Saturday, May 18, 2013

(3): அரசை உருப்படியாக வேலை செய்ய வைக்க...





Innamburan S.Soundararajan Sat, May 18, 2013 at 4:11 PM



 (3): அரசை உருப்படியாக வேலை செய்ய வைக்க...
Inline image 1
முன்குறிப்பு:
இந்த தொடர், ஒரு சிக்கலான கேள்வியை ஒவ்வொருவர் அணுகும் முறையை அவதானிப்பது. இழைகள் தொடர்பு உடையவை. உரிய நேரத்தில் அப்டேட் செய்யப்படும்.
சித்திரத்துக்கு நன்றி: http://i.ytimg.com/vi/vI3fJ4KvrsE/0.jpg

இன்னம்பூரான்
19 05 2013
*
கொடுமை என்னவெனில் சுதந்திர நாடுகளாகக் கருதப்படும் ஜனநாயக நாடுகளிலும் மக்க்ளுக்கு உண்மையான் சுதந்திரம் இல்லை! ஜனநாயகம் என்று பேச்சளவில் இருந்தாலும் உண்மையில் வாரிசத்துவம் தான் நிலையாக் உள்ளது. வீணாக்காப்படும் மக்கள் செல்வம் அதிகமாகியுள்ளது (சேது சமுத்திரத் திட்டம் ஒரு மாபெறும் உதாரணம்)
எல்லா நிர்வாகங்களும் - சோஷலிஸம், முதலாளித்துவம், கலந்து கட்டி, தனியார் ஏகாதிபத்தியம், மக்களாட்சி, சர்வாதிகாரம், தவறுகள் இழைக்கின்றன என்பதும்,
அவற்ரில் ஆங்காங்கே எல்லாமுறைகளிலும் (சர்வாதிகாரம் தவிர) நன்முத்துக்கள் அரிதாக இருக்கின்றன என்பது தான் வரலாறு. இது மனிதனின் பலவீனம்.
மிக நன்றாகச் சொன்னீர்கள்!
நரசய்யா
*
கொடுமை என்னவெனில் சுதந்திர நாடுகளாகக் கருதப்படும் ஜனநாயக நாடுகளிலும் மக்களுக்கு உண்மையான் சுத்ந்திரம் இல்லை! ஜனநாயகம் என்று பேச்சளவில் இருந்தாலும் உண்மையில் வாரிசத்துவம் தான் நிலையாக உள்ளது. 
A family centric society will always have this & there shall be general acceptance among public seeing a Child growing under the shadow of his father. May it be politics, business or anything. Only the working for wage class stands apart. 
There is nothing wrong in Rajiv following Indira, Stalin following Karuna provided they earn it in the way their parents did.

My only concern is why people like our CM could not understand this when it come to Temples priests :-)
Sri Ramadoss M
*
எப்போது  மக்கள்  தங்களின் அடிப்படைத் தேவைகளை தம்மை ஆளும் அரசாங்கம் ஏற்படுத்தித் தரவேண்டும்
தாம் கொடுக்கும் வரிப்பணம்  மக்களுக்கும்  நாட்டு முன்னேற்றத்துக்கும்  உபயோகப்படுத்தப்படல்வேண்டும்

தனியார் கொள்ளையடிப்பதை தட்டிக் கேட்கவேண்டும்  என்னும் விழிப்புணர்வைப் பெறுகிறார்களோ
அந்த நாடுதான் முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும்

அனியாயத்தை  தட்டிக் கேட்க துணிவில்லாத  மக்கள்  இருக்கும் வரை  நாடு
அராஜக  அக்ரமக்காரகளின் கையில்  சிக்கி சீரழியும்

மக்கள் விழிப்புணர்வு பெறவேண்டும்


அப்போதுதான்

அது ஜனநாயகமோ  ,சோஷலிசமோ  எதுவோ  
    
மக்களின் வாழ்க்கை  செழிப்பு பெறும்

அன்புடன்
தமிழ்த்தேனீ
*
இன்னம்புரான்,

அரசாங்கங்கள் ஒரு நாட்டை நிர்வகிப்பதில் உள்ள திறமைக் குறைவைச் சுட்டித்தானே உங்கள்
கட்டுரை அமைகிறது? அதை மேலும் உறுதிப்படுத்தவே நான் எழுதினேன்.

"பிரிட்டிஷ் மாதிரியிலான அரசு" என நான் கூறியது பிரிட்டிஷ் பீரோகிரசியை வரித்துக் கொண்ட
முன்னாள் காலனித்துவ அரசுகள்: இந்தியா, மலேசியா, பாக்கிஸ்தான் இன்ன பிற.
இந்த பீரோகிரசிதான் திறமையின்மையின் மூலம். அதுவே பணவிரயத்துக்கும் ஊழலுக்கும்
வழிவகுக்கிறது.

இதற்கு மாற்றாகத்தான் கேப்பிட்டலிசமும் தாராளமயப் பொருளாதாரமும் நமக்குத் தந்த
தனியார் துறை வருகிறது. தனியார் துறை ஊழலற்றதல்ல. அதற்குத்தான் அரசாங்க மேலாண்மை
அதனை எந்த நாளும் கண்காணித்துக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. ஊழல் இருந்தாலும்
தனது சேவைகளை வெற்றிகரமாக வழங்குவது தனியார் துறைதான். அரசாங்கமே சேவையை
முன்வழங்க வரும்போது சேவையும் திறமையாக அமைவதில்லை; ஊழலும் பெருகுகிறது.

"எல்லா நிர்வாகங்களும் - சோஷலிஸம், முதலாளித்துவம், கலந்து கட்டி, தனியார் ஏகாதிபத்தியம், மக்களாட்சி, சர்வாதிகாரம், தவறுகள் இழைக்கின்றன என்பதும்,அவற்றில் ஆங்காங்கே எல்லாமுறைகளிலும் (சர்வாதிகாரம் தவிர) நன்முத்துக்கள் அரிதாக இருக்கின்றன என்பது தான் வரலாறு. இது மனிதனின் பலவீனம்."

ஒப்புக் கொள்ள வேண்டிய கருத்து. ஆனால் "சர்வாதிகாரத்துக்கு" ஏன் விதிவிலக்கு அளித்தீர்களோ
தெரியவில்லை.  ரஷ்ய சர்வாதிகாரமாக இருந்தாலும், ஆப்பிரிக்க பூர்வகுடிச் சர்வாதிகாரமாக
இருந்தாலும் ஊழல்கள் இருக்கவே செய்கின்றன. மக்களாட்சிச் சர்வாதிகாரம் என்று கூறக்கூடிய
சிங்கப்பூர் மட்டுமே ஊழல்கள் இல்லாத முறையாக இருக்கிறது.

தனியார் மயத்தில் உள்ள இலாப நோக்கு திறமையின் உந்துசக்திகளில் மிகச் சிறந்தது. இதில்
போட்டியும் இருக்க வேண்டும். Monopoly கூடாது. ஆகவே தண்ணீர் வழங்குவதானாலும், சாலை
போடுவதானாலும் ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனங்களுக்கு வாய்ப்புத் தரவேண்டும். நிச்சயமாக
தரமானது வெல்லும். இப்படிப்பட்ட போட்டி இல்லாததுதான் அரசாங்கச் சேவைத் துறைகள்
அசட்டையாகவும் அலட்சியமாகவும் இருந்து திறமையின்மையைப் பெருக்கிக் கொள்ளும் காரணம்.

 ஏன் இந்தியாவில் தனியார் துறை வந்தால் "விழுங்கிவிடும்" என்ற கருத்து இருக்கிறது?
சரியான கண்காணிப்பு, விதிமுறைகள் இருந்தால் தனியார் துறையின் சேவை சிறப்பாக
இருக்கும். அரசாங்கம் தருவது போன்ற மலிவான சேவையை அவை வழங்கா என்பது
தெளிவு. திறமான சேவைக்குரிய விலையைக் கொடுக்க மக்களும் தயாராக வேண்டும்.

நீங்கள் சொல்லும் மருத்துவ சிகிச்சை காப்பீடு பற்றி எனக்கு அதிகம் தெரியாது. எங்கள்
நாட்டில் தனியார் நிறுவனங்கள் வழங்கும் மருத்துவக் காப்பீடுகள் நன்றாகவே செயல்
படுகின்றன. சிங்கப்பூரில் கட்டாயக் காப்புறுதித் திட்டம் நன்றாகவே செயல் படுகிறது.
அமெரிக்காவில் ஒபாமா கொண்டுவரும் கட்டாயக் காப்புறுதித் திட்டத்திலும் நன்மைகளே
அதிகம் உள்ளன.

தனியார் மயத்துக்கு மக்களின் ஆரம்ப கட்ட எதிர்ப்பு எதிர்பார்க்கக் கூடியதே. சேவையின் விலை
உயரும் என்பதே முதல் ஆட்சேபமாக இருக்கும். அதற்கேற்ப சேவையின் தரமும் உயரும்
என்பதைப் புரிந்து கொள்ள கொஞ்ச நாளாகும்.

ஆனால் எல்லா முறைகளிலும் அடிமட்ட மக்களையே முதன்மையாக வைத்துச் சிந்தித்தால்
அவர்களுக்கு ஏற்படும் சிரமங்களையும் பின்னடைவுகளையும் முதன்மைப் படுத்தினால்,
எந்தத் துறையும் முன்னேற முடியாது. நடுத்தர வர்க்கத்தின் நலன்களை முதன்மைப் படுத்தும்
திட்டங்களை வகுத்துச் செயல் படுத்தினால், அதனால் ஏற்படும் முன்னேற்றம், ஏழைகளையும்
(கொஞ்சம் தாமதமானாலும்) வந்தடையும். அதோடு அரசு தனது வருமானத்தைப் பயன் படுத்தி
ஒரு பாதுகாப்பு வலையையும் அவர்களுக்கு ஏற்படுத்தித் தரவேண்டும் (இலவச அடிப்படை
மருத்துவச் சேவை, ரேஷன் கார்டு போன்றவை).


ரெ.கா.
*
இன்னம்புரான்,

அரசாங்கங்கள் ஒரு நாட்டை நிர்வகிப்பதில் உள்ள திறமைக் குறைவைச் சுட்டித்தானே உங்கள்
கட்டுரை அமைகிறது? அதை மேலும் உறுதிப்படுத்தவே நான் எழுதினேன்.

அரசு நிறுவனங்கள் சரியாக வேலை செய்யாமல் இருக்க தனியாரும் ஒரு காரணம்.
உதாரணமாக பிஎஸென்னல் G3 தொழில் நுட்ப உரிமம் பெற்று பல மாதங்கள் ஆகின்றன. இன்னும் சேவை சில நகரங்களுக்கு மட்டுமே! இதற்கு அவர்கள் மெத்தனம் மட்டுமே காரணமல்ல. 
திவாஜி
*
பிஎஸ் என் எல் தனியாரோடு போட்டி போட முடியாமல் திணறுகிறது என்று சொல்லலாம், அதற்கு மோசமான அமைச்சகமும் காரணம் என்பது வெளிப்படை. கடந்த மூன்றாண்டுகளில் தட்டுத்தடுமாறி நடை போடுகிறது பி எஸ் என் எல். என்றாலும் மத்திய அரசு இதைப் பற்றிக் கவலைப்படவில்லை. நேற்று சபரிமலை நேரடி ஒளிபரப்பையே எடுத்துக் கொண்டால், பொதிகை சானல் நன்றாக நிகழ்ச்சியை ஒளிபரப்ப முயன்றாலும் முடியவில்லை. ஒரே கோடு கோடாக, புள்ளி புள்ளியாகத் திரை, அதே தனியார் சானல்களில் பளிச்சோ பளிச். அப்புறம் தூரதர்ஷன் பாரதி கொஞ்சம் பரவாயில்லாமல் வந்தது. பொதிகையின் நிகழ்ச்சிகள் நல்ல ஆக்கபூர்வமாய் வந்தாலும் தனியார் தொலைக்காட்சிகளின் நெடுந்தொடர்களுக்கு முன்னால் போட்டி போட முடியவில்லை. பிஎஸ் என் எல்லுக்கும் அதே பிரச்னை!
*
நரசய்யா,

'வாரிசத்துவம்' நல்ல சொல். என்ன செய்யலாம், ஊழல் இல்லாத நாடு என்று பெயர் பெற்ற
சிங்கப்பூரிலும் வாரிசித்துவம்தான் ஆளுகிறது. ஆளும் குடும்பங்கள் பல இருக்கின்றன
உலகில். மலேசியப் பிரதமர் நஜீப்பின் தந்தை இரண்டு தவணைகளுக்கு முன் பிரதமராக
இருந்தவர்.

ஜியார்ஜ் புஷ்ஷின் அதிபராட்சியையும் வாரிசத்துவம் என்று சொல்லலாமா?
ஒரு வேளை முறையான தகுதிகள் இல்லாமல் பதவிக்கு வருபவரைத்தான்
அப்படிச் சொல்லமுடியும் போலும். ஒரு தவணை இன்னொருவர் இருந்தபின்
பதவிக்கு வருபவரை அப்படிச் சொல்ல முடியாது.

ரெ.கா.
*
அரசியலில்  அன்றிலிருந்து  இன்று வரை  வாரிசுகளே  தொடர்கின்றன

அதில் தவறு இல்லை

அரசியலில் மட்டுமல்ல

அனைத்து துறைகளிலும்  வாரிசுகள்தான்  வரமுடிகிறது

ஆனால்  வாரிசுகள்  வந்தாலும்    வருவதற்கு வேண்டுமானால்   அது உதவுமே தவிற

திறமை  இல்லாவிடில்      நிலைக்க முடியாது

ஆனால் அரசியலில் மட்டும் தான்   திறமை  இல்லாத போதும் மற்ற  அராஜக்ங்கள் செய்து   நிலைக்க முடிகிறது


அன்புடன்
தமிழ்த்தேனீ
*
ரெ. கா கவனத்திற்கு: 
எனது கட்டுரை ஒன்று ஹிந்துவில் வெளியானது வாரிசத்துவத்தைப்பற்றி விளக்கியது பார்க்கவும்

நரசய்யா
_______________________________________________________________________________________________
(தொடரும்) 
 (4):அரசை உருப்படியாக வேலை செய்ய வைக்க...



No comments:

Post a Comment