Saturday, March 30, 2013

அன்றொருநாள்: மார்ச் 31: பட்ஜெட்டும் ஃபிட்ஜெட்டும்!




அன்றொருநாள்: மார்ச் 31: பட்ஜெட்டும் ஃபிட்ஜெட்டும்!
5 messages

Innamburan Innamburan Fri, Mar 30, 2012 at 4:32 PM
To: mintamil , thamizhvaasal
Cc: Innamburan Innamburan

அன்றொருநாள்: மார்ச் 31:
பட்ஜெட்டும் ஃபிட்ஜெட்டும்!
பட்ஜெட் எல்லாருக்கும் ஃபிட் (விருப்பப்படி) ஆகாது என்பதால், ஃபிட்ஜெட் (அலுத்து, சலித்துக்கொள்வது) மக்களின் உரிமை; அறியாமையும் கூட. அம்பானிக்கு பிடித்த பட்ஜெட் சப்பாணிக்குப் பிடிக்காது. மக்கள் நலம் நாடும் அரசு எல்லா நெளிவு, சுளிவுகளையும், மனதில் கொண்டு, நீட்டி முழக்காமல், அமரிக்கையாக, நீண்ட கால நிதி கொள்கைகளை, மக்களை கலந்தாலோசித்த பின், பிரகடனம் செய்து, ஏற்புடைய திருத்தங்களை உட்படுத்தி, வருடாந்திர பட்ஜெட்டை அமைக்கும். பட்ஜெட் மக்களின் உரிமையை பிரதிபலிக்கும் கண்ணாடி: அது ஒரு மந்திரக்கோல் அன்று.
மக்களின் அனுமதியில்லாமல், அரசு வரி விதிக்கலாகாது என்ற உரிமையை நிலை நாட்டிய மாக்னா கார்ட்டா, பாஸ்டன் டீ பார்ட்டி போன்ற நிகழ்வுகள் தான் வருடாந்திர நிதி நிலை (பட்ஜெட்) அறிவிப்பின் அடித்தளங்கள். மக்களின் ‘நாமி’ ஆகிய பிரதிநித்துவ குடியரசு ‘பினாமி’யாக உரு மாறி, அதை மந்திரக்கோலாக பயன்படுத்தினால், மக்கள் விழிப்புணர்ச்சியுடன் அதை நோக்க வேண்டும். அதில் குறையும், நிறையும் காணவேண்டும். பட்ஜெட்டும், தணிக்கைத்துறையும், ஜெமினி சகோதரர்கள் மாதிரி, இரட்டைப்பிறவிகள். 150 ஆண்டுகளாக, வாழ்ந்து குப்பை கொட்டும் நூற்றுக்கிழவிகள். ஆனால், இருவரும் ஊதும் இசைப்பண்கள் வேறு. ஜனரஞ்சகம் வேண்டி, பற்றாக்குறை அரசு ‘கதன குதூகலம்’ ஆலாபனை செய்தால், விடாக்கொண்டன் தணிக்கை ‘கம்பீர நாட்டையில்’ சங்கதிகளை அவிழ்க்கும். ஒன்றை கேட்டு, ஒன்றை விட்டால், அபஸ்வரம் தான் ஒலிக்கும். 
மடலாடும் இணையதளங்களில், சான்றோர்கள், பண்பாளர்கள், மற்ற துறை வல்லுனர்கள், மெத்த படித்தவர்கள், சுய கருத்தை விளாசி வீசும் அபிப்ராயதாரர்கள், வலை களவாணிகள் ஆகியோர் கூறுவதையெல்லாம், கிடைத்தவரை தேடிப்படித்தேன். தெரிந்தது கடுகளவு. தெரியாதது மலையளவு. தெரிந்ததாக காட்டிக்கொள்வது! (சரி. வேண்டாம்...). ஒரு காரணம் அரசின் ஆட்சிமொழி. இந்திய நாட்டு பெருமக்கள், அரசாணை பற்றி அறிந்து, செயல்படக்கூடிய நிர்வாஹ தகவல்களை வெளிப்படையாக, எளிய முறையில் அளிக்கவேண்டும் என்பது என்னுடைய அணுகுமுறை. எனவே, மின் தமிழர்களே, தமிழ் வாசல் காப்போர்களே, தொடர்பில் இருக்கும் மற்ற நண்பர்களே! சாணக்யரின் ‘அர்த்த சாஸ்திரத்திலிருந்து‘ ஆரம்பித்து, முதல் முறையாக, ‘Old wine in a new bottle‘ என்ற வகையில் மத்திய அரசு ஸெப்டம்பர் 1, 2010 அன்று, வெளியிட்ட  ‘பட்ஜெட் கையேடு‘ வரை, அக்கு வேறு, ஆணி வேறாக அலசி, சில புதிய இழைகளை துவக்கலாம். அது என் மற்ற அலுவல்களை பாதிக்கும். குறைந்தது நூறு பேராவது ஆர்வம் தெரிவித்தால் தான், அந்த பேரிகையை, ஏப்ரல் 7, 2012 அன்று முழக்குவதாக உத்தேசம். இல்லையெனில், ஆரவாரம் இல்லாமல் வாளா இருந்து விடலாம், நான். வசதி எப்படி?
சரி, போதும், ஆளை விடுங்கள். இன்றைக்கு இதை பற்றி என்ன பேச்சு என்று கேட்பீர்கள், சிலர். ஆம், மார்ச் 31 அன்று, பட்ஜெட் அனுமதித்த செலவு திட்டங்கள் காலாவதி. எல்லா பணமும் ‘அரோஹரா’. சர்வதேவ நமஸ்காரோ கேஶவம் பிரதிகச்சதி. வெளியில் இறைத்தத் துட்டு எல்லாம், கஜானாவில் அடைக்கலம். ஏன் தெரியுமா? மக்களின் அனுமதி, நாடாளும் மன்றத்தின் வாயிலாக, ஒரு வருடத்துக்குத் தான் கொடுக்கப்பட்டது. அந்த கெடு மார்ச் 31 அன்று காலாவதி. இது மக்களாட்சியின் மரபு. அரசின் விதி. நாடாளுமன்றத்தின் ஆணை. தணிக்கைத்துறை ஒரு வாயில் காப்போனே.
அவனும் வருடா வருடம் கரடியா கத்றான். வருடக்கடைசியில் வாரி இறைக்காதே என்று. மாண்பு மிகு அரசு நிர்வாஹங்கள், புவி முழுதும், ஜோசியக்கலை வல்லுனர்கள் அல்ல. பல காரணங்களால், இத்தகைய காலாவதிகள் ஏற்படாமல் இருக்க வழிமுறைகள் உண்டு. அதையெல்லாம் விட்டு விட்டு, சித்தம் கலங்கிய சைத்தியம் போல், கன்னா பின்னா என்று சில துறைகள் ‘கை நிறைய கழுதை விஷ்டை’ (மலம்) வாங்குவார்கள். மான்யப்பணத்தை தெருவில் வீசுவார்கள். ஒப்பந்தக்காரர்களுக்கு கட்டாய அச்சாரம் கொடுப்பார்கள். சுணங்கிய பணத்தை வங்கிகளில் போடுவார்கள், கோடிக்கணக்கில். சிலர் பொய்க்கணக்கும் எழுதுவார்கள். சொன்னால் குத்தம். ‘நீ வாயில் காப்போன் தானே. நான் கொல்லைப்பக்கம் போய் அசிங்கம் செய்தால், நீ ஏண்டா! ஏன் கத்றே’ என்பார்கள். 
வர்ரேன்...’
இன்னம்பூரான்
31 03 2012
Demand for Grants –Expenditure required to be voted by the Lok Sabha.

பி.கு. இந்த தொடரை ஜூன் மாதம் 17ம் தினம் வரை இழுத்தடித்தால், ஒரு வருட பட்ஜெட் மாதிரி, கால அட்டவணையில். அது வரை, இதை குறிப்பிட்ட தினத்தன்று, ‘டாண்’ என்று நடு நிசியில் (இந்திய நேரம்) இடுகை செய்வதிற்கு பதிலாக, முடிந்த வரை, அவ்வப்பொழுது, பதிவு செய்வதாக, உத்தேசம். பொறுத்தாள்க. நான் மற்ற பணிகளுக்கும், படிக்கவும் நேரம் ஒதுக்கி விட்டேன்.

s.bala subramani Fri, Mar 30, 2012 at 4:39 PM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
 இத்தகைய காலாவதிகள் ஏற்படாமல் இருக்க வழிமுறைகள் உண்டு 

உங்களிடம் இருந்து எதிர் பார்க்கிறேன் 
நாளை இது தொடர்பாக தான் SKR ENGINEERING COLLEGE இல் மேலாண்மை மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க போகிறேன் 

இயற்கை மற்றும் கலாச்சார மேலாண்மை கல்வியின்  தேவைகள் 

மிக்க நன்றி 
காணொளி தயார் செய்யும் போது இடையில் படித்த இந்த கட்டுரை எனக்கு பயன் அளிக்கும் 

--

balarajan geetha Fri, Mar 30, 2012 at 4:52 PM
Reply-To: thamizhvaasal@googlegroups.com
To: thamizhvaasal@googlegroups.com
//  மத்திய அரசு ஸெப்டம்பர் 1, 2010 அன்று, வெளியிட்ட  ‘பட்ஜெட் கையேடு‘ வரை, அக்கு வேறு, ஆணி வேறாக அலசி, சில புதிய இழைகளை துவக்கலாம். அது என் மற்ற அலுவல்களை பாதிக்கும். குறைந்தது நூறு பேராவது ஆர்வம் தெரிவித்தால் தான், //
புதிய இழைகளை ஆர்வமுடன் வரவேற்கிறேன்.
----ரஜினிகாந்த் :-)
என்றென்றும் அன்புடன்,
பாலராஜன்கீதா


Nagarajan VadivelFri, Mar 30, 2012 at 5:06 PM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
//பட்ஜெட் எல்லாருக்கும் ஃபிட் (விருப்பப்படி) ஆகாது என்பதால், ஃபிட்ஜெட் (அலுத்து, சலித்துக்கொள்வது) மக்களின் உரிமை//
வருவாய்க்குள் செலவு செய்து கொஞ்சம் சேமிப்பும் வைத்துக்கொள்ளும் உத்தியைக் கைக்கொள்ளும் யந்திர தந்திர மந்திரம் தெரிந்த ஹோம் மினிஸ்டர்கள் நிதி அமைச்சர்களாக இருப்பதால் கோடிக்கணக்கான குடும்பங்கள் பொருளாதார மேலாண்மையில் சிறந்து வாழ்கிறார்கள்
குடும்ப அளவில் பற்றாக்குறை பட்ஜெட் செலவுகளைக் கட்டுப்படுத்துவதிலும் சேமிப்பிலும் சிறந்து விளங்குபவர்களிடம் தோல்வியைத் தழுவுகிறது
குடும்பத்தில் நிதியமைச்சரும்  ஆடிட்டரும் ஜெமினியின் குழல் ஊதும் இரட்டையர்கள்

http://www.youtube.com/watch?v=uS84Td_lwbU

நாகராஜன்


Sridharan Raghavan Sat, Mar 31, 2012 at 12:42 PM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
ஐயா, இப்போது எல்லாம் PERFORMANCE BUDGET  பற்றி கவலைப்படுவதில்லை. வெளியிலையும்  தெரிவதில்லை. பேசப்படுவதும் இல்லை. budget பற்றி மட்டும் பேசி தள்ளுகிறார்கள்.
performance budget ல் தான் ஒதிகீட்டில் செலவு செய்தது எவ்வளவு , பயன் என்ன என்பது இருக்கும். 
[Quoted text hidden]
[Quoted text hidden]

இதுவும் ஒரு பிருகிருதி: 2

Innamburan Innamburan Sat, Dec 18, 2010 at 5:23 PM
To: thamizhvaasal@googlegroups.com

இதுவும் ஒரு பிருகிருதி: 2

ஒரு கெத்துக்கு சொன்னேன், நாச்சியார் கோயில் என்று. பேரை சொன்னாலும் ஊரை சொல்லக்கூடாது. அதான் கோயில் திருமப்பள்ளி (சமையல் அறை) நச்சு இருக்கானே, அவன் ஒரு கேரக்டர். சன்னதிதெரு கோபாலாச்சாரியாத்து மாமி, மெனக்கெட, மூச்சு வாங்கிண்டு ஒரு நடை நடந்து, ‘நச்சு! நாளன்னிக்கு ரகு வராண்டா, ஷ்யாமுக்கு முடி இறக்க. திருக்கல்யாணத்துக்கு சொல்லியாச்சு, பட்டாச்சாரியர் மாமாட்டே. அக்காரவடிசல் தளிகை. ஜோரா பண்ணிட்றா’ ன்னு சொல்லிட்டு, ஜாமான்லாம் வாங்கிக்கொடுத்துட்டு, அச்சாரமும் அழுதுட்டு, பிரத்யேகமா அவனோடோ ஸ்னஃப் வாங்கறத்துக்கு, துட்டும் கொடுத்துட்டுப்போறா. சில்லரைக்காசு தான். ஆனா, மதிச்சுக்கொடுத்தாளேன்னு கவனமா பண்ணுவான் என்று சொல்லித்து, அந்த வேதாமாமியோட உளவியல். 

பாடா படித்துடுத்து பேரப்பய ஷ்யாம். கூடத்திலெ இருக்கிற நெல்லை வாரி இறைச்சான். பரியாரியோட கத்தியை பிடுங்கினான். எல்லாம் ஒரு பாடா ஆச்சு. மொட்டைத்தலைக்கு டெட்டாலும் தடவியாச்சு. சந்தனக்காப்பும் ஆச்சு. தாயாரையும், பெருமாளையும் நன்னா அலங்காரம் பண்ணி, விமரிசையா திருக்கல்யாணமும் ஆச்சு. குழந்தையும் தூங்கிப்போயிட்டான். ஊரே கூடியிருக்கு. ஆளுக்கு ஒரு தையல் இலையை வச்சிண்டு காத்துண்டிருக்கா; வினியோகம் ஆகப்போறது.

நம்ம நச்சு வர்ரான், அண்டாவை தூக்கிண்டு. தெரியாமாத்தான் கேக்கறேன்? வேஷ்டியில் எப்டி அத்தனை அழுக்கு ஏத்தீண்டான்? கசகசன்னு வேர்த்து விருத்து அவன் சாதிக்கச்ச ஏண்டா வந்தோம்னு ஆயிடும். அதெல்லாம் விடுங்கோ. அவன் பரிமாறினது தத்யோதனம்- தயிர் சாதம்! என்னத்தை சொல்றது, ஸ்வாமி? ஒரே நமுட்டு சிரிப்பு! கோபாலாச்சாரியாரா, ஆகாசத்துக்கும், பூமிக்கும் குதியா குதிக்கிறார். ரகுவுக்கும் கோபம் வரும். ஏதோ அருள் வந்தா ஆடுவாளே, அந்த மாதிரி, ஸைட்வாக்கிலே ஆட்றான். மாட்டுப்பெண் வைதேகி நைஸ்ஸா வத்தி வைப்பாள். எங்க அப்பா வந்துருந்தா, அவருக்கு எத்தனை அவமானம்னு கண்ணை கசக்கறா. வேதா மாமி, பாவம், அழுதே விட்டாள். 

இத்தனைக்கும், இந்த கலாட்டா எதுக்கு என்று நச்சுக்கு புரியல்லையே. அவன் பக்கத்து நியாயமும் கேக்கணுமே. 

ஒரு உரையாடல்:

மாமி: ஏண்டா! இப்டி பண்ணித்தொலைச்சே. உனக்கு நான் என்னடா பாவம் பண்ணேன்? [அழுகை பொங்கறது.]

நச்சு: என்ன ஆயிடுத்துன்னு அழறேள் மாமி? [கண்ணை தொடச்சுக்றான்.] திவ்யமா இருந்ததே திருக்கல்யாணோத்ஸவம். ஒரு சின்ன தப்பு ஆயிடுத்து. நேத்திக்கு ராமாஞ்சு தாத்தாவுக்கு திதி. அவர் பிள்ளை கோபால் பணம் கொடுத்துட்டுப்போனான், கொஞ்சமா; தயிர் சாதம் வினியோகம் பண்ணிடு, நான் வரத்துக்கில்லை என்று சொன்னான். ஏதோ மறதி. அக்காரவடிசல் பண்ணி சாதிச்சுட்டேன். எல்லாம் சப்பைக்கொட்டிண்டு சாப்ட்டதுகள். சாயரக்ஷைலே வந்து கூச்சல் போட்டான், அவா அப்பா இன்னும் பட்டினின்னு. சரின்னு இன்னிக்கு தயிர்சாதம் வச்சுண்டேன். ஏன் எல்லாரும் அலறரேள்? 

நச்சு புராணம் ரொம்பப்பெரிசு.

அப்டித்தான்! சிலபேரை திருத்தவே முடியாதுங்காணும்.
இன்னம்பூரான்
18 12 2010


Mohanarangan V SrirangamSat, Dec 18, 2010 at 5:27 PM
To: thamizhvaasal@googlegroups.com
Cc: Innamburan Innamburan
நச்சு,,,நச் :-)) 

அதை நீரோ பிச்சோ பிச்சு ;-)



LK Sat, Dec 18, 2010 at 5:32 PM
Reply-To: thamizhvaasal@googlegroups.com
To: thamizhvaasal@googlegroups.com
:))
[

GEETHA SAMBASIVAM Sun, Dec 19, 2010 at 12:54 AM
Reply-To: thamizhvaasal@googlegroups.com
To: thamizhvaasal@googlegroups.com
கண்ணெதிரே எல்லாம் நடந்தது.

2010/12/18 Innamburan Innamburan <innamburan@googlemail.com>
இதுவும் ஒரு பிருகிருதி: 2

அப்டித்தான்! சிலபேரை திருத்தவே முடியாதுங்காணும்.
இன்னம்பூரான்
18 12 2010



Natrajan Kalpattu NarasimhanSun, Dec 19, 2010 at 1:25 AM
Reply-To: thamizhvaasal@googlegroups.com
To: thamizhvaasal@googlegroups.com
நச்சுனு இருக்கு நச்சு புராணம்.



LK Sun, Dec 19, 2010 at 1:27 AM
Reply-To: thamizhvaasal@googlegroups.com
To: thamizhvaasal@googlegroups.com
//கண்ணெதிரே எல்லாம் நடந்தது. //

அப்ப நீங்கதான் வேதா மாமியா ??


Innamburan Innamburan Sun, Dec 19, 2010 at 1:49 AM
To: thamizhvaasal@googlegroups.com

திருமதி கீதா சாம்பசிவம் வெளியூர் செல்வதாக மற்றொரு இழையில்
எழுதியிருக்கிறார். எனவே எல்கேயின் கேள்விக்கு பதில் தாமதமாகலாம். எனக்கு
சில சமயங்களில் தீடீரென்று அசாத்ய துணிச்சல் வந்துடும். என்னத்தையாவது
எழுதி விட்டு... அப்றம் என்ன விருது தான்!

அந்த துணிச்சல் வந்துடுத்து. திருமதி கீதா சாம்பசிவத்துக்கு மென்மையான
ஸ்வபாவம். நான் ஏடாகூடமாக எழுதியிருந்தால் கூட, பெரிய மனசு வச்சு
விட்றூவாங்க என்ற தகரியம் தான்.
அவர் வேதா மாமி அல்ல. என்னுடைய பிருகிருதிகள் எல்லாரும் கற்பனை
பாத்திரங்கள் அல்ல. அன்றாடம், காலச்சக்ரத்தில் என் கண்கள் முன்னே
சுழன்றவர்கள், சுழல்பவர்கள். சொல்லப்போனால், வேதா மாமி ஸ்டோன் நைல் மாமி
மாதிரி. தீசல். அவளுக்கு ஒரு புராணம் பாடி விடலாம். எனவே, அவருக்கும்
திருமதி கீதா சாம்பசிவத்திற்கும் ஸ்னானபிராப்தி கூட கிடையாது.

இன்னம்பூரான்
2010/12/19 LK

LKSun, Dec 19, 2010 at 1:51 AM
Reply-To: thamizhvaasal@googlegroups.com
To: thamizhvaasal@googlegroups.com
இ அய்யா எனக்குத் தெரியும் . சும்மா கண்ணெதிரே நடந்தது என்றார்கள் அல்லவா அதற்கு கேட்டேன் :)

2010/12/19 Innamburan Innamburan <innamburan@googlemail.com>

[

MrRDin :-) Sun, Dec 19, 2010 at 4:55 AM
Reply-To: thamizhvaasal@googlegroups.com
To: thamizhvaasal@googlegroups.com
அருமை. 
[Quoted text hidden]

Mohanarangan V SrirangamSun, Dec 19, 2010 at 4:57 AM
Reply-To: thamizhvaasal@googlegroups.com
To: thamizhvaasal@googlegroups.com
தினேஷ் இருக்காரா? எங்க குரலே கேக்கல:-))

2010/12/19 MrRDin :-) <dinesh.rams@gmail.com>
[Quoted text hidden]
[Quoted text hidden]

shylaja Sun, Dec 19, 2010 at 5:24 AM
Reply-To: thamizhvaasal@googlegroups.com
To: thamizhvaasal@googlegroups.com
குட்டி டின்  இல்லையா அதான் அக்ண்ணூக்கு தெரில்ல....
இ சார் இழை அவரையும் இழுத்துட்டது! நன்றி  இ சாருக்கு

 
 அன்புடன்
ஷைலஜா
 
 


எல்லாம் அவன் செயல்.




எல்லாம் அவன் செயல்.
4 messages

Innamburan Innamburan Thu, Sep 13, 2012 at 10:27 PM
To: mintamil , thamizhvaasal , vallamai@googlegroups.com, தமிழ் சிறகுகள்

எல்லாம் அவன் செயல். 

இதற்கு ஆச்சரியக்குறி என்ன வேண்டிக்கிடக்கிறது? இன்று காலை நேரம் நெருக்கியது. அங்குமிங்கும் செல்ல வேண்டும். படிப்பதே இல்லை. கொஞ்சநாள் தமிழ்ப்பக்கம் போகவேண்டாம் என்ற பிரதிஞ்ஞை. முதலில் போகும் இடத்தில் காத்திருக்கும் வேளையில் படிக்கலாமே என்று ஒரு கையடக்கப் புத்தகத்தை எடுத்துச்சென்றிருந்தேன். அது என் பேத்தி குழந்தையாக இருக்கும்போது கதை சொல்ல உதவும் என்று 1998ல் எடுத்துச்சென்ற சுந்தரகாண்டம்: மிகவும் எளிய உரை. எடுத்தவுடனேயே சுபசூசகம். நன்நிமித்தம். இனிய சொற்கள். எனக்கு இது வரை தெரியாத சமாச்சாரங்கள். பிறகு தேடிய நூல்கள் கிடைத்தன. ஆனால் பிரிக்கவில்லை.

ஏனென்றால் சக்திதாசன் சுப்ரமண்யனின் ‘மகாகவி பாரதியார்: புதுமைக்கண்ணோட்டம்’ கிடைத்துவிட்டதே. (பேராசிரியர் உபயம்) 271 பக்கங்களையும் ஒரே மூச்சில் (பல பெருமூச்சுகளின் இடையில்) படித்து முடிக்க இராப்பொழுது முழுதும் கழிந்தது. படித்தால் மட்டுமானால், இத்தனை ஆயாசம் ஏற்பட்டிருக்காது. முன்னும் பின்னுமாக அலைந்தது மனம். நனவு பாதி; கனவு பாதி; நினைவு பாதி; கற்பனை பாதி. மோனமே முழுதும். எல்லாம் அவன் செயல். தோன்றுவதை எல்லாம் எழுத நாட்கள் பிடிக்கும். இப்போதைக்கு போட் மெயில் மாதிரி, பட்டதைச் சொல்லிவிட்டு, உங்களை விட்டு விடுகிறேன். பாரதியார் பார்க்க எப்படி இருப்பார் என்ற கேள்வி எழுந்ததாம். என் மனக்கண்ணில் வசிக்கும் பாரதியார்:
‘வந்தாரே அமானுஷ்யன்; 
சட்டையில் காலரில்லை; 
ஆனா டை கட்டி தொங்குதடா, 
சீமானே! மனம் போல் திறந்த கோட்டு, 
தோளின் மேல் சவாரி, 
நீலக்கலரிலே, ஐயா, சவுக்கம் ஒன்று.
முண்டாசு முடிச்சிருக்கான், கரை போட்ட துண்டாலே. 
அதற்கு வாலும் தொங்குதடா, ராச மவராசன் போல. 
எம்மாம் பெரிசு சோப்புக்கலர் குங்குமப்பொட்டு.
மீசையாவது, ஒளுங்கா, மன்மதனே, கத்திரிச்சிருக்கு. 
எத்தனை நாள் பட்டினியோ, தெய்வத்திருமகனே! 
கன்னமெல்லாம் ஏண்டாப்பா நசுங்கிப்போச்சு? 
உனக்கு வில்லியம் ப்ளேக் தெரியுமோடா? 
அவன் பாடின மாதிரி, புலிக்கண்ணோ உந்தனுக்கு? 
என் கண்ணெல்லாம் சுணங்குதும்மா; 
அப்படி ஜொலிக்கது உன்னோட கண்மலர்கள்!
மஹமாயி!  ஆதி பராசக்தி! 
அந்த மணக்குளத்து பிள்ளையாரே!
பாஞ்சாலி மானம் காத்தாய்! நீ
இவனுக்கு சேவகன் இல்லையாடா?
அதெல்லாம் சரி. 
அதென்ன ரயில் வண்டி புகை, ‘குப்’,குப்’னு?
ஓ! தொரை உரையூர் சுருட்டுத்தான் பிடிக்கிறாரு!’


இந்த சொந்த சாஹித்யம் ஏற்கனவே சொல்லப்பட்டது தான். சொல்லணும் போல இருந்தது, அவரை பற்றி படித்தவுடன். சொல்லி விட்டேன். திரு. சக்திதாசன் சுப்ரமண்யனுடன் அவர் கோகலேயை பற்றியும், ஃபெரோஸ்ஷா மேத்தாவையும், ஸுரேந்திரநாத் பானர்ஜீயையும் பற்றி சொன்னதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனாலும், விபின் சந்திர பால் அவர்களை பற்றி அவர் சொன்னது மிகக்குறைவு. அந்த மாமனிதன் சென்னை மக்களை மகுடிக்கு மயங்கிய அரவமாக மாற்றியதை பற்றி என்றோ நான் எழுதியதும் நினைவில் வந்தது. மஹாகவி, வ.உ.சி (பாரதியாரின் மருமான்), திரு.வி.க., வி.எஸ்.ஶ்ரீனிவாச சாஸ்திரிகள், பேராசிரியர் டி.எம்.கிருஷ்ணமாச்சாரியர் ஆகியோரை ஆட்டிப்படைத்துவிட்டார், இந்த வங்காளத்து வாமனரூப பள்ளியாசிரியர். அவருடைய “பாரதாமிருதம் ஜீவனம்” இன்றும் நம்மை கலங்கடிக்கிறது. இப்போது தான் “பாரதாமிருதம் ஜீரணம்” செய்கிறார்களே, பூமியையும், ககனத்தையும் குடைபவர்கள். இதையெல்லாம் எழுதணும் என்று கை நமநமக்கிறது. வலிக்கிறது. யார் யார் படிப்பார்களோ? பாரதியாரின் சேக்காளிகளுக்கு ஸ்வாமி விவேகாநந்தரின் நேரடி ஆசி உண்டே. அதை சொல்லவில்லையே என்று நினைத்தேன். அன்னை நிவேதிதாவிடம் பாரதியார் தீக்ஷை பெற்றது பற்றி எழுதியதை பார்த்து மகிழ்ந்தேன். பாரதிக்கு பதிலாக ‘இந்தியா’ இதழின் தீவிரத்திற்குத் தண்டனை பெற்ற பாமரன் எம்.ஶ்ரீனிவாசனின் கீர்த்தி தேடினேன். ஹூம்!

மயிலாப்பூர் வக்கீல்களை ஒரு பிடி பிடித்திருக்கிறார், பாரதியார், பாருங்கள். பிரமாதம். அல்லது கப்பலோட்டிய தமிழனின் கப்பல் கம்பெனி வரலாறு கச்சிதமாக வேணும் என்றால், பாரதியாரிடம் தான் போகவேண்டும். தணிக்கைத்துறை தோற்றது, போங்கள்! 27 05 1907 அன்றைய தேதியிட்ட இந்தியா இதழில் ‘வந்தே மாதரம்’ கொடியுடன் சுதேசி கப்பலின் சித்திரம். சூரத் அமளியை பற்றி பாரதியார் எழுதியதை நான் முதலில் படித்து எழுபது வருடங்கள் ஆயின. பசுமரத்தாணி. அந்த ‘சூரத்துச்சூறாவளி’ என்ற துண்டுப்பிரசுரத்தை இன்று, இந்திய மொழிகள் எல்லாவற்றிலும் மொழிபெயர்த்து, பாரதியார் ஸ்டைலில் ஒரு கோடி பிரதிகளை முகநூல் வழியாக பிரசுரித்தால், நம் லஞ்சலாவண்ய மகாபிரபுகள், தேசாபிமானத்துக்கு முன் தலை குனிந்து, துண்டைக்காணும், துணியைக்காணும் என்றோடி கடலில் வீழ்ந்து பிராணதியாகம் செய்து கொள்ளுவார்கள்.

இந்த் நூலில் பாரதியாரின் படைப்புகள் அதிக இடத்தை அடைத்துக்கொண்டது நல்லதாக போயிற்று. நமக்கு அருமையான உண்மை வரலாறு கிடைத்திருக்கிறதே. பாரதியாரின் நகைச்சுவைக்கு ஒரு உதாரணம் கொடுத்து விட்டு, முடித்து விடுகிறேன். எத்தனையோ சொல்ல வேண்டியிருக்கிறது, மறதியால் அவதிப்படும் பெரியவர்களுக்கும், நமக்குள்ளும், வருங்கால சந்ததிக்கும். கேட்டால் பார்க்கலாம். சுதேசி ஶ்ரீ குருசாமி அய்யர் பெரிய வக்கீல் அவர் ‘இந்த க்ஷத்திரிய நடையையும், க்ஷத்திரியப் பார்வையையும் எப்படி பெற்றார் என்று எனக்கு புரியவில்லை’ என்று அவரை கேலி செய்கிறார்....
இன்னம்பூரான்
13 09 2012

Innamburan Innamburan Thu, Sep 13, 2012 at 10:27 PM
To: mintamil , thamizhvaasal , vallamai@googlegroups.com, தமிழ் சிறகுகள்
Cc: Innamburan Innamburan
Bcc: innamburan88 , anantha narayanan nagarajan , renuka rajasekaran , Gayatri Ramakrishnan
[Quoted text hidden]

கி.காளைராசன் Fri, Sep 14, 2012 at 2:37 AM
To: mintamil@googlegroups.com
Cc: thamizhvaasal , vallamai@googlegroups.com, தமிழ் சிறகுகள் , Innamburan Innamburan
ஐயா ‘இ‘னா அவர்களுக்கு வணக்கம்.

2012/9/14 Innamburan Innamburan <innamburan@gmail.com>
மயிலாப்பூர் வக்கீல்களை ஒரு பிடி பிடித்திருக்கிறார், பாரதியார், பாருங்கள். பிரமாதம். அல்லது கப்பலோட்டிய தமிழனின் கப்பல் கம்பெனி வரலாறு கச்சிதமாக வேணும் என்றால், பாரதியாரிடம் தான் போகவேண்டும். தணிக்கைத்துறை தோற்றது, போங்கள்!
அறிஞர் அண்ணா பெயரில் அறக்கட்டளை துவங்கப்பெற்று மாணவர்களுக்கு தகுதியடிப்படையில் உதவித்தொகை வழங்கப்படுவதைப் போன்று,
பாரதி பெயரிலும் அறக்கட்டளை ஆரம்பிக்கப்பட வேண்டும்.
மாணவர் பயனுற வேண்டும், இந்த வையகம் பயனுறவே.

அன்பன்
கி.காளைராசன்


--
அன்பன்
கி.காளைராசன்


coral shree Fri, Sep 14, 2012 at 3:13 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
//
பாரதி பெயரிலும் அறக்கட்டளை ஆரம்பிக்கப்பட வேண்டும்.
மாணவர் பயனுற வேண்டும், இந்த வையகம் பயனுறவே.//

அருமையான யோசனை சகோதரரே...

அன்புடன்
பவளா

Friday, March 29, 2013

இதுவும் ஒரு பிருகிருதி -1

இதுவும் ஒரு பிருகிருதி -1


Innamburan Innamburan 
இதுவும் ஒரு பிருகிருதி

கீதா சாம்பசிவத்துக்கு நினைவில் இருக்கலாம். அந்தக்காலத்தில் நாடோடி என்பவர் 'இதுவும் ஒரு பிருகிருதி' என்ற அருமையான நூல் ஒன்று எழுதினார்; விகடனில் தொடராகவும் வந்திருக்கலாம். இந்த பூலோகத்தில் சிருஷ்டி செய்யப்பட்ட கொனஷ்டைகளின் குணாதிசயங்களை, ஈஷ்வர கிருபையால், அழகாக விவரித்து இருந்தார். தேடினாலும் கிடைக்கவில்லை, அந்த புத்தகம். கதாநாயகர்/கி களின் ஆசைமுகமும் மறந்து போச்சு. எனவே இது புதிய வார்ப்பு:2010.

எத்தனையோ பேர் வந்து போகிறார்கள், இந்த உலக நாடக மேடையில். சிலர் சூடு போடுவார்கள்; சிலர் சுட்டுக்கொள்வார்கள். சிலர் அடிப்பார்கள்; சிலருக்கு தர்ம அடி வாங்கிக்கொள்வது வாடிக்கை. சிலர் சொற்சிலம்பம் ஆடுவார்கள்; சிலர் பேசவே தயங்குவார்கள். பட்டியலே பல பக்கங்கள் என்பதால், இத்துடன் இதை நிறுத்தி எனக்கு தெரிந்த பிருகிருதிகளை அறிமுகம் செய்து வைக்கிறேன்.

1. 'முடுக்குத்தெரு கிட்டு மாமா': அவரை  முதல் முறையாக சந்தித்தபோது, அவருக்கு நாற்பது வயது இருக்கலாம். எனக்கு 17. தருமமிகு சென்னையில் நான் கால் எடுத்து வைத்த முதல் நாள் மாலை. கபாலி கோயில் வாசல்லே, புகையிலையை குதப்பிக்கொண்டு நின்று கொண்டிருந்தார். தானாகவே முன் வந்து முகமன் கூறி அறிமுகம் செய்து கொண்டார் - என் அத்தையின் மைத்துனனின் மைத்துனன் என்று. உபயகுசலோபரி முடிந்த பிறகு, ' ரவாதோசை ன்னா கணேஷ் பவன்' என்று சப்புக்கொட்டிக்கொண்டார். நான் வழக்கம் போல அமைதி காத்தேன். 'சட்' என்று கோபித்துக்கொண்டார். 'நான் கூப்ட்றேன்; சும்மா இருக்கிறாயே' என்று செல்லமாக கண்டித்து, அழைத்துச்சென்றார். கீரை வடை, கிள்ளு பக்கோடா எல்லாம் சாப்ட்டப்பறம் தான் ரவாதோசை, டிகிரி காஃபி. சொல்லக்கூடாது. மனுஷனுக்கு என்ன வாசாலகம்!. 'அடடா! பர்ஸ் விட்டுப்போச்சே. பரவாயில்லை. நீ கொடுத்திரு. நானே கொண்டு வந்து தர்ரேன்' என்றார். இன்னி வரைக்கும் வரல்லை. படிப்பினை 1. இருந்தாலும், நான் தலையெடுத்த பிறகு, என் செலவில் அடிக்கடி சாப்பிட்டு இருக்கிறார். ஒவ்வொரு தடவையும் தவிர்க்க நினைப்பேன். நடக்காது. அப்படிப்பட்ட டிஃபன் வசீகரன் அவர். 

சுருங்கச்சொல்லின் அவருடைய பயோ டேட்டா: 
ஸ்கூலுக்கு போயிருக்கிறார். ஆனால், எஸ்.எஸ்.எல்.சி எழுதியதாக சொல்லிக்கொண்டதில்லை. அந்தக்காலத்து பீ.ஏ. தான் பீ.ஏ. என்பார், தான் ஆங்கிலம் பேசும்போதெல்லாம். வேலை ஒன்றும் தேடியதில்லை என்று பீற்றிக்கொள்வார். வேலை ஒன்றும் அவரை தேடி வரவில்லை என்பதை ஒத்துக்கொள்ளமாட்டார். மாமி வசை பாடும் போது தான் அந்த ரகசியம் வெளிவரும். ஆனா, கிட்டு மாமா எப்பவும் பிஸி. தரகு கை வந்த கலை. கமிஷனுக்காக, உன்னோட கப்பலையை வித்துருவார். மைக்கேல் மதனகாமராஜன் என்ற சினிமாவில் ஒரு பாட்டி ஒத்தரோட பல் செட்டை அபேஸ் பண்ணிடுறா. அந்த மாதிரி தன் இவரும். எல்லா கல்யாணத்துக்கும் போவார், கூப்டாட்டாக்கூட. எல்லாரும் உஷார் தான். வந்த கிஃப்ட்லெ, நாலு கடியாரம் காணாமப்போயிருக்கும். 'எதுக்கடா! அவாளுக்கு இத்தனை கடியாரம்?' என்பார். வித்துருவார். அவருடைய சாதனைகள் சொல்லி மாளாது. எல்லா சங்கீதக்கச்சேரிக்கும் போவார். அந்தக்காலத்திலே இலவசம் தான். ஒரு நாள் மிருதங்கத்தை தூக்கிண்டு வந்துட்டார்! அவருக்கே பெருமை தாங்கல்லே. அப்றம், என்னமோ மாயாஜாலம் செய்து என் அத்திம்பேர் அதை உரியவரிடம் சேர்த்து விட்டார். 

ஆனா, அடுத்த கேஸ்லெ அத்திம்பேருக்கு படு தோல்வி. எதித்தாத்து கிழம் ஒரு நா மண்டையை போட்டுடுத்து. அவா ரொம்ப பணக்காரா. இருக்கவரைக்கும் அவருக்கு தயிர் சாதம் மறுத்த அவரது திருமகன் சாங்கோபாங்கமாக அவருக்கு அபர காரியங்கள் செய்தான். தினோம் விருந்து! கூத்து! சிரிப்பு! 'சுபம்' பண்றச்ச கருமம் பண்றவன் தலெலே முண்டாசு கட்டி, மயில் தோகை பிடிக்கிறேன் பேர்வழி ன்னு அவன் கைலே கரும்பு கொடுப்பா. அன்னிக்கு ஸ்கூல்லேந்து வந்தா, எங்களுக்கு எல்லாம் குஷி: கரும்பு துண்டுகள்! கிட்டு மாமா உபயம். அத்திம்பேர் சுவத்திலே சாஞ்சு உக்காந்துட்டார், அவமானத்தாலே.
இன்னும் அவருடைய தரகு ரகசியங்கள் சொல்ல முடியவில்லை. பல பக்கங்கள் பிடிக்கும்.  எனக்கென்னமோ அவர் மேல் இரக்கம் தான். இன்னிக்கு இருந்தா, அவருக்கு எத்தனை சான்ஸ்!  ஊரை வித்திருக்கலாம்; ஏரியை வாங்கி இருக்கலாம். அதை வித்து ரண்டு ஊர் வாங்கியிருக்கலாம்.  இரண்டரை ஜீயை நாலேமுக்கால்ஜீயா வித்திருக்கலாம். மாமிக்கு வைரத்தோடு என்ன? வைரமாலையே போட்றுக்கலாம். கொடுத்து வைக்கலை பாவம். அன்னாரின் ஆத்மா சாந்தியடைக.
இன்னம்பூரான்
16 12 2010

GEETHA SAMBASIVAM Thu, Dec 16, 2010 at 3:22 PM
Reply-To: thamizhvaasal@googlegroups.com
To: thamizhvaasal@googlegroups.com
இன்னி வரைக்கும் வரல்லை.//

நச்!!!!
இரண்டரை ஜீயை நாலேமுக்கால்ஜீயா வித்திருக்கலாம். மாமிக்கு வைரத்தோடு என்ன? வைரமாலையே போட்றுக்கலாம். //

விஷயம் மெல்லன்னா வெளியே வருது! 

அன்றொரு நாள்: ஸெப்டம்பர் 22




அன்றொரு நாள்: ஸெப்டம்பர் 22
12 messages

Innamburan Innamburan Thu, Sep 22, 2011 at 6:26 AM

To: mintamil

அன்றொரு நாள்: ஸெப்டம்பர் 22
பாராசாரி குதிரை என்றால், ராஜா தேசிங்கு வருவார், நினைவில். எம்டன் கப்பல் என்றால், கேப்டன் வான் முல்லர் வருவார். இது எல்லாம் இணை பிரியா உறவுகள். இனி எம்டன் மிதவை புராணம். என்னே சாகசம்! கடல் புராணங்களில் எம்டன் உபகதை மறக்கமுடியாதது. இரண்டே மாதங்களில் (செப்டம்பர் 10 ~ நவம்பர் 9, 1914) உலக கடல் வாணிகத்தை பாடாய் படுத்தி, 24 கப்பல்களை முழுகடித்து, பத்து மிலியன் டாலர் சொத்தைப் பறித்து, சும்மாவாணும் ஸெப்டம்பர் 21, 1914 அன்று மதராஸ் பட்டினத்தின் மேல் குண்டு வீசி, பெரிய மனுஷாள் எல்லாரும், அரக்க பரக்க, ஊரை விட்டு ஓடி, நிலம், நீச்சு க்ரையமெல்லாம் அடி மட்டத்துக்கு போயி... ஏன் கேட்கிறீர்கள் போங்க.
*
ரோஜா முத்தையா ஆய்வு மையத்தில் நம்ம் ஃப்ரெண்ட் தியோடார் பாஸ்கரன் ‘எம்டனை’ பற்றி பேசுவார் என்று அழைப்பிதழ் வரதும், திவாகர் சென்னை விஜயம் பிரகடனம் ஆனதும் ஒரே சமயமா? அங்கு போய் தியோடரிடம், திவாகர் எங்கே என்றதும், அவர் முழித்தார். பிறகு எம்டன் நிஜகீர்த்தி பாடினார். வரலாற்றை பிட்டு, பிட்டு வைத்தார். எம்டனில் திரு. செண்பகராமன் பிள்ளை பயணித்தாக சான்றுகள் இல்லை என்றார். மறு நாள் திவாகரை பார்த்த போது தான் தெரிந்தது: ‘Divakar "SMS எம்டன் 22-09-1914" Published by Palaniappa Brothers, Madras 600014, India. A Tamil novel written in the background of SMS Emden's bombing of Madras Harbour in 1914 என்று. பி.கு. திவாகர் அளிப்பாராக. 
*
எம்டன் குண்டு போட்ட இடம், ஹை கோர்ட்டில். கல்வெட்டு பார்க்கவும் என்று சுருக்கமாக எழுத நினைத்தால், அதனுடைய வீர தீர பராக்ரமங்களில் ஆழ்ந்து போய் விட்டேன். எதிரியோ? உதவியோ? யாராக இருந்தால் என்ன? நாம அடக்கி வாசிச்சா, மட்டுறுத்தினால், எம்டன் புகழ் மங்கி விடுமா? என்ன? சொல்லுங்கோ, திவாகர். இது திவாகர் ஸ்பெஷல்.
*
ஆகஸ்ட் 2, 1914: சைனாவருகில் எம்டன் மிதக்கையில் முதல் உலகப்போர் பிரகடனம். எம்டன் ரெடி ஃபார் ஆக்ஷன். எம்டனின் தனிச்சிறப்பு: கெளரதை, தலைவரின் மகிமை, மாலுமிகள்/வீரர்கள் எவெரெடி.’ பீரங்கிகள் ரெடி’ ‘நீர்மூழ்கி குண்டுகள் ரெடி’ எஞ்சின் ரெடி, சங்கேதங்கள் ரெடி’ எல்லாம் ரெடி’. புறமுதுகு காட்டி ஓடுது ஒரு கப்பல். இவுக துரத்தறாக. அது ரேஜஸான் என்ற ரஷ்யகப்பல். புலி மாதிரி பாஞ்சு கடிச்சு குதறி, அடிமை கப்பலாக்கி, ஜெர்மன் கொடி ஏத்தியாச்சு. சிங்க்டோ துறைமுகத்துக்கு ‘கூம்’ கூம்’ னு சங்கு ஊதிண்டு போயாச்சு. அங்குள்ள ஜெர்மன் கப்பல் படையுடன் சேர்ந்தாச்சு. இனி திக் விஜயம் தான். ஒரு பூனைக்கு ஒன்பது தடவை உயிர் காப்பாற்றப்படுமாம். அந்த மாதிரி வந்த ஆபத்துக்கள், பனி போல் விலகின, எம்டனுக்கு. மறு நாள், ஒரு பயணிகள் கப்பல் அகப்பட்டுக்கொண்டது. இப்போது, இங்கிலாந்தும் எதிரி என்ற பிரகடனம். உடனுக்குடனே, ஜப்பானும். கேப்டன் முல்லர் ஜெர்மன் அட்மிரலின் கப்பலுக்குப்போய், எம்டனின் தனி ஆவர்த்தனத்துக்கு அனுமதி வாங்கி வந்தார். மத்ராஸ் நோக்கி விட்டோம் சவாரி! உள்ளூர எல்லாருக்கும் தெரியும். இது தான் இறுதி யாத்திரை என்று. பிரச்னை! எங்களுக்கு மூன்று சிம்ணி. பிரிட்டீஷ் கப்பல்களுக்கு இரண்டு/ நாலு. நாங்கள் மிதப்பதோ எதிரியின் பிராந்தியம். பார்த்தார் கேப்டன். நாலாவது சிம்ணி (டம்மி) அமைத்துக்கொண்டோம். பாத்தா அச்சு பிரிட்டீஷ் யார்மெளத் கப்பல்! 
வங்காள விரிகுடாவில் வந்து அடைஞ்சாச்சு. ஒரு பிரிட்டீஷ் போர்கப்பல் நிழல் மாதிரி வரது. கிட்ட வரல்லையே. அஞ்சாறு நாட்களுக்கு பிறகு சிக்கிய கப்பலை மடக்கினோம். போயும் போயும் அது இந்தியாவிலிருந்து மட்டரக நிலக்கரி சுமந்த கிரேக்கக்கப்பல். அடுத்த பலி ஒரு ஏமாந்த சோணகிரி. எம்மை பிரிட்டீஷ் கப்பல் என்று நினைத்த போக்குவரத்துக்கப்பல். பல கப்பல்கள். நிறுத்துவோம். பத்து பேர் ஏறுவோம். அடிமை அல்லது ஆழம். நாங்கள் கைது செய்த பிரிட்டீஷ்காரர்கள் மதி இழக்கவில்லை. அவர்கள் விஸ்கியை பாதுகாத்ததை சிலாகித்தோம்! விரோதம் யாதும் இல்லை.
ஒரு கேப்டன் ஜாலி. நாலு கடல்-மைல் வேகத்தில் ஒரு மணல் வாரி கப்பலை இங்கிலாந்திலிருந்து ஆஸ்ட் ரேலியாவுக்கு! படு போரடிச்சதாம். மகிழ்ச்சியுடன் சரணடைந்தார். கூலி முழுதும் அச்சாரமாக வாங்கிவிட்டார், வேறே. ஸெப்டம்பர் 18, 1914 சென்னை துறைமுகம் வந்தோம். எம்டன் காலி என்ற வதந்தியை நம்பி க்ளப்பில் கொண்டாட்டம். ‘தொப்’!  சூப்லெ குண்டு! பிரிட்டீஷ்காரனுக்கு டின்னர்னா உசிறு. தெரிஞ்சிருந்தா, அன்று தாக்கி இருக்கமாட்டோம்! இந்திய அரசுக்கு நன்றி பல. ஊர் பூரா வெளிச்சம். எண்ணை கிடங்குகளை கொளுத்திப்பிட்டோம், கொளுத்தி. அடடா! நிலக்கரி தீந்து போச்சே! இந்திய நிலக்கரி ரொம்ப புகை விடுமே. அதிருஷ்டம். ஒரு பிரிட்டீஷ் கப்பல், தரமான நிலக்கரியோட சிக்கியது. அந்த கேப்டனும் ஜாலி. ‘பிரிட்டானியா வாழ்க’ என்று பாடிக்கொண்டே எல்லாவற்றையும் கொடுத்து விட்டார்.
இருக்கிறதில் சின்ன கப்பல் எம்டன். அதை மூழ்கடிக்க 16 கப்பல்கள் சூழ்ந்து கொண்டன. அல்பாயுசு, அகால மரணம் எல்லாம் கேப்டன் சொல்லிவிட்டார். நாங்கள் கவலை படவேயில்லை. ஆறிலும் சாவு. நூறிலும் சாவு. போடா! எங்க கேப்டன் தெய்வமடா! ஒரு ஜோக் நோட் புக் வச்சுண்டு கேலி, எள்ளல் எல்லாம். நாங்கள் எல்லாரும் ஒரு அன்பு வலையில் சிக்கினோம்.  ஒரு பூனை வந்தாள். குட்டி போட்டாள்: ஐந்து. லெஃப்டினண்ட் ஷால் படுக்கையில் பிரசவம். அவரும் கனிவோடு பார்த்துக்கொண்டார். ஒரு மிருக காட்சி சாலையே வைத்திருந்தோம். பிடிபட்ட கப்பல்களிலிருந்து, இரண்டு பன்றி, ஆட்டுக்குட்டி, புறாக்கள், கோழி, வாத்து எல்லாம். ஒரு மான் கூட. எப்படி வந்தது தெரியவில்லை.
தினம் பேண்ட் வாசிக்கும். ஆடுவோம். அப்றம், கொள்ளை அடிச்சதை பங்கு போட்டுக்கொள்ளும் கண் கொள்ளாக்காட்சிகள். எத்தனை சிகரெட்! இருட்டிலே மின்மினி பூச்சி போல. ‘தண்ணி’ தண்ணி பட்ட பாடு!
இனி நவம்பர் 9, 2011 அன்று தொடரலாமா?
இன்னம்பூரான்
22 09 2011
pastedGraphic.pdf
pastedGraphic_1.pdf
oil-tanks shelled at Madras
உசாத்துணை:

dhivakar Thu, Sep 22, 2011 at 7:23 AM

Reply-To: mintamil@googlegroups.com
To: மின்தமிழ்
>>>இருக்கிறதில் சின்ன கப்பல் எம்டன். அதை மூழ்கடிக்க 16 கப்பல்கள் சூழ்ந்து
கொண்டன. அல்பாயுசு, அகால மரணம் எல்லாம் கேப்டன் சொல்லிவிட்டார். நாங்கள்
கவலை
படவேயில்லை. ஆறிலும் சாவு. நூறிலும் சாவு. போடா! எங்க கேப்டன் தெய்வமடா!
ஒரு
ஜோக் நோட் புக் வச்சுண்டு கேலி, எள்ளல் எல்லாம். நாங்கள் எல்லாரும் ஒரு
அன்பு
வலையில் சிக்கினோம்.  ஒரு பூனை வந்தாள். குட்டி போட்டாள்: ஐந்து.
லெஃப்டினண்ட்
ஷால் படுக்கையில் பிரசவம். அவரும் கனிவோடு பார்த்துக்கொண்டார். ஒரு
மிருக
காட்சி சாலையே வைத்திருந்தோம். பிடிபட்ட கப்பல்களிலிருந்து, இரண்டு
பன்றி,
ஆட்டுக்குட்டி, புறாக்கள், கோழி, வாத்து எல்லாம். ஒரு மான் கூட. எப்படி
வந்தது
தெரியவில்லை. <<<
Hats off to your 'I' sir! You gave cats' visit to Emden. Yes, that was
well mentioned by Capt. Mukke in his biography.

Compared to today's warship technology, those days, with a heavy rush
of mariners (more than 300) then and there in a small capacity vessel,
my God! how they must have worked hard and at the same time enjoyed
also.

I have visited as a visitor journalist at INS VIRAAT, Air carrier too,
three years back. I think this is the largest and biggest vessel in
Indian Navy with more than 1500 mariners.

I myself enjoyed the writing of this novel wherever mentioning Emden
ship and travelled with her too.

The Emden actual show of strength was shown in Penang, but not in
Chennai. The Penang success of Emden was a jewel in her crown.

Dhivakar


Innamburan Innamburan Thu, Sep 22, 2011 at 7:44 AM

To: mintamil@googlegroups.com
Bcc: innamburan88
நன்றி பல, திவாகர். எம்டன் என்ற உமது நூலை பற்றி எழுத நினைத்தேன். அந்த கடமையை பவளசங்கரி செய்யப்போவது தெரியாது. நல்லதே நடந்தது. நான் எம்டன் மிதவை புராணத்தில் ஆழ்ந்து விட்டேன். பெனாங்க் சாகசம் பற்றி எழுதும் வினாடியில், you and PavaLa Sankari forced my hands. கொஞ்சம் விவரமாக எழுதி, சற்றே சுருக்கியும் இன்ரு மாலை வரவேண்டிய இடுகையை 'தொடரும்' உத்தியில், காலையிலேயே, உள்ளது உள்ளபடி, பதித்துவிட்டேன். எல்லாம் திவாகர நிவாரணம் தான்.
[Quoted text hidden]

meena muthuThu, Sep 22, 2011 at 7:56 AM

Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
வழக்கம்போல உங்கள் அட்டகாசமான நடையில்!ம்ம்.. 
பவளாவினது ஒருபுறம்! இங்கே மறுபுறம் நீங்கள்!
சும்மா தூள் கிளப்புறீங்க எம்டன் மாதிரி :)))


2011/9/22 Innamburan Innamburan <innamburan@gmail.com>
எம்டன் குண்டு போட்ட இடம், ஹை கோர்ட்டில். கல்வெட்டு பார்க்கவும் என்று சுருக்கமாக எழுத நினைத்தால், அதனுடைய வீர தீர பராக்ரமங்களில் ஆழ்ந்து போய் விட்டேன். எதிரியோ? உதவியோ? யாராக இருந்தால் என்ன? நாம அடக்கி வாசிச்சா, மட்டுறுத்தினால், எம்டன் புகழ் மங்கி விடுமா? என்ன? சொல்லுங்கோ, திவாகர். இது திவாகர் ஸ்பெஷல்.
*
[Quoted text hidden]

Geetha SambasivamThu, Sep 22, 2011 at 11:20 AM

Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
எம்டன் குண்டு போட்டதை சென்னை உயர்நீதிமன்றத்தின் கல்வெட்டில் முதல்முதல் பெரியப்பா காட்டினார்.  வங்கிப் பரிக்ஷை எழுதச் சென்னை வந்திருந்த போது நான் கேட்டதன் பேரில் அழைத்துச் சென்று காட்டினார்.  அதைத் தொட்டுத்தடவி..... பெரியப்பாவுக்குச் சிரிப்பு!  அதே போல் தான் அன்றே சாந்தோம் சர்ச்சிற்கும் விஜயம். அங்கே வரைந்திருந்த படங்களைச் சுட்டிக்காட்டி எனக்கு நீண்ட விளக்கம் கொடுத்தார்.  முழுக்க முழுக்க  கான்வெண்ட்டில் படித்திருந்த எனக்குக் கொஞ்சம் அதிர்ச்சி எனலாம். அதன் பின்னர் பல புத்தகங்கள் தேடிப்படிக்க வாய்ப்புக் கிடைத்தது. எம்டனோடு எனக்கு ஏற்பட்ட இணைப்பு இப்படித் தான்.

அதன் பின்னர் தமிழ் மரபு அறக்கட்டளை விழாவில் எம்டன் எழுதிய எம்டனையே முதன் முதல் சந்தித்தேன்.  புத்தகமும் கிடைத்தது.  இப்போதும் எடுத்துப் படித்துக்கொள்வேன்.


திரு இன்னம்புரார் எம்டனில் தாம் மட்டுமல்லாமல் நம்மையும் பயணிக்க வைத்துவிட்டார்.  இந்த ஆழ்ந்த உணர்வுக்கு ஈடு இணை ஏதும் இல்லை.

2011/9/22 Innamburan Innamburan <innamburan@gmail.com>


தினம் பேண்ட் வாசிக்கும். ஆடுவோம். அப்றம், கொள்ளை அடிச்சதை பங்கு போட்டுக்கொள்ளும் கண் கொள்ளாக்காட்சிகள். எத்தனை சிகரெட்! இருட்டிலே மின்மினி பூச்சி போல. ‘தண்ணி’ தண்ணி பட்ட பாடு!
இனி நவம்பர் 9, 2011 அன்று தொடரலாமா?
இன்னம்பூரான்
22 09 2011
pastedGraphic.pdf
pastedGraphic_1.pdf
oil-tanks shelled at Madras
உசாத்துணை:


shylaja Thu, Sep 22, 2011 at 11:38 AM

To: mintamil@googlegroups.com
Cc: Innamburan Innamburan
அப்பாடி இவ்வளவு நடந்திருக்கா அன்னிக்கு! எம்டன் கீர்த்தி பிரமிப்பாக உள்ளது இ சார் எழுத்தில் அந்த நாளுக்கே போயிட்டமாதிரி இருக்கு..எங்கே திவாகர்  அந்த எம்டன் எனக்கும் ஒண்ணு ப்ளீஸ்...

2011/9/22 Innamburan Innamburan <innamburan@gmail.com>


Dhivakar Thu, Sep 22, 2011 at 12:32 PM

Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
ஷைலஜா


நம் சுபாவின் விமர்சனத்தைக் கேட்கலாம்!!

திவாகர்
[Quoted text hidden]
Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com
[Quoted text hidden]

Innamburan Innamburan Thu, Sep 22, 2011 at 1:28 PM
To: mintamil@googlegroups.com
very very low volume, whatever I do.
i
[Quoted text hidden]

shylaja Thu, Sep 22, 2011 at 1:46 PM

Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
கேட்டுட்டு வரேன் திவாகர்
[Quoted text hidden]

K R A Narasiah Thu, Sep 22, 2011 at 5:36 PM

Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com, 

எம்டன் நினைவு நாளான இன்று அமைதியாக அ மர்ந்து, சுபாவின் விமர்சனத்தைக் கேட்டேன். அவரது அழகான உச்சரிப்பும், கோர்வையாக் மொழியும் திறனும் கவரும் படி உள்ளது.நானும் இந்த நாவலைப் படித்து ஆச்சர்யமடைந்தவன் தான். ஆனாலும் அதைத் திறம்பட வருணிக்கையில் வேறோர் பொருளும் தெரிகிறது. அதைத் திவாகரின் கைவண்ணம் எனலாமா அல்லது சுபாவின் சொல்வண்ணம் எனலாமா என்று நிர்ணயிக்க இயலவில்லை.
ஆனாலும், திவாகரின் ஆழ்ந்த ஆய்வு ஒளிரும் இந்த புதினத்தை  அங்கங்களாகப்பிரித்து சுபா அளித்திருக்கும் விமர்சனம் போற்றுதலுக்குரியது.
நரசய்யா
[Quoted text hidden]

Subashini Tremmel Thu, Sep 22, 2011 at 6:15 PM

Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
Cc: Subashini Kanagasundaram

ஞாபகப் படுத்தியமைக்கு நன்றி..:-)

கட்டுரையாகவும் எனது வலைப்பூவில் உள்ளது. இங்கே ..!

சுபா

[Quoted text hidden]

Subashini Tremmel Thu, Sep 22, 2011 at 6:19 PM

Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
Cc: Subashini Kanagasundaram
மிக மகிழ்ச்சி. இந்தப் பாராட்டுதல் பெற நான் கொடுத்து வைத்திருக்கின்றேன். நன்றி. 
அருமையான நாவல் அது. என்னை இந்த நாவல் மிகப் பாதித்தது. மிகப் பிடித்துப் போனது. அதனால் இப்படி ஒரு விமர்சனம்.. மனதில் வந்ததை அப்படியே எழுதி விட்டேன்..
சுபா


அன்றொருநாள்: மார்ச் 29 திருப்புமுனையா? ஒடித்த முனையா?




அன்றொருநாள்: மார்ச் 29 திருப்புமுனையா? ஒடித்த முனையா?
13 messages

Innamburan Innamburan Wed, Mar 28, 2012 at 7:37 PM

To: mintamil , thamizhvaasal

அன்றொருநாள்: மார்ச் 29
திருப்புமுனையா? ஒடித்த முனையா?
மார்ச் 29, 1857 அன்று பொழுது நன்றாக விடியவில்லை. வங்காளத்து இந்தியர் படையாகிய 34வது ரெஜிமெண்டில் சிப்பாயாக இருந்த மங்கள் பாண்டே கம்பெனி நிர்வாகத்தை எதிர்த்து, புரட்சி செய்ய வீறு கொண்டு எழுந்த நாள் என்று சொல்லப்படுகிறது. அன்று நடந்த நிகழ்வுகளை பற்றியே ஒருமித்த ஆவணங்கள் இல்லை. அதை சிப்பாய் கலகம் என்றார், சிலர். முதல் இந்திய சுதந்திரப்போர் என்றனர், சிலர். ஆளுக்கொரு வரலாறு படைத்தனர். உண்மை வரலாறு கிடைப்பதற்கு அரிதாயிற்று. லக்னெளவில் லைட்& செளண்ட் காட்சிகள் சிறப்புற அமைக்கப்பட்டிருந்தாலும், அதே ஸ்தலங்களில் பேசாமடந்தையாக நிற்கும் வரலாற்று சின்னங்கள் கூறும் செய்தி வேறு. இது வரை, தக்க சான்றுகளுடன் அளிக்கப்பட்ட வரலாறுகள் நான்கு உலா வருகின்றன. அவை ஒத்துப்போகவில்லை. என்னுடைய ஆய்வு இன்னும் முடியவில்லை என்பது ஒரு புறமிருக்க, 1857 வருட புரட்சிக்கு, மார்ச் 29, 1857 அன்றைய நிகழ்வை மட்டுமே திருப்புமுனையாகவே திருப்பிய முனையாகவோ கருத இயலாது என்று தோன்றுகிறது. எனவே, அது பற்றி தக்கதொரு தருணத்தில் எழுதலாம். எனவே, உங்களை திசை திருப்பி, வடக்கு நோக்கி, பஞ்சாப் பிரதேசத்திற்கு அழைத்து செல்கிறேன்.
பாஞ்சாலம் புராதன தேசம். சிந்து நதியும், ஜீலம், சீனாப்,சட்லெஜ், ரவி, பியாஸ் ஆகிய திருவையாறுகளும் மனித நாகரீகத்தின் தொட்டில். பொன் விளைந்த களத்தூர்கள் நிறைந்த நாடு. மதியிழந்த யுதிஷ்டிரன், ‘இரு பகடை’ என்று அடகு வைத்த திருமகள் திரெளபதியின் பிறந்த வீடு, பாஞ்சாலம். பீஷ்மரை வீழ்த்த உதவியாக, முன்னின்று அர்ஜுனனுக்கு பெண்மையின் கவசம் அளித்த சிகண்டி என்ற பெரும்தேர் புரவலனுக்கு பாஞ்சால மண் வாசனை. அது இதிஹாசம் என்று ஒதுக்கினாலும், ஜூலை 12,1799ம் வருடத்தை பற்றி ‘அன்றொரு நாள்: ஜூலை 12’ இழையில் யான் எழுதியதை மறுபடியும் படித்து விட்டு வாருங்கள், இங்கே. 
இன்று ஒரு தேசியத்தின் ( நேஷனாலிடி) சுபஜெனனம். வருடம்:1799: இடம்: பாஞ்சாலம். நிகழ்வு: ‘பாஞ்சால சிங்கம்’ மஹாராஜா ரஞ்சித் சிங் அவர்கள் லாஹூரை ஜூலை 7,1799 அன்று கைப்பற்றி, அன்றே புகழ் வாய்ந்த பாத்ஷாஹி மசூதிக்கு வருகை தந்து, ஜூலை 12, 1799 அன்று முடி சூடினார். அவரது தனிப்பெருமைகள் பல. தன்னுடைய சாம்ராஜ்யத்தில் மரண தண்டனையை தவிர்த்தார்். அவரை கொலை செய்ய வந்தவனும் தலை தப்பினான். 40 வருடங்கள் செங்கோலோச்சிய இந்த மாமன்னர், தனது பாஞ்சால ராஜ்ய விஜய தினமன்றே (நாள்,கிழமை பஞ்சாங்கப்படி) (ஜூன் 27, 1839) இயற்கை எய்தினார்...ஒவ்வொரு பாஞ்சாலக்குடும்பமும் தந்தையை இழந்ததாக வருந்தியது. பாஞ்சாலம் விதவையாகி விட்டது என்றனர்...”
பொன் விழாவுக்கு பதில் தேசமும் போச்சு; அபிமான பங்கமும் ஆச்சு. எல்லாம் போச்சு. ‘பாஞ்சால சிங்கம்’ மஹாராஜா ரஞ்சித் சிங் அவர்கள் இயற்கை எய்தி பத்து வருடங்கள் கூட கழியும் முன், மார்ச் 29, 1849 அன்று ஆங்கிலேயர்கள் பஞ்சாப் களவாடலை பூர்த்தி செய்தனர். விதவையான பஞ்சாபில் அரசின் நிலை குலைந்தது. தன்னலமிகுந்த லஞ்ச லாவண்ய பைசாசங்கள் தலை தூக்கின.  நாட்டுப்பற்றுள்ள ராணுவமோ கட்டவிழ்ந்தக் காளையாகி, குலைந்து போனது. 1809ம் வருட உடன்படிக்கையை உதறிவிட்டு, இந்த பேராசை கிழக்கிந்திய கம்பெனி 1845-46, துரோகிகளின் உதவியுடன், லாஹூரை கைப்பற்றினர். 1846 வது வருட லாஹூர் உடன்படிக்கைகள், பஞ்சாப் அரசை படுக்கப்போட்டது. இரண்டாவது யுத்தம் 1848&-49. முல்தானின் கவர்னர் மூல்ராஜ் செய்த புரட்சியை அடக்கிறேன் பேர்வழியென்று டல்ஹெளசி மார்ச் 29, 1849 அன்று பஞ்சாபை கலோனிய ஆட்சியுடன் இணைத்து, ‘பாஞ்சால சிங்கம்’ மஹாராஜா ரஞ்சித் சிங் அவர்களின் மைந்தன் துலீப் சிங்குக்கும் (11 வயது), விதவை ஜிந்த் கெளர் அவர்களுக்கும் பென்ஷன் கொடுத்து இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்து விட்டார்கள்், கொஞ்சம் அங்குமிங்கும் அலைய வைத்து. ராஜகுமாரனை கிருத்துவனாக்கி, விக்டோரியா ராணியின் செல்லப்பிள்ளையாக்கி, தேசாபிமானத்தை ஒழிக்க வேண்டி, மண்ணாங்கட்டியிலும் தெருப்புழுதியிலும் ஆசை காட்டி ( விளயாட்டு, ஆட்டம் பாட்டம்), எங்கிருந்தோ வந்தவளை மணம் முடித்து, செல்லாக்காசாக, ஆக்கிவிட்டனர். அவரை பஞ்சாப் பக்கமே போக விடவில்லை, 1893ல், நாதியில்லாமல், பெருத்த கடனாளியாக பாரிஸ் நகரில் சாகும் வரை. துலீப் சிங் சோகம் வேறு கதை. சொல்ல உற்ற தருணம் கிடைக்குமோ, இல்லையோ?
அடடா! சொல்ல மறந்துட்டேனே! ‘பாஞ்சால சிங்கம்’ மஹாராஜா ரஞ்சித் சிங் அவர்கள் தன்னிடமிருந்த விலைமதிப்பில்லாத கோஹினூர் வைரத்தை பூரி ஜெகன்னாதர் ஆலயத்திற்கு நன்கொடை என்று உயில் எழுதி வைத்திருந்தார். அதை கடாசி விட்டு, அந்த டல்ஹெளசி, இந்த மார்ச் 29 இழவின் போது, அதை இங்கிலாந்து ராணியிடம் கொடுத்து விடவேண்டும் என்று ஷரத்துப் போட்டான். அதற்கு சால்ஜாப்பும் சொன்னான். அதெல்லாம், கேட்டால் தான் சொல்லப்படும். ஆக மொத்தம் இங்கிலாந்து ராணிப்பாட்டியின் மணிமகுடத்தில் திருட்டுச்சொத்து.
இன்னம்பூரான்
29 03 2012
Inline image 1

The Last Sunset — The Rise & Fall of the Lahore Durbar By Amarinder Singh
உசாத்துணை:

Geetha SambasivamThu, Mar 29, 2012 at 1:06 AM

To: thamizhvaasal@googlegroups.com
Cc: mintamil
மைந்தன் துலீப் சிங்குக்கும் (11 வயது), விதவை ஜிந்த் கெளர் அவர்களுக்கும் பென்ஷன் கொடுத்து இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்து விட்டார்கள்், கொஞ்சம் அங்குமிங்கும் அலைய வைத்து. ராஜகுமாரனை கிருத்துவனாக்கி, விக்டோரியா ராணியின் செல்லப்பிள்ளையாக்கி, தேசாபிமானத்தை ஒழிக்க வேண்டி, மண்ணாங்கட்டியிலும் தெருப்புழுதியிலும் ஆசை காட்டி ( விளயாட்டு, ஆட்டம் பாட்டம்), எங்கிருந்தோ வந்தவளை மணம் முடித்து, செல்லாக்காசாக, ஆக்கிவிட்டனர். அவரை பஞ்சாப் பக்கமே போக விடவில்லை, 1893ல், நாதியில்லாமல், பெருத்த கடனாளியாக பாரிஸ் நகரில் சாகும் வரை. துலீப் சிங் சோகம் வேறு கதை. சொல்ல உற்ற தருணம் கிடைக்குமோ, இல்லையோ?//

கொதிக்கும் மனம் அடங்க வழி இல்லை. அதுவும் அந்தக் கோஹிநூர்! அநியாயம், அக்கிரமம், கொள்ளை. திரும்பத் தர மாட்டாங்களானுபல முறை ஏங்கி இருக்கேன்.  திருட்டு வைரத்தை எப்படிக் கிரீடத்தில் மனசாட்சியே இல்லாமல் பதித்துக்கொள்ள முடிந்தது?? இத்தனை சான்றுகளுக்குப் பின்னரும் கொடுக்கவும் மனம் வரலை.

On Thu, Mar 29, 2012 at 12:07 AM, Innamburan Innamburan <innamburan@gmail.com> wrote:

அன்றொருநாள்: மார்ச் 29


கி.காளைராசன் Thu, Mar 29, 2012 at 2:07 AM

To: mintamil@googlegroups.com
Cc: thamizhvaasal@googlegroups.com, Innamburan Innamburan
வணக்கம்.

2012/3/29 Geetha Sambasivam <geethasmbsvm6@gmail.com>
கொதிக்கும் மனம் அடங்க வழி இல்லை. அதுவும் அந்தக் கோஹிநூர்! அநியாயம், அக்கிரமம், கொள்ளை. திரும்பத் தர மாட்டாங்களானுபல முறை ஏங்கி இருக்கேன்.  திருட்டு வைரத்தை எப்படிக் கிரீடத்தில் மனசாட்சியே இல்லாமல் பதித்துக்கொள்ள முடிந்தது?? இத்தனை சான்றுகளுக்குப் பின்னரும் கொடுக்கவும் மனம் வரலை.
கோகினூர் வைரம், பூரி ஜெகன்நாதர் ஆலயச் சொத்து,
ஜெகன்நாதர் தலையில் இருக்க வேண்டியது,  அதைத் திரும்பப் பெற
அரசு ஏதும் முயற்சி எடுத்துச் செய்துள்ளதா?  அறிந்திருந்தால் அன்புடன் கூறிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

--
அன்பன்
கி.காளைராசன்


s.bala subramani B+veThu, Mar 29, 2012 at 3:04 AM

Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com


அடடா! சொல்ல மறந்துட்டேனே! ‘பாஞ்சால சிங்கம்’ மஹாராஜா ரஞ்சித் சிங் அவர்கள் தன்னிடமிருந்த விலைமதிப்பில்லாத கோஹினூர் வைரத்தை பூரி ஜெகன்னாதர் ஆலயத்திற்கு நன்கொடை என்று உயில் எழுதி வைத்திருந்தார். அதை கடாசி விட்டு, அந்த டல்ஹெளசி, இந்த மார்ச் 29 இழவின் போது, அதை இங்கிலாந்து ராணியிடம் கொடுத்து விடவேண்டும் என்று ஷரத்துப் போட்டான். அதற்கு சால்ஜாப்பும் சொன்னான். அதெல்லாம், கேட்டால் தான் சொல்லப்படும். ஆக மொத்தம் இங்கிலாந்து ராணிப்பாட்டியின் மணிமகுடத்தில் திருட்டுச்சொத்து.
இன்னம்பூரான்


உங்களை கண்டால் வியப்பாக இருக்கிறது 
இதை படித்தால் ஒரிசா மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள் 

Orissa latest claimant to Kohinoor

 BHUBANESWAR: Orissa is the latest among a legion of claimants to Kohinoor, one of the world's largest diamonds, originally from India, which today adorns the crown of the British monarch. 

An official here said Orissa would stake its claim to the diamond as it is the property of Lord Jagannath, a Hindu god with a wide following in the state. 

The state will soon ask the Central government to bring the diamond back to India, the official, who spoke on condition of anonymity, said. "The jewel is Lord Jagannath's property and should be handed over by the British government to the administration of the temple dedicated to the god in Puri," said the official, who did not want to be named. According to a letter preserved in the National Archives in New Delhi, Maharaja Ranjit Singh, who ruled large parts of northern India in the late 18th and early 19th centuries, had offered the Kohinoor, to Lord Jagannath. The British, however, took away the diamond from Ranjit Singh's son, Dalip Singh, in 1849, the official said. 

"The state government has decided to go through the papers available in various archives about the jewel. Similarly, experts are also reading various other historical evidence to make a strong presentation about its claim," he told IANS. "The microfilm copy of the letter is available with us here," said Bhagirathi Mohapatra, the superintendent of state archives. 

The British government's political agent wrote the letter from a camp near the Khyber pass on July 2, 1829. It was addressed to TA Maddock, the officiating secretary to the Government of India.

 The letter said: "Although the right Hon'ble Governor General of India will have received the melancholy intelligence of the demise of Maharaja Ranjit Singh before my report (on) that event can arrive, I deem it my duty to announce that his highness expired at Lahore on the 27th ultimo." "During the last days of his illness, his highness declared to have bestowed in charity money, jewels and other property to the supposed value of 50 lakhs (5 million) of rupees. Among the jewels, he directed the well-known Coh-I-Nur (Kohinoor) diamond to be sent to the temple of Jagannath," the letter said. The origin and history of the world famous diamond is the subject of an intense debate. According to some historians, it was known originally as the Samantik Mani. Persian king Nadir Shah acquired the gemstone after defeating the then Mughal emperor in 1739 and renamed it as the Kohinoor. Ranjit Singh captured the diamond from Afghan king Shah Shuja in 1813. However, Ranjit Singh's last wishes were not honored as the Kohinoor remained with his son Dalip Singh. After the British annexed Punjab, the then governor-general took possession of the diamond and sent it as a present to Britain's queen Victoria, said Dadhibaban Mishra, a historian. As the diamond was offered to Lord Jagannath, it should be brought to Orissa, said Mishra, a history professor at a government-run college here. A number of priests of the Jagannath Temple have also made a similar demand. (IANS)


Innamburan Innamburan Thu, Mar 29, 2012 at 3:29 AM
To: mintamil@googlegroups.com

The date is July 2, 1839 and not July 2, 1829, as stated.
Innamburan
2012/3/28 s.bala subramani B+ve <sunkenland@gmail.com>
[Quoted text hidden]

renuka rajasekaran Thu, Mar 29, 2012 at 10:29 AM
To: Innamburan Innamburan

செறிவான தொகுப்பு
நல்ல மனமும் நல்ல குணங்களும் கொண்ட மன்னனின் குடும்பம் சின்னாபின்னப்பட சேதி நெஞ்சைப் பிசைகிறது. அதிகாரவெறி - சொத்து வெறி ஆகியன எத்தனை தூரம் செல்லும் என்பதைத் தேர்ந்தெடுத்த வார்த்தைகளால் சித்தரித்திருக்கிகிறீர்கள்.  
மணிமகுடம் மட்டுமா திருட்டுப பொருள் கொண்டது?
இதில் மிகவும் அதிகமான வேதனை தரும் துரோகிகள் துணை!

எனக்கு ஒரு ஐயம் நமது சுதந்திரப போராட்டப் பின்னணியில் -"அண்டா குண்ட்டா செம்பு திருடி ஜெயிலுக்குப் போனவர்களுக்குக் கூட தாமிரப் பத்திரம்" வழங்கப்பெற்று சிறப்பு செய்யப்பட்டதாக ஒரு பேச்சு உண்டு இது உண்மையா?   

[Quoted text hidden]
--
Renuka Rajasekaran

Innamburan Innamburan Thu, Mar 29, 2012 at 12:21 PM
To: 
நன்றி, ரேணுகா! நேற்று நிறைய பேசினோம். மன நிறைவு. துரோகிகள் எல்லாரும் அந்த ராஜ பரம்பரையின் சுற்றம். இதில் டல்ஹெளசி மீன் பிடித்ததில் வியப்பு ஒன்றும். இல்லை.  தாமிரபத்திரம் கேட்காத பாமர சுதேசிகளை எனக்கு தெரியும்.  அவர்களில் நானும் ஒருவன் என்றால், ரொம்ப தப்பில்லை. கொஞ்சம் தான்.தகுதியற்றவர்களும் வாங்கியதை பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன். எல்லாம் அரசியல்.

நேற்ற மாலை Dr. Vernikos PhD: Siting Kills: Moving Heals (NASA's Life Sciences Division: நூலகத்திலிருந்து வந்தது. உங்களை நினைத்துக்கொண்டேன். குழந்தைகளுக்கு என் ஆசிகள்.
அன்புடன்,
இன்னம்பூரான்
[Quoted text hidden]

renuka rajasekaran 
ஆம்
உங்களுடன் பேசியது மன நிறைவாய் இருந்தது
"துரோகிகள் எல்லாரும் அந்த ராஜ பரம்பரையின் சுற்றம்"
பல இல்லறங்களிலும் இது சகஜமாய் இறக்கிறது போல 
ராஜாங்கத்திலும்! 
என்று மடியும் இந்த அகப்போர் - அக்கப்போர்?
பேசுவோம்
வணக்கம்
[Quoted text hidden]
--
Renuka Rajasekaran

Subashini Tremmel Sat, Mar 31, 2012 at 8:00 AM

Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
Cc: Subashini Kanagasundaram


2012/3/28 Innamburan Innamburan <innamburan@gmail.com>

அன்றொருநாள்: மார்ச் 29
திருப்புமுனையா? ஒடித்த முனையா?

..அதற்கு சால்ஜாப்பும் சொன்னான். அதெல்லாம், கேட்டால் தான் சொல்லப்படும். ஆக மொத்தம் இங்கிலாந்து ராணிப்பாட்டியின் மணிமகுடத்தில் திருட்டுச்சொத்து.
:-)
இதோ..!
Inline image 1


சுபா



கி.காளைராசன் Sat, Mar 31, 2012 at 11:16 AM

Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
////‘பாஞ்சால சிங்கம்’ மஹாராஜா ரஞ்சித் சிங் அவர்கள் தன்னிடமிருந்த
விலைமதிப்பில்லாத கோஹினூர் வைரத்தை பூரி ஜெகன்னாதர் ஆலயத்திற்கு நன்கொடை
என்று உயில் எழுதி வைத்திருந்தார். அதை கடாசி விட்டு, அந்த டல்ஹெளசி,
இந்த மார்ச் 29 இழவின் போது, அதை இங்கிலாந்து ராணியிடம் கொடுத்து
விடவேண்டும் என்று ஷரத்துப் போட்டான். அதற்கு சால்ஜாப்பும் சொன்னான்.
அதெல்லாம், கேட்டால் தான் சொல்லப்படும். ஆக மொத்தம் இங்கிலாந்து
ராணிப்பாட்டியின் மணிமகுடத்தில் திருட்டுச்சொத்து.////

ஐயா, அது சரி....
இங்கிலாந்து ராணிப்பாட்டி - எங்களுக்குத்தான் பாட்டி...
உங்களுக்கும் பாட்டிதானா ?

அன்பன்
கி.காளைராசன்

[Quoted text hidden]

Innamburan Innamburan Wed, Apr 4, 2012 at 10:57 PM
To: mintamil@googlegroups.com


ஐயா, அது சரி....
இங்கிலாந்து ராணிப்பாட்டி - எங்களுக்குத்தான் பாட்டி...
உங்களுக்கும் பாட்டிதானா ?

அன்பன்
கி.காளைராசன்
~ நல்ல கேள்வி கேட்டீர்கள், அன்பரே. பக்கிங்ஹாம் அரண்மணையில் பெரிய விருந்து போன்ற நிகழ்ச்சிகள் சிலவற்றின் போது, என் மகன் மருத்துவ கண்காணிப்பாளராக, ஆஜர் ஆவார். மிகவும் உன்னிப்புடன் இருக்கவேண்டும். கடந்த அத்தகைய நிகழ்வில் விண்ட்ஸர் கோமகனும், ராணிப்பாட்டியும் கொஞ்சம் அளவளாவினார்களாம். ராணி உனக்கும் பாட்டி என்றான். அதான். அவனுடைய உத்யோகப்பத்திரத்தில் என்னுடைய பிரியமான பையனே என்று கையொப்பம் போட்டு கொடுத்திருக்கிறார், ராணியம்மை. 1990ல் இங்கிலாந்து போனபோது, அவுக நமக்கு பார்ட்டி வச்சாஹ. அப்போது,'உங்கள் அப்பனுடன் நிழல் சண்டை போட்டேன்' என்று சொன்னேன்.ஒரே சிரிப்பு.
[Quoted text hidden]

கி.காளைராசன் Thu, Apr 5, 2012 at 7:17 AM

Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
ஐயா ‘இ‘னா அவர்களுக்கு வணக்கம்.
On 4/5/12, Innamburan Innamburan <innamburan@gmail.com> wrote:
 ராணி
> உனக்கும் பாட்டி என்றான். அதான். அவனுடைய உத்யோகப்பத்திரத்தில் என்னுடைய
> பிரியமான பையனே என்று கையொப்பம் போட்டு கொடுத்திருக்கிறார், ராணியம்மை.
இதைக்கேட்டு நாங்களும் மிகவும் பெருமைப்படுகிறோம்.

1990ல்
> இங்கிலாந்து போனபோது, அவுக நமக்கு பார்ட்டி வச்சாஹ.
பார்ட்டி வைத்ததால் பாட்டியா? ‘ஹ்ஹ்ஹா,   ஹ்ஹ்ஹா.

அப்போது,'உங்கள் அப்பனுடன்
> நிழல் சண்டை போட்டேன்' என்று சொன்னேன்.ஒரே சிரிப்பு.
அன்பன்
கி.காளைராசன்

[Quoted text hidden]

Geetha Sambasivam Sun, Apr 8, 2012 at 3:16 PM

Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
அருமை.  பாட்டியைப் பார்க்கக் கொடுத்து வைச்சிருக்கு உங்களுக்கு. பாட்டியை ஒரு பேட்டி கண்டு எழுதலாமோ?  இயன்றால்!


[Quoted text hidden]