Wednesday, May 1, 2013

சிட்டி விழா




சிட்டி விழா
11 messages

Innamburan Innamburan Sat, Apr 18, 2009 at 6:52 PM
To: minTamil@googlegroups.com
இன்று திரு. 'சிட்டி' சுந்தரராஜனின் நூற்றாண்டு விழா இனிது நிறைவேறியது, சாஸ்திரி நகர் மங்கையர் மன்றத்தில். திரு. நரசய்யா ஊக்குவிக்க, முனைவர் சதாசிவம் உறுதுணை அளிக்க, என் பழைய பேட்டை சாஸ்திரி நகருக்கு, க்ரோம்பேட்டையிலிருந்து பயணித்தேன். திரு. நரசய்யா பல சான்றோர்களையும், அறிஞர்களையும் அறிமுகம் செய்து வைத்தார். ஸத்யபாமா, சுப்ரமணியம், மோஹன் போன்ற பழைய நண்பர்களை கண்டு களித்தேன். 'சிட்டியின்' மக்வுகள் பரிவுடன் தந்தையின் பெருமையை கொண்டாடினர். முனைவர். ஸீ.எல்.ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். வாழ்த்துரைகள் வாசிக்கப்பட்டன். தமிழ் மரபு கட்டளையின் சார்பில் நமது நா. கண்ணன் அவர்களின் நீட்டொலை வாசிக்கப்பட்டபோது, அது மிகப்பொருத்தமாகவும், இலக்கிய நடையில் இருந்ததைக்கேட்ட யான் பெருமிதத்துடன், மற்றவர்கள் செவி சாய்த்ததை அனுபவித்தேன். பேராசிரியர் இந்திரா பார்த்தசாரதி த்ன்னை 'சிட்டி' ஊக்குவித்ததைப் பற்றியும், அவரது (British understatement humour) நகைச்சுவையின் மேன்மையை பாராட்டிப்பேசினார். இதழாசிரியர் திருப்பூர் கிருஷ்ணன், தனக்கே உரிய நகைச்சுவையுடன், 'சிட்டியின்' நுட்பமான எள்ளல்களை, பகிர்ந்து கொண்டார். முனைவர் தமிழ்ச்செல்வி எவ்வாறு அவரது 'மணிக்கொடி' ஆய்வுகளுக்கு 'சிட்டி' யும் அனரது துணைவியாரும் ஊக்க்ம் அளித்தனர் என்பதைக்கூறி மகிழ்ந்தார். மகனுக்கு மேல் மருமான் அல்லவா! அந்த உரிமையுடன், திரு. நரசய்யா, 'சிட்டியை' பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொண்டார். இவர் கடலோடியாகப்போவதை 'சிட்டி' விரும்பாவிட்டலும், இவர் விடுமுறையில் வந்த போது 'சிட்டி' ரயில் நிலையத்து வந்து வரவேற்ற்தை கூறி மனம் நெகிழ்ந்தார். சிறார்களின் பங்கு மேலும் சிறப்பு சேர்த்தது. ஒரு மழலை எல்லாரின் மனத்தைக் கொள்ளை கொண்டாள்.
 
'சிட்டியின்' நாமம் என்றும் வாழ்க.
 
இன்னம்பூரான்
.

kamaladevi aravindSun, Apr 19, 2009 at 1:52 AM
அமரராயினும் அமராப்புகழ் அவரது என்றறிவதே மாண்பு
கமலம்

நா.கண்ணன் Sun, Apr 19, 2009 at 3:26 AM

'சிட்டியின்' மக்வுகள் பரிவுடன் தந்தையின் பெருமையை கொண்டாடினர்.மகனுக்கு மேல் மருமான் அல்லவா! அந்த உரிமையுடன், திரு. நரசய்யா,
'சிட்டியை' பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொண்டார். இவர் கடலோடியாகப்போவதை
'சிட்டி' விரும்பாவிட்டலும், இவர் விடுமுறையில் வந்த போது 'சிட்டி' ரயில்
நிலையத்து வந்து வரவேற்ற்தை கூறி மனம் நெகிழ்ந்தார்.

>>>>
பெரும்பாலும் தமிழகக் குடும்பங்களில் ஒரு இலக்கியவாதியின் இருப்பை
அவர்கள் குடும்பம் அவ்வளவாகக் கண்டு கொள்வதில்லை. மாற்றாக சிட்டியின்
குடும்பமே சிட்டியின் இலக்கியத்தைப் போற்றிப் பாதுகாப்பது ஒரு
முன்னுதாரணம். சிட்டிக்கு நரசையாவின் பெற்றோர் ஆதர்சம். நரசைய்யாவிற்கு
சிட்டி ஆதர்சம். சிட்டி பலருக்கு ஆதர்சம் ;-)


devoo Sun, Apr 19, 2009 at 5:54 AM

Apr 19, 7:26 am, நா.கண்ணன்

//மகனுக்கு மேல் மருமான் அல்லவா.
நரசைய்யாவிற்கு சிட்டி ஆதர்சம்.//

மறுமக்கள் வழி மான்மியம் !
[Quoted text hidden]

chithan Sun, Apr 19, 2009 at 6:57 AM

இன்னம்பூரான் ஐயா
கடவுள் வாழ்த்து பாடப்பெறும்போது நான் வந்து சேர்ந்தேன்.ஆனால் நீங்கள்
வந்ததும் என்னைக் குறித்து விசாரித்ததும் பின்னர் நரசய்யா சொல்லி அறிந்து
கொண்டேன். ஒருவருக்கொருவர் யார் என்று தெரியாமலே ஒரே அரங்கில்
இருந்திருக்கிறோம். நான் இறுதிவரை பங்கு கொண்டேன். பரவாயில்லை. 23 -ம்
தேதி தமிழ்த் தேனி வீட்டில் சந்திப்போம். இன்று தினமணியில் யுகமாயினி
பற்றி கலாரசிகன் எழுதியிருக்கிறார். வாசித்தீர்களா?
சித்தன்


Innamburan Innamburan Sun, Apr 19, 2009 at 8:37 AM

அன்பர் சித்தனுக்கு,
 
உங்களை அறிந்த்கொள்ளாமால் போனது வருத்தமாக இருக்கிறது. நேற்று இரவு இடுகை முடித்தபோது நள்ளீரவு தாண்டிவிட்டது. ஏனோ, இன்று வைகறைப்பொழுதில் உடல் நிலை பாதிக்கப்பட்டு நினைவு இழந்த நிலையில், சுற்றம் டாக்டரை அழைத்து வந்த்து. வைத்தியரின் ஆணைப்படி 23ம்தேதி அலுவல் ரத்தாகிவிட்டது. மன்னிக்கவும்.
இன்னம்பூரான்

Tirumurti Vasudevan Sun, Apr 19, 2009 at 11:14 AM

உடம்பை பாத்துக்குங்க. ஏன் இப்படி கண் முழிக்கறீங்க? நேரத்துக்கு படுத்து
நேரத்துக்கு எழுந்திருக்கவும்.

(டாக்டரா இருக்கரது என்ன வசதி பாத்தீங்களா? எல்லாருக்கும் ஒரு அட்வைஸ் பண்ண முடியுது!)

தி.வா

நா.கண்ணன் Sun, Apr 19, 2009 at 11:58 AM

டாக்டர் சொல்லட்டுமென்று காத்திருந்தேன்.
உடல் நலத்தை கவனித்துக்கொள்ளவும்.
சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையமுடியும்.
உடலை வளர்த்து உயிர் வளர்க்கவும்.

நன்றி.

]

Tthamizth Tthenee Sun, Apr 19, 2009 at 12:16 PM
Reply-To: minTamil@googlegroups.com
To: minTamil@googlegroups.com
அவ்வளவு உடல் நிலை சரியில்லாத போதும்  காலை என்னை தொலைபேசியில் அழைத்து உடல் நிலை சரியில்லை ஆகவே 23ம் தேதி என் வீட்டிற்கு வரும் நிகழ்ச்சியை தள்ளிப்போடலாம் என்று செய்தி அளித்தார்  அவரின் திட்டமிடும் பாங்கை எப்படிப் பாராட்டுவது
பெரியோர் என்றும் பெரியோரே
கூடிய விரைவில் அவர் உடல் நலம் பெற இறைவனை வேண்டுவோம்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 


Innamburan Innamburan Sun, Apr 19, 2009 at 12:55 PM

யாவருக்கும் நன்றி. பெரிய விஷயம் ஒன்றும் இல்லை. சர்க்கரை வியாதியை ஆஸ்தான வியாதியாக வைத்துக்கொள்பவர்களுக்கு வைகறை சர்க்கரை இறக்கம் சிலசமயம் உண்டு. பல சமயங்களில் சமாளித்துக்கொண்ட நான் இன்று இதை இனம் கண்டுகொள்ளமுடியவில்லை. ஒரு சிறுநீரகம் தான் என்பது மேலும் படுத்துகிறது. டாக்டர் தி.வா. அவர்களின் 26ம் தேதி வருகைக்குக்குக் காத்திருக்க, மற்றொரு பிரமேயம்.
 
இன்னம்பூரான்


தாரகை Mon, May 17, 2010 at 7:20 AM

நகர்வலம்:- "நம்மில் ஒருவர்!"

சிட்டி நூற்றாண்டு விழாவில், கோவை ஞானியையும், இந்திரா
பார்த்தசாரதியையும் கெளரவித்தார்கள்.

ஒருமுறை சிட்டி அவர்கள் தி.ஜானகிராமனுடன் பேசிக் கொண்டிருந்தபோது, அங்கே
வந்த கோவை ஞானியை, "இவர் நம்மில் ஒருவர்" என்று அறிமுகப்படுத்தினாராம்.

அதில் நெகிழ்ந்து போனார் ஞானி.

இ.பா.வையும், கோவை ஞானியையும், சிட்டியின் மனைவியையும் குறித்து
திருப்பூர் கிருஷ்ணனின் உரை சுவாரசியமாக அமைந்திருந்தது.

சிறு சிறு நிகழ்ச்சிகளைக்கூட மறவாமல் குறிப்பிட்டார் கிருஷ்ணன்.

"என்னை அழைக்காவிட்டாலும் நான் வந்து கலந்து கொண்டு பேசுவேன்",என்று
கூறியிருந்த இலங்கை எழுத்தாளர் எஸ்.பொ., சிட்டி அவர்கள் "சிவபாத
சுந்தர"த்தை இணைத்துக் கொண்டு சிறுகதை வரலாற்றையும், நாவல் வரலாற்றையும்
படைத்து, இலங்கை எழுத்தாளர்களை அங்கீகரித்தது போல் இருந்ததாக அவர்
நெகிழ்ச்சியுடன் கூறினார்.

சிட்டிக்கு மிகவும் பிடித்த பாரதியார் இல்லத்தில் விழா நடந்தது,எளிமையாக.

சிட்டியின் எழுத்தாற்றலையும் அவர் பிற எழுத்தாளர்களோடு கொண்டிருந்த
நெருங்கிய நட்பையும் விவரித்தார் கோபால சுந்தரம்.

கர்நாடக இசைப் பாடகர் சஞ்சய் சுப்பிரமணியன் சிட்டியின் அன்புக்குப்
பாத்திரமானவர். அவர் மனைவியுடன் வந்திருந்தார்.

சாருகேசி

நன்றி:- (தினமணி) ஞாயிறு கொண்டாட்டம்

சித்திரத்துக்கு நன்றி: 
http://www.kalachuvadu.com/issue-80/images/chitti.jpg
இன்னம்பூரான்
01 05 2013

No comments:

Post a Comment