Tuesday, April 16, 2013

அன்றொரு நாள்: ஏப்ரல் 17: ரத்தமின்றி...!




அன்றொரு நாள்: ஏப்ரல் 17: ரத்தமின்றி...!

Innamburan Innamburan Tue, Apr 17, 2012 at 2:05 AM


அன்றொரு நாள்: ஏப்ரல் 17:
ரத்தமின்றி...!
போர் மூண்டது. அது நீண்டது. ஆண்டாண்டு நீண்டுகொண்டே போனது. பல்லாண்டு, பல்லாண்டு நீண்டும் கண்டு கொள்ளவில்லை, யாரும்? (தேவ் மன்னிப்பாராக.) ‘நந்தன’ வருடம் ஐந்து சுற்று வந்து முப்பத்தைந்து வருடங்கள் ஓடிய பின் (முன்னூத்து முப்பத்தைந்து) தான் அந்த யுத்தத்தின் அருமையை அறிந்தோம். ரத்தம் சிந்தவேயில்லை! ஏன் தெரியுமா? ஒரு தோட்டா கூட சுடப்படவில்லை. யுத்தம் தொடங்கிய தினம்: ஏப்ரல் 17, 1651. சமாதான உடன்படிக்கை கையொப்பமான தினம்: ஏப்ரல் 17, 1985. அது கூட வரலாற்றுத்துறையின் உபயம். இங்கிலாந்துடன் ஒட்டிய தீவுக்குழு: சிலி தீவுக்குழு. தம்மாத்தூண்டு. அதனுடைய ஒரே முனிஸிபாலிட்டியின் சேர்மரும் (மருவாதங்க!) சரித்திர வல்லுனரும் ஆகிய ஶ்ரீமான் டங்கன் ஸ்மித், லண்டனில் இருக்கும் டச்சு தூதரலுவலகத்துக்கு, ‘உமக்கும் எமக்கும் தாவா, அடிதடிச்சண்டை என்ற ஒரு மாயாவாதம் உளது. சட் புட்னு வாங்க. ஒரு சமாதான உடன்படிக்கை போடலாம், ஏப்ரல் 17 அன்று.” என்று கடிதம் எழுதினார். தேதி முக்யம் என்று சொன்னதாக, ஊகிக்கிறேன். சிலபேர் கடைசிப்பக்கத்தைத் திருப்புவார்கள். நான் முதல் பக்கத்துக்கு போகிறேன்: பத்தாம் பசலி.

மக்களாட்சி என்ற சொல் இங்கிலாந்தில் உச்சரிக்கப்பட தொடங்கியகாலம்: 1642 - 1652. ஆலிவர் கிராம்வெல் தலைமையில், பார்லிமெண்டேரியன் கட்சி ராஜவிசுவாசிகளை துரத்தியடித்த காலம். அவர்கள் சிலித்தீவுகளில் அடைக்கலம் நாடினர். நெதர்லாண்ட் (டச்சு) கிராம்வெல் பக்கம். (ஞாயிறு அன்று, இங்கு பில் மார் என்ற ‘கேலிப்பேச்சு பேசி, எல்லாரையும் ‘கல கல’வெனெ சிரிக்க வைத்து, கல கல என்று கல்லாப்பெட்டியை குலுக்கும் வாயாடியின் நிகழ்வுக்குப் போயிருந்தோம். அத்தருணம் நெதெர்லாந்தின் கடலணைகள் பற்றி பேச்சு வந்த போது, நான் ‘அது நெதர்லாந்து- அதாவது -பாதாள லோகம் என்று கேலி செய்தேன். ‘என்னது இது! பில் மாருக்கு அண்ணனாக இருக்கிறீர்களே, என்று அதீத கேலி செய்தார், எதிர்வீட்டுக்காரி. இது நிற்க. இது உட்காராது அல்லவா. அதான்.). 

இது தான் சாக்கு என்று ராஜ விசுவாசிகள் கட்சி டச்சுக்கப்பல்களை உடைக்க, அங்கிருந்து வந்து சேர்ந்த சண்டைக்காரன் அட்மிரல் ட்ரோம் நஷ்ட ஈடு கேட்டார். சரியான பதில் கிடைக்காததால், (தேதியை நோட் செய்து கொள்ளவும்.) ஏப்ரல் 17, 1651 அன்று ‘டம் டமார் டுமீல்’ என்றெல்லாம் ஜயபேரிகை கொட்டாமல் (உடுக்குக் கூட அடிக்க முடியாத இக்கட்டான நிலை: இங்கிலாந்து முழுதும், க்ராம்வெல்லுக்கு ஆதரவு. அடி விழும்.), சிலி மேல் மட்டும் வீரமாக, யுத்த பிரகடனம் செய்தார்.) போதாத காலம்! இங்கிலாந்திலிருந்து வந்த அட்மிரல் ராபெட் ப்ளேக், சிலியில் ஒளிந்திருந்த ராஜவிசுவாசிகளை ஒரு கை பார்க்க, இந்த டச்சு பிரகடனம் லொட லொடவாயிற்று. தேஞ்சும் போயிடுத்தா, யாரும் கவனியாமல், 335 வருடங்கள் இது ஒரு அமைதி யுத்தமாயிற்று. ஆக்ச்சுவல்லி, அட்மிரல் ட்ரோம் செய்தது சொந்த சாஹித்யம். டச்சு அரசு ஆணையொன்றுமில்லை. எனவே, மற்றொரு சாதனை. இந்த போருக்கு துவக்கமில்லை; முடிபு மட்டும் தான். கேட்கவே நன்றாக இருக்கிறது. உங்களுக்கெல்லாம் ஒரு ஹோம் ஒர்க். பி.கு. பார்க்கவும்.
இன்னம்பூரான்
17 04 2012
பி.கு: முதல்/இரண்டாம் உலக யுத்தங்கள், இண்டோ-பாகிஸ்தான் யுத்தங்கள், இந்த மாதிரி நடந்திருந்தால், பின் விளைவுகள் என்னவாக இருந்திருக்கும்? 100 சொற்களுக்குள், கேலி பின்னூட்டம் வரைக. கெடு: 21 04 2012.

உசாத்துணை:Inline image 1

செல்வன் Tue, Apr 17, 2012 at 2:13 AM

Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com


2012/4/16 Innamburan Innamburan <innamburan@gmail.com>
பி.கு: முதல்/இரண்டாம் உலக யுத்தங்கள், இண்டோ-பாகிஸ்தான் யுத்தங்கள், இந்த மாதிரி நடந்திருந்தால், பின் விளைவுகள் என்னவாக இருந்திருக்கும்? 100 சொற்களுக்குள், கேலி பின்னூட்டம் வரைக.
சீரியஸ் பின்னூட்டம் தான் போடுவேன்:-)

இரண்டாம் உலக யுத்தம் நடக்கவில்லையெனில் இன்னும் நாஜி வதைமுகாம்களில் யூதர்கள் கொல்லபட்டு கொண்டிருப்பார்கள். சீனா,கொரியாவில் ஜப்பானின் வெறியாட்டம் இன்னும் தொடர்ந்திருக்கும்.

யுத்தம் வேண்டாம் என சொல்வது அதனால் தான் எனக்கு அவ்வளவா பிடிப்பதில்லை. தீமைக்கு எதிரா இடைவிடாமல் போராடிகிட்டே இருக்கணும். நல்லவர்கள் ஆயுதத்தை கீழே போடுவது தீமையிடம் அவர்கள் சரணடைவதையே குறிக்கும்.அதனால் தான் நம் தெய்வங்கள் எல்லாம் எப்பவும் ஆயுதபாணியா இருக்கின்றன.
--
செல்வன்

கி.காளைராசன் Tue, Apr 17, 2012 at 8:42 PM

Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
வணக்கம்.

2012/4/17 செல்வன் <holyape@gmail.com>

யுத்தம் வேண்டாம் என சொல்வது அதனால் தான் எனக்கு அவ்வளவா பிடிப்பதில்லை. தீமைக்கு எதிரா இடைவிடாமல் போராடிகிட்டே இருக்கணும். நல்லவர்கள் ஆயுதத்தை கீழே போடுவது தீமையிடம் அவர்கள் சரணடைவதையே குறிக்கும்.அதனால் தான் நம் தெய்வங்கள் எல்லாம் எப்பவும் ஆயுதபாணியா இருக்கின்றன.


சபாஷ்.  சரியாகச் சொன்னீர்கள்.
வல்லரசாக இருந்தால்தான் நல்லரசாக இருக்க முடியும்.
நல்லரசாக இருந்தால் மட்டும் போதாது, வல்லரசாகவும் இருக்க வேண்டும்.

அருமையான சிந்தனை. பாராட்டுகள்.
அன்பன்

கி.காளைராசன்

[Quoted text hidden]

கி.காளைராசன் Tue, Apr 17, 2012 at 8:44 PM

Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
stick and carrot இரண்டும் வேண்டும்.
வேண்டிய இடத்தில் பயன்படுத்த வேண்டும்.


2012/4/18 கி.காளைராசன் <kalairajan26@gmail.com>

வணக்கம்.

2012/4/17 செல்வன் <holyape@gmail.com>

யுத்தம் வேண்டாம் என சொல்வது அதனால் தான் எனக்கு அவ்வளவா பிடிப்பதில்லை. தீமைக்கு எதிரா இடைவிடாமல் போராடிகிட்டே இருக்கணும். நல்லவர்கள் ஆயுதத்தை கீழே போடுவது தீமையிடம் அவர்கள் சரணடைவதையே குறிக்கும்.அதனால் தான் நம் தெய்வங்கள் எல்லாம் எப்பவும் ஆயுதபாணியா இருக்கின்றன.

சபாஷ்.  சரியாகச் சொன்னீர்கள்.
வல்லரசாக இருந்தால்தான் நல்லரசாக இருக்க முடியும்.
நல்லரசாக இருந்தால் மட்டும் போதாது, வல்லரசாகவும் இருக்க வேண்டும்.

அருமையான சிந்தனை. பாராட்டுகள்.
அன்பன்

கி.காளைராசன்

செல்வன் Thu, Apr 19, 2012 at 2:25 AM

Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com


2012/4/17 கி.காளைராசன் <kalairajan26@gmail.com>

வல்லரசாக இருந்தால்தான் நல்லரசாக இருக்க முடியும்.
நல்லரசாக இருந்தால் மட்டும் போதாது, வல்லரசாகவும் இருக்க வேண்டும்.

அருமையான சிந்தனை. பாராட்டுகள்.


நன்றி காளைராசன் ஐயா
--
செல்வன

DEV RAJ Thu, Apr 19, 2012 at 5:09 AM

Reply-To: mintamil@googlegroups.com
To: மின்தமிழ்
On Apr 16, 6:13 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:
> யுத்தம் வேண்டாம் என சொல்வது அதனால் தான் எனக்கு அவ்வளவா பிடிப்பதில்லை.
> தீமைக்கு எதிரா இடைவிடாமல் போராடிகிட்டே இருக்கணும். நல்லவர்கள் ஆயுதத்தை கீழே
> போடுவது தீமையிடம் அவர்கள் சரணடைவதையே குறிக்கும்.அதனால் தான் நம் தெய்வங்கள்
> எல்லாம் எப்பவும் ஆயுதபாணியா இருக்கின்றன.
                         || இத³ம் அக்³நயே ஸ்விஷ்டக்ருʼதே, இத³ம் ந மம
||


India's first Inter-Continental Ballistic Missile (ICBM), Agni-V, was
successfully test-fired today at 8:05 am from Wheeler Island off the
Odisha coast. The test launch was originally scheduled for Wednesday,
but weather played spoilsport. Here are the top 10 facts on the
missile that has been designed and developed by Defence Research and
Development Organisation (DRDO) scientists:

1). India will break into the exclusive ICBM club of six countries
including the United States, Russia, United Kingdom, China and France
once the 50-tonne Agni-V is ready for induction by 2014-2015, although
some others say unless India acquires an 8,000 km range missile, it
cannot become a part of this club. But DRDO scientists are sticking to
their claim.

2). The Agni series of missiles, including Agni-V, is crucial for
India's defence vis-a-vis China since Beijing has upped the ante in
recent times by deploying missiles in Tibet Autonomous Region
bordering India.

3). Tipped to be a game changer by DRDO Chief Dr VK Saraswat, Agni-V
will extend India's reach all over Asia, parts of Africa and parts of
Europe.

4). Once fired, it cannot be stopped. It travels faster than a bullet
and can carry 1,000 kilograms of nuclear weapons. It can be launched
using a special canister. Why, it can even be launched from a
roadside!

5). With a range of 5,000 km, Agni-V, once validated and inducted into
the armed forces after several more tests, will be India's longest-
range missile to carry a nuclear warhead. It will have the capacity to
carry a nuclear warhead weighing over a tonne.

6). Agni-V will give India the technological know-how to launch many
nuclear warheads using the same missile.

7). Agni-V can be configured to launch small satellites and can be
used later even to shoot down enemy satellites in orbits.



தேவ்


வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் இதை முக்கிய செய்தியாக போட்டிருந்தார்கள்.


வாழ்க பாரதம். நன்றி தேவ் சாருக்கு

--
செல்வன்

[Quoted text hidden]

Innamburan Innamburan Thu, Apr 19, 2012 at 10:12 PM
To: mintamil@googlegroups.com
அமைந்தது பாருங்கள். நானும் தேவ் சாருக்கு நன்றி சொல்லவேண்டும்.
இன்னம்பூரான்


DEV RAJ Fri, Apr 20, 2012 at 12:16 AM

Reply-To: mintamil@googlegroups.com
To: மின்தமிழ்
நம்பர்க் குரியர் அவ்வீரர் - தங்கள்
நல்லுயிர் ஈந்தும் கொடியினைக் காப்பர்
                                         (மஹாகவி)


நம் விஞ்ஞானிகளுக்கு நன்றி சொல்வோம்



தேவ்

On Apr 19, 2:12 pm, Innamburan Innamburan <innambu...@gmail.com>
wrote:
> அமைந்தது பாருங்கள். நானும் தேவ் சாருக்கு நன்றி சொல்லவேண்டும்.
> இன்னம்பூரான்

Geetha Sambasivam Fri, Apr 20, 2012 at 2:45 A
பி.கு: முதல்/இரண்டாம் உலக யுத்தங்கள், இண்டோ-பாகிஸ்தான் யுத்தங்கள், இந்த மாதிரி நடந்திருந்தால், பின் விளைவுகள் என்னவாக இருந்திருக்கும்? 100 சொற்களுக்குள், கேலி பின்னூட்டம் வரைக. கெடு: 21 04 2012.//

எங்கே?? இன்னையிலே இருந்து இணையம் இருக்காது. :(((( count me out!  என்றாலும் மீண்டும் மீண்டும் படிக்க வேண்டும் இந்த இழையை. அலெக்சாண்டர் டூமாஸை (சரியான உச்சரிப்பா?) நினைத்துக் கொண்டே படித்தேன்.

On Tue, Apr 17, 2012 at 6:35 AM, Innamburan Innamburan <innamburan@gmail.com> wrote:

அன்றொரு நாள்: ஏப்ரல் 17:
ரத்தமின்றி...!
இன்னம்பூரான்
17 04 2012
பி.கு: முதல்/இரண்டாம் உலக யுத்தங்கள், இண்டோ-பாகிஸ்தான் யுத்தங்கள், இந்த மாதிரி நடந்திருந்தால், பின் விளைவுகள் என்னவாக இருந்திருக்கும்? 100 சொற்களுக்குள், கேலி பின்னூட்டம் வரைக. கெடு: 21 04 2012.

உசாத்துணை:Inline image 1
http://en.wikipedia.org/wiki/Three_Hundred_and_Thirty_Five_Years'_War


Geetha SambasivamFri, Apr 20, 2012 at 2:47 AM

Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
நான் செல்வன் பக்கமே!  
[Quoted text hidden]

No comments:

Post a Comment