Thursday, July 4, 2013

தேசாபிமானம்:அன்றொரு நாள்: ஜூலை 5




அன்றொரு நாள்: ஜூலை 5:

Innamburan Innamburan Tue, Jul 5, 2011 at 12:01 PM


அன்றொரு நாள்: ஜூலை 5:

தேசாபிமானம் என்றால் என்ன? நாட்டுப்பற்று அது தானா? அல்லது வேறு இலக்கா? அமெரிக்கன் வரலாற்று மன்றத்தின் இதழ் ஒன்றில் இது பற்றிய கருத்து ஒன்று. தேசாபிமானம் என்ற கோட்பாடு/நிலைப்பாடு பரவலாக வரலாற்று தளங்களில் காலூன்றியிருந்தாலும்,  குறிப்பிட்ட மக்கள் சமுதாயங்கங்களின் தனிசிறப்பாக, அது நிலவுவதும் அன்றாடம் தென்படுவது தான், என்கிறது அந்தக்கருத்து. ஒரு விஷயத்தில் தெளிவாக இருப்பது நலம். ஒரு தேசத்தின் நான்கு எல்லைகளும், நாட்டுப்பற்றின் எல்லைகளும் வெவ்வேறாக இருக்கலாம். உதாரணமாக, ஸ்காட்லேண்டு, இங்கிலாந்தில் இல்லை. அவை இரண்டும் இருப்பது ஒரு நாடு - ஐக்கிய ராஜாங்கம் (யூ.கே.). தேசங்கள் (நேஷனாலிட்டி) வேறு வேறு. நான் தேசாபிமானம் என்ற சொல்லை அந்த பொருளில் பயன்படுத்துகிறேன். இன்று நான்கு தேசாபிமானங்களை பற்றி பேச்சு. 
  1. ஜூலை 5, 1295
ஸ்காட்லாந்தும், ஃபிரான்சும் இங்கிலாந்தை பொது பகையாளியாக பாவித்து செய்து கொண்ட ஒப்பந்ததின் பெயர், ‘தொன்மையான உடன்பாடு’! குழப்பங்கள் நிறைந்த அக்காலத்தில் ஸ்காட்லாந்து மன்னன் ஜான் பேலியலுக்கு மூன்று நாடுகளிலும் நில சொத்து இருந்ததாலும், இங்கிலாந்து அரசன் எட்வர்ட்டுக்கு ஃப்ரான்ஸில் சொத்து இருந்ததாலும், ஒவ்வொருவரும் ஒரு தேசத்தில் மாமன்னனாகவும், மற்றொன்றில் குறுநில மன்னனாகவும் பிரகடனங்கள். எட்வர்ட் ஒரு படி மேல் போய்,ஜான் பேலியலை அடக்கியாள துணிய, அவர் கடல் கடந்து உறவு நாடினார்.  கிட்டத்தட்ட 400 வருடங்களுக்கு பிறகு, கிருத்துவ சமய கோட்பாடுகளில், கத்தோலிக்க பிரிவை விட ப்ராடஸ்டெண்ட் எனப்படும் பிரிவினை வாதத்தின் தாக்கத்தால், இங்கிலாந்தும், ஸ்காட்லாந்தும் நெருங்கத்தொடங்கின. அப்போது கூட ஸ்காட்லாந்தில், ஃபிரென்ச் கால்வின்-ப்ராடஸ்டெண்ட் மாடல்.  பல நூற்றாண்டுகளாக, they are different nations in one country -the United Kingdom.
இருந்தாலும், இதையும் கேட்கவேண்டும். இங்கிலாந்தின் தயவினால் தலையெடுத்த ஃப்ரென்ச் தலைவர் ஜெனெரல் டிகால், ஸ்காட்லாந்தின் எடின்பரோவில், 1942ல் பேசியது:
‘...வந்த மாத்திரமே, நமக்குள் பல நூற்றாண்டுகளாக ஆழ்ந்திருக்கும் உணர்ச்சிகரமான தொன்மையான பிணைப்பை வாழ்த்துகிறேன்... நமக்குள் அதே கவிதை மோகம், அதே சமய கோட்பாடுகள், அதே இலக்கிய ரசனை...’ (ஒரு விதத்தில் பொதுப்படையாக இருந்தாலும், he carried the day, perhaps, much to the chagrin of his host, Winston Churchill!) 
2. 05-07-1987 :
வல்லிபுரம் வசந்தன் (ஜனவரி 11966 - ஜூலை 51987கரவெட்டியாழ்ப்பாணம்) ஒரு தமிழீழ தேசாபிமானி. தமிழீழ விடுதலைப் புலிகளில் இயக்கத்தில் கப்டன் மில்லர் என்ற பெயரில் இயங்கினார். இவரே முதல் கரும்புலியாக 05-07-1987 அன்று யாழ்-வடமராட்சிக் கோட்டத்தில் நெல்லியடி மத்திய மகா வித்தியாலத்தில் அமைக்கப்பட்டிருந்த இலங்கைப் படைத்தளம் மீதான தாக்குதலில் மரணமடைந்தார். கரும்புலிகளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 5ம் நாள் கடைப்பிடிக்கப்படும் நினைவு நாளே கரும்புலிகள் நாள் எனப்படுகிறது.
3.இந்திய திருநாட்டின் மக்களின் நலமும், மேன்மையையும் , ஒருமைப்பாட்டையும், வளர்ச்சியையும், வருங்கால சந்ததியின் செழிப்பும் கருதி, நாம் இந்திய ஆளுமையின் எல்லைகளை நாட்டுப்பற்றின் எல்லை தெய்வங்களாக மதித்து, நம்முள் உறையும் ‘நாடுகளை’ எல்லாம் மதித்து இந்திய மண்ணின் பற்றே, என் தேசாபிமானம் என்று இயங்கமுடியுமா?
4. இன்று உலகளாவிய வணிகம், புலன் பெயர்தல், இணக்கங்கள், பிணக்கங்கள், நாடு கடந்த, தார்மீகமான அபிமானங்கள் உலா வருகின்றன. இது பொருட்டு நாம் செய்ய வேண்டியது, செய்யக்கூடியது என்ன?
இன்னம்பூரான்
06 07 2011
உசாத்துணை:
http://ta.wikipedia.org/wiki/ில்லர்
Image credit:http://www.academicstudiespress.com/ImagesCover/ISBN%20978-1-936235-11-7.jpg


Dhivakar Tue, Jul 5, 2011 at 12:16 PM


அபாரமான சரித்திர ஞானத்தை வழங்குகிறீர்கள்.. முதலில் மிகப் பெரிய நன்றி அதற்கு.

ஜூலை 5, 1295

தமிழகத்தில் காட்சி எப்படி இருந்திருக்கும். எங்கே பார்த்தாலும் சண்டை, சச்சரவு. அடிதடி உதைதான். தென்னகத்தையே ஆண்ட அந்த மாபெரும் சோழ சாம்ராஜ்யம் இத்துனூண்டு காவேரிப்பாக்கத்துக்குள் அடங்கிப் போய் விட்டது போல பரிதாபம். தடியெடுத்தவனெல்லாம் தண்டல்காரன். கொஞ்சம் ஸ்ட்ராங் பாண்டியர்தாம். பாண்டியர்கள் இருவர். ஒருவன் அரசனின் தலைப்பிள்ளை, ஆனால் துணைவியின் மகன். அரசனின் இளையமகன் பட்டத்து ராணியின் மகன். சண்டையோ சண்டை. மூத்தவன் பட்டத்து ராணியின் மகனைத் துரத்தி அடிக்க வடநாட்டு பூதம் ஓடி வந்தது.

அவன் இதற்கு பிறகு டில்லி சுல்தானிடம் உதவி கேட்டு ஓடினான். மாலிக்காபூரை அனுப்பி அத்தனை செல்வத்தையும் கொள்ளையடிக்கவைத்தான். மாலிக்காபூர் வந்து செல்வத்தை அள்ளிக் கொண்டு போனால் போகட்டும். ஆனால் பெண்டு பிள்ளைகள் மானமும் அள்ளிக் கொண்டு போன கதை நடந்த காலம் இது. வேண்டவே வேண்டாம் இந்த இருண்ட நாட்கள்..


கி.காளைராசன் Tue, Jul 5, 2011 at 1:07 PM


ஐயா "இ"அவர்களுக்கு வணக்கம்.


அபாரமான சரித்திர ஞானத்தை வழங்குகிறீர்கள்.. முதலில் மிகப் பெரிய நன்றி

 ஐயா திவாகர் அவர்களுக்கு வணக்கம்.

ஜூலை 5, 1295

பாண்டியர்கள் இருவர். ஒருவன் அரசனின் தலைப்பிள்ளை, ஆனால் துணைவியின் மகன். அரசனின் இளையமகன் பட்டத்து ராணியின் மகன். சண்டையோ சண்டை.
மாலிக்காபூர் வந்து செல்வத்தை அள்ளிக் கொண்டு போனால் போகட்டும். ஆனால் பெண்டு பிள்ளைகள் மானமும் அள்ளிக் கொண்டு போன கதை நடந்த காலம் இது. வேண்டவே வேண்டாம் இந்த இருண்ட நாட்கள்..
எவ்வளவு ​பெரிய இனப்படு​கொ​லை அது?
இனச் சீரழிவு?

நி​னைத்தால் ​நெஞ்சம் ப​தைக்கிறது.

மாலிக்காபூரிடம் மாட்டிக் ​கொண்டவர் எல்லாம் இன்றும் மனம் மாறாமல் இருப்பதும்,
தப்பிப்பி​ழைத்​தோர் எல்லாம்
மாலிக்காபூர் ப​டையிடம் மாட்டிக் ​கொண்டவர்க​ளை ​வெறுப்பதும் இன்றும் ​தொடர்கிறது!
இத்த​னை ஆண்டுகள் ஆன பின்னும் நாம் எல்லாம் ஒருதாய் பிள்​ளைக்கள் என்ப​தை உணர மறுக்கின்றனர்.

அன்பன்
கி.கா​ளைராசன்



Geetha Sambasivam Wed, Jul 6, 2011 at 9:45 AM


அருமையான விளக்கம் ஐயா.  பல அரிய தகவல்கள் நிறைந்த தொகுப்பு. உங்கள் நினைவாற்றலுக்கும், சரித்திர சம்பவங்களைத் தொகுத்தளிக்கும் திறமைக்கும் எல்லை இல்லை.  நன்றி.



Innamburan Innamburan Wed, Jul 6, 2011 at 9:51 AM


நன்றி, கீதா. இதில் இருக்கும் ஒரு நுட்பம் நமக்கு படிப்பினை. Unique diversity cohabiting in Unique Unity. India can be different robust nations in one robust country.


வணக்கம்.

இன்னம்பூரான்

Geetha Sambasivam 
7/6/11

ஓ, ஜூலை நான்கு படிச்சிருக்கேனா?? மறந்திருக்கேன். 
கிருஷ்ணமூர்த்தி 



http://www.youtube.com/watch?v=ffRQ6e29Dw0&feature=related

http://www.youtube.com/watch?v=DJU1VsgI_-I&feature=related

http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/july/4/newsid_2786000/2786967.stm

முதலிரண்டு சுட்டிகளில் ஆபரேஷன் தண்டர்போல்ட் /என்டெபே என்று பெயரில்
ஒரிஜினலாகவும், பின்னாட்களில் ஆபரேஷன் யோனாதன் என்றும் அழைக்கப்பட்ட இந்த
இஸ்ரேலி அதிரடி நடவடிக்கைகளை சுருக்கமாக வீடியோ வடிவில் பார்க்கலாம்.

மூன்றாவதாக, அன்றைய தினத்தைப் பற்றி பிபிசி செய்தி,அதிலேயே அன்றைக்கு
ஒளிபரப்பான பிபிசி செய்தியறிக்கை ஒலி ஒளிவடிவக் கோப்பையும் பார்க்கலாம்.

முக்கியமாக,நடவடிக்கையின் ஒவ்வொரு பகுதியையும் எவ்வளவு கவனமாகத்
திட்டமிட்டார்கள், ஒத்திகை பார்த்தார்கள் என்பதும், வீண் செலவினங்களைத்
தவிர்த்து அரசுக்கு சுமையாக இல்லாதபடிக்கு இந்த நடவடிக்கை இருந்தது
என்பதும் கவனத்தில் கொள்ளப்படவேண்டியது.

காங்கிரஸ் அரசாளும் தருணங்களில் தான் தொடைனடுங்கியாக
இருப்பதுமட்டுமல்லாமல், இந்த தேசத்துக்கும் தலைக் குனிவு
ஏற்படுகிறமாதிரித்தான் நடந்து கொள்வதும் வாடிக்கையாகிப்போன சோகம், 1948
காஷ்மீர் ஊடுருவலில் இருந்து, நேற்றைய மும்பைத்தாக்குதல்வரை தொடர்வதைப்
புரிந்துகொள்வதற்காக!

-------------------------
மௌனமாக இருக்கத்தான் முயற்சி செய்கிறேன்!
ஆனாலும், அவ்வப்போது இன்னம்புரானும் மோகனரங்கனும் இருக்கவிடமாட்டோம்
என்கிறார்கள்!!
YouTube - Videos from this email
Innamburan Innamburan 
7/6/11

நன்றி, திரு.கிருஷ்ணமூர்த்தி, இம்மாதிரி கூடுதல் தகவல்களை தரும் பின்னூட்டங்கள், நல்வரவே. எனக்கு ஊக்கம் தருகிறது. பீ பீ ஸியை உசாத்துணையில் நானும் சுட்டியிருந்த்தேன்.   வணக்கம்.

இன்னம்பூரான்





No comments:

Post a Comment