Thursday, April 25, 2013

தணிக்கை செய்வதில் தணியா வேகம் -17 “விட்ட குறை, தொட்டகுறை”:


தணிக்கை செய்வதில் தணியா வேகம் -17
“விட்ட குறை, தொட்டகுறை”:
Innamburan Innamburan Sat, Jan 16, 2010 at 5:49 PM

விட்ட குறைதொட்டகுறை


தணிக்கை செய்வதில் தணியா வேகம் -2:
http://farm3.static.flickr.com/2180/2065012586_4ada249b8b.jpg

இப்படியாகபாடமும்வேலையும் இணைந்து பயணித்து வரும் காலத்தேஎதிர்பாராமல்ஒரு நாள்அப்பா ஆஃபிஸுக்கு திடீர் விஜயம் செய்தார். அந்த காலத்திலேயார் வேணுமானாலும் வரலாம்;போகலாம். தங்கு தடை கிடையாது. என் மேஜை துப்புறவாக இருந்தததைக் கண்டு திடுக்கிட்டார். "என்னடா இதுவிவஸ்தை யில்லாமல்ஏ.ஜீ. பார்த்தால் என்ன நினைப்பார்இரண்டு கோப்புக்களை மேஜையில் வை." என்றார். அனுபவம் பேசுகிறது. அக்காலம்மேலதிகாரிகளின் நன்மதிப்பு இல்லை என்றால் 'அரோஹராதான். வேலைப்பளு வெளிப்படையாகத்தெரியவேண்டும்இல்லாவிட்டால் கூட.
சொல்லப்போனால்கோட்டுப்போட்டுண்டு போறதேஒரு உத்தி. நாங்கள் எல்லாம்அதிகமாப்போனாஒரு டை. அதுவும் கலருக்குத்தான். சில அனுபவசாலிகள்கோட்டில்லாமல் வரமாட்டார்கள். வந்தவுடன்கழட்டியும்நாற்காலியில் மாட்டி விடுவாஅர்கள். ஏ.ஜீ. கூப்டாஅது முதுகேறும். இல்லாவிட்டால்மாட்டப்பட்ட கோட்டு தவம் கிடக்கஸார் இல்லையெனில்,ஏதோ வேலையாக அலைகிறார் என்று ஒரு மாயம். எனக்கு தெரிந்த ஒருவர்கோட்டை மாட்டிவிட்டுமத்தவாளோட வாயாடப்போயிடுவார். ஏ.ஜீ. கூப்டா,கடமையுணர்ச்சியுடன்ப்யூன் வந்து சொல்வான். கோட்டு முதுகேறும்.

இன்னும் சிலருக்குமத்தவா வேலையை இழுத்துப்போட்டுக்கிற துர்க்குணம் உண்டு. ஒருத்தர் (பெயர் வேண்டாமேஇதை கேள்விப்பட்ட 'புலு புலு'ன்னு சண்டைக்கு வந்துருவார்!) ஜன்னல் பக்கத்திலே மேஜை நாற்காலிப்போட்டுண்டு உட்கார்ந்திருப்பார். எந்த ப்யூன் போனாலும்கோப்பை பிடுங்கிடுவார். இஷ்டமிருந்தால்தனக்கு ஆதாயம் இருக்குமானால்அதை குடைந்து ஏதோ எழுதுவார். அப்றம் என்னசப்றம் தான். இஷ்டமில்லை என்றால்கோப்புப்போக்குசிவன் போக்கு என்று விட்டு விடுவார். தனக்கும் இந்த அரசு ரகஸ்யம் தெரியும் என்றுபிற்காலம் காட்டிக்கொள்வார். 'அடுத்த வீட்டு தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டுஎன்று சிலர் தன் வேலையைத் தவிரமற்றவர்கள் வேலையை மட்டும் செய்வார்கள். சான்றாககொல்லன் பட்டறையில் ஈக்கு என்ன வேலைஅதற்காகவே இரண்டு ஸீனியர் செக்ஷன்கள்- Treasury Miscellaneous & Works Miscellaneous.. அதாவது 'கருவூலப்பிரிவு: விட்ட குறைதொட்டகுறை பொதுப்பணிப்பிரிவு: விட்ட குறைதொட்டகுறை இந்த இரண்டு செக்க்ஷனும் புகுந்து விளையாடுவாங்க. கேள்வி முறையில்லை.

மாரல்: நிர்வாகம் உறைந்து போகக்கூடாது. பழையன கழிதலும்புதியன புகுதலும் திறனுடன் நடந்து கொண்டே இருக்கவேண்டும்..

இன்னம்பூரான்


2010/1/16 Geetha Sambasivam

இது எப்டி? இன்றைய ஜூனியர் விகடனில் வந்த  ஒரு பகுதி:
"...''சமீபத்தில் நீலகிரியில் ஏற்பட்ட நிலச்சரிவு களின்போது சாலையோரங்களில் இருந்த சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சரிஞ்சி ருச்சு. ஈட்டி, சில்வர் ஓக், செண்பகம் உள்ளிட்ட அந்த மரங்களோட மதிப்பு கோடிக்கணக்கில் இருக்குமாம். இந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி கொடுத்ததைத் தொடர்ந்து, அவற்றை வெட்டும் ஏலத்தை எடுக்க கான்ட்ராக்டர்களுக்குள் கடும் போட்டியாம். ஆனா, அவங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளிட்டு, ஆளுங்கட்சிப் புள்ளி ஒருவரோட கை பாணத்துக்கு டெண்டரை குடுத்துட்டாங்களாம். அதுவும் சில லட்சங்களுக்குள்ளே சீப்பா கொடுத்திருக்காங்க. டெண்டரை எடுத்த அந்த கை பாணமோ, இதுதான் சாக்குன்னு சொல்லி, நல்லா இருக்கிற மரங்களிலும் ரம்பத்தை பாய்ச்சுறாராம். இந்த மேட்டர் தெரிஞ்சு விசாரணைக்கு வந்த வனத் துறையினரையும் வாகாய் 'கவனிச்சு' வாயடைச்சுட்டு, மங்களகரமா சுந்தரமா தொடருதாம் மரம் வெட்டு.'' 
மின் தமிழில்  ஜோதிஷம் பற்றி ஒரு இழை சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கிறது. ஆனால், ஸீலிட்ட டெண்டர் கவருக்குள் இருக்கும் மர்மம் காணப்பெறுமோ? 'முடியும். டாட்டந்ஹாம் கையேடு போடுவார். நாஙக் திரிபு மன்னர்கள்' என்று ஒரு பீ.டபிள்யூ.டீஆசாமி சொல்றாரு.
--
இன்னம்பூரான்
 
 


ஓ! அவரும் களப்பணிதான் செய்து கொண்டிருந்தாரா?
:-)))

2010/1/15 Innamburan Innamburan <innamburan@googlemail.com>
இருட்டிவிட்டது. உயர்நிலை பொறியாளரோ சகதியில் நின்று கொண்டு மேற்பார்வை செய்து கொண்டிருந்தார்
Geetha Sambasivam Mon, Jan 18, 2010 at 4:46 AM

//மாரல்: நிர்வாகம் உறைந்து போகக்கூடாது. பழையன கழிதலும்புதியன புகுதலும் திறனுடன் நடந்து கொண்டே இருக்கவேண்டும்..//

மத்திய அரசு ஓரளவு பரவாயில்லைனு தான் தோணுது. அதுக்கும் பிரச்னை வராமல் இருக்கப் பிரார்த்திப்போமாக!

PENNESWARAN KRISHNA RAO Mon, Jan 18, 2010 at 8:39 AM
கீதாம்மா
 
யார் சொன்னது மத்திய அரசு பரவாயில்லை என்று?
 
 
உருப்படியாக இருப்பதற்கு ஏதாவது வாய்ப்பு உண்டா என்ன?  மத்திய அரசு அலுவகத்தில் நடக்கும் கூத்துக்கள் இன்னும் ஏராளம்.
 
சொந்த அனுபவம் நிறைய.  நானே நிறைய சொதப்பி இருக்கிறேன்.   என்னை விட முட்டாள்களுக்கு  நான் அடித்த ஜால்ரா ஓசை கண்டிப்பாக இமயமலை வரை கேட்டிருக்கும்.
 
எல்லா இடத்திலும் ஒரே கதைதான்.
 
இன்னம்பூரான் ஐயாவின் தொடர் அதி அற்புதம்.  தொடரட்டும் இந்த சுவாரசியம்.
 
அன்புடன்
 
பென்னேஸ்வரன்

Geetha Sambasivam Mon, Jan 18, 2010 at 8:40 AM

அட??? இப்படியும் இருக்கா??? ஏமாந்துட்டேனோ???

Image Credit:http://farm3.static.flickr.com/2180/2065012586_4ada249b8b.jpg
இன்னம்பூரான்
25 04 2013

No comments:

Post a Comment