Friday, October 4, 2013

அன்றொரு நாள்: ஸெப்டம்பர் 20


அன்றொரு நாள்: ஸெப்டம்பர் 20
56 messages
இந்த தொடரில் பலர் பங்கு கொண்டதிற்கு நன்றி. நீண்ட தொடர். நிதானமாக படித்தால் நலம்.
இன்னம்பூரான்
04 10 2013

Innamburan Innamburan Tue, Sep 20, 2011 at 8:43 PM

அன்றொரு நாள்: ஸெப்டம்பர் 20
“வாழ்க்கையின் இலக்கை விழுந்து விழுந்து நாம் தேடுகிறோம் என்று சொல்கிறார்கள். எனக்கு என்னமோ அப்படி தோன்றவில்லை. உயிரும் உடலும் ஒருங்கே வாழ்வதே பெரிய அனுபவம். உடலின் அனுபவங்கள், நம்முள் ஆழமாக உறையும் மனோபாவங்களுடனும், நிஜத்துடனும், அன்யோன்யமாக உறவாடும் போது தான் ‘மகிழ்ச்சியில் திளைக்கும் வாழும் நெறி.” [The Rapture of Being Alive] புலப்படுகிறது.”
~ஜோஸ்ஃப் காம்ப்பெல்
இன்று திசை மாறி தென்றல் வீசுகிறது. நாலாயிரம் வருடங்கள் கடந்தது ~ பின்னோக்கி! இன்று நான் எத்தனை சிந்தனையாளர்களின் பினாமி என்று எனக்கு தெரியாது. தமிழாக்கம் செய்வதிலும், என் படைப்பில் குறுக்கிடுவதிலும் அபரிமித உரிமை எடுத்துக்கொண்டிருக்கிறேன். பொறுத்தாள்க. என் அனுபவம்: முதல் தடவை புரியாதது, இரண்டாவது தடவை படித்தால் புரிகிறது.  
நாமொன்று நினைக்க, மனம் ஒன்று நினைக்கிறது. முரண் ஒன்றுமில்லை. ரயில் பாதை போல, சிந்தனைகள், இரு கோடுகளில். ‘அன்னிய’ அன்னை ஒருவரை பற்றி எழுத நினைத்தால், அவரின் ஆன்மீக யாத்திரை என்னை ‘எலெயூஸிஸ் யாத்திரை’ என்ற கிரேக்க மறைஞானத்திடம் இழுத்துச் செல்கிறது. டெலஸ்டெரியன் ஒரு பெரிய அறை. புனித ‘ெடமடர்’ சின்னங்களை பெருமளவில் கூடும் பக்தர்களுக்கு காட்டும் தினம் ஸெப்டம்பர் 20 எனலாம். ஒரு வார திருவிழா. பூசாரிணிகள் தொன்மங்களை உரைக்கின்றனரோ! ‘மரணத்திற்கு பிறகு வாழ்வு’ பற்றிய மர்மங்களை உணர்த்துகிறார்களோ! யாருக்குத் தெரியும்? எல்லாம் பரம ரகசியம். இந்த வருஷம், அந்த வருஷம் என்றெல்லாம் சொல்ல முடியாது, சார்.
1500 கி.மு. என்று தோராயமாக சொல்லலாம். காலெண்டர்களில் பல வகை. எனவே, ஸெப்டம்பர் 20 கூட ஒரு குத்து மதிப்பு தான்.
மறுபடியும் ஒரு க்வாண்டம் லீப்! 1500 கி.மு. ~ 1947 கி.பி. காலேஜ் சேர்ந்த போது, சொந்த சாஹித்யமும், சகவாசதோஷமும் ஒரு ரசவாதக்கலவையாக அமைந்து, பரிக்ஷைக்கு வராத விஷயங்களை மட்டும் படிக்கத் தூண்டும். அதன் அருந்தவப்பயனாக, அமெரிக்காவிலிருந்து ரோஸிக்ரூஷியன் தொன்மை இதழ் ஒன்று வரும். லவலேசமும் புரியாது. இன்று அவ்விதழில் 2009 ல் வந்த ‘எலெயூஸிஸ் யாத்திரை’ பற்றிய சுருக்கம். கொஞ்சம் ஃபாரின் மறைஞான யாத்திரை போய் வருவோமே! புரியவில்லையா? டோண்ட் ஒர்ரி. படிக்க, படிக்க, புரியும். மஹாபாரதத்தில்: பீஷ்மரும் வரார்; சகுனியும் வரார். தர்மரும், நாயும், தேரோட்டி கர்ணன் தர்மாத்மா. தேரோட்டி கண்ணன் ஞானாத்மா. அபிமன்யு கர்மவீரன். அந்த மாதிரி கிரேக்க மறை ஞானத்தையும் அனுபவிக்கலாம். மனசு வேணும்.
ஜோஸ்ஃப் காம்ப்பெல் அவர்களின் பொன்வாக்கை நினைவில் வைத்துக்கொண்டால், பழம் நழுவி பாலில் விழுந்தாற்போல. அவரை பற்றி ஒரு சொல்: ஒரு நேர்காணலில் ‘சச்சிதானந்தம்’ என்ற தன் வாழ்க்கைத்தத்துவத்தை சொன்ன இந்த முனிவரை ‘தூரத்து பச்சை’ என்று நினைத்திருந்தேன், அவரது மாணவி ஜூடித்தை சந்திக்கும் வரை. அவள் தான் சொன்னாள், இவர் பழகுவதற்கு எளிய மனிதர் என்று.

இனி ‘எலெயூஸிஸ் யாத்திரை’(எலிஸா கட்ஜான் சொல்வது):
“... எலெயூஸிஸ் கோயிலான டெலஸ்டெரியன் போனேன். எல்லாரும் காஷ்ட மெளனம். அதுவே பெருந்துணை. காதல் தேவதை அஃப்ரோடைட் கோயிலில் உழவாரப்பணி செய்யவேண்டுமோ? முள்புதர்! பிறகு ‘நகைச்சுவை’ பாலம் கடந்தோம்; எள்ளல் எல்லாருடைய ‘தற்பெருமை’பளுவை இறக்கி வைத்தது...‘பெர்ஸெஃபோன்’ என்ற கன்னிப்பெண்ணுக்கு ஏற்பட்ட பாலியல் கொடுமை என் உடல், ஆவி இரண்டையும் பாதித்தது. அன்னை கன்னிகையை இழந்தாள்;கன்னி அன்னையை இழந்தாள். என்னே இழப்பு! மனித இனம் இயற்கை அன்னையை படுத்துவதை பாருங்கள் என்று தெரியாமலா சொன்னார், உளவியல் மும்மூர்த்திகளில் ஒருவரான கார்ல் யுங்க்! (இடம், பொருள், ஏவல் சொல்ல, நிறைய எழுத வேண்டும். அது வரை பொறுத்தாள்க.).
என்னை ஆட்டிப்படைத்த நேரமது. பூசாரிணிகள், நான் அங்கிருப்பதை பற்றி, அந்த அனுபவத்தின் தாத்பர்யத்தை பற்றி, அது தரணியுடன் உறவாட செய்ததை பற்றி, அம்மா/பொண்ணு சொந்தம் கொண்டாடுவதை பற்றி, புரிந்து கொள்ளச் சொன்னார்கள். ‘பெர்ஸெஃபோன்’ க்கு புனர்ஜன்மம்! பெண்ணியத்துக்கு வெற்றி. எனக்கென்னெமோ இந்த புனித யாத்திரை நமக்கு பூமாதேவியை பூஜிக்க தகுதி அளிக்கும் என்று தோன்றுகிறது. எறும்பூர கல்லும் தேயும் என்பார்கள். இந்த யாகசாலையின் வாசற்படிகள், நமது வரத்துப்போக்கினால் தேய்ந்தது போல, மனிதனின் சடங்குகள் பிரபஞ்சத்தில் கால் தடம் பதித்துள்ளன.

அம்பாள் தரிசனம்: சாயும் காலம்.  இரு மலை உச்சிகளின் ஊடே, கிணற்றில் மெதுவாக இறங்குவது போல, ஆதவன் இறங்கி மறைகிறான். அன்னையின் மார்பகம் என் உயிரின் ஊற்று அல்லவோ! அன்று  உமா மஹேஸ்வரி ‘திராவிட சிசு’ திருஞான சம்பந்தருக்கு மறைஞானம் என்ற அடிசில் ஊட்டியதை மறந்தாயோ? என் அனுபவத்தைக் கேள்: கண்டேன்! ‘மகிழ்ச்சியில் திளைக்கும் வாழும் நெறியை.” [The Rapture of Being Alive]. கண்டேன் அண்டை ~ அயலார் உறவு. கண்டேன் ஞானப்பழத்தை. கண்டேன் பெண்ணின் பெருமையை.

கற்றது கைமண்ணளவு: மதொரி தீவினிலே, ஏரிக்கரையினிலே அமர்ந்து நீச்சலடிக்கும் வாளை மீன்களை கண்டு, அவற்றுடன் ஒன்றிப்போனேன். பாய்ந்தோடும் மானை கண்டாலும், ஆகாசத்து ராணியான பருந்தை கண்டாலும், சிரித்து மயக்கும் சிசுவை கண்டாலும், இப்படி மெய் மறந்து போகிறேன், கண்ண பரமாத்மா! இந்த விநாடி நிரந்தரம். வேறு என்ன வேண்டும்?

மறுபடியும் கருவடையும் குழியில் தள்ளி: எங்கள் குழுவே சாகரத்தின் மடியிலே தஞ்சம்! பத்திரமாகத்தான் இருக்கிறோம். ஸ்தபதி சிலைக்குக் கண்மலர் திறப்பது போல் ஆத்மா, இந்த சரீரத்தில் புகுந்து விளையாடும் அனுபவம், எங்களுக்கு, இங்கே. அது வேறு எங்கு கிடைக்கும் அல்லது நீ ஜனித்ததை நீயே அறிவாயா?

சுழலாட்டம்: திக்குத் தெரியாத காட்டில், நீயும், நானும், எல்லோரும் தான், சுழன்று, சுழன்று ஆடுகிறோம். தலை சுற்றினாலும், அது ஒரு லாகிரி. ஒரு தோழி உனக்கு சமய ஞானம் இல்லை, மத போதனை அறியாதவன் என்று. அதா அன்று. ‘மகிழ்ச்சியில் திளைக்கும் வாழும் நெறிக்கு சமயமேது, மதமேது! ‘நேதி’!..” [The Rapture of Being Alive]
பூர்ணமிதம்: பழங்கால சிற்பங்களை காண விழைந்து, மோச்லோஸ்சில் காலம் கடத்தினோம். பெளர்ணமி. சந்திரிகையை நாடினோம். அவள் ஓடி ஒளிந்து விளையாடினாள். ‘சட்’டென்று பூர்ண சந்திரிகை. கொஞ்சமா! நஞ்சமா! பத்து நிமிடங்கள் நிலா ஸ்நானம்! நிலா! நிலா! நில்லாமல் வா! மகிழ்ச்சியும் பூர்ணம்; நாங்கள் திளைப்பதும் அரியக்குடி பெருமாள் கோயில் குளத்தில் போல! வாழ்வும் முழுமை. அதன் நெறியும் பூர்ணமிதம். எனக்கும் பெளர்ணமியின் ஒளி, பெண்ணின் பெருமை, தொன்மை கலாச்சாரம் ஆகியவற்றின் ஆளுமையில் வாழும் நெறி புரிகிறது.

கதை கேளு! கதை கேளு!: எங்களுடன் ஒரு வானவியல் விஞ்ஞானிகள் வந்தனர். தொன்மை, பழங்கால வானவியல். தற்கால வானவியல், விஞ்ஞானம் எல்லாவற்றையும் விளக்கினார்கள். சமுதாயத்திற்கு சேதி சொல்லவேண்டும் என்று எங்களுக்கு ஆர்வம். அன்பர்களே! செவி சாய்க்கவும். வாழ்வியலை போற்றி பாதுகாக்கும் பழங்கால நெறிகளை மறந்து விட்டோம். நம்பிக்கைகளை தகர்த்து விட்டோம். நம்மை நாமே பாபிகள் என்று மாரடித்துக்கொள்கிறோம். தெய்வசான்னித்யம் நமக்குக் கொடுப்பினை இல்லை என்று பரிதாபித்துக் கொள்கிறோம். இயற்கையிலிருந்து விலகி, சகபடிகளை விலக்கி, தனித்து குப்பை கொட்டுகிறோம். கொஞ்சம் விவேகத்துடன் இயங்கினால் பேரின்பமல்லவா கிட்டும்! ஒரு சங்கிலித்தொடர், ஒரு பிணைப்பு, நீயும், நானும், அவரும், எவரும், 64 கலைகளும், அறிவியல்களும், தொன்மத்தின் தரவுகளும், அடடா! சாஸ்வத சந்துஷ்டி?
வேறு என்ன வேண்டும். பராபரமே!
இது ஶ்ரீ மோஹனரங்கன் ஸ்பெஷல்.
இன்னம்பூரான்
20 09 2011
eleusinian+mysteries.jpg

உசாத்துணை:

Geetha Sambasivam Tue, Sep 20, 2011 at 9:16 PM
Reply-To: thamizhvaasal@googlegroups.com
To: thamizhvaasal@googlegroups.com
மோகனரங்கன் ஸ்பெஷல் என்பதால் கொஞ்சம் என்னளவுக்கு சாமானியர்களால் எளிதில் புரிந்து கொள்ளத் தக்க விஷயம் இல்லை.  கனமான விஷயம்.  இரண்டு, மூன்றுமுறை படித்தேன். அம்பாள் தரிசனம் அற்புதம். அருமை.  என்னைப் போன்றவர்களுக்கெல்லாம் உள்ளே இருந்து ஊற்றுத் தான் கிளம்பும்; ஆனால் இங்கேயோ நீர்வீழ்ச்சியே கொட்டி இருக்கிறது.

அதன் பிரவாஹத்தில் முழுமையாக நனைந்தாச்சு.
மறுபடியும் கருவடையும் குழியில் தள்ளி: எங்கள் குழுவே சாகரத்தின் மடியிலே தஞ்சம்! பத்திரமாகத்தான் இருக்கிறோம். ஸ்தபதி சிலைக்குக் கண்மலர் திறப்பது போல் ஆத்மா, இந்த சரீரத்தில் புகுந்து விளையாடும் அனுபவம், எங்களுக்கு, இங்கே. அது வேறு எங்கு கிடைக்கும் அல்லது நீ ஜனித்ததை நீயே அறிவாயா?//

ஆன்மீகம் தெரியாதுனு சொன்ன ஞாபகம்.  இதைப் படிச்சதுக்கு அப்புறமும் ஒத்துக்க முடியுமா என்ன?? மலைத்துப் போய்ப் பார்க்கிறேன். எழுதுகையில் லா.ச.ரா. உள்ளே புகுந்து விளையாடுகிறார். வார்த்தைகளின் நேர்த்தியும்  அதைக் கோர்த்திருக்கும் விதமும் அற்புதம். சிலிர்க்க வைக்கின்றன. 


2011/9/20 Innamburan Innamburan <innamburan@gmail.com>


வேறு என்ன வேண்டும். பராபரமே!
இது ஶ்ரீ மோஹனரங்கன் ஸ்பெஷல்.
இன்னம்பூரான்
20 09 2011
eleusinian+mysteries.jpg

உசாத்துணை:








Dhivakar Tue, Sep 20, 2011 at 9:24 PM

<<<அம்பாள் தரிசனம்: சாயும் காலம்.  இரு மலை உச்சிகளின் ஊடே, கிணற்றில் மெதுவாக இறங்குவது போல, ஆதவன் இறங்கி மறைகிறான். அன்னையின் மார்பகம் என் உயிரின் ஊற்று அல்லவோ! அன்று  உமா மஹேஸ்வரி ‘திராவிட சிசு’ திருஞான சம்பந்தருக்கு மறைஞானம் என்ற அடிசில் ஊட்டியதை மறந்தாயோ? என் அனுபவத்தைக் கேள்: கண்டேன்! ‘மகிழ்ச்சியில் திளைக்கும் வாழும் நெறியை.” [The Rapture of Being Alive]. கண்டேன் அண்டை ~ அயலார் உறவு. கண்டேன் ஞானப்பழத்தை. கண்டேன் பெண்ணின் பெருமையை.>>>

இ’து ரொம்பப் பிடிச்சுது.

சரி, இந்த திராவிட சிசு’ என்கிற சொல்லை ஆதி சங்கரர் எந்த இடத்தில் பயன்படுத்துகிறார் என்ற விவரம் வேண்டும். கிடைக்குமா?

தி


Innamburan Innamburan Tue, Sep 20, 2011 at 9:30 PM
To: mintamil@googlegroups.com
இந்த திராவிட சிசு’ என்கிற சொல்லை ஆதி சங்கரர் எந்த இடத்தில் பயன்படுத்துகிறார் என்ற விவரம் வேண்டும். கிடைக்குமா?
~ தமிழ் இலக்கிய வரலாறு என்ற சாஹித்ய அகாடமி நூலில், மு.வ. இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார், திவாகர். 
அதன் பிரவாஹத்தில் முழுமையாக நனைந்தாச்சு. 
நினச்சேன். நனஞ்சேள். நன்றி, கீதா.

Geetha Sambasivam Tue, Sep 20, 2011 at 9:30 PM
செளந்தர்ய லஹரியிலே
[Quoted text hidden]

Geetha Sambasivam Tue, Sep 20, 2011 at 9:34 PM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
தன்னைத் தானே சொல்லிக்கொண்டதாய்த் தான் படிச்சிருக்கேன்.

Dhivakar Tue, Sep 20, 2011 at 9:41 PM

>>தன்னைத் தானே சொல்லிக்கொண்டதாய்த் தான் படிச்சிருக்கேன்<<

கீதாம்மா சொன்னது நான் ஏற்கனவே கேள்விப்பட்டதுதான். சௌந்தர்யலஹரி சாட்ச்சாத் சிவபெருமானே எழுதியதாகச் சொல்வார்கள்.

அதே சமயம் சம்பந்தரைப் பற்றி சங்கரர் இப்படி சொன்னதாக பல புத்தகங்களிலும் வந்து கொண்டிருக்கிறது. நம் ஹார்பர் எம் எல் ஏ ஒரு புத்தகத்தில் ஒரு கட்டுரையில் இந்த ஒரு வார்த்தையை வைத்துக்கொண்டு வாங்கு வாஙகு என வாங்கியிருக்கிறார்.

எனவேதான் இந்த கேள்வி!

தி
[Quoted text hidden]
[Quoted text hidden]

Geetha Sambasivam Tue, Sep 20, 2011 at 9:45 PM

செளந்தர்ய லஹரியை எழுதியவர் பற்றி இரு வேறு கருத்துகள்.  லிங்க புராணத்திலே விநாயகர் எழுதினதாயும், மேருமலையிலே புஷ்பதத்தர் எழுதினதாவும் இருவேறு கருத்துகள்.  மேருமலையிலே எழுதி இருந்ததை கெளடபாதர் கிரகித்துக்கொண்டு ஆதிசங்கரருக்கு உபதேசம் செய்ததாக ஒரு கூற்று.
[Quoted text hidden]

Geetha Sambasivam Tue, Sep 20, 2011 at 9:46 PM

தெய்வத்தின் குரலில் பரமாசாரியாள் விளக்கமாய் எழுதி இருப்பார். 
[Quoted text hidden]

Dhivakar
தெய்வத்தின் குரலில் பரமாசாரியாள் விளக்கமாய் எழுதி இருப்பார். 

என்ன எழுதியிருக்கிறார் என்றுதான் சொல்லுங்களேன். தெரிந்து கொள்ள ஆவல்.

சௌந்தர்யலஹரி உபன்யாஸமாகக் கேட்டிருக்கிறேன். ஸ்தூல வடிவமாக கயிலாயம் சென்று ஆதிசங்கரர் இதைப் பெற்றதாக வரும்.
[Quoted text hidden]

coral shree Tue, Sep 20, 2011 at 10:28 PM

அன்பின் ஐயா,

என்ன சொல்வது.........பாயிண்ட் பாயிண்டா அருமையா கொடுத்திருக்கீங்க.......... வாழ்வியல் தத்துவங்கள் அத்தனையும் முத்துகள். நன்றி ஐயா.




Mohanarangan V Srirangam Tue, Sep 20, 2011 at 10:37 PM


>>>எனக்கென்னெமோ இந்த
புனித யாத்திரை நமக்கு பூமாதேவியை பூஜிக்க தகுதி அளிக்கும் என்று தோன்றுகிறது


>>>இன்று நான் எத்தனை சிந்தனையாளர்களின் பினாமி என்று எனக்கு தெரியாது. 

>>>காலேஜ் சேர்ந்த
போது, சொந்த சாஹித்யமும், சகவாசதோஷமும் ஒரு ரசவாதக்கலவையாக அமைந்து,
பரிக்ஷைக்கு வராத விஷயங்களை மட்டும் படிக்கத் தூண்டும். 



>>>இந்த யாகசாலையின் வாசற்படிகள், நமது
வரத்துப்போக்கினால் தேய்ந்தது போல, மனிதனின் சடங்குகள் பிரபஞ்சத்தில் கால் தடம்
பதித்துள்ளன.

>>>சுழலாட்டம்: திக்குத் தெரியாத காட்டில், நீயும், நானும், எல்லோரும் தான்,
சுழன்று, சுழன்று ஆடுகிறோம். தலை சுற்றினாலும், அது ஒரு லாகிரி. ஒரு தோழி
உனக்கு சமய ஞானம் இல்லை, மத போதனை அறியாதவன் என்று. அதா அன்று. ‘மகிழ்ச்சியில்
திளைக்கும் வாழும் நெறிக்கு சமயமேது, மதமேது! ‘நேதி’!..” [The Rapture of Being
Alive]
>>வாழ்வியலை போற்றி பாதுகாக்கும் பழங்கால நெறிகளை மறந்து விட்டோம்.
நம்பிக்கைகளை தகர்த்து விட்டோம். நம்மை நாமே பாபிகள் என்று
மாரடித்துக்கொள்கிறோம். தெய்வசான்னித்யம் நமக்குக் கொடுப்பினை இல்லை என்று
பரிதாபித்துக் கொள்கிறோம். இயற்கையிலிருந்து விலகி, சகபடிகளை விலக்கி, தனித்து
குப்பை கொட்டுகிறோம். கொஞ்சம் விவேகத்துடன் இயங்கினால் பேரின்பமல்லவா கிட்டும்!
ஒரு சங்கிலித்தொடர், ஒரு பிணைப்பு, நீயும், நானும், அவரும், எவரும், 64
கலைகளும், அறிவியல்களும், தொன்மத்தின் தரவுகளும், அடடா! சாஸ்வத சந்துஷ்டி? 

------------------------------------

அருமை. ‘இ’ப்படி அல்லவா எழுதவேண்டும்! 
நன்றி. 

***
[Quoted text hidden]

shylaja Tue, Sep 20, 2011 at 10:41 PM

என்ன அழகா எழுதறீங்க இ சார்?  ஆடிமாசக்காவிரி ஓடி வரமாதிரி இருக்கு நடையழகு. லாசராவின் த்வனி வேற!(நன்றி இதை முதலில் கண்டுபிடிச்ச கீதாக்கு) கடைசில கதைகேளுவில் முத்தாய்ப்பாய் ஆற்றாமையாய் எழுதினவிதம் யோசிக்கவைக்கிறது


Mohanarangan V Srirangam Tue, Sep 20, 2011 at 11:02 PM

பதில் எழுத லேட்டான காரணம் --- 



--->>> 

அன்றொரு நாள்: ஸெப்டம்பர் 20
“வாழ்க்கையின் இலக்கை விழுந்து விழுந்து நாம் தேடுகிறோம் என்று சொல்கிறார்கள். எனக்கு என்னமோ அப்படி தோன்றவில்லை. உயிரும் உடலும் ஒருங்கே வாழ்வதே பெரிய அனுபவம். உடலின் அனுபவங்கள், நம்முள் ஆழமாக உறையும் மனோபாவங்களுடனும், நிஜத்துடனும், அன்யோன்யமாக உறவாடும் போது தான் ‘மகிழ்ச்சியில் திளைக்கும் வாழும் நெறி.” [The Rapture of Being Alive] புலப்படுகிறது.”
~ஜோஸ்ஃப் காம்ப்பெல்
இன்று திசை மாறி தென்றல் வீசுகிறது. நாலாயிரம் வருடங்கள் கடந்தது ~ பின்னோக்கி! இன்று நான் எத்தனை சிந்தனையாளர்களின் பினாமி என்று எனக்கு தெரியாது. தமிழாக்கம் செய்வதிலும், என் படைப்பில் குறுக்கிடுவதிலும் அபரிமித உரிமை எடுத்துக்கொண்டிருக்கிறேன். பொறுத்தாள்க. என் அனுபவம்: முதல் தடவை புரியாதது, இரண்டாவது தடவை படித்தால் புரிகிறது.  
நாமொன்று நினைக்க, மனம் ஒன்று நினைக்கிறது. முரண் ஒன்றுமில்லை. ரயில் பாதை போல, சிந்தனைகள், இரு கோடுகளில். ‘அன்னிய’ அன்னை ஒருவரை பற்றி எழுத நினைத்தால், அவரின் ஆன்மீக யாத்திரை என்னை ‘எலெயூஸிஸ் யாத்திரை’ என்ற கிரேக்க மறைஞானத்திடம் இழுத்துச் செல்கிறது. டெலஸ்டெரியன் ஒரு பெரிய அறை. புனித ‘ெடமடர்’ சின்னங்களை பெருமளவில் கூடும் பக்தர்களுக்கு காட்டும் தினம் ஸெப்டம்பர் 20 எனலாம். ஒரு வார திருவிழா. பூசாரிணிகள் தொன்மங்களை உரைக்கின்றனரோ! ‘மரணத்திற்கு பிறகு வாழ்வு’ பற்றிய மர்மங்களை உணர்த்துகிறார்களோ! யாருக்குத் தெரியும்? எல்லாம் பரம ரகசியம். இந்த வருஷம், அந்த வருஷம் என்றெல்லாம் சொல்ல முடியாது, சார்.
1500 கி.மு. என்று தோராயமாக சொல்லலாம். காலெண்டர்களில் பல வகை. எனவே, ஸெப்டம்பர் 20 கூட ஒரு குத்து மதிப்பு தான்.
மறுபடியும் ஒரு க்வாண்டம் லீப்! 1500 கி.மு. ~ 1947 கி.பி. காலேஜ் சேர்ந்த போது, சொந்த சாஹித்யமும், சகவாசதோஷமும் ஒரு ரசவாதக்கலவையாக அமைந்து, பரிக்ஷைக்கு வராத விஷயங்களை மட்டும் படிக்கத் தூண்டும். அதன் அருந்தவப்பயனாக, அமெரிக்காவிலிருந்து ரோஸிக்ரூஷியன் தொன்மை இதழ் ஒன்று வரும். லவலேசமும் புரியாது. இன்று அவ்விதழில் 2009 ல் வந்த ‘எலெயூஸிஸ் யாத்திரை’ பற்றிய சுருக்கம். கொஞ்சம் ஃபாரின் மறைஞான யாத்திரை போய் வருவோமே! புரியவில்லையா? டோண்ட் ஒர்ரி. படிக்க, படிக்க, புரியும். மஹாபாரதத்தில்: பீஷ்மரும் வரார்; சகுனியும் வரார். தர்மரும், நாயும், தேரோட்டி கர்ணன் தர்மாத்மா. தேரோட்டி கண்ணன் ஞானாத்மா. அபிமன்யு கர்மவீரன். அந்த மாதிரி கிரேக்க மறை ஞானத்தையும் அனுபவிக்கலாம். மனசு வேணும்.
ஜோஸ்ஃப் காம்ப்பெல் அவர்களின் பொன்வாக்கை நினைவில் வைத்துக்கொண்டால், பழம் நழுவி பாலில் விழுந்தாற்போல. அவரை பற்றி ஒரு சொல்: ஒரு நேர்காணலில் ‘சச்சிதானந்தம்’ என்ற தன் வாழ்க்கைத்தத்துவத்தை சொன்ன இந்த முனிவரை ‘தூரத்து பச்சை’ என்று நினைத்திருந்தேன், அவரது மாணவி ஜூடித்தை சந்திக்கும் வரை. அவள் தான் சொன்னாள், இவர் பழகுவதற்கு எளிய மனிதர் என்று.

இனி ‘எலெயூஸிஸ் யாத்திரை’(எலிஸா கட்ஜான் சொல்வது):
“... எலெயூஸிஸ் கோயிலான டெலஸ்டெரியன் போனேன். எல்லாரும் காஷ்ட மெளனம். அதுவே பெருந்துணை. காதல் தேவதை அஃப்ரோடைட் கோயிலில் உழவாரப்பணி செய்யவேண்டுமோ? முள்புதர்! பிறகு ‘நகைச்சுவை’ பாலம் கடந்தோம்; எள்ளல் எல்லாருடைய ‘தற்பெருமை’பளுவை இறக்கி வைத்தது...‘பெர்ஸெஃபோன்’ என்ற கன்னிப்பெண்ணுக்கு ஏற்பட்ட பாலியல் கொடுமை என் உடல், ஆவி இரண்டையும் பாதித்தது. அன்னை கன்னிகையை இழந்தாள்;கன்னி அன்னையை இழந்தாள். என்னே இழப்பு! மனித இனம் இயற்கை அன்னையை படுத்துவதை பாருங்கள் என்று தெரியாமலா சொன்னார், உளவியல் மும்மூர்த்திகளில் ஒருவரான கார்ல் யுங்க்! (இடம், பொருள், ஏவல் சொல்ல, நிறைய எழுத வேண்டும். அது வரை பொறுத்தாள்க.).
என்னை ஆட்டிப்படைத்த நேரமது. பூசாரிணிகள், நான் அங்கிருப்பதை பற்றி, அந்த அனுபவத்தின் தாத்பர்யத்தை பற்றி, அது தரணியுடன் உறவாட செய்ததை பற்றி, அம்மா/பொண்ணு சொந்தம் கொண்டாடுவதை பற்றி, புரிந்து கொள்ளச் சொன்னார்கள். ‘பெர்ஸெஃபோன்’ க்கு புனர்ஜன்மம்! பெண்ணியத்துக்கு வெற்றி. எனக்கென்னெமோ இந்த புனித யாத்திரை நமக்கு பூமாதேவியை பூஜிக்க தகுதி அளிக்கும் என்று தோன்றுகிறது. எறும்பூர கல்லும் தேயும் என்பார்கள். இந்த யாகசாலையின் வாசற்படிகள், நமது வரத்துப்போக்கினால் தேய்ந்தது போல, மனிதனின் சடங்குகள் பிரபஞ்சத்தில் கால் தடம் பதித்துள்ளன.

அம்பாள் தரிசனம்: சாயும் காலம்.  இரு மலை உச்சிகளின் ஊடே, கிணற்றில் மெதுவாக இறங்குவது போல, ஆதவன் இறங்கி மறைகிறான். அன்னையின் மார்பகம் என் உயிரின் ஊற்று அல்லவோ! அன்று  உமா மஹேஸ்வரி ‘திராவிட சிசு’ திருஞான சம்பந்தருக்கு மறைஞானம் என்ற அடிசில் ஊட்டியதை மறந்தாயோ? என் அனுபவத்தைக் கேள்: கண்டேன்! ‘மகிழ்ச்சியில் திளைக்கும் வாழும் நெறியை.” [The Rapture of Being Alive]. கண்டேன் அண்டை ~ அயலார் உறவு. கண்டேன் ஞானப்பழத்தை. கண்டேன் பெண்ணின் பெருமையை.


>>>>>>>>>>>>>> 

இந்த மாதிரி சீக்ரட் எழுத்து எழுதினா எப்படிப் படிக்கறது? 

:-))) 


கற்றது

Innamburan Innamburan Wed, Sep 21, 2011 at 1:39 AM
To: mintamil , thamizhvaasal
பதில் எழுத லேட்டான காரணம் --- 



--->>> 

~ ~ ~ தொட்ட குறை, விட்ட குறை யாதோ. ஶ்ரீ?



Innamburan Innamburan Wed, Sep 21, 2011 at 1:55 AM
To: mintamil , thamizhvaasal
கூடு விட்டு கூடு பாய்ந்த மர்மம் தனை  அன்பம்பு வழி சென்று கண்டேன். மனமகிழ்ந்தேன். கில்பெர்ட் முர்ரேயை நினைத்துக்கொண்டேன். அவர் இக்காலம் நங்க நல்லூரில், ஹெர்லெர்ட் ஸ்பென்ஸருடன் வாசம். Gilbert Murray is the most lucid authority on Greek Myths and held me spell-bound in 1952. என் 'தொட்ட/விட்ட குறை' வினா அமலில் உள்ளது.
அன்புடன்,
இன்னம்பூரான்
[Quoted text hidden]

விஜயராகவன் Wed, Sep 21, 2011 at 2:27 AM

On Sep 20, 5:13 pm, Innamburan Innamburan <innambu...@gmail.com>
wrote:

> அம்பாள் தரிசனம்: சாயும் காலம்.  இரு மலை உச்சிகளின் ஊடே, கிணற்றில் மெதுவாக
> இறங்குவது போல, ஆதவன் இறங்கி மறைகிறான். அன்னையின் மார்பகம் என் உயிரின் ஊற்று
> அல்லவோ! அன்று  உமா மஹேஸ்வரி ‘திராவிட சிசு’ திருஞான சம்பந்தருக்கு மறைஞானம்
> என்ற அடிசில் ஊட்டியதை மறந்தாயோ? என் அனுபவத்தைக் கேள்: கண்டேன்!

சௌந்தர்யலஹரியில் வரும் `திராவிட சிசு`  திருஞான சம்பந்தரை குறிப்பது
என்பது ஒரு யூகம்தான்.

அது ஆதி சங்கரரையே குறிப்பது என்பது இன்னொரு வாதம்

http://www.hindu.com/thehindu/2001/08/21/stories/1321017c.htm

Discourses on the Soundaryalahari


BHAGAVADPADA SANKARA'S SOUNDARYALAHARI: An exposition by Sri
Chandrasekharendra Saraswati Swamigal of Kanchi Kamakoti Peetam;
Bharatiya Vidya Bhavan, Kulapati Munshi Marg, Mumbai-400007. Rs. 600.
.....
The sage deals with the intriguing reference to "Dravida sisu'' in the
poem. He points out very gently that it could hardly be a reference to
the 6th century A.D. saint Gnanasambandar.

The reference here is to Sankara himself, who as Lakshmidara points
out as deputising for his father at the family temple to the Devi.

This is further confirmed by a hymn discovered by the scholar, Dr. C.
R. Swaminathan



விஜயராகவன்


விஜயராகவன் Wed, Sep 21, 2011 at 2:44 AM

This topic was discussed many years back in the Indology list by
Ganesan, me and others and someone has a copy of this thread

http://www.indiadivine.org/audarya/hinduism-forum/173379-dravidazizu-sanskrit.html

Vijayaraghavan
[Quoted text hidden]

விஜயராகவன் Wed, Sep 21, 2011 at 2:46 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: மின்தமிழ்

விஜயராகவன் Wed, Sep 21, 2011 at 3:09 AM

you can download a book published in 1938 on Soundaryalahari by
Theosophical Society, Madras

http://ia600500.us.archive.org/6/items/SaundaryaLahari/

In Page 212 Stanza 75, there is an extensive discussion of the term
Dravida Sisu and to whom it may refer to.

The fact is no one can make a clinching argument . Traditional
commentator like Lakshmidhara thought Adisankara was referring to
himself by the term - the line taken by Kanchi acharyas

http://www.kamakoti.org/kamakoti/articles/Preceptors%20of%20Advaita%20-%208.html


Vijayaraghavan

On Sep 20, 6:20 pm, Dhivakar <venkdhiva...@gmail.com> wrote:
> தெய்வத்தின் குரலில் பரமாசாரியாள் விளக்கமாய் எழுதி இருப்பார்.
>
> என்ன எழுதியிருக்கிறார் என்றுதான் சொல்லுங்களேன். தெரிந்து கொள்ள ஆவல்.
>
> சௌந்தர்யலஹரி உபன்யாஸமாகக் கேட்டிருக்கிறேன். ஸ்தூல வடிவமாக கயிலாயம் சென்று
> ஆதிசங்கரர் இதைப் பெற்றதாக வரும்.
>
> தி
>
> 2011/9/20 Geetha Sambasivam <geethasmbs...@gmail.com>
>
>
>
>
>
>
>
> > 2011/9/20 Dhivakar <venkdhiva...@gmail.com>
>
> >> >>தன்னைத் தானே சொல்லிக்கொண்டதாய்த் தான் படிச்சிருக்கேன்<<
>
> >> கீதாம்மா சொன்னது நான் ஏற்கனவே கேள்விப்பட்டதுதான். சௌந்தர்யலஹரி சாட்ச்சாத்
> >> சிவபெருமானே எழுதியதாகச் சொல்வார்கள்.
>
> >> அதே சமயம் சம்பந்தரைப் பற்றி சங்கரர் இப்படி சொன்னதாக பல புத்தகங்களிலும்
> >> வந்து கொண்டிருக்கிறது. நம் ஹார்பர் எம் எல் ஏ ஒரு புத்தகத்தில் ஒரு
> >> கட்டுரையில் இந்த ஒரு வார்த்தையை வைத்துக்கொண்டு வாங்கு வாஙகு என
> >> வாங்கியிருக்கிறார்.
>
> >> எனவேதான் இந்த கேள்வி!
>
> >> தி
>

Mohanarangan V Srirangam 


------  இப்படி மர்ம எழுத்துகளாக உங்கள் இடுகை எனக்கு வந்து சேருகிறது, 
எனவே படிக்க முடிவதில்லை. ஏன் என்று பார்க்கவும். 

***


rajam Wed, Sep 21, 2011 at 10:11 AM

அவையோரின் மன்னிப்பை முன்கூட்டியே வேண்டி ஒன்று சொல்ல விழைவு. 'திராவிட சிசு' பத்தி இல்லெ.
சின்ன வயசுலெ ... இந்த மாதிரியெல்லாம் (almost equivalent to "அம்பாள் தரிசனம்") காதுலெ பட்டது.  உலக நடைமுறைக்கும் ( == வீட்டுலெ பேசினதுக்கும், சொல்லிக்குடுத்த வார்த்தைகளின் பழக்கத்துக்கும்) இந்த மாதிரி ஏதோ ஒரு "அம்பாளை"க் கன்னா பின்னா என்று வருணிப்பதற்கும் இடையே ரொம்ப ரொம்ப வேறுபாடு தெரிந்தது. ரொம்பவே குழப்பம். யாரிடம் கேக்க-னு தெரியலெ.
ஒரு தடவெ கேட்டுப்புட்டேன்: "என்ன இப்டி அசிங்கமா ... ஸ்வாமி ஸ்லோகத்துலெ ஸ்தனம் அது இது-னு எல்லாம்?" அப்பப்பா ... வந்ததே கோபம் ... யாருக்கு? கேள்வி கேட்கப்பட்ட சித்தப்பா/பெரியப்பா எல்லாருக்கும். (அப்போ அப்பா இல்லை; சின்ன வயசிலெ போயிட்டார், பாவம்.) சித்தப்பா, பெரியப்பா எல்லாரும் அம்மாவிடம் என்னைப் பற்றிப் புகார். ஜாக்கிரதையாப் பாத்துக்கோ-னு அறிவுரை.
எதுக்குச் சொல்றேன்? என் கணிப்புலெ ... "அம்பாள்"-ங்கற பேரெ வச்சு நெறயப் பேர் ஏமாத்து. 
[Quoted text hidden]
[Quoted text hidden]

Dhivakar 
-:)
[Quoted text hidden]

Geetha Sambasivam 
அம்மா,

நீங்க சொல்வது உண்மையே.  அம்மன் பெயரைச் சொல்லி ஏமாற்று இன்னமும் நடந்து வருகிறது என்பது சரியே.  ஆனால் இங்கே ஸ்தனம் என வந்திருப்பதால் சிருங்கார ரசமான வர்ணனைனு எடுக்க முடியாது.  இவ்வுலகமே அம்பாளின் கர்ப்பத்திலேயே இருப்பதாகச் சிலர் கூற்று.  சிலர் சூரிய, சந்திரரைத் தன் ஸ்தனங்களாய்க் கொண்டு அம்பாள் நமக்கெல்லாம் பாலூட்டி வருவதாயும் சொல்வார்கள். 

இம்மாதிரி ஸ்லோகங்களில் வர்ணனைகள் வருவதின் காரணம் திரும்பத் திரும்ப அவற்றைப் படிக்கும் நம் மனம் காமம் என இப்போது அழைக்கப்படும் பாலுணர்வுத் தூண்டுதல்களிலிருந்து விடுபடுவதற்காகவே.  முதல் முறை, இரண்டாம் முறை நமக்குக் கொஞ்சம் ஒரு மாதிரி தோன்றினாலும் நாளாவட்டத்தில் படிக்கப் படிக்க அதன் உள்ளார்ந்த தத்துவம் புரியப் புரிய அவை வெறும் வார்த்தைகளாகிவிடும். காமத்திலிருந்து நம்மை விடுவிப்பதற்காகவே இவை எல்லாம்.  ஒருவகை சோதனைனும் வைச்சுக்கலாமோ என்னமோ!


Geetha Sambasivam
திவாகர்,

புத்தகம் எங்கே மாட்டிக்கொண்டிருக்கிறதுனு தெரியலை.  நினைவிலே இருக்கிறதை வைத்துக்கொண்டு இந்தப் பெரிய தத்துவார்த்தமான விஷயங்களில் எழுத முடியாது.  நவராத்திரிக்குள்ளாகப் புத்தகத்தை எடுக்கப் பார்க்கிறேன். இப்போது மன்னிக்கவும்.  நன்றி.  நீங்க சொன்னாப்போல் ஸ்தூல வடிவாக ஆதிசங்கரர் கைலை சென்று வாங்கி வந்ததாகவும் உண்டு.  அவரிடம் இருந்து நந்தி தேவர் பிடுங்கி விட்டதாயும்., பின்னர் முதல் நாற்பத்தி ஒரு ஸ்லோகங்கள் மட்டுமே ஆதிசங்கரருக்குத் திரும்பக் கிடைத்ததாகவும் கூறுவார்கள்.  அடுத்து ஐம்பத்தி ஒன்பது ஸ்லோகங்களையும் ஆதிசங்கரரே எழுதி பூர்த்தி பண்ணினார் என்பார்கள்.

முதல் நாற்பத்தி ஒன்றும் ஸ்ரீவித்யா வழிபாட்டு முறைகளைக் குறிக்கும்.  அடுத்த ஐம்பத்தி ஒன்பது ஸ்லோகங்கள் அம்பிகையைத் தலைமுதல் கால்வரை வர்ணிக்கப்படும் ஸ்லோகங்கள்.
2011/9/20 Dhivakar <venkdhivakar@gmail.com>
தெய்வத்தின் குரலில் பரமாசாரியாள் விளக்கமாய் எழுதி இருப்பார். 

என்ன எழுதியிருக்கிறார் என்றுதான் சொல்லுங்களேன். தெரிந்து கொள்ள ஆவல்.

சௌந்தர்யலஹரி உபன்யாஸமாகக் கேட்டிருக்கிறேன். ஸ்தூல வடிவமாக கயிலாயம் சென்று ஆதிசங்கரர் இதைப் பெற்றதாக வரும்.

தி

2011/9/20 Geetha Sambasivam <geethasmbsvm6@gmail.com>

2011/9/20 Dhivakar <venkdhivakar@gmail.com>
>>தன்னைத் தானே சொல்லிக்கொண்டதாய்த் தான் படிச்சிருக்கேன்<<

கீதாம்மா சொன்னது நான் ஏற்கனவே கேள்விப்பட்டதுதான். சௌந்தர்யலஹரி சாட்ச்சாத் சிவபெருமானே எழுதியதாகச் சொல்வார்கள்.


"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minTamil@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
[Quoted text hidden]

Innamburan Innamburan Wed, Sep 21, 2011 at 11:05 AM

நிதானித்துத் தான் இந்த இழை அள்ளிக்கொண்டு வந்த அரிய கருத்துக்களை/ விஷயங்களை புரிந்து கொள்ள முயற்ச்சிக்கவேண்டும். எதற்கும் வேளை வரவேண்டும் போல இருக்கிறது. கிரேக்க தொன்மம் பற்றி தமிழில்  எழுதக்கூடிய ஆற்றல் எனக்கு இல்லையே என்றும், வாசகர்களுக்கு ஆர்வம் இருக்காது என்றும் தயங்கினேன். அன்னி பெசண்ட் அம்மையாரை பற்றி எழுத நினைத்து, எங்கெங்கோ பயணித்தது, இந்த இழை, அதை இன்னொரு நாள் பார்த்துக்கொள்ளலாம் என்று. பொக்கிஷமாக இதை நீங்கள் எல்லாரும் படைத்து விட்டீர்கள். இந்த தேடல் தொடரட்டும். நல்லதே நடக்கும்.இன்னம்பூரான்
21 09 2011

rajam Wed, Sep 21, 2011 at 11:13 AM

அன்பின் கீதா,
இந்த மாதிரி ஸ்லோகங்களின்மேல் உங்கள் ஆதங்கம் எனக்கு ஓரளவு புரிகிறது.  
எதற்காக நாம் சிருங்கார ரசத்தை வெறுக்கவேண்டும்?

காசு கொடுத்து ஒரு நாட்டிய நிகழ்ச்சியில் அதை நாம் ரசிக்கவில்லையா? அது "கண்ணனின் ராஸ லீலை" என்றால் மட்டும்தான் கைதட்டி ரசிக்கவேண்டுமா?
இம்மாதிரி ஸ்லோகங்களில் வர்ணனைகள் வருவதின் காரணம் திரும்பத் திரும்ப அவற்றைப் படிக்கும் நம் மனம் காமம் என இப்போது அழைக்கப்படும் பாலுணர்வுத் தூண்டுதல்களிலிருந்து விடுபடுவதற்காகவே.  
ஏன்? ஏன்? காமம் தீயது அன்று; அதைச் சரியாகப் புரிந்துகொள்ளாததுதான் குற்றம்.

முதல் முறை, இரண்டாம் முறை நமக்குக் கொஞ்சம் ஒரு மாதிரி தோன்றினாலும் நாளாவட்டத்தில் படிக்கப் படிக்க அதன் உள்ளார்ந்த தத்துவம் புரியப் புரிய அவை வெறும் வார்த்தைகளாகிவிடும்.
வெறும் வார்த்தைகளாகிவிடும் அந்தச் சொற்களினால் என்ன பயன், கீதா?

காமத்திலிருந்து நம்மை விடுவிப்பதற்காகவே இவை எல்லாம்.  ஒருவகை சோதனைனும் வைச்சுக்கலாமோ என்னமோ!  
இதுதான் நம்மவர் செய்யும் தவறு என்று எனக்குத் தோன்றுகிறது. காமம் இருந்தால் ... கணவனும் மனைவியும் எத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் ஒருவரை ஒருவரை மதித்து, நடந்துகொள்வார்கள்.
நான் பார்த்தவரை ... 40 ஆண்டுகள் மணவாழ்க்கையில் கூடியிருக்கிறவர்களிடம்கூட ... காமம் இல்லாததால் ... கவர்ச்சி இல்லை; ஒருவரை ஒருவர் மதிப்பதில்லை, ஏதோ ஒரு சமுதாயக் கட்டுப்பாட்டுக்கு அடங்கி இருந்து ... போகும் தன்மைதான். சமயத்தில் அந்த வெறுப்பும் வெளிப்படுவதைக் கண்டு நான் வியந்தேன். இதெல்லாம் என் அண்மைக் கால இந்திய அனுபவம்! :-)
[Quoted text hidden]
[Quoted text hidden]

Geetha Sambasivam Wed, Sep 21, 2011 at 11:35 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
இல்லை அம்மா, காமத்தை வெறுப்பது அல்ல, காமத்தை வெல்வது தான் இங்கே குறிப்பிட்டிருக்கும் விஷயம்.  ஆனால் எனக்கு அதைச் சரியாகச் சொல்லத் தெரியவில்லை என்றே எண்ணுகிறேன். ஆதங்கம் எதுவும் இல்லை; நிர்க்குணமான மனம் இருந்தாலே இத்தகையதொரு விருப்பு, வெறுப்பற்ற மனநிலையில் ஸ்லோகங்களைப் படைக்க முடியும் என்பது என் கருத்து.

ஜயதேவர் அஷ்டபதியில் குறிப்பிட்டமாதிரி!

காசு கொடுத்து ஒரு நாட்டிய நிகழ்ச்சியில் அதை நாம் ரசிக்கவில்லையா? அது "கண்ணனின் ராஸ லீலை" என்றால் மட்டும்தான் கைதட்டி ரசிக்கவேண்டுமா?//

நாட்டிய நிகழ்ச்சியில் ரசிப்பது என்பது வேறு.  அதையே சினிமாவில் கவர்ச்சிகரமாய்க் காட்டுவதை வெறுக்கிறோம் இல்லையா?  அந்த நுட்பமான வேறுபாட்டை எனக்கு எடுத்துக் காட்டத் தெரியவில்லை.  அதோடு கண்ணனின் ராஸலீலையின் தத்துவார்த்தமும் ஆழமானது என்பார்கள்.  ஆனால் பொதுவான நோக்கில் கண்ணன் தன்னை விட வயது முதிர்ந்த பெண்களிடமும் காதல் செய்தான் என்றே நினைக்கின்றனர்.  இது புரிந்து கொள்ளுதலில் உள்ள வேறுபாடு என்றே தோன்றுகிறது.



இதுதான் நம்மவர் செய்யும் தவறு என்று எனக்குத் தோன்றுகிறது. காமம் இருந்தால் ... கணவனும் மனைவியும் எத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் ஒருவரை ஒருவரை மதித்து, நடந்துகொள்வார்கள். //

கட்டாயமாய் அம்மா.  கணவன், மனைவிக்குள்ளே சரியான மனம் சார்ந்த புரிதலுடன் கூடிய உடலுறவு வேண்டும் தான்.  ஆனால் அதுவும் வெறும் உடல் தேடலாக இருத்தல் கூடாது அல்லவா??  இயந்திர மயமாக இருக்கக்கூடாதே.   அதற்கு வழி செய்ய வேண்டியே இத்தகைய தேடல்கள் எல்லாம்.  அதுவும் இந்தக் காலத்தில் இது தான் மேலோங்கியே காணப்படுகிறது நான்பார்த்த வரையில்.

Autobiography of an Yogi புத்தகத்தில் பரமஹம்ஸ நித்யாநந்தர், அவர் தாயும், தகப்பனும் குழந்தை தேவை என்று தோன்றும் சமயங்களில் மட்டுமே கணவன், மனைவியாக உடலுறவு கொண்டதாய்க் குறிப்பிட்டிருப்பார்.  இப்போதெல்லாம் இம்மாதிரியான தம்பதிகளை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. மேலும் இது ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான  கருத்து உள்ள விஷயம். மாறுபடும். இல்வாழ்க்கையில் ஈடுபடக்கூடாது என்றோ, காமம் தீயது என்றோ நம் சாஸ்திரங்களோ, சம்பிரதாயங்களோ ஒருபோதும் கூறியதில்லை.  இனியும் கூறாது. பொதுவாக நம் மக்கள்  ஆழமாக எதையும் புரிந்து கொள்வதில்லை.  அந்த அந்த நேரத்திற்கான வாழ்க்கை மட்டுமே கண்களுக்குத் தெரிகிறது.

திருச்சிக்கருகே ஒரு சின்ன ஊரில் வாடகை மனைவிகள் கிடைப்பதாய் ஜூனியர் விகடன் என்னும் புத்தகம் இரண்டு வருடங்கள் முன்னே போட்டிருந்தது.  வீட்டிற்குத் தேவையான குளிர்சாதனப்பெட்டி, ஏசி, தொலைக்காட்சி, வாஷிங் மெஷின் போன்ற பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்க முடியாத நடுத்தரக் குடும்பத்துப் பெண்கள் கணவன் சம்மதத்தோடு அவர்கள் வீட்டிற்கு தொழிலதிபர்களைத் தங்க வைத்து அவர்கள் அங்கே தங்கும் நாட்களில் மனைவியாக நடந்து கொள்வார்கள் என்று போட்டிருந்தார்கள்.  இதன் மூலம் குழந்தை மட்டும் பெற்றுக்கொள்ள மாட்டார்களாம்.  கணவன், மனைவி அந்தத் தொழிலதிபர் கூடிப் பேசித் தொகை நிர்ணயம் செய்து கொள்வார்கள் என்றும் போட்டிருந்தது.  இது எவ்வளவு தூரம் உண்மை என்பது எனக்குத் தெரியாது.  பத்திரிகையில் படித்தது தான்.  இம்மாதிரியெல்லாம் கட்டுப்பாடின்றி பணத்துக்காக நடந்து கொள்வதைத் தான் காமம் என்போம். கணவன், மனைவி உறவை அல்ல.



Dhivakar Wed, Sep 21, 2011 at 11:55 AM

கீதாம்மா!
நீங்கள் சொல்வது சரியான வகைதான் என்ப் படுகிறது.

சௌந்தர்யலஹரியைப் படித்து அறிவதை விட, அறிஞர்கள் மூலம் கேட்டுப் பெற்று மனதில் வாங்குவதுதான் நல்லது. இந்தக் கைலாயம் கதை கூட ஒரு வகையில் நியாயமானதோ என்றுதான் படுகிறது, கைலாயம் கதை என்ன?

ஆதிசங்கரர் தவத்தில் இருக்கும்போது கைலாயத்திலிருந்து அழைப்பு வர, தூல சரீரத்தோடு அங்கே செல்கிறார். சிவனும் பார்வதியும் தரிசனம் தர, சக்தியைப் பற்றிய சௌந்தர்யலஹரியை சிவனிடமிருந்து கேட்டுப் பெறுகிறார். கேட்டுப் பெறும்போது தூல சரீரம் மறைகிறது, அவதாரம் எடுத்த சரீரத்துடன் அவர் கைலாயத்திலிருந்து வெளியே வரும்போது நந்தியார் அவர் கையில் இருக்கும் ஸ்லோகங்களைக் கண்டு அதை எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கிறார். இந்த ஸ்லோகங்கள் மானவர்களுக்கு (மனிதர்களுக்கு) ஏற்புடயவையல்ல, அவை தேவையுமல்ல என்பதே நந்தியார் வாதம். இருந்தும் சங்கரர் வெளியே வர, நந்தியாருடன் ஏற்பட்ட ச்ந்திப்பில் சில ஸ்லோகங்கள் அங்கேயே விழுந்தபடி கிடக்க, சங்கரர் திரும்புவதாகவும், பிறகு சிவ்னை நினைத்து ஏனைய பகுதிகளை - 44 லிருந்து 100 - வரை எழுதியதாகவும், அவை சிவன் ஏற்கனவே எழுதிய ஸ்லோகங்களுடன் ஒத்துப் போவதாகவும் சொல்வார்கள். 

பல பக்தி இலக்கியங்களில் இவை போன்றவை இருக்கின்றன. கம்பனிடம் பாலகாண்டத்தில் கம்பரசம் மற்றும் கற்று ரசித்து விட்டுப் போகிறவர்களும் இருக்கிறார்கள். அதையும் தாண்டி அயோத்தியாகாண்டம் வந்தால்தால் உண்மை புரியும், சுந்தர காண்டத்தில் அருமை தெரியும். யுத்தம் காண்டம் முடிந்ததும் அற்புதம் வெளிப்படும்.

தி
[Quoted text hidden]
--
[Quoted text hidden]

rajam Wed, Sep 21, 2011 at 11:58 AM


Innamburan Innamburan Wed, Sep 21, 2011 at 12:00 PM
To: mintamil@googlegroups.com
Don't!
2011/9/21 rajam <rajam@earthlink.net>
i withdraw! :-)



rajam Wed, Sep 21, 2011 at 12:08 PM

i don't see a place for someone like me here! :-) no worries, i'll be alright ... in my own space! :-)



Geetha Sambasivam Wed, Sep 21, 2011 at 12:10 PM

அம்மா, அப்படி எல்லாம் எதுவும் இல்லை.  நீங்கள் கலந்து கொள்ளவில்லை எனில் வருத்தமாய் இருக்கும். ஒவ்வொருத்தருக்கும் கருத்து மாறுபாடுகள் இருப்பது சகஜம் தானே அம்மா!  உங்கள் கருத்தையும் ஏற்றுக்கொள்ளவே செய்கிறேன். 
[Quoted text hidden]

rajam Wed, Sep 21, 2011 at 12:56 PM

அதுக்கென்ன கீதா. எனக்கும் எல்லாருடைய கருத்து வேறுபாடும் உடன்பாடே. யார்மேலும் வெறுப்பு இல்லை. ஆனால் நான் சொல்லும் சொற்கள் சில சமயம் சிலரை வருத்தப்படவைத்துவிடுகிறது, அதனால் நான் விழிப்போடு இருப்பது நல்லது, இல்லையா. மத்தபடி, நாம் எல்லாரும் அன்புடைய நண்பர்களே.
சரி, இப்பொ நான் தூங்கப் போகணும். நாளெக்கிப் பாப்போம்.
[Quoted text hidden]
[Quoted text hidden]

seshadri sridharan Wed, Sep 21, 2011 at 12:00 PM

 Discourses on the Soundaryalahari

 BHAGAVADPADA SANKARA'S SOUNDARYALAHARI: An exposition by Sri
 Chandrasekharendra Saraswati Swamigal of Kanchi Kamakoti Peetam;
 Bharatiya Vidya Bhavan, Kulapati Munshi Marg, Mumbai-400007. Rs. 600.

 The sage deals with the intriguing reference to "Dravida sisu'' in the
 poem. He points out very gently that it could hardly be a reference to
 the 6th century A.D. saint Gnanasambandar.

 The reference here is to Sankara himself, who as Lakshmidara points
 out as deputising for his father at the family temple to the Devi.

 This is further confirmed by a hymn discovered by the scholar, Dr. C.
 R. Swaminathan
இந்த  கருத்தை  தமிழ்த் தேசியர்கள் ஒப்புக் கொண்டு விட்டனர் என்பதுடன்
அல்லாமல் உண்மையில் திராவிட என்ற சொல் பிராமணர்களையே குறிக்கின்றது
அதற்கு ஆதி சங்கரர் தம்மைத் தாமே  சௌந்தர்ய லகரியில் குறிப்பிடுவதாக
முடிபு கொண்டுள்ளனர். எனவே தமிழர் தம்மை தமிழர் என்றே சொல்ல வேண்டுமே
அல்லால் திராவிடர் எனச் சொல்லிக் கொள்வது ஆரியத்திற்கு வால் பிடிக்கும்
வேலை. இதைத் தான் திராவிட கருத்தை ஆதரிக்கும் கழகங்கள் செய்கின்றன.

இதில் தெலுங்கர், கன்னடர், மலையாளிகளை உள்ளடக்கி தமிழுக்கும் தமிழ்த்
தேசியத்திற்கும் கேடு செய்து ஆரியத்திற்கு வால் பிடிக்கும் இந்த
வடுக--நாயர் கூட்டம் தான் தமிழகத்தில்  மேன்மை கண்டது. உண்மையில்
பிராமணர்களையும், ஆரியத்தையும், சமற்கிருதத்தையும் ஆதரிக்கும் இவர்களால்
பிராமணர்களை எதிர்க்கவே முடியாது மாறாகத் தமிழையும் தமிழினத்தையும் தான்
அழுத்தி வைக்க முடியும் என்பது தமிழ்த் தேசியர்களின் அண்மைக் காலக்
கருத்தாடல். அவர்கள்  கருத்தில் உண்மை இருப்பதாகவேத் தோன்றுகிறது.
[Quoted text hidden]

Nagarajan Vadivel Wed, Sep 21, 2011 at 5:07 PM

முன்னர் ஒரு இழையில் குறிப்பிடிருந்தேன். இந்தியாவில் பிராமணர்கள் தங்கள் வாழ்வியல் மரபு வழிபாட்டுமுறை பண்புக்கூறு அடிப்படையில் வடக்கே உள்ளவர் கெளட பிராமணர் என்றும் தென்புலத்தில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திர, கர்நாடக மஹாராஷ்ட்ரா பகுதிகளில் வாழ்ந்தவர்கள  திராவிட பிராமணர் என்றும் அழைக்கப்பட்டனர். பெரியார் பாவம் நீதிக்கட்சியில் வெளியான பத்திரிக்கைக்குத் திராவிடன் என்ற பெயர் வைத்தார்கள்.  அவர் நீதிக்கட்சித் தலைவரானபின் பிரிவினையை ஆதைரித்த ஆரம்ப காலத்தில் சொன்ன தமிழ்நாடு தமிழருக்கே என்ற கோரிக்கையை தமிழ் மொழியே மற்ற தெபுல மொழிகளின் தாய் என்ற தவறான புரிதலோடு திராவிடநாடு திராவிடருக்கே என்றூ மாற்றிக் கொண்டார்.  அடைந்தால் திராவிடநாடு இல்லையேல் சுடுகடு என்பதில் அவர்களுக்குத்தெரியும் சுடுகாடு ஒவ்வொரு ஊரிலும் திராவிடநாடு ஒவ்வொரு கட்சிக்காரனின் கற்பனையிலும் என்று.  ஏனோ தெரியலே அவுகளுக்கு ஏன் ஏகப்பட்ட கிரடிட் கொடுக்குறாகளோ தெரியலே
திராவிடத்தில பிறந்த ஆதிசங்கரர் திராவிடசிசுதானே. பழைய ஹரிநிவாஸ் ஹோட்டலில் (ஹைகோர்ட் அருகில் இருந்த தாஸப்ப்பிரகாஷ்) ஒரு குரூப் போட்டோ திராவிட Uடுப்பி ஹோட்டல் உரிமையாளர் சங்க உறுப்பினர் எடுத்துக்கொண்ட புகைப்படம். 
நாகராசன்
[Quoted text hidden]

Geetha Sambasivam Wed, Sep 21, 2011 at 5:09 PM
கேரளா, ஆந்திரம், கர்நாடகம், மஹாராஷ்டிரம் மட்டுமில்லாமல் குஜராத்தும் திராவிடத்தின் பகுதியே. தெய்வத்தின் குரலைத் தேடி எடுக்க வேண்டிய சூழ்நிலை.  தேடிக் கொண்டிருக்கிறேன். பஞ்ச பிராமணர்கள் என்பார்கள்.  வங்காளத்தில் இருந்தும் வட கிழக்குப் பகுதியிலிருந்தும் வந்தவர்கள் கெளடர்கள்.
[Quoted text hidden]

N. Kannan Wed, Sep 21, 2011 at 5:16 PM

2011/9/21 Geetha Sambasivam <geethasmbsvm6@gmail.com>

> இம்மாதிரி ஸ்லோகங்களில் வர்ணனைகள் வருவதின் காரணம் திரும்பத் திரும்ப அவற்றைப் படிக்கும் நம் மனம் காமம் என இப்போது அழைக்கப்படும் பாலுணர்வுத் தூண்டுதல்களிலிருந்து விடுபடுவதற்காகவே.  முதல் முறை, இரண்டாம் முறை நமக்குக் கொஞ்சம் ஒரு மாதிரி தோன்றினாலும் நாளாவட்டத்தில் படிக்கப் படிக்க அதன் உள்ளார்ந்த தத்துவம் புரியப் புரிய அவை வெறும் வார்த்தைகளாகிவிடும். காமத்திலிருந்து நம்மை விடுவிப்பதற்காகவே இவை எல்லாம்.  ஒருவகை சோதனைனும் வைச்சுக்கலாமோ என்னமோ!
>

எதுக்கும் ஜாக்கிரதையா இருக்கிறது நல்லது. ஆண்டாளும் ஸ்தனம் எனச்
சொல்லிவிட்டதால் அவள் கணிகையர் குலம் என்ற பேச்சு இங்கு முன்பு
அடிபட்டது! சௌந்தர்ய லகரியை எழுதிய பரமாத்மா ஜாக்கிரதை! :-)

க.>
[Quoted text hidden]

Geetha Sambasivam Wed, Sep 21, 2011 at 5:24 PM

அது சரி, ஆண்டாள் இம்மாதிரியான வர்ணனைகள் எல்லாம் எழுதி இருப்பதால் இதை ஒரு பெண் எழுதி இருக்க முடியாது; பெரியாழ்வாரே ஆண்டாள் என்ற புனைப்பெயரில் எழுதி இருக்கக்கூடும் என்பது சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் அவர்களின் கூற்று. இதற்கான ஆதாரக்கட்டுரையும் உள்ளது. (தேடலில்) வீடு மாற்றியதில் எல்லாமே தலைகீழ்!  புத்தகங்களை வைக்க இன்னும் நேரமும், இடமும் தோதுப்படவில்லை! அதோட யு.எஸ். பயணத்திற்கான ஏற்பாடுகள் வேறே. நேரம் கிடைக்கவில்லை!

ஆண்டாள் குறித்து ராஜகோபாலாச்சாரியார் சொன்னது பற்றி இன்னம்புராரின் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.
2011/9/21 N. Kannan <navannakana@gmail.com>
[Quoted text hidden]
[Quoted text hidden]

Innamburan Innamburan Wed, Sep 21, 2011 at 5:40 PM
To: mintamil@googlegroups.com

என்னால் இயன்றவரை இங்கிருந்து மூலத்தைத் தேடி பார்க்கிறேன். எளிதில் அவருடைய கருத்துக்களை ஒதுக்கமுடியாது. எனக்கென்னெமோ, ஆண்டாள் எழுதியிருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. ஒரு உபரிச்செய்தி: ‘அம்பாள் தரிசனம்’ நான்கு ஆயிரம் வருடங்களுக்கு முன்னால். அதன் தற்கால மூல வசனம் எழுதியது ஒரு பெண்.
இன்னம்பூரான் 
[Quoted text hidden]

Geetha Sambasivam
ஆண்டாளைத் தவிர வேறு யாரும் எழுதி இருக்க முடியாது என்பதுவே என் கருத்தும். நிதானமாய்த் தேடி எடுத்துப் போடுங்கள்.  அவசரமே இல்லை.


Hari Krishnan Wed, Sep 21, 2011 at 6:10 PM



2011/9/21 Geetha Sambasivam <geethasmbsvm6@gmail.com>
ஆண்டாளைத் தவிர வேறு யாரும் எழுதி இருக்க முடியாது என்பதுவே என் கருத்தும். நிதானமாய்த் தேடி எடுத்துப் போடுங்கள்.  அவசரமே இல்லை.

ராயர் காபி கிளப்பில் ரெகாவுக்காக நீள நெடுக எழுதினேன்.  பெண் வேடம் புனைவது ஒரு ஆணால் முடியவே முடியாத காரியம்.  நாச்சியார் திருமொழி நெடுகிலும் ஒலிக்கும் பெண் குரலையும், பெரியாழ்வார் யசோதையாகப் போடும் பெண்வேடத்தையுமே எடுத்து ஒப்பிட்டுப் பார்க்கலாம்.  அம்மம் தாரேன் ஓர் எடுத்துக்காட்டு.  நாச்சியார் திருமொழி பெண்மையில் பொலபொலவென்று வடித்தெடுத்த சோறு.  பெரியாழ்வார் தாங்கியிருக்கும் பெண் வேஷத்துக்குள், ஒரு பதம் முன்னதாகவே இறக்கி வைக்கப்பட்ட சோற்றைப் போல, பிசையும் போது தெரியாது; வாயில் போட்டுக்கொள்ளும்போது, இன்னமும் கொஞ்சம் குழையாமல் நிற்கும் ஆம்பளத்தனம் தனித்தே தெரியும்.  

கண்ணன் அடிக்க வந்துடுவார்.  நான் காண்பது கவியுள்ளம். வைஷ்ணவாஸ்திரத்துக்கு நான் தயாரில்லை.  

--
அன்புடன்,
ஹரிகி.
[Quoted text hidden]

Raja sankar Wed, Sep 21, 2011 at 6:16 PM
ராஜம் அம்மா,

நீங்க சொல்லீட்டீங்க. நானென்னாலாம் சொல்லல. அவ்ளோதான்.

இதைப்பத்தி பேசினாலே ஒரு நாவலில் படிச்ச வரி தான் ஞாபகத்துக்கு வரும். இங்க சொல்ல முடியாதுன்னு நினைக்கறேன்.

ஆனா ஒன்னே ஒன்னு சொல்ல ஆசைப்படறேன்.

காமம் தவறு என்பது நம்முடைய கலாச்சாரம் அல்ல. அகநானூறு படித்த உங்களுக்கு தெரியாதது அல்ல. கடவுள் பற்றிய விஷயங்களில் காமம் வரக்கூடாது என்பதும் அப்படி காமம் இருப்பது எல்லாம் மோசம் எனும் எண்ணம் ஆங்கிலேயர் வந்த பின்பும் ஆபிரகாமிய மதங்களின் தாக்கத்தால் ஏற்பட்டது.

கடவுளை தோழனாக, சேவகனாக, உற்ற துணைவனாக காணும் போது தோழியாக, காதலனாக காணக்கூடாதா?

நீங்கள் சொல்வது போல் இதிலே ஏமாற்று வேலை நிறைய இருக்கும். எதில் தான் ஏமாற்று வேலை இல்ல, நாம் தான் ஏமாறாமல் இருக்கவேண்டும்.

ராஜசங்கர்

2011/9/21 rajam <rajam@earthlink.net>
அதுக்கென்ன கீதா. எனக்கும் எல்லாருடைய கருத்து வேறுபாடும் உடன்பாடே. யார்மேலும் வெறுப்பு இல்லை. ஆனால் நான் சொல்லும் சொற்கள் சில சமயம் சிலரை வருத்தப்படவைத்துவிடுகிறது, அதனால் நான் விழிப்போடு இருப்பது நல்லது, இல்லையா. மத்தபடி, நாம் எல்லாரும் அன்புடைய நண்பர்களே.
சரி, இப்பொ நான் தூங்கப் போகணும். நாளெக்கிப் பாப்போம்.

[Quoted text hidden]

Mohanarangan V Srirangam Wed, Sep 21, 2011 at 7:23 PM

ராஜாஜி எழுதியவற்றுக்கு மறுப்புரை எழுதி ஸ்ரீ உ வே ஸ்ரீவைஷ்ணவ ஸுதர்சனம் கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார் அனுப்பியதற்கு, உண்மைக்குத் துணிச்சலாகத் தன் தவறை ஒப்புக்கொள்ளும் நேர்மை ராஜாஜி ஒருவருக்குத்தான் இருந்தது. ‘எனக்கு ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாய விஷயங்கள் தெரியாது. தவறாகச் சொல்லிவிட்டேன்’ என்று. அவரால் தவறுகள் சுட்டிக் காட்டப் பட்டவர்கள் பலர் -- காஞ்சி காமகோடி சந்திரசேகரர் ம போ சி, மு கருணாநிதி ஆகியோர் உட்பட. 

***
[Quoted text hidden]

Vinodh Rajan 
//காமம் தவறு என்பது நம்முடைய கலாச்சாரம் அல்ல. அகநானூறு படித்த உங்களுக்கு தெரியாதது அல்ல. கடவுள் பற்றிய விஷயங்களில் காமம் வரக்கூடாது என்பதும் அப்படி காமம் இருப்பது எல்லாம் மோசம் எனும் எண்ணம் ஆங்கிலேயர் வந்த பின்பும் ஆபிரகாமிய மதங்களின் தாக்கத்தால் ஏற்பட்டது. //

Ofcourse :-)

.சில வருடங்களுக்கு முன்பு கல்லூரி நூலகத்தில் பாகவதம் படித்தது.. எனது நினைவில் நின்ற ஒரு பகுதி :

க்ஷீரசமுத்திரத்தை கடையும் போது லக்ஷ்மிதேவி வெளிவருவார்.. அப்போது, லக்ஷ்மியின் அங்கலக்ஷனத்தை குறிப்பிடுகையில் ஒரு வரி வரும்.

ஸ்தன-த்³வயம்ʼ சாதிக்ருʼஸோ²த³ரீ ஸமம்ʼ
நிரந்தரம்ʼ சந்த³ன-குங்குமோக்ஷிதம்

Her two breasts, which were symmetrical and nicely situated, were covered with sandalwood pulp and kuńkuma powder, and her waist was very thin.


மஹாலக்ஷ்மியின் ஸ்வரூபத்தை இப்படி எல்லாம் விவரிக்கலாமா என்று யாரும் அந்த காலத்தில் சண்டை போடவில்லை :-).

ஆக,

அங்கலக்ஷண விவரணங்கள் அனைத்தும் சர்வ சாதாரணமாகவே குறிப்பிடப்படுகின்றன. They are just a passing reference among all other descriptions. அதில் எந்த தவறும் இல்லை. 

~~~~

மூல காம சாஸ்திரத்தை உபதேசித்ததே சிவன் என்கிறபோது அது எவ்வாறு தவறாகும் ?

சிவன் பார்வதிக்கு காம சாஸ்திரத்தை உபதேசிக்க, அதை செவியுற்ற நந்திதேவர் ஆயிரம் அத்தியாயங்களில் மூல காமசாஸ்திரத்தை எழுதினாராம்.

அதுவே பிற்காலத்தில் பல ஆசிரியர்களால் சுருக்கப்ப்பட்டு, கடைசியில் வாத்ஸ்யாயனார் சில ஆயிரம் சுலோகங்களில் சுருக்கி எழுதினார் என்பதே மரபு.

மஹாதே³வ அனுசரஸ்² ச நந்தீ³ ஸஹஸ்ரேண அத்⁴யாயானாம்ʼ ப்ருʼத²க் காமஸூத்ரம்ʼ ப்ரோவாச

--- காம சூத்திரம் - ஸாதா⁴ரணம் - முதல் அத்தியாயம் 

|| தர்ம-அர்த²-காமேப்யோ நம: ||

வி
[Quoted text hidden]

DEV RAJ 
’குசோந்நதே குங்குமராக³ஶோணே ‘
                                                    -   காளிதாஸன்

’போகமார்த்த பூண்முலையாள் தன்னோடும் பொன்னகலம்
  பாகமார்த்த பைங்கண்வெள் ளேற்றண்ணல் பரமேட்டி’
                                                           -  காழிப்
பிள்ளையார்

ஆண் மகனுக்கும் மார்பு உயர்ந்து, விரிந்திருக்க வேண்டும்,
புருஷ ஸாமுத்ரிகா லக்ஷணம்


தேவ்


On Sep 21, 10:28 pm, Vinodh Rajan <vinodh.vin...@gmail.com> wrote:
> //காமம் தவறு என்பது நம்முடைய கலாச்சாரம் அல்ல. அகநானூறு படித்த உங்களுக்கு
> தெரியாதது அல்ல. கடவுள் பற்றிய விஷயங்களில் காமம் வரக்கூடாது என்பதும் அப்படி
> காமம் இருப்பது எல்லாம் மோசம் எனும் எண்ணம் ஆங்கிலேயர் வந்த பின்பும் ஆபிரகாமிய
> மதங்களின் தாக்கத்தால் ஏற்பட்டது. //
>
> Ofcourse :-)
>
> .சில வருடங்களுக்கு முன்பு கல்லூரி நூலகத்தில் பாகவதம் படித்தது.. எனது
> நினைவில் நின்ற ஒரு பகுதி :
>
> க்ஷீரசமுத்திரத்தை கடையும் போது லக்ஷ்மிதேவி வெளிவருவார்.. அப்போது,
> லக்ஷ்மியின் அங்கலக்ஷனத்தை குறிப்பிடுகையில் ஒரு வரி வரும்.
>
> *ஸ்தன-த்³வயம்ʼ சாதிக்ருʼஸோ²த³ரீ ஸமம்ʼ*
> *நிரந்தரம்ʼ சந்த³ன-குங்குமோக்ஷிதம்*
>
> Her two breasts, which were symmetrical and nicely situated, were covered
> with sandalwood pulp and kuńkuma powder, and her waist was very thin.
>
http://vedabase.net/sb/8/8/18/en
>
> மஹாலக்ஷ்மியின் ஸ்வரூபத்தை இப்படி எல்லாம் விவரிக்கலாமா என்று யாரும் அந்த
> காலத்தில் சண்டை போடவில்லை :-).
>
> ஆக,
>
> அங்கலக்ஷண விவரணங்கள் அனைத்தும் சர்வ சாதாரணமாகவே குறிப்பிடப்படுகின்றன. They
> are just a passing reference among all other descriptions. அதில் எந்த தவறும்
> இல்லை.
>
> ~~~~
>
> மூல காம சாஸ்திரத்தை உபதேசித்ததே சிவன் என்கிறபோது அது எவ்வாறு தவறாகும் ?
>
> சிவன் பார்வதிக்கு காம சாஸ்திரத்தை உபதேசிக்க, அதை செவியுற்ற நந்திதேவர் ஆயிரம்
> அத்தியாயங்களில் மூல காமசாஸ்திரத்தை எழுதினாராம்.
>
> அதுவே பிற்காலத்தில் பல ஆசிரியர்களால் சுருக்கப்ப்பட்டு, கடைசியில்
> வாத்ஸ்யாயனார் சில ஆயிரம் சுலோகங்களில் சுருக்கி எழுதினார் என்பதே மரபு.
>
> *மஹாதே³வ அனுசரஸ்² ச நந்தீ³ ஸஹஸ்ரேண அத்⁴யாயானாம்ʼ ப்ருʼத²க் காமஸூத்ரம்ʼ
> ப்ரோவாச*
>
> *--- காம சூத்திரம் - ஸாதா⁴ரணம் - முதல் அத்தியாயம் *
> *
> *
> *|| த**⁴**ர்ம-அர்த*²-*காமேப்**⁴**யோ நம: ||*
[Quoted text hidden]

Innamburan Innamburan Thu, Sep 22, 2011 at 1:09 AM
To: mintamil@googlegroups.com
ஏழு மணி நேரம் முன்னால்:
‘அது சரி, ஆண்டாள் இம்மாதிரியான வர்ணனைகள் எல்லாம் எழுதி இருப்பதால் இதை ஒரு பெண் எழுதி இருக்க முடியாது; பெரியாழ்வாரே ஆண்டாள் என்ற புனைப்பெயரில் எழுதி இருக்கக்கூடும் என்பது சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் அவர்களின் கூற்று. இதற்கான ஆதாரக்கட்டுரையும் உள்ளது. (தேடலில்) வீடு மாற்றியதில் எல்லாமே தலைகீழ்!  புத்தகங்களை வைக்க இன்னும் நேரமும், இடமும் தோதுப்படவில்லை! அதோட யு.எஸ். பயணத்திற்கான ஏற்பாடுகள் வேறே. நேரம் கிடைக்கவில்லை!

ஆண்டாள் குறித்து ராஜகோபாலாச்சாரியார் சொன்னது பற்றி இன்னம்புராரின் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.’
~ கீதாஜி (தேவ் வந்தாச்சு. இனிமே ‘ஜி’ போடவேண்டியது தான்.)
*
தேடினேன். தேடினேன். விழுந்தடிச்சுத்தேடினேன். கிடைத்த ஒரே நிழலாதாரம்:
[‘ஆண்டாள் என்னும் ஸ்திரி இருந்ததேயில்லை. நாலாயிரம் பிரபந்தத்தில் ஆண்டாள் பாடியதாகச் சொல்லப்படும் பாசுரங்கள் அவர் பாடியவையல்ல; பெரியாழ்வார் என்னும் ஆழ்வார் சில பாசுரங்களைப் பாடி, அப்பாசுரங்களை ஆண்டாள் என்னும் ஒரு பெயரால் வெளிப்படுத்தினார்’’ என்று திரிவேணி என்னும் மாதப் பத்திரிகையில் 1946 செப்டம்பர் இதழில் எழுதியிருக்கிறாரே! 

மயிலாடன் அவர்கள் 22-12-2009 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை]

பார்ப்பன துவேஷம் பரப்பும் சில இதழ்களில், மேற்படி ஈயடிச்ச/அடிக்காத காப்பி. திரிவேணி கிடைக்கவில்லை. தேவ்ஜி? பொள்ளாச்சி நசன்?
இனி நான் ஓஹோ என்று தேடப்போவதில்லை. ஏனெனில், ராஜாஜி அப்படி சொல்லியிருந்தால் கூட மயிலாடன் சொல்வது சரியல்ல. கிரேக்க தொன்மை அடி படவில்லை. ராஜாஜி சொன்னது கிடைத்தால், கொடுங்கள். அவருடைய அணுகுமுறையை அறிவதும் நலனே.
இன்னம்பூரான்
21 09 2011

Geetha Sambasivam Thu, Sep 22, 2011 at 5:36 AM

ஐயா, கூகிள் புக்ஸில் ஏதோ ஒரு புத்தகத்தில் கிடைத்தது முன்னே, என் நண்பர் ஒருவர் எனக்காக அதைத் தேடிக்கொடுத்தார்.  மீண்டும் அவரையே கேட்டு சுட்டியை வாங்குகிறேன்.  ஆங்கில மூலம் என எண்ணுகிறேன். நன்றி.
2011/9/22 Innamburan Innamburan <innamburan@gmail.com>
ஏழு மணி நேரம் முன்னால்:


பார்ப்பன துவேஷம் பரப்பும் சில இதழ்களில், மேற்படி ஈயடிச்ச/அடிக்காத காப்பி. திரிவேணி கிடைக்கவில்லை. தேவ்ஜி? பொள்ளாச்சி நசன்?
இனி நான் ஓஹோ என்று தேடப்போவதில்லை. ஏனெனில், ராஜாஜி அப்படி சொல்லியிருந்தால் கூட மயிலாடன் சொல்வது சரியல்ல. கிரேக்க தொன்மை அடி படவில்லை. ராஜாஜி சொன்னது கிடைத்தால், கொடுங்கள். அவருடைய அணுகுமுறையை அறிவதும் நலனே.
இன்னம்பூரான்
21 09 2011


[Quoted text hidden]

Geetha Sambasivam
திரு இன்னம்புராருக்கு,

நண்பர் உடனடியாகச் சுட்டியை அனுப்பிக் கொடுத்திருக்கிறார்.  தாங்கள் பார்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன். இது குறித்து 2007-ல் வேறொரு குழுமத்தில் நடந்த மடலாடலின் போது இந்தச் சுட்டியை எனக்குக் கொடுத்தார். நான் தவற விட்டுவிட்டேன். கீழே நண்பரின் மடல்:
**********************

கூகிளும் ஜீமெயிலுமே துணை :)
--------------
தங்கள் மடலைக் கண்டபின்னே ராஜாஜி அவ்வாறு கருதினார் என்று அறிகிறேன். வழக்கம்போல் "கூகிள் இருக்கப் பயம் ஏன்" என்று தேடியதில், இந்த http://www.ibiblio.org/sripedia/ramanuja/magazine/RD_0103_online_vers.pdf சுட்டியி
ல் ராஜாஜி அவ்வாறு கருதியதைச் சுட்டுகிறார்கள். (3-ம் பக்கத்தில் காணலாம்).

[Quoted text hidden]

Nagarajan Vadivel 
ஒரு சமயம் மனித வளர்ச்சி பற்றி கிழக்கும் மேற்கும் என்ற வகுப்பு அமெரிக்க மாணவர்களுக்கு.  நிறையத் தகவல் திரட்டினேண்.  மனித வளர்ச்சி மேலை நாட்டுச் சிந்தனைகள் இன்று உலகளவில்.  கீழைச் சிந்தனைகள் குடத்திலிட்ட விளக்கு
.
செக்ஸ் அல்லது பானுணர்வை உள்ளக் கிடக்கையாக உளவியல் கருத்துருவாகச் சொன்னவர் சிக்மண்ட் ஃப்ராய்ட்

பிற்க்கும்போதே அவனுக்குப் பாலுணர்வும் பிறக்கிறது.  அவன் தாயைக் காமுறுகிறான் (மனத்தளவில்).  குமுகம் அவன் வளர வளர அவன் காமுறுதலுக்கு ஒரு எல்லைக் கோட்டைப் போடுவதால் அவன் மனம் பிறழ்கிறது என்று சொல்லுவார்.  இது பலராலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை

அவருக்குப் பின் கார்ல்.ஜி.யுங் என்ற ஜெர்மன் உளவியல் அறிஞர் இந்தியாவுக்கு வந்து கோனார்க் கோயிலைச் சுற்றிப்பார்க்கச் சென்றபொது கோவில் பிரஹாரத்திலும் கர்ப்பக் கிரஹத்துக்கு முன்னும் பாலுணர்வைத் தூண்டும் சிலைகளையும் காமக் களியாட்டக் காட்சிகளையும் சிலையாக வடித்துவைத்துள்ள இந்து மதத்தை என்ணி வருந்தியபோது உடனிருந்த ஆசிரியர் ஒருவர் இந்தக் காட்சிகள் கோவிலுக்கு வருபவன் சிவப்பு விளக்குப் பகுதிக்ள் இருப்பதாக எச்சரிக்கிறது.  மனம் என்பது போராட்டக்களம்.  கனந்தோரும் காட்சிகள் மாறும் சரியான காட்சிகளை மனதில் நிறுத்தப் பக்குவம் வேண்டும்.  கடவுளை நினக்கும் மனத்தில் உடலுறவு சார்ந்த காட்சிகள் நிற்கக்கூடாது. கடவுளை நினைக்க அவன் மனம் பக்குவப்படவே இந்த எச்சரிக்கைமணி என்று குறிப்பிட்டதாகவும் அந்த விளக்கம் அவர் கண்ணைத் திறந்ததாகம் எழுதியிருக்கிறார்

காமம் என்பது மனித இயல்பு மனக்காட்சிகள் குழந்தைப் பருவத்திலிருந்து முதுமை வரை (அறுபதிலும் ஆசை வரும்) கனம்தோரும் தோன்றும் காமக் காட்சிகள் உயர் சிந்தனைக்குத் தடையாக இருக்கும் என்று சொல்லப் பட்டது

மாஸ்லோ என்ற மற்றொரு உளவியல் அறிஞர் செக்ஸ் என்பது மனிதனின் அடிப்படைத் தேவை அத்தேவை முழுமை பெறாமல் அவன் உயர் தேவைகளான் தன் பூரணத்தைத் தான் அறிதல் நிலைக்குச் செல்லமுடியாது என்று குறிப்பிடுகிறார்
உடல் சார்ந்த காமம் ஒரு தேவை மிருகங்களுக்கு ஆண்டில் ஒரு குறிப்பிட்ட பருவகாலமே உகந்தது என்று இயற்கை அமைத்ததற்குமாறாக் மனிதன் மட்டும் எப்போது வேண்டுமானாலும் பாலுறவு கொள்ளலாம் என்ற இயற்கை நியதி அவன் பூரண்மடைவதற்கு ஒரு தடைக்கல் என்று குமுகம் கருதியது.
அறுபதிலும் பாலுறவு கொள்ளமுடியும் என்றாலும் அது அவன் உயர் தேவைகளுக்குத் தடைக்கல்லாக இருக்கும் என்று கருதிய குமுகம் சில கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கியது

இந்தியாவில் வேத வளங்களில் காமத்திற்கு ஒரு சிறப்பான இடம் உண்டு.  வத்ஸாயனர் காமச் சூத்திரம் ஒரு தோறோரியல் கல்லூரி.  குடும்ப வாழ்க்கையில் செக்ஸ் முழுமையாக அனுபவிக்காத மனம் பெரிய ஞானி ஆனாலும் (நித்யானந்தாசாமி ஆனாலும்) உயர் தேவைகளை முழுமையாக அடைய முடியாது என்று சொல்லி நால்வகை வர்ணப்பிரிவை  வர்ணாஸ்ரம தர்மமாகக் குமுகம் நிலை நாட்டியது. 

குடும்ப வாழ்க்கையில் சிற்றின்பத்தில் திளைத்து அந்த ஆசை அறுத்தபின் மேல்நிலைச் சிந்தனைக்குச் செல்வதே இந்திய வாழ்வியல் மரபு.  இந்தியா சிற்றின்பத்துக்கு என்றும் கத்திரி போட்டதில்லை.  மனம் சார்ந்த காம உணர்வைக் கொல்லவும் முடியாத கட்டுப்படுத்தமுடியாத மனிதன் காம உணர்வை சப்லிமேஷன் உயர்நிலைக்கு எடுத்துச் சென்று உடல்சாராத காமத்தை பக்தியாக இறைவனை நாயகனாக்கித் தன்னை நாயகியாக்கிக் கொண்டான், 
வைணவத்தில் இறைவன்  என்றும் நாயகன் அவனை நினைக்கும் வெளிப்படுத்தும் நுண்ணிய உணர்வுகள் பெணுணர்வாகவே (ஆண்டாளும் அடக்கம்) வெளிப்படுத்தப்பட்டுளது.
இறைவனை மனக்கண்ணில் பென்ணாக நினைத்து உணர்வுகளை வெளிப்படுத்தும் மற்ற சமயங்கள் பெண்ணின் அங்கங்களை எண்ணும்போது அதைச் சிற்றின்ப வடிகாலாக எண்ணுவதில்லை.  அது பேரின்பத்துக்கான வாயிலாகவே எண்ணுகிறார்கள்.  இந்தியனுக்குக் காம உணர்வு தொட்டிலில் இருந்து சுடுகாடு மட்டும் (ஒப்பாரிப் பாடல்களிலும் காமம்) இருக்கும்.  ஆனால் சிற்றின்பச் சாயல் ஒரு கட்டத்தில் நிறைவுபெற்று மறைந்து பேரின்பத்துக்கான எண்ணம் காமம் கலந்து நிலவுவதே இந்திய தமிழ் மரபின் சிறப்பு
நாகராசன்
[Quoted text hidden]

DEV RAJ 
‘ஆண்டாள் என்னும் ஸ்திரி இருந்ததேயில்லை. நாலாயிரம் பிரபந்தத்தில்
ஆண்டாள்
பாடியதாகச் சொல்லப்படும் பாசுரங்கள் அவர் பாடியவையல்ல; பெரியாழ்வார்
என்னும்
ஆழ்வார் சில பாசுரங்களைப் பாடி, அப்பாசுரங்களை ஆண்டாள் என்னும் ஒரு
பெயரால்
வெளிப்படுத்தினார்’’

இதற்கான தேவை என்ன ?
நம்மாழ்வார் தாமே நாயிகா பாவத்தில் பாடியுள்ளார்;
ஒரு பெண் பாத்திரத்தை ஸ்ருஷ்டிக்கவில்லை.
பெரியாழ்வாரும்  புதிய பாத்திரம் ஒன்றைப் படைக்காமல்
இதைப் பின்பற்றுவதில் என்ன தடை இருந்திருக்க முடியும் ?



தேவ்

On Sep 22, 12:39 am, Innamburan Innamburan <innambu...@gmail.com>
wrote:
[Quoted text hidden]
[Quoted text hidden]

Innamburan Innamburan Thu, Sep 22, 2011 at 10:19 AM
To: mintamil@googlegroups.com
Many thanks, Geetha,
An excellent Vaishnavite resource, this is also a secondary source. Unless you see the exact quote and the context, it is not possible to get at the drift of what Rajaji wishes to convey.
Regards,
Innamburan

Thiagarajan Salem 
True
Here , in India, the Family life [ the present way of living ] may not
be based on true love.
I also feel that many family people are "living together" and not
"loving each"
corruption is one of the out come of this " lack of love".

Also we never teach to the kids on "How to manage Money " , "How to
manage Love ", "How to manage sex "
We mostly teach "How to be obedient " and "How to maintain status "


hope this will change in coming years

thiagu


விஜயராகவன் 
On Sep 21, 8:30 am, seshadri sridharan <sseshadr...@gmail.com> wrote:
>  Discourses on the Soundaryalahari
>
>  BHAGAVADPADA SANKARA'S SOUNDARYALAHARI: An exposition by Sri
>  Chandrasekharendra Saraswati Swamigal of Kanchi Kamakoti Peetam;
>  Bharatiya Vidya Bhavan, Kulapati Munshi Marg, Mumbai-400007. Rs. 600.
>
>  The sage deals with the intriguing reference to "Dravida sisu'' in the
>  poem. He points out very gently that it could hardly be a reference to
>  the 6th century A.D. saint Gnanasambandar.
>
>  The reference here is to Sankara himself, who as Lakshmidara points
>  out as deputising for his father at the family temple to the Devi.
>
>  This is further confirmed by a hymn discovered by the scholar, Dr. C.
>  R. Swaminathan
> இந்த  கருத்தை  தமிழ்த் தேசியர்கள் ஒப்புக் கொண்டு விட்டனர் என்பதுடன்
> அல்லாமல் உண்மையில் திராவிட என்ற சொல் பிராமணர்களையே குறிக்கின்றது


நீங்கள் சொல்வது சரிதான்

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=1660:2009-12-15-01-44-34&catid=961:09&Itemid=213
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=3405&Itemid=139
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=5873:-3&catid=1020:10&Itemid=287
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=8988:------4&catid=1110:10&Itemid=380
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=9701:----5&catid=1137:10&Itemid=402
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=11099:----7&catid=1187:10&Itemid=449



http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=14845:2011-05-27-14-44-27&catid=1325:162011&Itemid=148


விஜயராகவன்
[Quoted text hidden]

seshadri sridharan
நானும் த செயராமன் பெயரைக் குறிப்பிடலாம் என்றிருந்தேன் ஆனால் இழை மேலும் வளர்ந்தால் குறிப்பிடலாம் என்று விட்டுவிட்டேன். இதற்கு பெரியார் திராவிடர்க் கழகத்தில் இருந்து தான் எதிர்ப்பு வந்துள்ளது. மற்ற பிற தாய்க் கட்சிகள் இச்செய்தியில் அடக்கி வாசிக்கின்றன. ஏனென்றால் ஒரு ஆரியத் தலைவியே அதன்  ஒரு கிளைக்கு தலைமை தாங்குகின்றார் என்பதால். 
திராவிட இயக்கங்கள் தம் கொள்கையில் நீர்ததுப் போய்விட்டன என்பது  தமிழ்த் தேசியரின்  பேச்சு.
 
சேசாத்திரி
[Quoted text hidden]

No comments:

Post a Comment