Sunday, May 12, 2013

'பாகல் ஜிம்கானா! : தணிக்கை செய்வதில் தணியா வேகம் -38




'பாகல் ஜிம்கானா! : தணிக்கை செய்வதில் தணியா வேகம் -38

Innamburan S.Soundararajan Sat, May 11, 2013 at 10:19 PM


23 03 2010

 'பாகல் ஜிம்கானா! : தணிக்கை செய்வதில் தணியா வேகம் -38
Inline image 1

சில மாதங்களுக்கு முன்னால், எங்கள் ஓய்வு பெற்றோர் சங்கத்தில் அக்காலத்தில் எனக்கு டிபுடி செக்ரெடரியாக இருந்தவரை சந்தித்தேன். பழங்கதைகளை சொல்லி மகிழ்ந்தார். 'ஒரு பாடாகஎன் ிபுடிசெச்ரெடரியின் தரிசனம் கிடைத்ததுஅதிர்ச்சி தரும் சூழலில்!' என்று சொன்னேனே, முந்தைய சுற்றில். அந்த மஹானுபாவன் தான்,அவர். 

பின்னோக்கி செல்வோம். எல்லா பெரியவர்களையும் பார்த்து வந்தனம் சொல்லியாயிற்று. இவரை மட்டும் பார்க்க இயலவில்லை. அவரு எப்போதும் பிஸி. ஒரு நாள் என் அறைக்கு வந்து அழைத்துப்போனார். பலிகடா மாதிரி பின் தொடர்ந்தேன். 

உரையாடல்:
அவர்: உன் கையொப்பம் போட்டுக்காட்டு. 
[காட்டினோம்]
அவர்: அடப்பாவி! என் மாதிரியே போடுகிறாயே. இதோ பார்!
[என் காசோலைகளை காண்பித்தார். அவருக்கு டெபிட்! உள்ளூர சந்தோஷம் எனக்கு. காட்லாமோ? ஊஹூம்!]
அவர்: ஏற்கனவே இந்த அமைச்சரகம் பாகல் ஜிம்கானா [பைத்தியக்காரர் கூட்டம் என்க.] நீ வேறே படுத்தரே. 
அடியேன்: நீங்கள் தான் என் மாதிரி கையொப்பம் போடுகிறீர்கள்! 
[சுருங்கச்சொல்லின், ஒரு உடன்படிக்கைக்கு வந்தோம்.]

இவரிடம் நான் கற்றுக்கொண்டது கொஞ்சநஞ்சமில்லை. இவர் ஒரு அதிகாரமையம். அதன் பின்னணி: ராணுவம் பற்றிய எல்லா செய்திகளையும், அப்டேட் செய்து, விரல் நுனியில் வைத்திருந்தார், இந்த செளந்திரராஜன்; அரசு உருப்படியாக செயல்படுவதில் குறியாக இருந்தார்; முறையாக நடக்கவேண்டியதை, நிறைவேற்றுவதிலும், முறையற்றதை, என்ன எதிர்ப்புகள் இருந்தாலும், செயலிழக்க செய்துவிடுவதிலும், அய்யா மன்னன்!. அதற்கு, அருமையான உத்தி வைத்திருந்தார். அந்த கோப்பைகளை 'கடப்ஸ்'ஸில் போட்டுவிடுவார். வேளை வரும்போது அது எட்டிப்பார்க்கும். திரு.கிருஷ்ணஸ்வாமியோ, எந்த சிக்கலையும், ஒரு வினாடியில் அவிழ்த்து விடுவார். ஹரீஷ் ஸரீன் ஐ.ஸீ.ஏஸ் ஒரு தனிப்பிறவி; ராணுவக்கடலில் தோணி. கரையோரம் கலங்கரை விளக்கு. இவர்களிடம் அனுபவப்பாடம் பெறுவது ஒரு கொடுப்பினை.

ஒரு பாடம்: 
நாடாளுமன்றத்தின் பொது கணக்குக் குழு எங்கள் மேல் பாய்ந்த தணிக்கை அறிக்கைகளை ஒரு ரகசிய மன்றத்தில், எங்களை சாக்ஷிகளாக நிறுத்தி, அலசும். மாரி பொழிவது மாரி நிந்தனைகள் பொழியும். காலாகாலத்தில் முடிவு எடுக்காததால், பீர் வாங்கியதில், அந்த பிரிவுக்கு நஷ்டம் இத்தனை ஆயிரம் ரூபாய் என்று குற்றச்சாட்டு; அந்தப்பணத்தை ஜவான்களிடமிருந்து வசூல் செய்துவிட்டோம், நஷ்டமில்லை என்று சால்ஜாப்பு. பொது கணக்குக்குழு ஒத்துக்கோண்டாலும், போர் நடக்கும் காலகட்டத்தில் ஜவானுக்கு செலவா? என்று முறைத்தது. அத்துடன் விட்டது.

பிரதம சாட்சியான ஹரீஷ் ஸரீனுக்கு நான் உதவியாளன். திரும்பிய பிறகு, நான் அவரிடம் சொன்னேன், 'என் குறிப்பை நீங்கள் பார்க்கவில்லை. நாம் ஜவானிடன் இதை தள்ளிவிடவில்லை.' 

மறுநாள், விசாரணை தொடங்கும் முன், ஸரீன் ஒரு விளக்கமளித்தார், 'நான் நேற்று தவறாக கூறிவிட்டேன்; மன்னிக்கவும். அதிகப்படி செலவை ஜவான்களின் தலையில் கட்டவில்லை; அமைச்சரகம் பொறுப்பேற்று நடவடிக்கை எடுக்கும்' என்றார். குழுவும் சிலாகித்தது. மற்ற நிந்தனைகளும் எடுபடவில்லை.  

அன்று எல்லாம் முடிந்தபிறகு, வழக்கம் போல், ஆடிட்டர் ஜெனெரலும், ஸரீன் அவர்களும் மரியாதை நிமித்தம் உரையாடியபோது, அவரும் இந்த அணுகுமுறையை சிலாகித்தார்.  இவன் தான் காரணம் என்று ஸரீன் என்னை முன்னிறுத்தினார். போட்டாரே பார்க்கலாம், ஆடிட்டர் ஜெனெரல், 'இதற்கு தான் இந்த பசங்களை உங்களிடம் பயிற்சிக்கு அனுப்புகிறோம்' என்று! 
[ தொடரும்: 'சுக்ரதிசை!']

இன்னம்பூரான் 
சித்திரத்துக்கு நன்றி:http://3.bp.blogspot.com/-gvuz_vKPhZo/TnmaNJKIg1I/AAAAAAAAB4g/Jcr4-ExMr8M/s1600/1.jpg
இன்னம்பூரான்
12 05 2013

No comments:

Post a Comment