Tuesday, May 7, 2013

தேமதுரத் தமிழோசை விடுதலை மீட்பும் குடியரசின் தூண்களும்: 1






Tue, May 7, 2013 at 7:17 PM

தேமதுரத் தமிழோசை விடுதலை மீட்பும் குடியரசின் தூண்களும்: 1
28 messages

Innamburan Innamburan <innamburan@gmail.com>Thu, Nov 15, 2012 at 10:25 PM

தேமதுரத் தமிழோசை

விடுதலை மீட்பும் குடியரசின் தூண்களும்: 1
Inline image 1


யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவ தெங்குங் காணோம்
பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும்
இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு
நாமமது தமிழரெனக் கொண்டிங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும் வகை செய்தல் வேண்டும.
யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்,
வாள்ளுவர்போல், இளங்கோவைப் போல்
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை
உண்மை, வெறும் புகழ்ச்சி யில்லை
ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்
வாழ்கின்§ம், ஒருசொற் கேளீர்
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்.

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல்வேண்டும்
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்லுவதிலோர் மகிமை யில்லை
திறமான புலமையெனில் வெளிநாட்டோர்
அதை வணக்கஞ் செய்தல் வேண்டும்.

மகாகவி சுப்பிரமணிய பாரதியார்


மகாகவி சுப்பிரமணிய பாரதியார் என்று நீட்டி முழக்கி எழுதுவது தான் என் வழக்கம். இது வாயுபசாரமில்லை. நான் அவருக்கு செலுத்தும் மரியாதை. அவருடைய கவிதைகளுக்கு உரை அவை தான். எளிமையான தமிழ். சுளுவாக படிக்கலாம். பளிங்கு நீர் போன்ற தெளிவு.
தமிழுக்கு இறவாத புகழுடைய புதுநூல்கள் கேட்கிறார், மகாகவி சுப்பிரமணிய பாரதியார். இன்று வேறொரு இழையில், முனைவர் ராஜம் மின்தமிழ் இடுகைகள் ஆராய்ச்சி மாணவர்களுக்கு உதவும் என்ற நம்பிக்கையை தெரிவித்திருக்கிறார். கண்ணன் உடனே செயலில் இறங்கச்சொல்கிறார். ஸுபாஷிணி திட்டமிட்டு செயல்பட சொல்கிறார். அவ்வாறே செய்வோம் என்று இந்த தொடரை தொடங்கினேன். இந்தியா நமது தாயகம் தானே. இந்திய ஜனநாயகத்தின் வரலாற்றை நமது இளைய சமுதாயம் அறிவது நலன் பயக்கும்.

தமிழ்நாட்டை சார்ந்த முனைவர் பத்ம பூஷண் ராமச்சந்திரா குஹா ஒரு உலகபிரஜை. வரலாற்று ஆசிரியர். கிரிக்கெட் ஆர்வலர். தற்காலம் லண்டன் பொருளியல் பல்கலைகழகத்தில் வரலாறு/சர்வதேச நிலவர துறைகளில் பேராசிரியர். என்னுடைய மானசீக ஆசான் ஹெரால்ட் லாஸ்கியின் படைப்பு அந்த பல்கலைக்கழகம். (அவருடைய அறிவுரையின் மீது தான் பிரதமர் நேரு முன்னாள் ஜனாதிபதி கே.ஆர். நாரயணன் அவர்களை இந்திய வெளியுறவு இலாக்காவில் நியமனம் செய்தார்.)  முனைவர் குஹா பல நூல்களை எழுதியவர். அமெரிக்க டைம்ஸ் இதழ்  அவரை ‘இந்திய ஜனநாயகத்தின் முன்னோடி வரலாற்றாசிரியர்’ என்று புகழ்ந்தது. அவருடைய ‘தேசபக்தர்களும், ஒருதலைபக்ஷ வாதிகளும்’ (Patriots and Partisans) என்ற நூல் பிரபல பெங்குவின் பிரசுரத்தால் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அவர் யாரையும் விட்டுவைப்பதில்லை. இன்று மமதா பானர்ஜியின் யதேச்சிதிகாரத்தைக் கொல்கத்தாவில் விமரிசித்தார். அவரை பற்றிய மேலதிக விவரங்களை பிறகு தருகிறேன்.

அவர் சமீபத்தில் கீழ்க்கண்ட நூல்களை, என் சிறு வயதிலேயே சிந்தனை இதழ்களில் சிறந்ததாக கருதப்பட்ட, 1914லிருந்து வெளி வரும் The New Republic என்ற அமெரிக்க இதழில் கீழ்க்கண்ட பிரபல நூல்களை மதீப்பீடு செய்திருந்தார். அது ஒரு நீண்ட கட்டுரை. நான் கேட்ட சில நிமிடங்களிலேயே, அதை தமிழாக்கம் செய்து மின் தமிழில் வெளியிட தாராள மனப்பான்மையுடன் சம்மதம் தெரிவித்தார். அவருக்கு நன்றி தெரிவித்து, அவரது காப்புரிமையை அறிவித்து, அந்த அமெரிக்க இதழுக்கு 60 வருடங்களாக உமது இதழை அறிவேன் என்று அவர்களுக்கு நான் பட்ட கடனை தெரிவித்து, அந்த கட்டுரையின் தமிழாக்கத்தின் முதல் பகுதியை பதிவு செய்கிறேன். பிழைகள் பொறுத்தாள்க. திசை மாற்றாதீர்கள். மாற்றுக்கருத்து இருப்பின், சான்றுடன் பகர்க. முனைவர் குஹாவின் ஆய்வு உலகளவில் சான்றாக, பல பல்கலைக்கழகங்களில் கருதப்படுகிறது. தனிமடல்கள் அனுப்பினால், அவை கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும்.

Recovering Liberties: Indian Thought in the Age of Liberalism and Empire
By C. A. Bayly
(Cambridge University Press, 383 pp., $29.99)

Democracy and Its Institutions 
By André Béteille
(Oxford University Press India, 228 pp., £27.50)
இனி, அவரது கட்டுரையின் என்னுடைய தமிழாக்கம். பகுதி ஒன்று.
*
மனித வரலாற்றில் இந்திய ஜனநாயகம் ஒரு துணிச்சலான,  கட்டவிழ்த்த அரசியல் பரிசோதனை தான்.  இது வரை, பலபட்டறை சமூகங்களிருந்து ஒரே தேசீய நாடு இவ்வாறு உருவானதேயில்லை. பிறவிலேயே மத அடிப்படையில் நாடு பிரிவு படுத்தப்பட்டது. எனினும், முஸ்லீம் சரணாலயமாக அமைந்த பாகிஸ்தான் அளவுக்கு, இந்தியாவில் முஸ்லீம் ஜனத்தொகை உள்ளது. இங்கு ஆஸ்ட்ரேலியாவை விட கிருத்துவர்கள் அதிகம்; திபெத்தை விட பெளத்தர்கள். எந்த நாட்டிலும் இந்த அளவு சீக்கியர்களும், சமணர்களும், பார்ஸிகளும் கிடையாது. இந்தியாவில் பெரும்பான்மையினராக கருதப்படும் ஹிந்து மதத்திற்க்குள் சாதி, இன பிரிவுகள் பல்லாயிரக்கணக்கானவை. அப்பப்பா! எத்தனை மொழிகள்! கரன்ஸி நோட்டுகளில் பதினேழு மொழிகள், அத்தனை லிபிகளில்.
இது ஒரு செயற்கை தேசீயமையா! ஜனநாயகத்துக்கும், இதற்கும் எத்தனை ஒவ்வாமை! பாருங்களேன். எழுதப்படிக்க தெரியாத ஏழைகளால், இந்த அளவுக்கு, இந்த மாதிரி பிரிதிநிதித்துவ எஜமானர்கள் வேறெங்கும் தேர்ந்தெடுக்கப்பட்டதில்லை, ஐயா. மேற்கத்திய நாடுகளில் வாக்குரிமை படிப்படியாக கொடுக்கப்பட்டது. இந்திய அரசியல் சாஸனமோ, சாதி/மத/இன/வாழ்க்கைத்தரம்/கல்வி தகுதி/பால் ஆகிய பாகுபாடுகள் இல்லாமல், எல்லாருக்கும், ஒரேடியாக வாக்குரிமை அளித்து விட்டது. இது நம்பிக்கையின் அடிப்படையில் வழங்கப்பட்டது. இதை கண்டு உலகம் வியந்தது. முதல் பொது தேர்தல் 1952ல் நடந்த போது, ‘இது வரலாற்றிலேயே பெரிய சூதாட்டம்’ என்ற பொருள்பட ஒரு பிரபல இந்திய இதழாளர் எழுதினார். சூதாட்டமோ, இல்லையோ, அதை வெற்றி என்று தான் சொல்ல தோன்றுகிறது. 14 பொது தேர்தல்கள் நடந்தேறியன. ஒவ்வொன்றும்  மாபெரும் ஜனநாயக பரிசோதனை தான். கிட்டத்தட்ட 40 கோடி மக்கள் 2009ல் வாக்களித்தார்கள். ஃபிரான்ஸ்/ஜெர்மனியை விட பெரிய மாநிலங்களிலும் தேர்தல்.
*
மூலம்:
*
I.
THE REPUBLIC OF INDIA is the most reckless political experiment in human history. Never before was a single nation constructed out of so many diverse and disparate parts. Partitioned at birth on the basis of religion, India now has almost as many Muslims as the Muslim homeland of Pakistan. It has more Christians than Australia, more Buddhists than Tibet, more Sikhs, Jains, and Parsis than any country in the world. The Hindus, nominally the religious “majority,” are divided into tens of thousands of endogamous castes and sects. Meanwhile, the extraordinary linguistic diversity of India is represented on the country’s currency notes, with the denomination—50 rupees, 10 rupees, and so on—written in seventeen languages, each with a distinct script.
This is an unnatural nation, as well as an unlikely democracy. Never before was a population so poor and so illiterate asked to vote freely to choose who would govern it. Unlike in the West, where the franchise was granted in stages, the Indian constitution immediately gave the vote to every adult regardless of caste, class, education, or gender. This was an act of faith, greeted with widespread disbelief: writing of the first general elections, held in 1952, a prominent Indian editor observed that they were the “biggest gamble in history.” It was a gamble that seems to have paid off—there have been fourteen general elections since, each the greatest democratic exercise in human history (with some four hundred million voting in the last iteration in 2009), as well as regular elections in states more populous than France or Germany.
*
சேமமுற வேண்டும் என்று  தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வோம், மின் தமிழர்கள் கூட்டுறவில்.
(தொடரும்)
இன்னம்பூரான்
15 11 2012

Geetha Sambasivam Fri, Nov 16, 2012 at 12:50 AM

மெளனமாய்த் தொடர்கிறேன்.  நன்றி.

2012/11/16 Innamburan Innamburan <innamburan@gmail.com>
தேமதுரத் தமிழோசை

விடுதலை மீட்பும் குடியரசின் தூண்களும்: 1




N. Kannan Fri, Nov 16, 2012 at 8:11 AM

What a coincidence. Just now I posted my thoughts on evolving a common
Indian administrative, scientific language! Only when the Tamil truly
understand the strength of Indian Union and work hard to influence it
positively there is no growth for Tamil (in my humble opinion).

’இ’னாவின் எண்ணங்கள் இனிமையாய் வலம் வரட்டும் இங்கு!

N.Kannan
[Quoted text hidden]

shylaja Fri, Nov 16, 2012 at 8:25 AM

   வீட்டில்  தமிழ் முழங்குவதே  அரிதாகிக்கொண்டிருக்கிறது இ சார். அந்நியமொழியின் ஆதிக்கம் இளைய தலைமுறையிடம்  பெருகிவருகிறது.
 
தமிழ்  வளர்கிறதா  வீழ்கிறதா?
 
ஒவ்வொரு மொழியிலும் மொழிப்பற்றாளர்கள் இருக்கிறார்கள். ஆங்கிலமொழிப்பற்றாளர்களைவிட பிரெஞ்சுமொழிப்பற்றாளர்கள் தங்கள் மொழியில் தீவிரவாதிகள் என்பார் என் தந்தை. ஏன் ரஷ்ய இனப்பற்றாளர்கள்(ஸ்லாங் இனத்தினர்) அதி தீவிரவாதிகள் எனக்கேள்விப்பட்டிருக்கிறேன். அலெக்சாண்டர் புஷ்கின் தான் இந்த ஸ்லாங் இனப்பற்றையும் ரஷ்யமொழிப்பற்றையும் தொடங்கினார். டால்ஸ்டாய் பிஸ்டாவங்க் அலெக்சாண்டர் ஹெர்சன் பொன்றவரக்ள் நம்மையெல்லாம் விட தீவிர மொழிப்பற்று இனப்பற்றுக்கொண்டவர்கள். அவர்கள் எழுத்து சாதனைகள் உலகு அறிந்து இன்றும் பாராட்டக்கூடிய பெருமைகொண்டதாக இருக்கிறதே.
1905ம் ஆண்டுவாக்கில் பாரதி வந்தார். சுதேசி இயக்கம் பாரதிக்கு சுதேசிய கீதங்கள் பாட உந்தியது. சுதந்திர உணர்வுக்கவிதைகளைப்பாடினார். நாட்டு சுதந்திரம்தான் தனி மனித சுதந்திரத்தை பாரதி சொல்லவில்லை. பிறகு திராவிட இயக்கம் தோன்றியது அதன் வரலாறு மக்கள் அறிந்ததே.
தமிழ் மற்றும் தமிழ் இலக்கியம் சுதந்திரத்திற்குப்பின் எந்த அளவுக்கு வளர்ந்தது? பெரியார் அண்ணா போன்றோரின் கருத்துக்களைவிட அவர்கள் தமிழ் ,பரப்பிய தமிழ் எந்த அளவுக்கு தாக்கங்களை ஏற்படுத்தின?
நல்ல தரமான உயர் படைப்பிலக்கியம் எப்படி வளர்ந்தது? பாரதி பாரதிதாசன் கவிதைகள் மறுமலர்ச்சி எழுத்தாளர்களீன் சிறுகதைகள் வசன எழுத்துக்களால் தமிழ் வளர்ந்தது ஆனால் இன்று நிலமை எப்படி உள்ளது?
முதலில் நல்ல இலக்கியம் படைப்பிலக்கியம் கவிதை நாவல் சிறுகதை என்று எடுத்துக்கொண்டால் இவற்றில் செவ்விலக்கியம் என்னும் அந்தஸ்தைப்பெறும் படைப்புகள் எவை?
மலையாளத்தில் சாகித்ய அகாடமி என்னும் அமைப்பு திருச்சூரில் சுமார் 100 ஆண்டுகளாக நடக்கிறது அவர்களே தனியாக இலக்கியப்பரிசுகள் இலக்கிய மாநாடுகள் நடத்துகிறார்கள்.
 
கன்னட சாகித்ய அகாடமி சாகித்ய சம்மேளன நிகழ்ச்சிக்கு மாநில அரசு 2011ல் 1.5 கோடி ரூ உதவித்தொகை கொடுத்துள்ளது. மராட்டி சாகித்ய சம்மேளன விழாக்களில் பார்வையாளர்களாக முன்பெல்லாம் அந்த நாள் முதலமைச்சர்கள் வந்து அமர்வார்களாம்.இங்கே நம் அமைச்சர்களுக்கு அதற்கு நேரம் இருக்கிறதா ? மான் மயில் ஆடுவதைக்காணவே முந்தின அரசியல் முண்டியடித்தது! அவர்களைப்பற்றின குற்றப்பத்திரிகை வாசிக்கவே இந்த அரசியலுக்கு சரியாக இருக்கிறது.
 
வங்காளமொழியின் இலக்கியம் பற்றி சொல்லவும் வேண்டுமோ? வங்காளத்தின் பிரபல பத்திரிகை தேஷ் அதன் ஆசிரியர் ஞானபீட பரிசுபெற்ற சுனில் சகோபாத்யாயா. அப்புறம் பத்திரிகை தரமாக இல்லாமல் போய்விடுமா என்ன?
மாத்ருபூமி ஆசிரியர் எம் டி வாசுதேவன் நாயரும் ஞானபீடவிருது பெற்றவர். கலை சினிமா படமெடுத்துப்புகழ்பெற்றவர். இப்படியான இலக்கிய மேதைகள் தமிழில் எங்கே அவர்கள் சு்தந்திரமாக நின்று செயல்பட பத்திரிகைகள் எங்கே?
 
ஒரு மொழியானது பண்பாட்டுசக்தியாக பரிணாம வளர்ச்சி பெற வேண்டும். சரியான சமூக அரசியல் சூழ்நிலை வேண்டும். ஒருவகை குறிப்பிட்ட கொள்கை சாரா நடுநிலை(லிபரல்) சூழ்நிலை தேவை. சகிப்புத்தனமை அதிகம் தேவை. அரசியல்வாதி அபூர்வமாக இலக்கியவாதி ஆகலாம் ஆனால் நம் தமிழகத்திலோ சினிமா நடிகர் நடிகையர் வசனகர்த்தா என அனைவரும் அரசியல்வாதிகள்.
 
(சீரியசா எழுதப்போனால் பதிவு  நீள்கிறது ஆகவே தொடரலாமா?:)


Subashini Tremmel Fri, Nov 16, 2012 at 9:55 AM

வணக்கம் திரு,இன்னம்புரான்,

வாசித்து மனம் மகிழ்ந்தேன். 
நல்ல சிந்தனைகளை, தேச பக்தி, மனிதாபிமானம், அன்பு எனும் நற்பன்புககளைப் பற்றி அடிக்கடி பேசுவோம். அச்சிந்தனைகளை மக்கள் மனதிலே மீண்டும் மீண்டும் பதியவைப்போம் - என அடிக்கடி நினைத்துக் கொள்வேன். மின் தமிழில் இவ்வகை எழுத்துக்கள் நிச்சயமாக வாசிப்போர் மனதில் நல்லெழுச்சியை ஏற்படுத்தும்.

அது சரி.. நீங்கள் எவ்வளவு அழகாகத் தமிழில் எழுதுகின்றீர்கள். 4 வருடங்களுக்கு முன்னர் தமிழ் எழுத சரியாக வராது என்று என்னிடம் நீங்கள் கூறியது இன்றும் ஞாபகம் இருக்கின்றது. :-) இந்த அளவிற்கு எழுத நீங்கள் மேற்கொண்டிருக்கும் முயற்சி நன்கு தெரிகின்றது.

அன்புடன்
சுபா


கி.காளைராசன் Fri, Nov 16, 2012 at 12:16 PM

வணக்கம்.

2012/11/16 Subashini Tremmel <ksubashini@gmail.com>
அது சரி.. நீங்கள் எவ்வளவு அழகாகத் தமிழில் எழுதுகின்றீர்கள். 4 வருடங்களுக்கு முன்னர் தமிழ் எழுத சரியாக வராது என்று என்னிடம் நீங்கள் கூறியது இன்றும் ஞாபகம் இருக்கின்றது. :-) இந்த அளவிற்கு எழுத நீங்கள் மேற்கொண்டிருக்கும் முயற்சி நன்கு தெரிகின்றது.

இந்த வரிசையில் ஐயா ‘இ‘னா அவர்களுடன்,
ஐயா நரசய்யா அவர்களையும், 
சேர்த்துக் கொள்ள வேண்டும்.


K R A Narasiah Fri, Nov 16, 2012 at 5:23 PM

absolutely right!
எனது முதல் கதை 1964 ல் எழுதியபோது தமிழ் சுமாராகத்தான் எனக்குத் தெரியும் ஆங்கிலத்தில் நினைத்துத் தமிழில் எழுதினேன்! ஆனலும் வெளி வந்தபோது விகடன் முத்திரையுடன் உலகுக்கு அதை அளித்தனர். 

கடலோடியின் முதற்பதிப்பு வெளிவந்தபோது (1972) ஹிந்து இவ்வாறு விமர்சித்தது:
The author thinks in English and translates his thoughts into Tamil, with a result the book appears to be a Tamil translation of an original English!

முயன்றேன் - முடிந்தது.

மொழி அபிமானம் மற்றொரு மொழியின் மீது காட்டப்படும் வெறுப்பினால் அளக்கப்படவேண்டாம் என்பது என் கட்சி.
விஜய் டி வி யில் நானா நீயா  நிகழ்ச்சியில் என்னைக் கண்டவர்களுக்கு நினைவிருக்கலாம். 

Language is a vehicle for expression of thought; Destination is important while the means is in no way less important.While the Saraswathi Samman and Gnana peeth people award the tamil writers, the Tamils were busy applying tar on other language posters and indicators.

தாய் மொழிப் பற்று மிக்க அவசியம் 

எல்லா மொழிப்பற்றும் மிக மிக அவசியம். நன் தமிழை விரும்பிக் கற்றேன். அதைப் பெருமையுடன் சொல்லிக்கொள்ள நான் தயங்கியதே கிடையாது. ஆங்கிலத்தில் தான் முதலில் எழுதினேன். அதுவும் கவிதை. அயர்லாந்தின் பத்திரிகையில் 1960ல் வெளியாயிற்று. ஆங்கிலத்தை நான் வெறுத்ததே கிடையாது.

நரசய்யா
____________________
Innamburan
07 05 2013
  

No comments:

Post a Comment