamburan <innamburan@gmail.com>
அன்றொரு நாள்: நவம்பர் 30
கேரட் பட்ட பாடு.
ஸுபாஷிணி கேரட்டை படுத்திய பாடு என்னை 1914க்கு இழுத்துச் சென்றது.
நான் எங்கே படுத்தினேன்..  நல்லா சமைச்சு சாப்பிட்டேன். அவ்வளவு தானே :-)
 
~  ஒரு பொயட்டிக் லைசன்ஸ். அவ்வளவு தான். கிடைத்த சான்ஸை விடுவாளோ!

Innamburan Innamburan Fri, Dec 2, 2011 at 9:50 PM
To: mintamil@googlegroups.com


2011/12/2 Subashini Tremmel <ksubashini@gmail.com>


2011/11/30 Innamburan Innamburan <innamburan@gmail.com>
அன்றொரு நாள்: நவம்பர் 30
கேரட் பட்ட பாடு.
ஸுபாஷிணி கேரட்டை படுத்திய பாடு என்னை 1914க்கு இழுத்துச் சென்றது.
நான் எங்கே படுத்தினேன்..  நல்லா சமைச்சு சாப்பிட்டேன். அவ்வளவு தானே :-)
 
நடப்பு ஆண்டு 1914:
..
ஆச்சாரிய ஜகதீஷ் சந்திர போஸ், கல்லின் மேலும், உலோகங்கள் மீதும் தன்னுடைய பரிசோதனைகளை நிகழ்த்தினார். ஸர் மைக்கேல் ஃபோஸ்டர் என்ற உடலியல் (veteran physiologist) வல்லுனருடன் ஒரு உரையாடலில், விஷமிடப்பட்ட ஒரு வஸ்துவின் தாக்கத்தை தான் செய்த பதிவை காண்பிக்க, அவரும் அது ஒரு தசையின் தாக்கம் என்று சொல்ல, இவர் அது ஒரு தகரத்துண்டின் அவஸ்தை என்பதை காண்பித்தார்!  மனிதனின் குணாதிசயங்களை கண்டு வியக்கும் நமக்கு, அழுந்த நடந்தால், புல்லுக்கும் ஆங்கே வலிக்குமாம், பாறையும் சோகத்தில் வாடுமாம் என்றெல்லாம் சொன்னால், ..

ஆகா.. மனதைத் தொடும் வரிகள்..

சுபா
..நன்றி, ஸுபாஷிணி.
இ 
 


Tthamizth Tthenee Sun, Dec 4, 2011 at 3:46 PM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
ஒரு ரகசியம்  சொல்கிறேன்

34 ஆண்டுகள்  பலவிதமான  இயந்திரங்களுடன் உறவாடியிருக்கிறேன்

நாம் அந்த இயந்திரங்களை மதித்து, வணங்கி  வேலை செய்தால்  அவை  நம்மைக் காக்கின்றன

எனக்குத் தெரிந்து பலபேருக்கு விரல் துண்டாகி இருக்கிறது

பலருக்கு  கால் கையில் அடி பட்டிருக்கிறது

நான் கடைசீ வரையில்  மதித்து நடந்துகொண்டு காலையில் சென்றவுடன் தொட்டுக்
கும்பிட்டுவிட்டு பணியைத் தொடங்குவேன்
என்னை எந்த  ஊனத்துக்கும் ஆட்படுத்தாமல்நன்றாக  வாழ வைத்தது இயந்திரங்கள்

நாம் படைத்த இயந்திரங்களே  நம் அன்பை, மரியாதையை, பாசத்தை உணர்ந்து கொள்ளும்போது

"இறைவனால் படைக்கபட்ட தாவரங்கள் எவ்வளவு புரிந்து கொள்ளும்

ஆனால் நமக்குத்தான்  அவைகளின் உணர்வை புரிந்துகொள்ள  சக்தி இல்லை"

அன்புடன்
தமிழ்த்தேனீ

2011/12/2 Innamburan Innamburan <innamburan@gmail.com>:
[Quoted text hidden]
[Quoted text hidden]

Innamburan Innamburan Sun, Dec 4, 2011 at 4:52 PM
To: mintamil@googlegroups.com
~ நன்றி ஐயா,
'...அழுந்த நடந்தால், புல்லுக்கும் ஆங்கே வலிக்குமாம், பாறையும் சோகத்தில் வாடுமாம் என்றெல்லாம்  நான் சொன்னால், .. பொருத்தமாக இயந்திர ரகஸ்யம் சொல்லிவீட்டீர்கள். உண்மை தான். மின்சாரம் உற்பத்தி செய்யும் மெகா இயந்திரங்களுக்கு ஆத்மா இல்லை என்று சொல்ல முடியாது. இறையே படர்க்கை தானே.
இன்னம்பூரான்

2011/12/4 Tthamizth Tthenee <rkc1947@gmail.com>
ஒரு ரகசியம்  சொல்கிறேன்

No comments:

Post a Comment