Friday, May 10, 2013

அன்றொரு நாள்: மே 11: வாரிசு!




அன்றொரு நாள்: மே 11: வாரிசு!
14 messages

Innamburan Innamburan 
மு.கு: ஒரு வருடம் முன்னால் நான் எழுதியது:
'
ஆங்கிலத்தில் 'என்ரிச்' என்ற சொல்லொன்று உண்டு. நீங்கள் எல்லாரும் செய்த என்ரிச்மெண்ட் தான் எனக்கு தூண்டில். நன்றியெல்லாம் சம்பிரதாயம். அதான் இத்துடன் 'நிறுத்', ராஜத்தின் பாஷையில்.~இ.'
இன்று மறுபடியும் படித்தபோது, மற்றவர்கள் பகிர்ந்து கொள்வதின் பயன் மேலும் கண்கூடாகத் தெரிந்தது. இங்கும் அது வரட்டும்.
இன்னம்பூரான்
11 05 2013
Fri, May 11, 2012 at 7:05 PM


ன்றொரு நாள்: மே 11:
வாரிசு!
இன்று அவரது நூற்றாண்டு விழா. இந்தியாவின்/பாகிஸ்தானின் நாளிதழ்கள், வார இதழ்கள் எல்லாம் அவரது கீர்த்தியை பாடுகின்றனர். கெளரவர்களும், பாண்டவர்களும் கொண்டாடுகின்றனர். ஶ்ரீகிருஷ்ணன் யார் பக்கம்? அந்த மாதிரி தான். சில மனிதர்களை தேசாபிமானத்திற்குள் அடக்கி ஆளமுடியாது. வண்ணத்திப்பூச்சிக்கு, உன் தோட்டமென்ன? என் தோட்டமென்ன? அதனால், அதனுடைய அருமை குறைந்து விட்டதா? என்ன? இன்றைய கதைமாந்தன் வாழ்ந்தது என்னமோ 43 வருடங்கள் தான். அவர் தரணிமைந்தன். மதம், மாச்சரியம், கலாச்சாரம்,பிராந்திய எல்லைகள், நாட்டுப்பற்று ஒன்றுமே அவரை பிடித்து வைத்துக்கொள்ள முடியவில்லை. அவருடைய சீதா தேவி, மனித இனம். அவருடைய சூர்ப்பனகை, மனித குணம். அவருடைய கெளஸல்யை, ‘அம்ருத்’ அமிருதசரஸ். அவருடைய கைகேயி,மும்முறை கொலைக்களமான துரதிர்ஷ்ட அமிருதசரஸ். அவருடைய மந்தரை, கலோனிய அரசு. அவருடைய அகல்யை, பாரதமாதா.

இனி அவருடைய தாடகையையும், பூதகியையும் பற்றி மட்டுமே பேச்சு. இந்தியா தாடகை என்றால், பாகிஸ்தான் பூதகி. பாகிஸ்தான் தாடகை என்றால், இந்தியா பூதகி. இரண்டுமே ராக்ஷசிகள். யார் தான் உளவியல் வல்லுனர் அல்ல? பிறந்த மனிதன், மனுஷி எல்லாரும் ஏதோ தான் தான் ஃப்ராய்டின் கொள்ளுத்தாத்தா/பாட்டி என்று மார் தட்டிக்கொள்கிறார்கள். இத்தனைக்கும் மனோதத்துவ சாத்திரத்தின் வாசற்படி கூட மிதித்ததில்லை. நம் கதைமாந்தன் தனக்கு விருதுகள் அளித்துக்கொள்ளவில்லை என்றாலும், மனிதனின் மனம் என்ற ஆழ்கடலின் இண்டு, இடுக்குகளில் புகுந்து,அய்யய்யோ!, அவனுடைய நிர்வாண அசிங்கங்களை, புரிந்து கொண்டவராச்சே. அவர் ஒரு உருது இலக்கியவாதி. அவருடைய சிறு கதைகள், புதுமை பித்தனுடையதை விட நூறு மடங்கு பச்சை மிளகாய். 1947 இந்திய பிரிவினை பொருட்டு அவர் எழுதிய சிறு கதைகள்: வரலாறு, இலக்கியம், தத்துவ சாத்திரம், மனோதத்துவம். அவருடைய முதல் கதையில் (‘சதைப்பிண்டம் -டண்டா கோஷ்த்’), ஒரு சீக்கிய யுவன் ஒரு இஸ்லாமிய பெண்ணை கற்பழிக்க விரும்பி, கடத்துகிறான். அவளோ பிணமாக கிடக்கிறாள். அந்த திகைப்பில் அவன் ஆண்மை இழந்து விடுகிறான். நான், ஒரு தீப்பிழம்பை, இரண்டு வரியில் சொல்ல முயன்றேன். கலோனிய அரசின் காலாவதி சட்டத்தின் கீழ் பாகிஸ்தான், இந்த இலக்கியத்தை, ‘அசிங்கம்‘ என்று தடை செய்தது. பிற்காலம், தபால் தலை வெளியிட்டு, அவரை சிறப்பித்தது. அவரது மனோவேகம், இலக்கியத்திறன், உண்மை விளம்பல் பற்றி நூல் வடிக்கலாம். ஒரு சிறிய கட்டுரை எழுதுவது கடினம். சொல்லப்போனால், உசாத்துணை யாவும், இந்த சிறிய அறிமுகத்தைப்போல, அரைகுறை. எனவே, நானும் நிறுத்திவிட்டேன்.
அவர் பெயர்: ஸாதர் ஹாஸன் மாண்டோ (May 11, 1912 – January 18, 1955) அவர் யாருடைய வாரிசு தெரியுமா?    அன்றொரு நாள்: ஜனவரி:28‘...மாசற்ற ஜோதி வதனமினிக் காண்பேனோ?...’
http://www.heritagewiki.org/index.php/அன்றொரு_நாள்:_ஜனவரி:28
என்ற இழையில் தரிசனம் தரும்: ‘பாரதகண்டத்திலே, பாகிஸ்தானிலும், இந்தியாவிலும் நற்பெயருடன் அறியப்படும் அமைதியின் மறு உரு; புரட்சித்தூண்; ஆன்மீகச்செம்மல்; லெளகீக மார்க்கபந்து; கடலோடி விடுதலை தேடியவர்; மனோபலசாலி; தியாகத்தின் சிகரம்; மாசற்ற ஜோதி. பாஞ்சால சிங்கம்,’ என்றெல்லாம் புகழப்படும் லாலா லஜபதி ராய் அவர்களின் வாரிசாக, இவரை கருதுகிறேன். சமீபத்தில் மஹாகவி பாரதி-தாகூர் சம்பந்தமான இழையில் சுட்டப்பட்ட,’இளமை இந்தியா (எங் இந்தியா) என்ற இதழை துவக்கி அதனுடைய முதல் இதழில் (ஜனவரி 1918) டாக்டர் சுப்ரமண்ய ஐயர் அவர்கள் அமெரிக்க அதிபருக்கு எழுதி, கலோனிய அரசை பாடாய் படுத்திய கடிதத்தை, அதில் பிரசுரித்தார்.’ பேராசிரியர் நாகராஜன் அதிலிருந்து மற்றொரு பொக்கிஷத்தை எடுத்தார். 1910 ~20 களில் இருந்த இந்திய உறவுகளை பாருங்கள். இவருடன் அரசியல் ஆய்வு செய்தது ஹார்திகர் ~மஹராஷ்ட்டிரர்; குருநாதர் ~எஸ்.சுப்ரமண்ய ஐயர். இவருடைய அமெரிக்க இதழில் கவிதை வடித்தவர் ~குருதேவ் ரபீந்த்ரநாத் டாகுர். முன்னுரை: பிரிட்டீஷார் ஜோசையா வெட்ஜ்வுட்,’ என்று ஜனவரி 28 அன்று நான் எழுதியதை,நானே சிலாகித்துக்கொள்கிறேன்
இன்னம்பூரான்
11 05 2012
Inline image 1
உசாத்துணை: கடந்த சில நாட்களாக, இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் வெளிவந்த நூற்றுக்கணக்கான இதழியல் கட்டுரைகள்.

Geetha Sambasivam Sat, May 12, 2012 at 10:06 AM

ஜனவ்ரி 28 அன்று நான் எழுதியதை,நானே சிலாகித்துக்கொள்கிறேன்//

தப்பே இல்லை;  இந்த விஷயங்களெல்லாம் இன்று உங்கள் மூலமே அறிய முடிகிறது.  அதனால் சிலாகித்துக்கொள்வது ஒண்ணும் பெரிய விஷயம் இல்லை.  லாலா லஜ்பத் ராய் பற்றித் தெரியும்.  இவர் அவரோட வாரிசு எனத் தெரியாது. ஸாதர் ஹாஸன் மாண்டோ என்னும் இவர் பெயரையே இன்றுதான் கேள்விப் படுகிறேன்.  தகவல் சுரங்கமான உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும்.

2012/5/11 Innamburan Innamburan <innamburan@gmail.com>

ன்றொரு நாள்: மே 11:

யதார்த்தா கி.பென்னேஸ்வரன் Sat, May 12, 2012 at 10:25 AM



ஸதத் ஹஸ்ஸன் மண்ட்டோ அவருடைய சரியான பெயர்.
அவருடைய நான்கு கதைகளை மொழிபெயர்த்து இருக்கிறேன்.  நண்பர் ஒருவர் உருதுவில் வாசித்துக் காட்ட ஆங்கிலப் பிரதியின் துணையுடன் நான் செய்த மொழிபெயர்ப்புக்கள் அவை.  சனிமூலை வலைப்பூவில் இந்தக் கதைகள் படிக்கக் கிடைக்கும்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தோழர் பிரபாகரன் மண்ட்டோ பற்றி எழுதிய கட்டுரையை வடக்கு வாசல் இதழில் வெளியிட்டோம்.
அம்ருதா இதழில் நான் மொழிபெயர்த்த மண்ட்டோவின் கதை வந்திருக்கிறது.
அவருடைய உலகம் பிரமிக்க வைக்கக் கூடியது.  பிரிவினையின் அவலங்களை அவரைப் போல சொன்னவர்கள் வேறு யாரும் கிடையாது.  ஜி.நாகராஜன் படைப்புக்களைப் போல, பாலியல் தொழிலாளிகளின் அக உலகத்தையும் புற உலகத்தையும் மிகத் துல்லியமாகவும் உருக்கமாகவும் பதிவு செய்திருப்பார்.  அவருடைய நூறு வாட் பல்பு என்னும் சிறுகதை பளீரென்று முகத்தில் அறையும்.
அவருடைய மற்ற சிறுகதைகளைப் போலவே.
அன்புடன்
பென்னேஸ்வரன்

---------------------------------------------------------------

Geetha Sambasivam Sat, May 12, 2012 at 10:29 AM


மேல் அதிகத் தகவல்களுக்கு மிக்க நன்றி.  சனிமூலையை முற்றுகை இடுகிறேன்.


Innamburan Innamburan Sat, May 12, 2012 at 11:54 AM

'பென்' நீ 'பொன்'



coral shree Sat, May 12, 2012 at 12:21 PM


அன்பின் ஐயா,

மிகச்சுவையான தகவல்கள்.

2012/5/11 Innamburan Innamburan <innamburan@gmail.com>
ன்றொரு நாள்: மே 11:
வாரிசு!
இன்று அவரது நூற்றாண்டு விழா. இந்தியாவின்/பாகிஸ்தானின் நாளிதழ்கள், வார இதழ்கள் எல்லாம் அவரது கீர்த்தியை பாடுகின்றனர். கெளரவர்களும், பாண்டவர்களும் கொண்டாடுகின்றனர். ஶ்ரீகிருஷ்ணன் யார் பக்கம்? அந்த மாதிரி தான். சில மனிதர்களை தேசாபிமானத்திற்குள் அடக்கி ஆளமுடியாது. வண்ணத்திப்பூச்சிக்கு, உன் தோட்டமென்ன? என் தோட்டமென்ன? அதனால், அதனுடைய அருமை குறைந்து விட்டதா? என்ன? இன்றைய கதைமாந்தன் வாழ்ந்தது என்னமோ 43 வருடங்கள் தான். அவர் தரணிமைந்தன். மதம், மாச்சரியம், கலாச்சாரம்,பிராந்திய எல்லைகள், நாட்டுப்பற்று ஒன்றுமே அவரை பிடித்து வைத்துக்கொள்ள முடியவில்லை. அவருடைய சீதா தேவி, மனித இனம். அவருடைய சூர்ப்பனகை, மனித குணம். அவருடைய கெளஸல்யை, ‘அம்ருத்’ அமிருதசரஸ். அவருடைய கைகேயி,மும்முறை கொலைக்களமான துரதிர்ஷ்ட அமிருதசரஸ். அவருடைய மந்தரை, கலோனிய அரசு. அவருடைய அகல்யை, பாரதமாதா.

இனி அவருடைய தாடகையையும், பூதகியையும் பற்றி மட்டுமே பேச்சு. இந்தியா தாடகை என்றால், பாகிஸ்தான் பூதகி. பாகிஸ்தான் தாடகை என்றால், இந்தியா பூதகி. இரண்டுமே ராக்ஷசிகள். யார் தான் உளவியல் வல்லுனர் அல்ல? பிறந்த மனிதன், மனுஷி எல்லாரும் ஏதோ தான் தான் ஃப்ராய்டின் 
கொள்ளுத்தாத்தா/பாட்டி என்று மார் தட்டிக்கொள்கிறார்கள். இத்தனைக்கும் மனோதத்துவ சாத்திரத்தின் வாசற்படி கூட மிதித்ததில்லை.


உண்மைதான் ஐயா.... சரியாகச் சொன்னீர்கள். மனோதத்துவ சாத்திரத்தின் வாசற்படி மிதித்தவர்கள் மட்டும்தான் சகமனிதர்களின் வக்கிரங்களை புரிந்து கொள்ள இயலும் என்றால் பிறகு நாட்டில் அனைவரும் மனோதத்துவ மேதைகளுக்கு தூக்குத் தூக்கியாகத்தான் இருக்க முடியும்.. சில விசயங்கள் கடவுள் மனிதருக்குக் கொடுக்கும் வரங்கள் அல்லவா.... தாங்கள் அறியாததா ஐயா.. 


நம் கதைமாந்தன் தனக்கு விருதுகள் அளித்துக்கொள்ளவில்லை என்றாலும், மனிதனின் மனம் என்ற ஆழ்கடலின் இண்டு, இடுக்குகளில் புகுந்து,அய்யய்யோ!, அவனுடைய நிர்வாண அசிங்கங்களை, புரிந்து கொண்டவராச்சே. அவர் ஒரு உருது இலக்கியவாதி. அவருடைய சிறு கதைகள், புதுமை பித்தனுடையதை விட நூறு மடங்கு பச்சை மிளகாய். 1947 இந்திய பிரிவினை பொருட்டு அவர் எழுதிய சிறு கதைகள்: வரலாறு, இலக்கியம், தத்துவ சாத்திரம், மனோதத்துவம். அவருடைய முதல் கதையில் (‘சதைப்பிண்டம் -டண்டா கோஷ்த்’), ஒரு சீக்கிய யுவன் ஒரு இஸ்லாமிய பெண்ணை கற்பழிக்க விரும்பி, கடத்துகிறான். அவளோ பிணமாக கிடக்கிறாள். அந்த திகைப்பில் அவன் ஆண்மை இழந்து விடுகிறான். நான், ஒரு தீப்பிழம்பை, இரண்டு வரியில் சொல்ல முயன்றேன். கலோனிய அரசின் காலாவதி சட்டத்தின் கீழ் பாகிஸ்தான், இந்த இலக்கியத்தை, ‘அசிங்கம்‘ என்று தடை செய்தது.

புதிய செய்தி .வாசிக்கத் தூண்டும் செய்தி...

பிற்காலம், தபால் தலை வெளியிட்டு, அவரை சிறப்பித்தது. அவரது மனோவேகம், இலக்கியத்திறன், உண்மை விளம்பல் பற்றி நூல் வடிக்கலாம். ஒரு சிறிய கட்டுரை எழுதுவது கடினம். சொல்லப்போனால், உசாத்துணை யாவும், இந்த சிறிய அறிமுகத்தைப்போல, அரைகுறை. எனவே, நானும் நிறுத்திவிட்டேன்.
அவர் பெயர்: ஸாதர் ஹாஸன் மாண்டோ (May 11, 1912 – January 18, 1955) அவர் யாருடைய வாரிசு தெரியுமா?    அன்றொரு நாள்: ஜனவரி:28‘...மாசற்ற ஜோதி வதனமினிக் காண்பேனோ?...’
http://www.heritagewiki.org/index.php/அன்றொரு_நாள்:_ஜனவரி:28
என்ற இழையில் தரிசனம் தரும்: ‘பாரதகண்டத்திலே, பாகிஸ்தானிலும், இந்தியாவிலும் நற்பெயருடன் அறியப்படும் அமைதியின் மறு உரு; புரட்சித்தூண்; ஆன்மீகச்செம்மல்; லெளகீக மார்க்கபந்து; கடலோடி விடுதலை தேடியவர்; மனோபலசாலி; தியாகத்தின் சிகரம்; மாசற்ற ஜோதி. பாஞ்சால சிங்கம்,’ என்றெல்லாம் புகழப்படும் லாலா லஜபதி ராய் அவர்களின் வாரிசாக, இவரை கருதுகிறேன். சமீபத்தில் மஹாகவி பாரதி-தாகூர் சம்பந்தமான இழையில் சுட்டப்பட்ட,’இளமை இந்தியா (எங் இந்தியா) என்ற இதழை துவக்கி அதனுடைய முதல் இதழில் (ஜனவரி 1918) டாக்டர் சுப்ரமண்ய ஐயர் அவர்கள் அமெரிக்க அதிபருக்கு எழுதி, கலோனிய அரசை பாடாய் படுத்திய கடிதத்தை, அதில் பிரசுரித்தார்.’ பேராசிரியர் நாகராஜன் அதிலிருந்து மற்றொரு பொக்கிஷத்தை எடுத்தார். 1910 ~20 களில் இருந்த இந்திய உறவுகளை பாருங்கள். இவருடன் அரசியல் ஆய்வு செய்தது ஹார்திகர் ~மஹராஷ்ட்டிரர்; குருநாதர் ~எஸ்.சுப்ரமண்ய ஐயர். இவருடைய அமெரிக்க இதழில் கவிதை வடித்தவர் ~குருதேவ் ரபீந்த்ரநாத் டாகுர். முன்னுரை: பிரிட்டீஷார் ஜோசையா வெட்ஜ்வுட்,’ என்று ஜனவ்ரி 28 அன்று நான் எழுதியதை,நானே சிலாகித்துக்கொள்கிறேன்


அருமை ஐயா.நன்றி.



உசாத்துணை: கடந்த சில நாட்களாக, இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் வெளிவந்த நூற்றுக்கணக்கான இதழியல் கட்டுரைகள்.


யதார்த்தா கி.பென்னேஸ்வரன் 
என் பாக்கியம் இ சார்.

பென்-----------------------------------------------------------------------------------------

யதார்த்தா கி.பென்னேஸ்வரன் 
இன்னொன்றும் சொல்ல மறந்து விட்டேன்.

அமெரிக்க அரசுக்கு அவர் Letter to Uncle Sam என்று  எட்டு  பாகங்களாக எழுதிய கடிதங்கள் இணையத்தில் கிடைக்கின்றன.   

மஹா கிண்டலாக இருக்கும் அக்கடிதங்கள்.  கூகுளில் சென்று தேடிப் படித்துப் பாருங்கள்.   பட்டையைக் கிளப்பி இருப்பார் மண்ட்டோ.

இந்தியா  மற்றும் பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளும் இவருடைய நூற்றாண்டைப் பெருமையுடன் கொண்டாடுகின்றன.

அன்புடன்

பென்

coral shree Sat, May 12, 2012 at 1:35 PM



சூப்பர் பென் சார்... இதோ.


பவளா.

யதார்த்தா கி.பென்னேஸ்வரன் 
மிக்க நன்றி பவளா ஜி

மண்ட்டோவின் வாழ்க்கையைப் பார்க்கும்போது எனக்கு வங்காள இயக்குநர் ரித்விக் கட்டக் நினைவு வரும்.  அவருடைய திரைப்படங்கள் மெலோடிராமாவைக் கலைவடிவமாக்கி இருக்கும்.  மேகே டாக் தாரா என்னும் படத்தில் அவர் படமாக்கிய ஒரு ரயில்காட்சி இந்தியத் திரைப்படங்களில் இன்னும் காண முடியாத ஒன்று.  இந்திரா காந்தியை பெஹன் என்று அழைத்து வந்தார்.  எமர்ஜென்ஸியை தைரியமாக விமர்சனம் செய்தார். எமர்ஜென்ஸியை வறுத்தெடுத்த அவருடைய படம் ஒன்றைக் காணாமல் செய்தார்கள் நம் கலைக்காவலர்கள்.

அவரும் மண்ட்டோவைப் போல எப்போதும் குடிபோதையில் இருப்பார்.  ஒருமுறை மொரார்ஜி அவரை ஆழ்ந்த வருத்தத்துடன் கேட்டாராம்.

கட்டக் தா, ஏன் இப்படிக் குடித்துத் தன்னையே அழித்துக் கொள்கிறாய்?

ரித்விக் சொன்னாராம்.  அதை இந்தியில் சொன்னால் அதன் அழகு கெடாமல் இருக்கும்

க்யா கரூன் மொரார்ஜி பாய்.  ஆப் கோ தூஸ்ரி டிரிங்க் பஸந்த் ஹை.  மேரேகு தூஸ்ரா பஸந்த்.  ஸப் அப்னி அப்னி பஸந்த் பே.


அன்புடன்
பென்

யதார்த்தா கி.பென்னேஸ்வரன் 
இன்னோரு முக்கியமான விஷயம் சொல்ல மறந்துவிட்டேன்.

நம்முடைய இயக்குநர் சிகரத்தின் பல படங்கள் ரித்விக் கட்டக் படங்களில் வந்த காட்சிகளின் மட்டமான நகல்கள்.

பென்

DEV RAJ Sat, May 12, 2012 at 7:33 PM

Reply-To: vallamai@googlegroups.com
To: வல்லமை
On May 12, 9:43 am, யதார்த்தா கி.பென்னேஸ்வரன் <penneswa...@gmail.com>
wrote:
> *க்யா கரூன் மொரார்ஜி பாய்.  ஆப் கோ தூஸ்ரி டிரிங்க் பஸந்த் ஹை.  மேரேகு
> தூஸ்ரா பஸந்த்.  ஸப் அப்னி அப்னி பஸந்த் பே.*

:))
மொரார்ஜீ பாய்க்கு இது வேணுமா ?


தேவ்


DEV RAJ Sat, May 12, 2012 at 7:42 PM

Reply-To: vallamai@googlegroups.com
To: வல்லமை
மேகே டாக தாராவில் ஹம்ஸத்வநி -
http://www.youtube.com/watch?v=2Gmv-auw1rI&feature=related

Innamburan Innamburan Sat, May 12, 2012 at 9:42 PM

ஆங்கிலத்தில் 'என்ரிச்' என்ற சொல்லொன்று உண்டு. நீங்கள் எல்லாரும் செய்த என்ரிச்மெண்ட் தான் எனக்கு தூண்டில். நன்றியெல்லாம் சம்பிரதாயம். அதான் இத்துடன் 'நிறுத்', ராஜத்தின் பாஷையில்.

[Quoted text hidden]

No comments:

Post a Comment