Saturday, October 5, 2013

UPDATE 18 10 2013:விஷ்ணம்பேட்டை முத்துரங்கையர் சுப்ரமணிய ஐயர்:அன்றொரு நாள்: அக்டோபர் 6:II


  • UPDATE 18 10 2013

UPDATE 10 10 2013

அன்றொரு நாள்: அக்டோபர் 6:II விஷ்ணம்பேட்டை முத்துரங்கையர் சுப்ரமணிய ஐயர் (04 06 1905 ~ 06 10 1981)


Innamburan Innamburan Tue, Oct 18, 2011 at 11:43 PM

அன்றொரு நாள்: அக்டோபர் 6:II
விஷ்ணம்பேட்டை முத்துரங்கையர் சுப்ரமணிய ஐயர் (04 06 1905 ~ 06 10 1981)
என் உள்மனதுக்குள் புகுந்து, வளரும் வயதில், என்னை ஆக்ரமித்த சிந்தனையாளர்: மைக்கேல் எய்க்வெம் தெ மாந்தேய்க்னெ (Michel Eyquem de Montaigne: 1533 ~1592).கட்டுரை இலக்கியத்தின் தலைமாந்தர், அவர். அவருடைய கட்டுரை தொகுப்பில் போர்தே பதிப்பு: 1588ம் ஒன்று. அதன் பிரதி ஒன்றில் அவருடைய குறிப்புகள் பல. அவற்றை எல்லாம் ஆய்வு செய்வதில் வந்த பிரச்னை ஒன்று, அவர் காலத்துக்கு சில நூற்றாண்டுகளுக்கு பிறகு மடியும் நிலையில் இருந்த பிரதியை சரி செய்யும் போது, சில குறிப்புக்கள் சிதைந்திருக்கலாமோ என்ற கவலை. சுவையான, நமக்கு பாடம் போதிக்க வேண்டிய தகவல்கள் பல. தருணம் வந்தால் சொல்கிறேன். ~ சிறந்த ஆய்வுக்கு பிறகு ஒரு அருமையான பதிவு வருவதற்குள் அவருடைய 400 வது ஆண்டு விழா வந்து விட்டது 1933ல்!இது நிற்க.
1588 ல் ஃப்ரென்ச் இலக்கிய/இலக்கிய ஆய்வு/ மரபு பராமரிப்பு ஆகிய அணுகுமுறைகள் எங்கே? 2011ல் தமிழகத்தில் நான் காணும் அவமானங்கள் எங்கே? நாற்பதே வருடங்களுக்கு முன்னால், தன்னுடைய இறுதி நாளையும் தமிழுக்கு அர்ப்பணித்த விஷ்ணம்பேட்டை முத்துரங்கையர் சுப்ரமணிய ஐயர் (வி.எம்.எஸ்.) அவர்களையும், அவரை போன்ற புலவர்கள், வித்வான். வி.பூவராகம் பிள்ளை, வித்வான்.கே.சுந்தரமூர்த்தி ஐயர், வித்வான் டி.பி. பழனியப்பப்பிள்ளை ஆகியோரை தமிழ் இலக்கிய ‘அறங்காவலர்கள்’ மறந்து போனதையும், அவர்களின் படைப்புகளை தொலைத்ததையும், அதே கதி புதுமை பித்தனிலிருந்து கணக்கற்ற தமிழ் செல்வர்களுக்கு அதோ கதியாக அமைந்தததையும், எங்கே சொல்லி அழுவேன்? இப்படித்தான், என்றோ ஒரு நாள்,மின் தமிழில் சேர்ந்த புதிதில், ஒரு நாள் ஸுபாஷிணியும், நானும், வித்வான் மு. ராகவையங்காரை பற்றி நாம் அறிந்தது கொண்டது எவ்வளவு குறைவு என்று அங்கலாய்த்துக்கொண்டு இருந்தோம்.  கண்ணுக்கெதிரே, புத்தகங்களும், புலவர்களும், ஓலைச்சுவடிகளும் மடிந்து போகின்றன. இந்த நிலையையும், இடைச்செருகல்களையும், ‘அபேஸ்’ அபகரிப்புகளையும் கைவிட்டு விட்டு, தொல்காப்பியர் காட்டிய வழியில், உண்மையாக, மனசாக்ஷிக்கு ஹிதமாக, என்று தான் தமிழன்னையை வணங்கப்போகிறோம்? உலக புலவர் மன்றங்களில் என்று நல்ல பெயர் எடுக்கப்போகிறோம்?
அப்படி என்ன செய்து விட்டார், வி.எம்.எஸ்? விடை காண ஃபிரான்ஸ் போகவேண்டும். ஆம். 1970 களிலிருந்து தனது மரணம் வரை, வி.எம்.எஸ் அவர்களால் 3500 பக்கங்களில், ஆங்கில மொழி பெயர்ப்புடன், தலைமுறை வழிமுறையில், வடிக்கப்பட்ட வாழ்நாள் சாதனை: தேவாரம். தமிழ்க்கடல் தி.வா. கோபால ஐயர் அவர்களின் வழி காட்டலுக்கு இணங்க,மின் தமிழர் ழான் (Jean-Luc Chevillard) அவர்களும், முனைவர் எஸ். ஏ.எஸ். சர்மா அவர்களும் ஜூலை 1997லிருந்து கிட்டத்தட்ட பத்து வருடங்கள் கடுமையாக உழைத்து டிஜிடல் தேவாரம் என்ற சீ.டி. தயார் செய்தார்கள். அதெற்கெல்லாம் நிதியுதவி, இடம் கொடுத்த அன்னை இல்லங்கள்:INSTITUT FRANÇAIS DE PONDICHÉRY & ÉCOLE FRANÇAISE D'EXTRÊME-ORIENT. உசாத்துணை தளத்தில் நன்றி நவிலல் பகுதியில், எத்தனை வெளி நாட்டு தமிழ் புலவர்கள் என்று நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்.
திரு. வி.எம்.சுப்ரமண்ய ஐயர் (வி.எம்.எஸ்.) அவர்களுக்கு அக்டோபர் 6ம் நாளே அஞ்சலி செலுத்தியிருக்கவேண்டும் என அறிந்தேன், தாமதமாக. நல்லது பேச, நாள் பார்ப்பானேன், என்று அவருக்கு இன்று அஞ்சலி செலுத்துகிறேன். அவரை பற்றி மேலும் எழுத வேண்டும். இன்று இருக்கும் மனவலியில் மேலே எழுதமுடியவில்லை. நாளை தொடர அனுமதியுங்கள்.
(தொடரும்)
இன்னம்பூரான்
18 10 2011
உசாத்துணை:




VMS jpg.pages
722K
(தொடரும்)
06 10 2013

Geetha Sambasivam Wed, Oct 19, 2011 at 12:09 AM

அறிந்திராத தகவலைக் கொடுத்தமைக்கு நன்றி ஐயா.  இவர்களைப் போன்றவர்களே தமிழுக்கு உண்மையான சேவை செய்கின்றனர்.  அமைதியான ஆர்ப்பரிப்பு இல்லாச் சேவை.
2011/10/18 Innamburan Innamburan <innamburan@gmail.com>

அன்றொரு நாள்: அக்டோபர் 6:II

விஷ்ணம்பேட்டை முத்துரங்கையர் சுப்ரமணிய ஐயர் (04 06 1905 ~ 06 10 1981)


Dhivakar Wed, Oct 19, 2011 at 10:42 AM


>>அப்படி என்ன செய்து விட்டார், வி.எம்.எஸ்? விடை காண ஃபிரான்ஸ் போகவேண்டும். ஆம். 1970 களிலிருந்து தனது மரணம் வரை, வி.எம்.எஸ் அவர்களால் 3500 பக்கங்களில், ஆங்கில மொழி பெயர்ப்புடன், தலைமுறை வழிமுறையில், வடிக்கப்பட்ட வாழ்நாள் சாதனை: தேவாரம். தமிழ்க்கடல் தி.வா. கோபால ஐயர் அவர்களின் வழி காட்டலுக்கு இணங்க,மின் தமிழர் ழான் (Jean-Luc Chevillard) அவர்களும், முனைவர் எஸ். ஏ.எஸ். சர்மா அவர்களும் ஜூலை 1997லிருந்து கிட்டத்தட்ட பத்து வருடங்கள் கடுமையாக உழைத்து<<


இப்படிப்பட்ட செய்திகள் வெளியுலகம் காணாமலே போகிறது என்பது வேதனைக்குரியதான செய்தி. இன்னம்பூரார் இதனைப் போன்று பல செய்திகளை வெளிக்கொணர்வது மிகவும் பாராட்டுதலுக்குரிய செயலாகும். தன்னலம் கருதாத இன்னம்பூராரின் இந்தச் செய்லகள் மூலம் எத்தனையோ தன்னலமற்ற முன்னோர்கள் தெரியவருகிறார்கள்.

இந்தச் சமயத்தில் இன்னொரு தன்னலமற்றவரான திரு மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்கள் இன்று தேவாரம் தளத்தை பல்லாயிரக்கணக்கான மக்கள் தினமும் பார்க்கும் வகையில் கொண்டு வந்திருப்பதை நினைவு கூறுகிறேன். தேவாரம், திருமுறைப் பாடல்களோடு, ஒவ்வொரு பாட்டுக்கும் பொழிப்புரை, குறிப்புரை, மற்ற மொழிகளில் மொழிமாற்றம் இவை அத்தனையும் ஒரே தளத்தில் கொண்டு வருவது எத்தனை அரிய செயல்!

மற்றவர்களுக்காகவே இந்த அரிய தொண்டு என்பதை அடிக்கடி நினைவு பார்த்துக் கொள்கிறேன்.

திவாகர்
*
அப்டேட் 1:
என் கட்டுரை ஒரு அறிமுகமே. இந்த மாமனிதரை பற்றி அறிய இந்த லின்க் படிக்கவும்:
"http://www.ifpindia.org/ecrire/upload/digital_database/Site/Digital_Tevaram/INDEX.HTM"

அதை இங்கு பதிவிட அனுமதி அளித்த Jean-Luc Chevilliard & EFEO நன்றி. இழை தொடரும். எழுத பல விஷயங்கள் உளன.
இன்னம்பூரான்.
06 10 2013
*****

அண்மையில் நான் பாண்டிச்சேரி சென்றிருந்தேன். EFEO எனப்படும் ஃப்ரென்ச் ஆராய்ச்சி மையத்தில் உலகின் பல நாடுகளிலிருந்து வந்த தமிழ்ப்புலவர்களுடன் பழகும் பாக்கியம் எனக்குக்கிடைத்தது. எல்லோரும் தமிழமுதம் பருகினோம். பாண்டிச்சேரியில் மூன்று அருமையான நூலகங்கள் உள்ளன. ரோமைய்ன் ரோலா நூலகத்தில் வேறு எங்கும் கிடைக்காத தமிழ்/ஆங்கில/ ஹிந்தி நூல்களும், IFP எனப்படும் ஃப்ரென்ச் ஆராய்ச்சி மையத்தில் பலதுறைகளை சார்ந்த எண்ணற்ற புதிய/பழைய நூல்களும், EFEOவில் எங்கும் கிடைக்காத சுவடிகளும், பழைய நூல்களும், இதழ்களும், இரு இடங்களிலும் லக்ஷக்கணக்கான அரிதிலும் அரிய நிழற்படங்களும் காணக்கிடைத்தன. அத்தருணம் விஷ்ணம்பேட்டை முத்துரங்கையர் சுப்ரமணிய ஐயர் (04 06 1905 ~ 06 10 1981) அவர்களின் தேவாரப்பணி ("http://www.ifpindia.org/ecrire/upload/digital_database/Site/Digital_Tevaram/INDEX.HTM") பற்றி நான் அறிய விழைந்தது வியப்புக்குரிய விஷயம் அல்ல. அது சம்பந்தமான ஆய்வு/பணி பொருட்டு அவரும், முனைவர் ழான் ல்யூக் ஷெவாலியே அவர்களும், முனைவர் எஸ்.ஏ.எஸ்.சர்மா அவர்களும் கடுமையாக உழைத்ததும், அந்த மையங்கள் அளித்த ஊக்கமும், தமிழன்னைக்கு பெருமை சேர்க்கும் ஒரு தேவார பதிப்பு பிரசுரமானது நம் கொடுப்பினையே. அதை பார்வையிடும் போது, முனைவர் ழான் ல்யூக் ஷெவாலியே அவர்களும், முனைவர் எஸ்.ஏ.எஸ்.சர்மா அவர்களும் எனக்கு மிகவும் உதவினார்கள். அத்தருணம் கிட்டத்தட்ட இரு வருடங்கள் முன்னால் (அக்டோபர் 19, 2011) முனைவர் ழான் ல்யூக் ஷெவாலியே அவர்கள் எனக்கு அனுப்பிய தனிமடல் ஒன்று நினைவுக்கு வந்தது. அதில் அவர் நம்மிடம் பரவலாக நடைபெறும் ‘வெட்டி ஒட்டும்’ (ஈயடிச்சான் காப்பி) கலாச்சாரத்தைப் பற்றி விமர்சித்ததும் அது கொடுத்த மனவலியும் என் நினைவில் வந்ததால், அது பற்றி விசாரித்து, வியாகூலம் அடைந்தேன். விஷ்ணம்பேட்டை முத்துரங்கையர் சுப்ரமணிய ஐயர் அவர்களும், முனைவர் ழான் ல்யூக் ஷெவாலியே அவர்களும், முனைவர் எஸ்.ஏ.எஸ்.சர்மா அவர்களும், பற்பல வருடங்கள் உழைத்து, உழைத்துக் கொணர்ந்த தேவாரபதிப்பு (CD-ROM 
"DIGITAL TEVARAM"), தயக்கமின்றி சைவம் சார்ந்த ஒரு தேவாரமையத்தின் பொறுப்பாளரால், முன்னனுமதி பெறாமல், விஷ்ணம்பேட்டை முத்துரங்கையர் சுப்ரமணிய ஐயர் அவர்களை உதாசீனம் செய்யும் வகையில், எடுத்தாளப்பட்டது, இந்த ‘வெட்டி ஒட்டும்’ உத்தியால். பல கடிதங்கள் எழுதப்பட்ட பிறகு தான், ஆவன செய்யப்பட்டதாக எழுதியிருந்தார். இதனால் வெட்கி தலை குனிந்தேன், தமிழன் என்ற முறையில். 
விஷ்ணம்பேட்டை முத்துரங்கையர் சுப்ரமணிய ஐயர் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் போது, இதையும் நாம் ஒத்துக்கொள்ளவேண்டியது தானே நியாயம். காப்புரிமையையும், உசாத்துணை கூறும் பண்பையும் மறப்பது, தழிழுக்கு இழுக்கு என்பதால். இதை இங்கு கூறுவதற்கு, முனைவர் ழான் ல்யூக் ஷெவாலியே அவர்களின் முன் அனுமதி பெற்றுள்ளேன்.
இன்னம்பூரான்
10 10 2013 
*
Innamburan S.Soundararajan


அன்றொரு நாள்: அக்டோபர் 6:III விஷ்ணம்பேட்டை முத்துரங்கையர் சுப்ரமணிய ஐயர் (04 06 1905 ~ 06 10 1981):II

Innamburan Innamburan Wed, Oct 19, 2011 at 8:41 PM

அன்றொரு நாள்: அக்டோபர் 6:III
விஷ்ணம்பேட்டை முத்துரங்கையர் சுப்ரமணிய ஐயர் (04 06 1905 ~ 06 10 1981):II
சற்றே தேற்றிக்கொண்டேன். பேராசிரியர் நாகநந்தி அவர்களின் குடும்பமும், திரு.ஹரிகி போன்ற மாணவர்களும் சிரத்தை எடுத்துக்கொண்டதால் தான் அவருக்கு மணிமண்டபம் நிறுவப்பட்டது. அவரது படைப்புகள் பத்திரப்படுத்தப்பட்டன. இனியாவது நாம் யாவரும் இயன்றவரையில் நம் மரபுகளை அழிக்காமல் இருந்தால், நலம். போற்றி பாதுகாத்தால் நன்மை. ஆய்வுகள் பல செய்து நம் இலக்கிய அறிவின் தரத்தை உயர்த்தினால் மேன்மை. இடைச்செருகல்கள்/ இரவலுக்கு சொந்தம் கொண்டாடுவது/ஒருவர் படைப்பை உருவி போர்த்திக்கொள்வது போன்ற குற்றங்களை தவிர்த்தால், பட்டொளி வீசி பறக்கும், தமிழன்னையின் புகழ். தடையேதும் இருந்தால், சொல்லுங்கள். கூடி, விடை காண்போம்.
திரு. வி.எம்.சுப்ரமண்ய ஐயர் (வி.எம்.எஸ்.) அவர்களுக்கு வருவோம். நேற்று தொடர்பு லேசாக பிரிந்தது. குடமுருட்டி ஆறு, துள்ளலும், ஓட்டமுமாக, அசைந்தாடி வரும் திருக்காட்டு பள்ளி என்னும் பாடஸ்தலத்தில் பள்ளிக்கல்வி, அவருக்கு. தமிழ்த்தாத்தா என்று பிற்காலம் புகழப்பட்ட திரு. உ.வே.சா. அவர்களின் அறிமுகம் கிடைத்தது. அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் முன்னோடியான மீனாக்ஷி கல்லூரியில் தமிழில் (வடமொழி வினாத்தாள் ஒன்றும் உண்டு.) வித்வான் பட்டத்துக்குப் படிக்கச்சொல்லி, அவர் ஆலோசனை தந்தார். முதலிடம் பெற்ற வி.எம்.எஸ். அவர்களுக்கு  திருப்பனந்தாள் மடம் 1000 ரூபாய் பரிசு அறிவிக்க, அதை 1929ல் கும்பகோணம் போர்ட்டர் ஹாலில் நடந்த விழாவில், தலைமை தாங்கி உவேசா அவர்களே வழங்கினார். அந்த உயர்ந்த பரிசை பெற்ற முதல் மாணவன், திரு. வி.எம்.எஸ். இரண்டாமவர்: வித்வான். வி.பூவராகம் பிள்ளை ~ 1930 (என்னே அழகிய திருமண் நாமம்.): மூன்றாமவர்: வித்வான்.கே.சுந்தரமூர்த்தி ஐயர் ~ 1931: நான்காவது: வித்வான் டி.பி. பழனியப்பப்பிள்ளை ~ 1932: ஐந்தாவது: கி.வா.ஜகந்நாத ஐயர் ~ 1933. நமக்கு பொதுவாக, கி.வா.ஜ.அவர்களை பற்றியும், அவருடைய சிலேடையை பற்றி திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள் சொல்வதும் தெரியும். ஏதோ, தமிழன் செய்த பூர்வஜன்ம சாபல்யமாக,வி.எம்.எஸ். அவர்களின் புதல்வி நாகலக்ஷ்மியின் செவிவாய் செய்திகளை அடித்தளமாக வைத்து, ஃபிரான்ஸ் நாட்டு தமிழ் புலவர் ழான் - [Jean-Luc Chevillard]ம், முனைவர்  எஸ்.ஏ.எஸ். சர்மா அவர்களும் தராவிடில் திருவாசகத்தை ஆங்கிலத்தில் அருமையாக மொழி பெயர்த்த வி.எம்.எஸ். அவர்களை முற்றிலும் மறந்து இருப்போம். தமிழன்னை நம்மை மன்னித்திருக்கமாட்டாள். மற்ற மூவரை பற்றியும் செய்திகள் வந்தால் நல்லது. கூகில் தேடுபொறியில் அவர்களை பற்றி ஒரு தகவலும் இல்லை. எண்பது வருடங்களுக்குள், தமிழில் முதல் பரிசு வாங்கிய அறிஞர்களை பொது நினைவாற்றலிலிருந்து தமிழார்வலர்கள் தொலைத்து விட்டார்கள் என்று நேரடியாக குற்றம் சாற்றுகிறேன். இது நிற்க.
1929லிருந்து 1964 வரை சென்னை கிருத்துவக்கல்லூரியில் ஆசிரியராக பணி புரிந்த வி.எம்.எஸ். அவர்கள் 1930 ல் பி.ஓ.எல். பரிக்ஷை எழுதினார், திருவல்லிக்கேணியில், உவேசா அவர்களில் இல்லத்தருகே, வசித்து, அன்றாடம் அவருடைய ஆய்வுப்பணியில் உதவி வந்தார்; விடுமுறை காலங்களில் ஏடுகள் தேடும் பணியில் அவருடன் இணைந்து உழைத்தார். ஐந்து நூல்களின் அறிமுகத்தில், உ.வே.சா. அவர்கள் வி.எம்.எஸ்.பற்றி எழுதியிருக்கிறார். உவேசா நூலகத்துடன் அவருக்கு தொடர்பு இருந்தது. முர்ரே ராஜம் என்ற ஏலமிட்டு வணிகம் செய்த பிரமுகர், பழைய தமிழ் நூல்களை ஆராய்ந்து பதிவு செய்து ரூபாய் 1/- வீதம், கிட்டத்தட்ட இலவசமாக, விற்பனை செய்தார். என்னிடம் சில உளன. அவருக்கு உதவியாக வி.எம்.எஸ் இருந்ததாகத் தெரிகிறது. 1966ல் பாண்டிச்சேரி வந்தடைந்தார். INSTITUT FRANÇAIS DE PONDICHÉRY ஆதரவு அளித்தது.
அவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவை:
  1. அகநானூறு: 1975: மூன்று தொகுப்புகள்;
  2. தேவாரம்: 1976 -1984 15 தொகுப்புகள்
  3. 9வது -10வது திருமுறை - திரு. பி.பி.சேஷாத்ரி சொன்னது;
  4. 11வது திருமுறை - 2 தொகுப்புகள் தயாரான நிலையில் மறைவு; 3வது;
 தொகுப்பு: டி.வி.கங்காதரன்; 4 வது டி.வி.கோபால ஐயர்.
அவருடைய ஞாபகார்த்தக்கூட்டத்தில் பேராசிரியர் க்ராஸ் பேசிய உரையில் ஒலிப்பதிவு, உசாத்துணையில் உளது.
ரகசியமாக ஒற்றர்கள் சந்திக்கும்போது, ஒரே நூறு ரூபாய் நோட்டின் இரு துண்டுகளை பரிமாரிக்கொள்வார்களாம். அது மாதிரி, நேற்று இணைத்த அறிவிப்பின் கீழ் பாதியும், திரு.வி.எம்.எஸ் அவர்களின் விசால முகாரவிந்த சித்திரத்தைத்தையும், டிஜிடல் தேவாரத்தை பற்றிய ஒரு ஆய்வுத்க்ட்டுரையையும் இணைத்துள்ளேன். பொறுத்த்தாள்க.
This CD contains the Tamil text (PIFI text) [HTML format] of 798 patikam-s (=385+312+101) as it appears inside the 2 volumes of the Tēvāram edition (paṇ muṟai / பண்முறை) published by the French Institute of Pondicherry (IFP) under the guidance of T.V.Gopal Iyer and F. Gros:
Mūvar Tēvāram (vol. 1, Ñāṉacampantar), Publications de l'Institut Français d'Indologie (PIFI) 68-1, 1984
Mūvar Tēvāram (vol. 2, Appar and Cuntarar), Publications de l'Institut Français d'Indologie (PIFI) 68-2, 1985.
இன்னம்பூரான்
19 10 2011
உசாத்துணை

3 attachments
THEVAARAM 1.pages
198K
THEVARAM 3.pages
118K
THEVARAM 2.pages
830K


No comments:

Post a Comment