Friday, May 24, 2013

தமிழ் இலக்கியம் -2


தமிழ் இலக்கியம் -2

Innamburan S.Soundararajan Fri, May 24, 2013 at 4:53 PM

தமிழ் இலக்கியம் -2
Inline image 1
இலக்கியம் இறவாவரம் பெற்றது.

சித்திரத்துக்கு நன்றி http://www.varalaaru.com/images/Oct08/ten.jpg
இன்னம்பூரான்
24 05 2013
___________
_____________________________________

N. Kannan
  
4/25/10

 
உங்களுக்குத் தெரியாததா?

கம்பனுக்கு உத்வேகம், உற்சாகம் (inspiration) எல்லாம் ஆழ்வார்கள்தானே!

ஆல மாமரத்தின் இலை மேல் ஓர் பாலகனாய்
ஞாலம் ஏழும் உண்டான் அரங்கத்து அரவின் அணையான்
கோல மாமணி ஆரமும் முத்துத் தாமமும் முடிவில்ல தோர் எழில்
நீல மேனி! ஐயோ! நிறை கொண்டதென் நெஞ்சினையே (9)

திருப்பாணாழ்வார் (அமலனாதிபிரான்)

க.>

shylaja 
4/25/10


தோடவிழ்நீலம் மணங்கொடுக்கும்
சூழ் புனல் சூழ்க்குடந்தைக் கிடந்த
சேடர் கொலென்று தெரிக்க மாட்டேன்
செஞ்சுடராழியும் சங்கும் ஏந்தி
பாடக மெல்லடியார் வணங்கப்
பன்மணி முத்தொடு இலங்கு சோதி
ஆடகம் பூண்டு ஒரு நான்கு தோளும்
அச்சோ ஒருவரழகியவா!
 
 
 
இப்படியும்
 
 
செம்பவளம் இவர் வாயின் வண்ணம்
தேவரிவரது உருவம் சொல்லில்
அம்பவளத்திரளேயும் ஒப்பர்
அச்சோ ஒரு வரழகியவா1
 
என்றிப்படியும் ஆழ்வார் பாடியதில் இந்த ‘அச்சோ’ என்பதும் ஐயோ அல்லது அட   என்பதான வியப்புப்பொருளைக்  குறிக்கிறதா
என்று யோசிக்கவைக்கிறது! ‘இ’ஸார்!  'க'  அல்லது 'மோ' அல்லது' த'  அல்லது 'ஹ' அல்லது  .தே’  என உங்களில் யாராவது பொருள் சொன்னால் நன்றி முன்கூட்டியே!
 

ஷைலஜா

பற்பம் எனத் திகழ் பைங்கழல் உந்தன் பல்லவமே விரலும்
பாவனம் ஆகிய பைந்துவர் ஆடையும் பதிந்தநன் மருங்கழகும்

முப்புரி நூலொடு முன்கையில் ஏந்திய முக்கோல் தன்னழகும்
முன்னவர் தந்திடு மொழிகள் நிறைந்திடு முறுவல் நிலாவழகும்


கற்பகமே விழிக் கருணை பொழிந்திடும் கமலக் கண்ணழகும்
காரிசுதன் கழல் சூடிய முடியும் ககனச் சிகை முடியும்

எப்பொழுதும் எதிராசர் வடிவழகு என் இதயத் துளதால்

இல்லை எனக்கெதிர்! இல்லை எனக்கெதிர்! இல்லை எனக்கெதிரே!
Venkatachalam Subramanian 
4/25/10

ஓம்
. கவிஞனின் உத்வேகம் கவிதை மழை.
ஐயை ஒரு தேவி. ஐயை இயமனின் மனைவியின் பெயரும் ஆகும்.
ஐயோ என்ற வியப்பிடைச் சொல் தற்குறிப்பேற்று இடத்திற்குத் தக்க பொருளில் கையாளப்படுகிற்து.
கம்பனின் ஒருமைப்பாடும் பெருமையும் போற்றி உங்கள் இடுகை சிறப்பு.
அன்புடன் வெ.சுப்பிரமணியன்.
__________________________________________________________________________________________________________________

No comments:

Post a Comment