Monday, June 10, 2013

20: தமிழ்நாடு: தணிக்கை




தணிக்கை என்றதொரு முட்டுக்கட்டை-20


Innamburan Innamburan Fri, Sep 23, 2011 at 7:15 AM

அப்டேட்: கிட்டத்தட்ட இரு வருடங்கள் முந்தைய டார்ச்சர், இது. காலத்தின் கோலமடா! 2013 வருட டார்ச்சருக்கான தமிழ்நாட்டு ஆடிட் ரிப்போர்ட்கள் வந்து சில நாட்கள் தான் ஆயின. எனினும் 'டார்ச்சர் ஒழிக' என்று யாராவது இகழப்போகிறார்களோ என்ற அச்சத்தில் நடுங்கும்
இன்னம்பூரான்
10 06 2013
சித்திரத்துக்கு நன்றி:https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiyJYd-gz-aJEoeuBdKFzFRJ0ABYADmSpjcTPK_yGeTEpcbij3hqm-Ti1CPGjQ5hkuiOxPC9qRyDBdbuRFy2Q1Sf1Oanty0wrrB89ztHV99oC1pF5Im1Uagc8DmqiZLxKK37rMnmj3grFM/s1600/Untitled-1.jpg
வல்லமையில் யான் வரைந்த டார்ச்சர்!

*
தணிக்கை என்றதொரு முட்டுக்கட்டை-20

தமிழ்நாடு
தணிக்கை அலுப்புத் தட்டும் விஷயம் தான். ஆனால், மக்கள் அதைச் செங்கோலாக பயன்படுத்த முடியும். அரசைக் கண்டித்துத் தண்டிக்க முடியும், தேவை ஏற்படுமானால். எனவே, அரசு ஆங்கிலத்தில் வரும் ஆடிட் ரிப்போர்ட்களை, என் பேசும் மொழியில், அலசிப், பகிர்ந்து கொள்கிறேன். எந்த வினா எழுந்தாலும், உகந்த பதில் அளிக்கக் கடமைப் பட்டிருக்கிறேன். தமிழ் மொழியிலும் ஆடிட் ரிப்போர்ட்டுக்கள் பிரசுரம் ஆகின்றன. சில நாட்களாகவே, ஊடகங்களில் தணிக்கைச் செய்திகள். மூலம் தென்படவில்லை. ஏ.ஜீ. ஆஃபீசில் விசாரித்தேன். உடனே விவரம் அனுப்புவதாகச் சொன்னார்கள். அத்துடன்  சரி. அதிகார பூர்வமான அறிக்கைகள் ஒரே நாளில் நான்கு, புதுச்சேரி அறிக்கைகள் உள்பட, இன்று வந்துள்ளன. அவை கிடைத்தவுடன், இதை எழுதுகிறேன்.
A. அரசு கம்பெனிகள், வாரியங்கள் பற்றிய ஆடிட் அறிக்கை இது. [Audit Report No.4 (Commercial) for the year ended 31 March 2010: 163 பக்கங்கள்]
  1. ரத்தினச் சுருக்கம்: 64 கம்பெனிகள், 2 வாரியங்கள், 11 முடங்கிய கம்பெனிகளில், 2.79 லட்சம் ஊழியர்கள். ரூ. 47,578.39 கோடி வரவு/செலவு; சேமித்த? நஷ்டம்- ரூ. 21,297.39 கோடி. இவற்றின் வரவு/செலவு கொஞ்ச நஞ்சமில்லை.  அரசின் வரவு/செலவில் ஐந்தில் ஒரு பங்கு. கபளீகரம்!. மூன்று வருடங்களாக ஆடிட் கரடி கத்தியதை ஆய்வு செய்தாலே, ரூ. 4000 கோடி  நஷ்டத்தையும் ரூ. 600 கோடி  வீணாப் போன முதலீடுகளையும் தவிர்த்திருக்கலாம் என்பது தெளிவு. சீர்திருத்தங்கள் மிகவும் தேவை.
  2. சொன்னதும், செய்ததும்: கடந்த 25 வருடங்களில் தனித் தனிக் கம்பெனிகளாக உலவி வரும் ஆதி திராவிடர் /பின் தங்கிய வகுப்புக்கள்/ சிறு பான்மையினர்  முன்னேற்றக் கம்பெனிகள் மூன்றுக்கும் இலக்கு ஒன்றே தான். (ஏன் திரி மூர்த்திகள்?) மூன்றும் முன்னேற்றம் பண்றாங்களோ இல்லையோ, அரசுப் பணத்தை வங்கியில் டிபாசிட் செய்து விட்டுச், சும்மா இருக்கிறார்கள். ஹூம் ! ரூ. 250 கோடி வரை! திட்டம் யாதுமில்லை, ஐயா. கிராமங்கள் பற்றிய விவரங்கள் இல்லை, ஐயா. தாமதம் உண்டு, ஐயா. தரிசு நிலம் வாங்கியதும் உண்டு. அளித்த பயிற்சியும், கொடுத்த வேலையும் வெவ்வேறு. உதவிக்கரம் யாருக்கு நீட்டவேண்டும் என்ற தெளிவு இல்லை. அரைகுறைக் கடனுதவி. யாருக்கும், அது உதவாது. உதவிக்கரம் நீட்டினால், லேவாதேவி ரேட்டு அதிகம், ஐயா. ஆடிட் கோரிக்கை: சற்றே விவரங்களின் ஆதாரத்துடன், திட்டமிட்டு, டிலே செய்யாமல், இந்த ஏழை பாழைகளுக்குச் சொன்னதைச் செய்யுங்கள்.
  3. சாரமில்லா மின்சாரம்: ஐயா! தனி மனிதனுக்கோராயிரம் வாட் மின்சாரம் என்பது 2012 வருட தேசீய இலக்கு. ஆனா பாருங்கோ! 4000 மெகாவாட் அதிகப்படி உற்பத்தி  தேவையிருந்தாலும், எடுத்த காரியத்தைச் செய்யாததாலும், திட்டமிட்ட ஹைட்ரோ திட்டங்களை அரோஹரா செய்ததாலும், 290 மெகாவாட் மட்டுமே அதிகப்படியாக உற்பத்தி.  இத்தனைக்கும் அதிகப்படி செலவு ரூ. 400 கோடி. இன்னொரு சமாச்சாரம். (40 வருடங்களாக ஆடிட் சொல்லி வரும் குற்றச்சாட்டு, இது). மின் உற்பத்திக் கலங்களுக்கு 35 வயதுதான் ஆயுசு. காயகல்பம் உண்டு. சத்தியமாக பலிக்கும். 16 ஸ்டேஷன்களுக்கு அர்ஜெண்ட் காயகல்பம் தேவை. கொடுத்ததோ, இரண்டு ஸ்டேஷனுக்கு மட்டும். (ஏனையா மின்வெட்டு வராது?) இந்த அழகில் ரூ. 2,175 கோடி பெறுமான வேலைகள், டெண்டர் இல்லாமல் (வேண்டப்பட்டவருக்கு?) கொடுத்ததால், சுங்கவரிச் சலுகை ரூ. 133 கோடி ரூபாய் போச்சு. நிலக்கரி வாங்கிய வகையில், மற்றொரு அரசு கம்பெனி வாங்கிய விலையோடு ஒப்பிட்டால், நஷ்டம்-ரூ. 337.76 கோடி. எண்ணூர் பேசின் பிரிட்ஜ் மின்கலங்களால் நஷ்டம் அதிகம். அவை சாரமில்லாதவை. சக்கை. (இங்கும் ஒரு பழங்கதை) ஏன் அவற்றைக் கட்டிக் கொண்டு மாரடிக்கிறார்கள் என்று புரியவில்லை. செலவு தான் கிட்டத்தட்ட ரூ. 300 கோடி ஜாஸ்தியாகியிருக்கிறது. கடன் சுமையும் நாலு வருஷங்களில் கிட்டத்தட்ட நாலு மடங்கு ஜாஸ்தி.
  4. ஒரு சூட்சுமம்: நிலக்கரி எரிப்பதால் சாம்பல் விழும். அதற்கும் காசு கிடைக்கும், கணிசமாக. ஆனால் விலை போன சாம்பல், விழுந்த சாம்பலை விட குறைவு. என்ன குப்பையைக் கிளறுகிறீர்களே என்று கேட்கிறீர்களா? கேட்டால், ஒரு பழங்கதை சொல்லி, விளக்குகிறேன். இப்போதெல்லாம் பழங்கதைகளை, கேட்டாலொழியச், சொல்வதில்லை.
  5. மாதிரிக்கு சில ஆடிட் துளிகள்: அரசு கேபிள் கார்ப்பரேஷன், மக்களுக்குத் தொலைக்காட்சிகள் அதிகச் செலவில்லாமல் கிடைக்க வேண்டும் என்று அக்டோபர் 2007-ல் உருவாக்கப்பட்டு, ஏப்ரல் 2008-ல் மத்திய அரசின் அனுமதி பெற்று, ஜூலை 2008-ல், அரசின் பங்கு ரூ. 25 கோடி, மற்றும் கடனுதவி ரூ. 36 கோடியுடன் தொடங்கி, மூன்று வருடங்களில் சாதித்தவை: அனாவசிய கட்டுமான வசதிகள் ரூ. 28.28 கோடி,  நஷ்டம் ரூ. 8.11 கோடி. காரணம்: லோக்கல் ஆபரேட்டர்களுடன் உறவாடாமல் இருந்தது. சன், சோனி, ஸ்டார் போன்ற ஜாம்பவான்களுடன் ஒவ்வாமை. ( அது தான் உள்குத்துத் திட்டம் என்று வாசகர்கள் சொன்னால், இல்லை என்று சொல்ல என்னிடம் சான்றுகள் இல்லை.)
  6. தலைகீழ்: ரூ. 28.08  கோடி செலவில் வாங்கிய உபகரணங்கள், ரூ. 142.50 கோடி செலவில் செட்-அப் பெட்டி வசதி செய்யா விட்டால், வேஸ்ட். அந்தச் செலவு செய்தால், நஷ்டம் உத்தரவாதம். ரூ. 28.08  கோடி செலவில் வாங்கிய உபகரணங்கள் என் செய்ய உதவும்?- உதவாது.
  7. வரவு எட்டணா! செலவு எட்டாயிரம் அணா: ரூ. 250 கோடி எதிர்பார்த்த இடத்தில் வந்தது ரூ. 1.50 கோடி. சுண்டைக்காய் ஒரு பணம்; சுமைக்கூலி பத்துப் பணம். ரூ. 1.50 கோடி தருவிக்க, ரூ. 11 கோடி செலவு. பேஷ்!
  1. பேரென்னெவோ பூம்புகார் கப்பல் கம்பெனி. ஒரே கரி. நிலக்கரி சுமக்க வாங்கின கப்பல்கள்: தமிழ்ப் பெரியார், தமிழ் அண்ணா, தமிழ்க் காமராஜ். தூத்துக்குடியில் கரிச்சுமையை இறக்க க்ரேன் வசதி இல்லை. கப்பலின் க்ரேன் தான் பயன்படவேண்டும். தமிழ் அண்ணா என்ற கப்பலில் இருக்கும் பத்தாம்பசலி க்ரேன் இரண்டும் ரிப்பேர். அதைச் சரி செய்வதில் அசாத்திய டிலே. காரணங்கள் ஆவணங்களில் இல்லை. பத்தாம்பசலி க்ரேன் என்று பதில் வேறு.  தமிழ்ப் பெரியார் என்ற கப்பலை மராமத்து செய்வதில் ஒரு சைனாக் கம்பெனியுடன் இழுபறி. அடுத்துச் சென்ற கம்பெனி படு தாமதம். சாமான் வாங்குவதில் செய்த டிலேயினால் அதிகப்படி செலவு ரூ. 56.37 கோடி. வேறு கப்பல்களின் க்ரேன் வாடகை அதிகப்படி செலவு ரூ. 50. 29 கோடி. கப்பல்களைக் குத்தகை எடுப்பதில், அரசின் விதிகளை இந்தக் கம்பெனி கண்டு கொள்ளவில்லை. மேலும், கடல் வாணிக நுட்பங்களை சரிவர இயக்காமல், இந்த கம்பெனி பல இன்னல்களுக்குள் சிக்கியது.
  1. எலெக்ட்ரானிக் கார்ப்பரேஷன், அவசரப்பட்டு தேவையில்லாத இடங்களில் நிலம் வாங்கியதில் இருபது கோடி ரூபாய் முடக்கம்.
  2. சிப்காட் கம்பெனி அலிசன் ட்ரான்ஸ்மிஷன் என்ற மனுதாரருக்கு, அரசின் ஆணைக்கு உட்பட்டு, பாதி விலையில் நிலம் அளித்ததில் நஷ்டம்  ரூ. 8.32 கோடி.  இதில் பாரபட்சம்  இருக்குமோ என்ற ஐயம் எழுகிறது.
  3. மத்திய அரசு விதித்த சர்வீஸ் வரியை சிப்காட் வசூலிக்காததால் ரூ. 70 லட்சம் நஷ்டமாகி விடும். அதனுடன் வட்டி ரூ. 15 லட்சம் மற்றும் அபராதம் ரூ. 75 லட்சமும் நஷ்டம். [மத்திய அரசு இதைத் தள்ளுபடி செய்ய விரும்பாது; தணிக்கை அங்கும் திரும்பும் அல்லவா! அதற்கு ஒரு பழங்கதை உள்ளது, வாசகர்களே!]
  4. தமிழ்நாடு கட்டுமான கார்ப்பரேஷன் பத்து வருடங்களாக, வரவு செலவு முடிவு செய்யவில்லை. ஆள் இல்லையாம். பேஷ்!
  5. ட்ரான்ஸ்ஃபார்மர் போன்ற சாமக்கிரியைகளை வாங்குவது சிக்கலான விஷயம். ஒப்பந்தக்காரரின் திறன் போன்ற விஷயங்களை ஆராய வேண்டும். அத்தருணம் சாமர்த்தியம், வாய்மை, பின்னணி எல்லாம் கை கொடுக்கும். டெண்டர் விதிகளை சடங்கு மாதிரி, உதட்டசைவில் செய்வதால் நலம் ஒன்றுமில்லை. அப்படிச் செய்ததால், மின்சார வாரியத்திற்கு ஏழு கோடி ரூபாய் நஷ்டம். இது எந்த தெய்வத்திற்கு ப்ரீதி?
  1. B. Audit Report (Civil), Tamilnadu For the Year 2009-2010: 212 பக்கங்கள்
இரண்டாவது சுற்றில் வந்த இந்த அறிக்கை, தமிழ்நாட்டு அரசின் துறைகளையும், ஐந்தாவது சுற்றில் வந்த மற்றொரு அறிக்கை (85 பக்கங்கள்) தமிழ்நாட்டு அரசின் வருமானத்தையும் பற்றியவை. இந்த அறிக்கையிலிருந்து இரு துளிகள் மட்டும், ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற வகையில். வாசகர்கள் விரும்பினால், அண்ணா பல்கலை கழகத்தின் கலக்கங்கள், அசெம்ப்ளி அமர்க்களங்கள், மற்றும் பல ஆச்சரியங்களைப், பின்னர் பார்க்கலாம், பார்க்காமலும் விட்டு விடலாம்.
  1. இந்தத் தொடரின் 6-வது பத்தியில் ‘பூசணிக்காயைச் சோற்றில் மறைத்த மர்மம்!’ உடைக்கப்பட்டது. அதன் தொடர் இங்கே தென்படுகிறது. ‘ஒப்பந்தக் காரர்கள், அரசுடன் ஒப்பந்தம் செய்கிறார்களோ, இல்லையோ, தங்களுக்குள் செய்கிறாப்பில இருக்கே’என்று, புள்ளி விவரங்களுடன், ஆடிட் வினவ, அரசு மேலதிகாரியும் ‘அப்படித்தான் தோன்றுகிறது எம்மால் யாதும் செய்ய இயலாது’ என்கிறார். எனக்கு வெட்கமாக இருக்கிறது. ஏனெனில், அரசின் ஆளுமையை, நிர்வாகத் திறனை, இந்தப் பதில் பழிக்கிறது. இந்த ஒப்பந்தக்காரர்கள் லேசுப்பட்டவர்கள் இல்லை. 17,513 டெண்டர்களில், 17,110 டெண்டர்களில், இரு ஒப்பந்தக்காரர்கள் தான் போட்டி. ஊன்றிக் கவனித்துப் பார்த்தால் ‘டூவில்டம்’ மும் ‘டூவில்டீ’யும் (அதாம்ப்பா! ஐயாவும் & பினாமியும்) போட்டி என்ற தோற்றம். கட்சிக்காரனுக்கு டெண்டர் என்று ஓப்பனா உரிமை கொண்டாடுகிறார்களே, புரியுதா?
  1. அசெம்ப்ளி சேதி என்ன? என்று கேட்பீர்கள்: இரண்டு சொட்டு மருந்து: (i) முன் வைத்த காலைப் பின் வைத்த காதை: கோபுரம் கட்ட நாளாகும். தேர்தலுக்கு முன்னால் கிரகப்பிரவேசம். ஒரு பாலாலய கோபுரம் ( தற்காலிக டூப்ளிகேட்) கட்டுக என்று ஆணை. நோ டெண்டர். வீண் செலவு: ` 3.28 கோடி. (ii) பைல் அஸ்திவாரம் போட்டாஹ. அளவு கோல் மாத்தினாஹ. அதிகப்படியாகக் கொடுத்தாஹ:` 2.46 கோடி.

நான் என்ன சொல்ல வரேன்னா? கேளுங்கோ. சொல்றேன்.
(தொடரலாமா என்று கேட்கலாமா?)

இன்னம்பூரான்
23 09 2011

திவாஜி Fri, Sep 23, 2011 at 9:29 AM

கேக்குறேன், சொல்லுங்க!
எல்லா பழங்கதைகளையும் சொல்லி அருள வேணும்!


காளையும் கரடியும் Fri, Sep 23, 2011 at 9:26 AM

சொல்லுங்கோ! கேட்டுக்குறோம்!
இது போன்ற அரசாங்க கஜானாவிலிருந்து செலவழிக்கப்படும் துட்டு எந்த
அளவிற்குப் பயனளிக்கிறது என்ற (மக்களின் பார்வைக்கு வராமலிருக்கும்)
தணிக்கை அறிக்கைகளை அலசுவதற்கு ரொம்ப நன்றி!

On Sep 23, 11:15 am, Innamburan Innamburan <innambu...@gmail.com>


kra narasiah Fri, Sep 23, 2011 at 2:02 PM

நானும் விசாகைத் துறைமுகத் தலைமைப் பொறியாளராக இருந்த பொது தணிக்கையாளர்களைக் குறித்துக் கடுமையாக விமர்சித்துள்ளேன். ஆனாலும் இப்போது பார்க்கையில் தணிக்கையாளர்களின் முக்க்யத்துவம் - முக்கியமாக - 2 ஜி விவகாரம் பிறகு தெரிகிறது! நீங்களும் எங்கள் துறையில் இருந்தீர்கள் என நினைக்கிறேன்.
நரசய்யா

--- On Fri, 9/23/11, Innamburan Innamburan <innamburan@gmail.com> wrote:

Thiruvengada Mani T.K. Fri, Sep 23, 2011 at 2:05 PM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
கேட்டுக் கொண்டுதானே ஐயா இருக்கிறோம்..... தொடருங்கள்
மணி

Innamburan Innamburan Fri, Sep 23, 2011 at 2:45 PM

ஆம். நான், சென்னை, விசாகை, மும்பாய், குஜராத் துறைமுகங்கள், பாராதீப் தணிக்கை செய்திருக்கிறேன். உங்கள் கடுமையான விமர்சனம் புரிகிறது. அதனால் தான், when the National Institute of Ports asked me to design a conventional 'Finance for Non-Finance Port Executives, I neatly turned the table on them, by designing the "Non-Finance for Finance Executives." Our captive audience was a gang of FACAOs and naturally, I had you in the Faculty. Good old days.
Innamburan


K R A Narasiah Fri, Sep 23, 2011 at 3:20 PM


அங்குதான் (National Institute of Port Mnagement) நான் உங்களை முதன் முதலாகச் சந்தித்தேன்! நாம் இருவரும் 1992-3 ல் வகுப்புகள் எடுத்ததைக் குறித்து நீங்கள் தான் எனக்கு நினைவூட்டினீர்!
நான் ஓய்வு பெற்றபோது என்னை முதலில் அங்குதான் டைரக்டராக நியமிக்கப்ப்போவதாக்ச் சொன்னார்கள்1 ஆனால் எனக்கும் ஜக்தீஷ் டைட்லருக்கும் (அப்போதைய மந்திரி) உண்டான கருத்து வேற்றுமையால் அது நிறைவேறாது போயிற்று. ஆயினும் எனக்கு அதனால் நன்மையே உண்டானது! ஐக்கிய நாட்டு நிறுவனங்களில் பணி செய்ய முடிந்தது!
எல்லாம் பழைய கதை!
நீங்கள்  'Finance for Non-Finance Port Executives, I neatly turned the table on them, by designing the "Non-Finance for Finance Executives." என மாற்றியது இப்போது நீங்கள் சொன்ன பிறகு நினைவிற்கு வருகிறது!
cud chewing அசைபோடுதல் ஒரு நல்ல பொழுது போக்கு!
அடையாற்று வீட்டில் எங்கள் குடியிருப்பில் முதல் மாடி வீட்டுச் சொந்தக்காரர் காலம் சென்ற சுந்தரராஜனும் உங்கள் clan IA & AS! Rly Tribunal Member ஆக இருந்தவர்!
 
எத்தனை அழகரசர்கள் உங்கள் clan ல்!
 
புரிகிறதா!
நரசய்யா
 
2011/9/23 Innamburan Innamburan <innamburan@gmail.com>


annamalai sugumaran Fri, Sep 23, 2011 at 5:06 PM

இ சார் ,
ஷமிக்கணும்  ,ஒரு சிறிய சந்தேகம் 

மனிதனுக்கோராயிரம் வாட் மின்சாரம்
>    என்பது 2012 வருட தேசீய இலக்கு. ஆனா பாருங்கோ! 4000 மெகாவாட் அதிகப்படி
>    உற்பத்தி  தேவையிருந்தாலும், எடுத்த காரியத்தைச் செய்யாததாலும், திட்டமிட்ட
மனிதனுக்கோராயிரம் வாட்  என்பது  ஒரு   KW  தான் அதுவே ஒருமணி நேரம் உபயோகித்தால் ஒரு KWH  தான் அதுதான் நாம் சொல்லும் ஒரு யூனிட் என்பது ,ஒரு மனிதனுக்கு ஒரு யூனிட் மின்சாரம் தேசிய இலக்குஎன்பது  மிகவும் கொஞ்சமாகத் தோணுதே .
அன்புடன் 
சுகுமாரன் 



Innamburan Innamburan Fri, Sep 23, 2011 at 5:54 PM

நீங்கள் இவ்வளவு உன்னிப்பாக தணிக்கை செய்வது நலமே. ஆடிட் ரிப்போர்ட் சொல்வது: The availability of reliable and quality power is crucial for sustained growth of the economy. The National Electricity Policy envisaged providing at least 1,000 units per capita electricity by 2012. இது தவறா அல்லது மொழியாக்கம் தவறா என்று சொல்லுங்கள்.
நன்றி, வணக்கம்,
[Quoted text hidden]

Muruga poopathi Fri, Sep 23, 2011 at 7:01 PM

அன்புள்ள ஐயா,
1000 வாட் = 1 கிலோ வாட் = 1 யூனிட்
என்பதாகும்.
Innamburan Innamburan Fri, Sep 23, 2011 at 8:53 PM

நன்றி, பூபதி! நீங்களும் மின் துறையை சார்ந்தவர். எனக்கு அது தெரியும், சுகுமாரன் நல்ல நண்பர். அவரும் அத்துறையை சார்ந்தவர். அவரை ஊக்கப்படுத்தவே, அவ்வாறு எழுதினேன். எனினும் ஆடிட் ரிப்போர்ட் மேலும் தெளிவாக இருந்திருக்கவேண்டும். ஆடிட் அலுவலுகத்திடம், நேற்றே சொல்லி விட்டேன். இதையும் தமிழ் மன்றத்தில் ஏற்றி விடுங்கள். அன்றாடம்,'அன்றொரு நாள்', 'பாமர கீர்த்தி ~இன்னம்பூரான்' இரண்டையும் நீங்களே ஏற்றி விடுங்கள், முடிந்தால். உங்கள் ஸ்பிக் நண்பர்கள் என்ன சொல்கிறார்கள்?
[Quoted text hidden]

Geetha Sambasivam Sat, Sep 24, 2011 at 1:32 AM
இதைப்படிக்கையிலேயே மின் அழுத்தம் ஏறி ஏறி இறங்குதே!


Geetha Sambasivam Sat, Sep 24, 2011 at 1:35 AM

இந்தத் தொடரின் 6-வது பத்தியில் ‘பூசணிக்காயைச் சோற்றில் மறைத்த மர்மம்!’ உடைக்கப்பட்டது. அதன் தொடர் இங்கே தென்படுகிறது. ‘ஒப்பந்தக் காரர்கள், அரசுடன் ஒப்பந்தம் செய்கிறார்களோ, இல்லையோ, தங்களுக்குள் செய்கிறாப்பில இருக்கே’ என்று, புள்ளி விவரங்களுடன், ஆடிட் வினவ, அரசு மேலதிகாரியும் ‘அப்படித்தான் தோன்றுகிறது எம்மால் யாதும் செய்ய இயலாது’ என்கிறார். எனக்கு வெட்கமாக இருக்கிறது. ஏனெனில், அரசின் ஆளுமையை, நிர்வாகத் திறனை, இந்தப் பதில் பழிக்கிறது.//

நீங்க சொல்லாமலேயே புரியுதே!  தொடருங்கள். காத்திருக்கோம். உங்களுக்கு மட்டுமில்லாமல் எங்களுக்கும் வெட்கமாய்த் தான் இருக்கிறது.
ஐயா! தனி மனிதனுக்கோராயிரம் வாட் மின்சாரம் என்பது 2012 வருட தேசீய இலக்கு.//


இதைப்படிக்கையிலேயே மின் அழுத்தம் ஏறி ஏறி இறங்குதே!


annamalai sugumaran Sat, Sep 24, 2011 at 4:51 AM

இ  சார் 
பெரியவர் பெரியவரே !
நல்ல முறையில் எடுத்துக்கொண்டதற்கு நன்றி .
 
providing at least 1,000 units per capita electricity by 2012

என்பது ஆளுக்கு ஆயிரம் யூனிட் அதாவது ஆளுக்கு 
ஆயிரம் KWH(   KILOWATT PER HOUR ) எனப்பொருள் படும் .இது ஒரு உயர் இலக்குத்தான் . 
ஒரு யூனிட் என்பது KWH ,   அது  KW அல்ல .W அல்ல 
நன்றி வணக்கம் .

அன்புடன் 
சுகுமாரன் 
2011/9/23 Innamburan Innamburan <innamburan@gmail.com>


Innamburan Innamburan Sat, Sep 24, 2011 at 6:34 AM

ஆமாம். கிராமங்களிலே 'அவனிடம் இரண்டுக்கு இருக்கலாம்' என்பார்கள். அதாவது இரண்டாயிரம் என்று (ரூ.2கே) சொல்வார்கள். அந்த மாதிரி ஆயிரத்தில் பேசி வழக்கம். எதற்கும், இந்த பாயிண்ட் ஆடிட் ஆqபிஸிடம் 22ம் தேதியே சொல்லிவிட்டேன். இது உயர் இலக்கு அன்று, பல மின் தேவைகள் வரப்போகும், வளரும் நாட்டில்.
இன்னம்பூரான்
2011/9/24 annamalai sugumaran <amirthamintl@gmail.com>
இ  சார் 
பெரியவர் பெரியவரே !
நல்ல முறையில் எடுத்துக்கொண்டதற்கு நன்றி .
 
providing at least 1,000 units per capita electricity by 2012

என்பது ஆளுக்கு ஆயிரம் யூனிட் அதாவது ஆளுக்கு 
ஆயிரம் KWH(   KILOWATT PER HOUR ) எனப்பொருள் படும் .இது ஒரு உயர் இலக்குத்தான் . 
ஒரு யூனிட் என்பது KWH ,   அது  KW அல்ல .W அல்ல 
நன்றி வணக்கம் .


No comments:

Post a Comment