Saturday, November 16, 2013

இந்தியாவுக்கு நுழைவாயில்:



அன்றொரு நாள்: நவம்பர் 17 இந்தியாவுக்கு நுழைவாயில்

Innamburan Innamburan 17 November 2011 17:26

அன்றொரு நாள்: நவம்பர் 17
இந்தியாவுக்கு நுழைவாயில்

பாமர கீர்த்தியில் அஃறிணைக்கும் இடம் உண்டு. ஏன்? உயிர்மையுமுண்டு. வாழ்வாதார உரிமையும் உண்டு. சொந்தம் கொண்டாடும் பந்து ஜனங்களுமுண்டு. நவம்பர் 17,1869 தான் சூயஸ் கால்வாய் என்ற  ‘இந்தியாவுக்கு நுழைவாயில்’ திறக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டாலும், இதனுடைய உயிர்மையை விவிலியத்திலேயே ‘எக்ஸோடஸ்’ பகுதியில் காண்கிறோம். கி.மு.1470லியே கடற்படைகள் இம்மாதிரியான குறுக்கு வழியில் வந்ததாக, சரித்திர ஆதாரங்கள் கூறுகின்றன. பின்னர்,ராமுஸெஸ், நேச்சோ 2 ஆகிய மன்னர்களும், கி.மு. 522லிருந்து 486 வரை அரசாண்ட பாரசீக மன்னர் டேரியஸ்ஸும், நைல் மஹாநதியையும் சிவந்த கடலையையும் இணைக்கும் இந்த அமைப்பை புனருத்தாரணம் செய்ததாக, வரலாறு கூறுகிறது. கடல் வணிகம் பெருக, அது அக்காலமே உதவியது. கி.பி.எட்டாம் நூற்றாண்டில் இப்படியொரு கால்வாய் இருந்ததற்கு ஆதாரங்கள் உளன. நெப்போலியன் காலத்து அகழாய்வு ஆராய்ச்சிகளும் பழங்கால சூயஸ் கால்வாய் ஒன்றை இனம் காண்பித்தன. ேநச்சோ 2  மன்னர் காலத்தில் எல்லாம் ஆரூடம் கேட்பது வாடிக்கை. ஒரு ஆரூடம் சொல்லியதாம்: ’ விட்டு விடு. உனக்கு ஆதாயமில்லை. மற்றவர்களுக்குத்தான் இது உதவும்’, என்று. பொருத்தமானது தான், சில ஆயிர வருடங்களுக்கு பிறகு. சூயஸ் கால்வாய்  கலோனிய ஆங்கில அரசுக்கு உதவியது. எகிப்து இரண்டாம் பக்ஷம். அந்த கால்வாயை 26 ஜூலை 1956 அன்று, எகிப்து தேசீயமயமாக்கிய பிறகும், பற்பல சர்வதேச இழுபறிகள் ஆனபிறகும் ‘ சூயஸ் கால்வாயை, யுத்தம் நடந்தாலும், சாந்தி நிலவினாலும், எந்த நாட்டுக்கப்பலும் பயன்படுத்தலாம் என்ற விதி அனுஷ்டிக்கப்படுகிறது.
இந்த கால்வாயை கட்டி முடிப்பதற்குள் ஆயிரம் தாவாக்கள். தற்காலம், பெட் ரோலியத்துக்காக, மேற்கத்திய நாடுகள், மனசாட்சியிலிருந்து ஜனநாயகம் வரை பணயம் வைப்பது போல, சூயஸ் கால்வாயும், அவர்களின், குறிப்பாக, ஆங்கிலேய கலோனிய பேராசைக்கு இலக்காக இருந்தது. இது வரை, ஐந்து தடவை இது அடைக்கப்பட்டது. ஒரு தடவை எட்டு வருடங்களுக்கு. 

தற்கால சூயஸ் கால்வாயின் தலபுராணம்: 1854ல் ஃபெரென்ச் ராஜதந்திரியும் பொறியாளரும் ஆன விகோம்டெ ஃபெர்டினாண்ட் மேரி டெ லெஸ்ஸப்ஸ் என்பவரின் தூண்டுகோலால் எகிப்து உடன்பட, 1858ல் ஒரு கம்பெனி துவக்கப்பட்டது. 200 மிலியன் ஃப்ரென்ச் காசுகள் மதிப்பு. 99 வருடங்களுக்குப் பிறகு எகிப்துக்கு சொந்தம் என்று உடன்பாடு. முதல் போட்டது எகிப்தும், ஃபிரான்ஸும்.  சில தெனாலி ராமன் கதை சம்பவங்களுக்குப் பிறகு, நவம்பர் 17, 1869 அன்று, இந்த கால்வாய் சர்வ தேச கடல் பிரயாணத்துக்குத் திறக்கப்பட்டது. பலத்த கொண்டாட்டம், சில வாரங்களுக்கு. உலகின் பல பெருந்தலைகள் கலந்து கொண்டன. 1875ல் லாகவமாக, பிரிட்டீஷ் அரசு எகிப்தின் பங்கை, 400 ஆயிரம் பவுண்டுகளுக்கு வாங்கிக்கொண்டது. பிரிட்டீஷ் கலோனியத்துவமா, சும்மாவா! சர்வதேச கால்வாயான சூயஸ் கால்வாய் பிராந்தியத்தில் ராணுவம் வைக்க முடிவு செய்தது. 1936ல் அதற்கான ஒப்பந்தம் ஒன்றை எகிப்துடன் போட்டுக்கொண்டது. அந்த ஒருதலைப்பக்ஷ ஒப்பந்தத்தின் வலுவை படிப்படியாகக் குறைப்பதாக, ஒரு அரைகுறை மனது ஒப்பந்தம், 1954ல். 1956ல் தேசீயமயமாக்கும்வரை அந்த ‘இரண்டு பெண்டாட்டிக்காரன்’ நிலை நீடித்தது. அதன் பிறகு பிரிட்டீஷ்-ஃப்ரென்ச்-இஸ்ரேல் படையெடுப்பு. கால்வாய் அடைக்கப்பட்டது, அக்டோபர் 1956லிருந்து மார்ச் 1957 வரை. எகிப்து-இஸ்ரேல் போரின் காரணமாக ஜூன் 1967லிருந்து 1975 வரை அடைப்பு. இது எல்லாமே நினைவில் உளன.
சொத்து எகிப்தின் நீர், நீச்சு, நிலம். பத்து வரவு ஆங்கிலேய கலோனிய மோகம். போருக்குப் பிரமேயம், இஸ்ரேலின் இனப்பற்று. விளைவு: கடல் வாணிகம் பாதிப்பு. இப்போது ஒரு உபகதை கேளும். (யாராவது கேக்கறவா இருந்தால்!) உப விளைவு: நோபல் பரிசு, கனடா நாட்டின் வெளியுறவு அமைச்சர் லெஸ்டர் பியர்சன் அவர்களுக்கு. பிரிட்டன் நாசத்தை நாட செல்வதாகக் கருதிய பியர்சன் முதல் தடவையாக ஐ.நா.வின் அமைதிப்படையை அங்கு நிறுத்தி, எகிப்தும், இஸ்ரேலும் அடங்கி நடக்க வழி வகுத்தார். அமெரிக்காவுக்கும் தன் பங்குக்கு,  தன்னிடம் இருந்த பவுண்டு செல்வத்தை விற்று, அதன் மதிப்பை குறைக்கப்போவதாக பயமுறுத்தியது. இங்கிலாந்தில் ஏகப்பட்ட எதிர்ப்பு. 
எது எப்படியோ, சில நல்வரவுகள். ஐ.நா. அமைதி காக்க உருப்படியாக செயல்பட்டது. இது முதல் தடவை; கலோனிய ஆர்பாட்டங்களுக்கு மவுசு குறைய தொடங்கியது; அகில உலக அளவில், தேசாபிமானம் தலையெடுத்தது. ‘வர வர மாமியார் கழுதை போல் ஆன மாதிரி’, பிற்காலம் எகிப்தில் யதேச்சாதிகாரம் கொடி கட்டி பறக்க, வல்லரசுகளும் அதற்கு துணை போக, இந்தியாவும் ஒத்தூத, 2011 ல் மறுபடியும் ஒரு புரட்சி!
இன்னம்பூரான்
17 11 2011
3236425614_e331f20c0f.jpg

உசாத்துணை:

Geetha Sambasivam 17 November 2011 18:54

புதுச் சரித்திரம்.  தெரிந்து கொள்ள முடிந்தது.  பகிர்வுக்கு நன்றி.


Friday, November 15, 2013

பாரிசில் க.கொ.சோ:அன்றொரு நாள்: நவம்பர் 16



அன்றொரு நாள்: நவம்பர் 16 பாரிசில் க.கொ.சோ

Innamburan Innamburan 16 November 2011 16:21


அன்றொரு நாள்: நவம்பர் 16
பாரிசில் க.கொ.சோ

கூடி வாழ்ந்தால் கோடி புண்ணியம் என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்த ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் (யுனெஸ்கோ) தோன்றிய தினம், நவம்பர் 16, 1945. 1995லிருந்து, தன் ஜன்மதினத்தை, அந்த உலக சகிப்புத் தன்மை தினமாக கொண்டாடுகிறது. பொறுத்தார் பூமியாள்வார் என்று தெரியாமலா சொன்னார்கள்! ஐ.நா. வின் சிறப்பு அவ்வப்பொழுது மங்கும். அதனுடைய சில அமைப்புக்கள் செலவு செய்வதில் தடபுடல். யுனெஸ்கோ, டபிள்யூ.ஹெச். ஓ. போன்றவையின் பணி போற்றத்தக்கது. யுனெஸ்கோ போன்ற நிறுவனத்தின் அவசியத்தை 1921 லியே உலக நாடுகள் உணர்ந்திருந்தன. ஸெப்டெம்பர் 21, 1921 அன்று எடுத்தத் தீர்மானமும், ஜனவரி 4, 1922 அன்று அமைக்கப்பட்ட சர்வதேசக்குழுவும், ஆகஸ்ட் 9, 1925 ல் பாரிசில் அமைக்கப்பட்ட முன்னோடி நிறுவனமும் அடித்தளம் என்க. இந்த பாழாப்போன யுத்தம் வந்ததில் எல்லாம் தடைபட்டது. அடுத்தபடியாக அட்லாண்டிக் ஒப்பந்தம், இது வளர வழி வகுத்தது. 1942லிருந்து மூன்று வருடங்களுக்கு இணைந்த கல்வி அமைச்சர்களின் மாநாடு ஆக்கப்பூர்வமாக, பல விஷயங்களை விவாதித்து, 1945ம் வருட நவம்பர் மாத முதல் இரு வாரங்களில் லண்டனில் நடந்த 44 நாடுகளின் கூட்டத்தில், ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் புனர்ஜன்மம் எடுத்தது எனலாம். புகழ்வாய்ந்த விஞ்ஞானி ஜூலியன் ஹக்ஸ்லி அவர்களின் தலைமையில், டிசெம்பர் 1946லிருந்து தீவிரமாகப் பணி துவக்கமாயிற்று. இந்த நிறுவனம் இனவெறியை எதிர்த்ததால், 1956ல் விலகிக்கொண்ட தென்னாஃப்பிரிக்கா, நெல்ஸன் மண்டேலா அவர்கள் தலைமையில் 1994ல் ‘பூ மணத்துடன் திரும்பி வந்த மச்சானாக’ வந்து சேர்ந்தது. 1968ல் உயிர்க்கோளத் திட்டம் கொணர்ந்ததும், 1989ல் உலகளாவிய வலைத்தளம் தொடங்கியதும் குறிப்பிடத்தக்கவை.தற்காலம் 193 நாடுகள் உறுப்பினர்களாகவும், மேலும் ஏழு நாடுகள் கலந்து கொள்ளும் தகுதியுடனும், இந்த நிறுவனத்தின் சேவையில் பங்களிக்கிறனர். 

நமக்கெல்லாருக்கும் மனநிறைவை தரும் செய்தி ஒன்றை பகிர்ந்து கொள்வதில் எனக்கு மட்டில்லா மகிழ்ச்சி. தஞ்சை மாவட்டம். ஒரு சிறிய வட்டம். தஞ்சை, தாராசுரம், கங்கை கொண்ட சோழபுரம். புராதனக்கோயில்கள் மூன்று. அவற்றில் இரண்டில், பெருமானின் திருநாமம் ஒன்றே. அந்த மூன்று கோயில்களும் இந்தியாவின் மரபையும், பண்பையும், கலையார்வத்தையும், உலகமே வியக்கும் அளவில் பிரதிபலிப்பதால், அவற்றை போற்றி பாதுகாப்பதில், யுனெஸ்கோ அதிக கவனம் செலுத்து வருகிறது. அவற்றை இங்கு http://whc.unesco.org/en/list/250 கண்டு மகிழுங்கள்.
இந்தியன் என்று தலை நிமிர்ந்து கொண்டேன். தமிழன் என்று மார்தட்டிக்கொண்டேன். சோழநாட்டு இன்னம்பூரான் என்று காலரை தூக்கி விட்டுக்கொண்டேன்.
இன்னம்பூரான்
16 11 2011
darasuram.jpg
உசாத்துணை:

Thursday, November 14, 2013

சாது மிரண்டால்...!அன்றொரு நாள்: நவம்பர் 15


அன்றொரு நாள்: நவம்பர் 15 சாது மிரண்டால்...!
6 messages

Innamburan Innamburan 15 November 2011 17:25

அன்றொரு நாள்: நவம்பர் 15
சாது மிரண்டால்...!

~ ‘இரண்டு மிலியன் மக்கள் கூடி’ என்ற கூவலுடன்,கையோடு கையாக, அதை பாதியாக குறைத்து  ஒரு மிலியன் மக்கள் மட்டுமே(!),என்று கூறி,  வாஷிங்க்டனில் அதிபர் ஒபாமாவின் மக்கள் மருத்துவ மசோதாவை எதிர்த்து ஆர்பாட்டம் செய்ததாக, லண்டன் டெய்லி மெயிலில், 12 09 2011 செய்தி. எது நிஜமோ? யார் எதற்குப் பிணை?
~ கூடங்குளத்தில் எதிர்ப்பவர்கள் ஒரு கூலிப்பட்டாளமோ என்ற ஐயம், ஒரு மத்திய அமைச்சருக்கு! 
நவம்பர் 6, 1913 அன்று காலை 6:30 மணிக்கு, 57 குழந்தைகளும், 127 பெண்களும், 2,037 ஆண்களும் பின் தொடர, எல்லை கடந்து, சட்டத்தையே மாற்றியமைத்தார், அண்ணல் காந்தி, தென்னாஃப்பிரிக்காவில். ரெளலட் சட்டத்தை எதிர்த்து நாட்டையே ஒன்று திரட்டினார், அவர். 
~ அன்னா ஹஜாரேயின் எதிர்ப்பு அரசை ஆட்டிப்படைக்கிறது. உள்குத்து வலிக்கிறது. 
~ மார்ட்டின் லூதர் கிங் தன் கனவை காந்தீயமுறையில் நனவாக்கினார். 
~ லண்டன் ஹைட் பார்க்கில் யார் வேண்டுமானாலும் எதை பற்றி வேண்டுமானாலும் கையையும் காலையும் ஆட்டி, வாயாடலாம். 
~ இத்தனை பீடிகை, நவம்பர் 15, 1969 அன்று வாஷிங்டனில் வியட்நாம் போரை எதிர்த்து நடந்த மக்களின்  ஆரவாரத்தின் படிப்பினையை புரிந்து கொள்ள:

வியட்நாமிலிருந்து அமெரிக்க வீரர்களை உடனடியாக வாபஸ் பெறவேண்டும் என்று ஒரு மாபெரும் மக்கள் எதிர்ப்பு, அமைதியாக, நடந்தது. 250 ஆயிரம் மக்கள் அதில் கலந்து கொண்டதாக,ஜெர்ரி வில்சன் என்ற உயர் போலீஸ் அதிகாரி தெரிவித்தார். விமானத்திலிருந்து எடுத்தப் புகைப்படங்கள் மூலமாக அது 300 ஆயிரம் என்று ஊகிக்கப்பட்டது. 500 ஆயிரம் என்றும் சிலர் சொல்கிறார்கள். இன்று ஏதோ பெரிய கார்மேகமொன்று இறங்கி வந்தாற்போல், ஒரு மாபெரும் அமைதி பட்டாளம் வந்து இறங்கியது, வாஷிங்டனில். முக்கிய ராஜபாட்டைகளில், ஒரு மனிதக்கடல் ஊர்ந்து சென்றது. அதன் குறிக்கோள்: அதிபர் நிக்சனின் வியட்நாம் அன்னநடை போக்கை கண்டிப்பது. விரைவில் அமெரிக்க வீரர்கள் திரும்பவேண்டும் என்ற கோரிக்கை. அவர்களின் தலைவரான மினசாடோ செனேட்டர் யூஜின்.ஜே. மக்கார்த்தி அவர்களின் சொற்பொழிவின் சாரம், 

“...வரலாறு தெளிவாக கூறுவது யாதெனில்: பழங்காலமோ, தற்காலமோ, மக்களின் நம்பிக்கையை, சுய ஆதாயத்துக்காகவோ அல்லது தவறான அணுமுறையினாலோயோ, பலிகடா செய்த அரசியலர்கள், மக்களுக்கு தீமை விளைவித்தவர்கள் என்க. மக்களின் நம்பிக்கையயும் நன்றியையும் வைத்துக்கொண்டு, ரோமானிய சீசர் சக்ரவர்த்திகள் போருக்கு சென்றார்கள். அம்மாதிரியே மக்களின் ஆதரவை பணயம் வைத்து நெப்போலியன் செய்யாதன செய்தான். இவை எல்லாம் அமெரிக்காவுக்குப் பாடம்...”.
பெரும்பாலும் மாணவர்களே. கறுப்பினம்/இடது சாரி அதிகமாக தென்படவில்லை. கிட்டத்தட்ட 100 இயக்கங்கள் கலந்து கொண்டன. சமாதானம் நாடும் கோஷங்கள் எழுந்தன. அங்குமிங்குமாக போலீஸ் அதிகப்படி என்றாலும், கூட்டத்தின் கட்டுப்பாடு, அவர்களால், தமக்குள், நியமிக்கப்பட்ட வாலண்டியர்களிடம். அவர்கள் கறார். ராணுவம் தலை காட்டவில்லை. போலீஸ் போக்குவரத்து ஒழுங்குமுறையுடன் சரி. “ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, தந்திரம் செய்யும் டிக்கி, போரை நிறுத்து.” என்ற கோஷம் அதிகமாகக் கேட்கப்பட்டது. ஆகஸ்ட் 28, 1963 அன்று 200 ஆயிரம் மக்கள் கூடி மார்ட்டின் லூதர் கிங்க் அவர்களின் சொற்பொழிவை கேட்கக்கூடியது நினைவில் வந்தது. ரிபப்ளிகன் செனெட்டர் சார்லஸ்.இ. குடெல் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.சில சிறிய தீவிர எதிர்ப்பாளர்கள் குழுக்கள் மாலையில் அமெரிக்க தேசியக்கொடியை எரித்தனர். சில்லறை விஷமம் செய்தனர். புகை வாயு வீசப்பட்டது. சிலர் கைதாயினர். மாலை 8 மணிக்கு அவர்கள் கலைய ஆரம்பித்தனர். இரவு 11 மணிக்கு சகஜ நிலை திரும்பியது. மூவாயிரம் இளைஞர்களுக்கு போக்குவரத்து வசதி கிடைக்காததால், முனிசிபாலிட்டியே அவர்களுக்கு ஏற்பாடு செய்து கொடுத்தது.
~~~~~~இதில் நமக்கு என்ன பாடம் இருக்கிறது?
இன்னம்பூரான்
Washington+War+Moratorium+1969.jpg

உசாத்துணை:
12 Sep 2009 – Demonstrators hold up banners on Capitol Hill in Washington on Saturday. 'I will not waste time with those who think that it's just good politics ... 

Thevan 15 November 2011 19:01


அரசாங்கங்கள் மக்களின் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டீர்கள்.
௧௫ நவம்பர், ௨௦௧௧ ௧௦:௫௫ பிற்பகல் அன்று, 


செல்வன் 15 November 2011 23:43



2011/11/15 Innamburan Innamburan <innamburan@gmail.com>
வியட்நாமிலிருந்து அமெரிக்க வீரர்களை உடனடியாக வாபஸ் பெறவேண்டும் என்று ஒரு மாபெரும் மக்கள் எதிர்ப்பு, அமைதியாக, நடந்தது. 250 ஆயிரம் மக்கள் அதில் கலந்து கொண்டதாக,ஜெர்ரி வில்சன் என்ற உயர் போலீஸ் அதிகாரி தெரிவித்தார். விமானத்திலிருந்து எடுத்தப் புகைப்படங்கள் மூலமாக அது 300 ஆயிரம் என்று ஊகிக்கப்பட்டது. 500 ஆயிரம் என்றும் சிலர் சொல்கிறார்கள். இன்று ஏதோ பெரிய கார்மேகமொன்று இறங்கி வந்தாற்போல், ஒரு மாபெரும் அமைதி பட்டாளம் வந்து இறங்கியது, வாஷிங்டனில். முக்கிய ராஜபாட்டைகளில், ஒரு மனிதக்கடல் ஊர்ந்து சென்றது. அதன் குறிக்கோள்: அதிபர் நிக்சனின் வியட்நாம் அன்னநடை போக்கை கண்டிப்பது. விரைவில் அமெரிக்க வீரர்கள் திரும்பவேண்டும் என்ற கோரிக்கை.


இந்த கோமாளிகள் இரண்டாம் உலக யுத்தத்தின்போது ஊர்வலம் போயிருந்தால் இன்னும் ஐரோப்பா ஹிட்லரின் பிடியில் இருந்திருக்கும்.

லிப்ரல்களின் துரோகம் மட்டும் இல்லையெனில் கம்யூனிசத்தை இன்னும் பத்து, இருபது ஆண்டுகளுக்கு முன்பே வீழ்த்தி இருக்க இயலும். ஆனால் லிபரல்களால் நாட்டின் முன்னேற்றத்தை தாமதிக்க முடியுமே ஒழிய தடுத்து நிறுத்த இயலாது.

இப்போது லிபரல் ஜோக்கர்களின் கனவு புராஜக்டான யூரோ குப்புற கவிழ்ந்து கிடக்கிறது.சோஷலிச கட்சி ஆளும் கிரேக்கம் பணால் ஆகிவிட்டது. இன்று நியூயார்க் டைம்ஸில் பால் க்ருக்மன் இத்தாலி அவுட்டனால் யூரோவும் அவுட் என புலம்பி தள்ளி இருக்கிறார்.
--
செல்வன்

Innamburan Innamburan 16 November 2011 08:58
To: mintamil@googlegroups.com
இந்த கோமாளிகள் இரண்டாம் உலக யுத்தத்தின்போது ஊர்வலம் போயிருந்தால்....

~ கனவலைகள் மோதுகின்றன. அப்பாவுக்கு சாமுவேல் தேவசகாயம்னு ஜிக்ரி தோஸ்த். நேரே கிட்சன்லெ வந்து ஃபில்டர் காபி கேப்பார். அவர் வீட்டுக்குப்போனா சுவை மிகுந்த கேக் கிடைக்கும். தோட்டத்திலெ கொடுக்காப்புளி பறிச்சுக்கோன்னு துரட்டி கொண்டு வந்து கொடுப்பார். ஆனா பாருங்கோ! அவர் கிட்ட என்ன பேச்சுக் கொடுத்தாலும் ~ நேருவும் சீனாவும், காந்தியும் திருவள்ளுவரும், சுருட்டில்லா சர்ச்சில், தொல்காப்பியமும் நாமக்கல் கவிஞரும், எப்படி வாணாப்பேசிப்பாருங்கோ, சுவிசேஷத்தவப்புதல்வரான, சாமுவேல் தேவசகாயம் மாமா, ‘கர்த்தர் என்ன சொல்றார்னா’, பரமண்டலத்திலிருக்கும் பரம பிதாவே, இந்த சிவபிரான் படுத்துவதை பாரும்’, ‘விவிலியத்திலிருந்து ஒரு பகுதி தாண்டா, இந்த திவ்யபிரபந்தம்’ என்று விட்டு விளாசுவார்.
 அந்த மாதிரி...
இன்னம்பூரான்
16 11 2011 



செல்வன் 16 November 2011 14:24



2011/11/16 Innamburan Innamburan <innamburan@gmail.com>
~ கனவலைகள் மோதுகின்றன. அப்பாவுக்கு சாமுவேல் தேவசகாயம்னு ஜிக்ரி தோஸ்த். நேரே கிட்சன்லெ வந்து ஃபில்டர் காபி கேப்பார். அவர் வீட்டுக்குப்போனா சுவை மிகுந்த கேக் கிடைக்கும். தோட்டத்திலெ கொடுக்காப்புளி பறிச்சுக்கோன்னு துரட்டி கொண்டு வந்து கொடுப்பார். ஆனா பாருங்கோ! அவர் கிட்ட என்ன பேச்சுக் கொடுத்தாலும் ~ நேருவும் சீனாவும், காந்தியும் திருவள்ளுவரும், சுருட்டில்லா சர்ச்சில், தொல்காப்பியமும் நாமக்கல் கவிஞரும், எப்படி வாணாப்பேசிப்பாருங்கோ, சுவிசேஷத்தவப்புதல்வரான, சாமுவேல் தேவசகாயம் மாமா, ‘கர்த்தர் என்ன சொல்றார்னா’, பரமண்டலத்திலிருக்கும் பரம பிதாவே, இந்த சிவபிரான் படுத்துவதை பாரும்’, ‘விவிலியத்திலிருந்து ஒரு பகுதி தாண்டா, இந்த திவ்யபிரபந்தம்’ என்று விட்டு விளாசுவார்.
 அந்த மாதிரி...


அந்த மாதிரி தோழர்கள் அனைத்தையும் கம்யூனிச கண்னாடி மூலமே பார்த்து ஆதரித்தும், எதிர்த்தும் வந்ததால் அவர்கள் செய்ததை மாத்திரம் இங்கே விளக்க அதே கம்யூனிச கண்னாடி தேவைபடுகிறது.

வியட்னாம் போரை விட மோசமான உலகபோரில் அமெரிக்கா இறங்கியது.அதை உலகெங்கும் இடதுசாரிகள் ஆதரித்தனர்.காரணம் அவர்களின் அபிமான சோவியத்யூனியன் காக்கபடவேண்டும் என்ர எண்ணத்தில். இந்தியாவில் சோவியத்யூனியன் மேல் ஹிட்லர் படை எடுக்கும்வரை "இந்தியா போரில் இறங்ககூடாது" என போராடி வந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சி சோவியத்யூனியன் மேல் ஹிட்லர் படை எடுத்தவுடன் பல்டி அடித்து "இந்தியா உலகயுத்தத்தில் இறங்கவேண்டும்" என்றது.இதே வியட்னாம் என்றதும் "போரை எதிர்க்கிறோம்" என பிளேட் திருப்பி போடபட்டது.

[Quoted text hidden]

Innamburan Innamburan 16 November 2011 16:35

வியட்னாம் போரை விட மோசமான உலகபோரில் அமெரிக்கா இறங்கியது......
~ சாமுவேல் மாமா கிட்ட சொன்னேன். விவிலியம் /பழைய ஏற்பாடு
புத்தகம் 19 - "திருப்பாடல்கள்" அதிகாரம் 2: திருப்பாட்டு 1 படிக்கச்சொன்னார்.
இன்னம்பூரான்

2011/11/16 செல்வன் <holyape@gmail.com>


20

Wednesday, November 13, 2013

வண்ணாத்திக்கு வண்ணான் மேலெ ஆசை!அன்றொரு நாள்: நவம்பர் 14:

அப்டேட்:1:  என் செலவில் ஒரு கம்பிளைச்சால்வை வாங்கிக்கொண்டேன். இப்போது நல்ல குளிர், இங்கே. அதை போத்திக்கொண்டு இருக்கிறேன்.

அப்டேட்:2: நேரு, படேல், ஆஸாத், கிருபளானி, நேதாஜி என்றெல்லாம் இன்று கதை பேசும், அபிப்ராய சிசுக்களுக்கு, பாரதியார் விவரித்த சூரத் காங்கிரஸ் பற்றி தெரியாது என்று நினைக்கிறேன். திலகரும் கோகலேயும் கருத்து வேறுபட்டனர். நேருவுக்கும் படேலுக்கும், ராஜாஜிக்கும் இருந்த நட்புரிமையுடன் கூடிய அபிப்ராய பேதம், இன்று நாம் கண்டு இளிக்கும் கூடா நட்பு கூட்டமைப்புகளின் போலி உறவை விட கோடிக்கணக்கு மேல், அறிவிலிகாள்!
இன்னம்பூரான்
14 11 2013

அன்றொரு நாள்: நவம்பர் 14: வண்ணாத்திக்கு வண்ணான் மேலெ ஆசை!
23 messages

Innamburan Innamburan 13 November 2011 19:31

அன்றொரு நாள்: நவம்பர் 14:
வண்ணாத்திக்கு வண்ணான் மேலெ ஆசை!
ஜவஹர்லால் நேரு (14 11 1889 ~27 05 1964)
விடுதலை வீரர். மஹாத்மா காந்தியின் அரசியல் வாரிசு. இந்தியாவின் நீண்டகால முதல் பிரதமர். குழந்தைகளின் நண்பர். இன்று குழந்தைகள்   தினமாக விழா எடுப்பது முற்றிலும் பொருத்தமே. குமரியிலிருந்து லடாக் வரை, மேற்குக்கோடி ‘ரன் ஆஃப் கட்ச்’ லிருந்து கிழக்குக்கோடி24 பர்காணா வரை பெரும்பாலான இந்திய குடும்பங்கள் இவரை உறவினராகப் பாவித்தன. அவரை பற்றி எதை எழுதுவது? எதை விடுவது? எது தான் உங்களுக்கு தெரியாதது!  அக்காலம் அறியா தற்காலத்தவர்கள் சிலர் அவரை கடுமையாக விமரிசிப்பது உண்டு. ஒரு காலகட்டத்தில் இதழியல் மேதை ராமானந்த சட்டர்ஜி ( அவர் மூன்று தலைமுறைகளின் விழிப்புணர்ச்சியை உரம் போட்டு வளர்த்தவர்)  பிரசுரித்த மாடர்ன் ரிவ்யூவில் நேருவை கண்டிக்கும் போக்கில் ஒரு கட்டுரை வந்தது; ஒரே எதிர்ப்பு. பிறகு தான் தெரியவந்தது, அது அவரே எழுதியது என்று.  அந்த நேரு தற்கால விமர்சனங்களை, அவை உரிமை பிரகடனங்கள் என்று அனுமதித்து விடுவார்.
மனதில் இத்தருணம் தோன்றும் சில நினைவுகளை மட்டும் அசை போடுகிறேன்.
என்றோ படித்தது: ஜவஹர் கல்யாணத்திற்கு, அலஹாபாதிலிருந்து ஒரு பிரத்யேக ரயில் வண்டியில் மாப்பிள்ளை வீட்டார் டில்லி சென்றார்கள் என்று.
மெளண்ட்பேட்டனிடம் நேருஜி அமைச்சர்கள் பட்டியல் இருந்த கவரை கொடுத்தார். பிரித்தால் வெத்துப்பேப்பர்! அத்தனை நெருக்கடி. ஞாபகமறதி. இந்த மாதிரி 500 பக்கங்கள் எழுதலாம், இன்றே.
அப்பா சொன்னது: மோதிலால் நேருவின் மாளிகை ‘ஸ்வராஜ்பவன்’ அவரால் ஒரே மகன் ஜவஹர் பேரில் கிரயம் செய்யப்படுகிறது. மகனாக அல்ல. காங்கிரஸ் கட்சியின் அக்ராசனராக. 
பார்த்தது: நான் நேருஜியை ஆவடி காங்கிரஸ்ஸில் முதல் முறையாக பார்த்தேன். ஜன வெள்ளம். ஜிப்பா ஜேபியில் இருந்த மூக்குக்கண்ணாடியை தேடி, அமர்க்களப்படுத்தி விட்டு, அது கிடைத்தவுடன் அவர் சிரித்த அசட்டுச்சிரிப்பின் வசீகரம் அபரிமிதம், போங்கள்!. பிறகு, 1961-2 என்று ஞாபகம். ஆம். சொன்னதை எல்லாம் மறுபடியும் சொல்கிறேனோ? வயசு ஆயிடுத்தோல்லியோ! மின் தமிழில் புதியவர் வருகையும் உளது. சித்தரஞ்சன் ரயில் இஞ்சின் தொழிற்சாலைக்கு வந்திருந்தார். தேனீர் விருந்தின் போது என் மகனை தூக்கிவைத்துக்கொண்டார். இருவரும் ஒரே சமோசாவை சுவைத்தனர். இரவு விருந்தில் ரொம்பவும் சகஜமாகப் பழகினார். அப்பாவும் பொண்ணுமாக, அவரும் வஸந்தாவும் பேசி மகிழ்ந்தனர். என் கையில் கட்டு. கேலி செய்தார். மறு நாள், அசன்சால் ரயில் நிலையத்தில், வரும் ரயில் வண்டியில், கதவைத் திறந்து கொண்டு நிற்கிறார்! செக்யூரிடியாவது! மண்ணாங்கட்டியாவது! ஒரே ஆரவாரம். மக்களுக்கு அவர் வண்ணாத்தி. அவருக்கு மக்கள் வண்ணன். அப்படி ஒரு ஆசை. 
அடுத்த வருடமே, அவர் அலுவலகம் இருக்கும் கட்டிடத்தில் எனக்குப் பணி. அடிக்கடி தரிசனம் கிடைக்கும். வழி விட்டு, நமஸ்தே சொன்னால், அவரும் பதில் மரியாதை தெரிவிப்பார். ஒரு நாள் எதிர்பாராத விதமாக பார்த்துக்கொண்டபோது, அவருடைய சிவந்த முகம், கருப்பாக, குழம்பிக்கிடந்தது. அத்வானத்தைப்பார்த்து நடந்தார். மரியாதையுடன் தள்ளி நின்ற நாங்கள் யாருமே அவர் கண்ணில் படவில்லை. பிறகு தான் தெரிந்தது, ராணுவ அமைச்சர் வீ.கே.கிருஷ்ணமேனனிடன் ராஜிநாமா கடிதம் வாங்கச்சென்றார், என்று. வீ.கே.க. அவருடைய நண்பர். சைனா யுத்தம் உச்சகட்டம். யாருக்கும் வீ.கே.கே. மீது நம்பிக்கை இல்லை. இருந்தும், பண்புடன் நண்பரை நடத்தினார், பிரதமர்.
எனக்கோ பார்லிமெண்ட் ட்யூட்டி. ஓடினேன். ஒய்.பி.சவான் புதிய ராணுவ அமைச்சர் என்று பிரதமர் அறிவித்தவுடன் கரகோஷம் வானை பிளந்தது. அருகில் இருந்தேனா! அவருடைய அகத்தில் மகிழ்ச்சி இருந்ததாக, முகத்தில் தெரியவில்லை. குடியரசு தினவிழா. சைனா யுத்தம். உச்சகட்டம். பிரதமரின் தலைமையில் ராஜ்பத் ராஜபாட்டையில் நடை ஊர்வலம். இப்படியெல்லாம் தற்காலத்தலைமுறையால் கற்பனை கூட செய்யமுடியாது. ஜான் லால் ஐ.சி.எஸ். தலைமையில் ஒரு இருவர் குழு, பிரதமரை அடை காத்து, மேடைக்கு அழைத்து வர. அடியேன் இரண்டாமவன். அந்தக்காலத்தில் தடால் புடால் ஏற்பாடுகள் கிடையாது. துணியாய் துவண்டு வந்து சேர்ந்தார், நேருஜி. கவலையுடன் டாக்டர்கள். அவருடைய பழைய கேடிலக் காரில் ஏற்றி செல்ல வேண்டும் என்று திட்டம். அது வசமாக கேட்டுக்கதவில் சிக்கிக்கொண்டது. ஏதோ குருட்டு அதிர்ஷ்டம், என் வசம் ஒரு ஜீப் ரகஸ்யமாக இருந்தது. காரிலிருந்து இறக்கி, இவரை ஜீப்பில் ஏற்றிக்கொள்வதற்குள் அவசரம். ஜனாதிபதியின் சாரட் மேடையை நெருங்கிவிட்டது. பிரதமர் அவரை வரவேற்கவேண்டும். கைபேசியாவது, கால் பேசியாவது! எப்படியோ சங்கேதம் செய்து சாரட் புரவிகளை சற்றே தாமதப்படுத்தினோம். ஜீப்பில் ஏறியவுடன் புன்முறுவல். களைத்த புன்முறுவல். அந்தக்காலத்து அதிகாரிகளின் பண்பு போற்றத்தக்கது. திரு.ஜான் லால் என்னை அறிமுகப்படுத்தி, ஜீப் ரகசியத்தை உடைத்தார். ‘ஹோஷியார் லட்கா ஹை’ என்றார், நேருஜி. எனக்கு உச்சி குளிர்ந்தது.
பிறகு ஒரு நாள், நேருஜி மீது திரு.ராம் மனோஹர் லோஹியா நம்பிக்கையில்லா தீர்மானம் கொணர்ந்தார். உத்தியோகஸ்தர் வரிசையில் எக்கச்சக்ககூட்டம். முண்டியடித்துக்கொண்டு , ஒத்தைக்கால் தவத்தில் நின்று குறிப்பு எடுத்தேன். கடுமையான தாக்குதல். லோஹியாவும் நேருவும், விடுதலைப்போரில் தோளுக்குத் தோள் கொடுத்த நண்பர்கள். லோஹியா வீசிய கடுஞ்சொற்களின் சூடு தகித்தது. நேருவின் முகத்தில் உணர்ச்சி கொப்பளித்தது. ஆனால், பாருங்கள். தேதி/தொடர்பு நினைவில் இல்லை. லோஹியா சிறையில். ஜன்ம தினம். ஒரு கூடை அல்ஃபான்சா மாம்பழம். அனுப்பியது, அவரை சிறையிலிட்ட நேருஜி.
ஒரு நாள் வசமாக மாட்டிக்கொண்டோம். ஒரு ஆவணத்தில், வரிசையாக, மூன்று ஸெளந்தரராஜன்கள்! பிரதமரின் வியங்கோள் வினா: Who are these Soundararajans?. எங்கள் உயரதிகாரி ஹரீஷ் ஸரீன் ஐ.சி.எஸ் அவர்கள் பிரதமரிடம் நல்ல பரிச்சியம் உள்ளவர். அவர் ஒரு நாள், ஏதோ ஒரு பிரமேயமாக, இவர்கள் தான் அந்த திரிமூர்த்திகள் என்று சொல்லி வைத்தார். கொள்ளை சிரிப்பு.
நான் 1964ல் மாற்றல் செய்யப்பட்டு வேறு வேலையில் சேர்ந்து விட்டேன். 25 வருடங்கள் கழித்து நேருபூமியான அலஹாபாத்தில் வேலை. அக்காலம் ஸ்வராஜ் பவனில் ஏலம். நேருஜியின் உடைமைகள் சில ஏலம் போடப்பட்டன. எனக்குக் கட்டுப்படியாகாத விலையில் போன அங்கவஸ்திரம் ஒன்றை அலுவலக செலவில், முறையான விதிகள் படி, வாங்கி, கண்ணாடி போட்டு வைத்தேன். என் செலவில் ஒரு கம்பிளைச்சால்வை வாங்கிக்கொண்டேன். இப்போது நல்ல குளிர், இங்கே. போத்திக்கொண்டு இருக்கிறேன், இப்போது.
இன்னம்பூரான்
14 11 2011
jawaharlal-nehru-20rupee-rev.JPG
nehru+family.jpg
children's+day+stamp+1997.jpg

Geetha Sambasivam 13 November 2011 20:23



பசுமை நிறைந்த நினைவுகளே,
பாடிக்களித்த பறவைகளே
என்று பாடலாம் போல் இருக்கிறது உங்கள் நினைவலைகள். 
அக்காலம் அறியா தற்காலத்தவர்கள் சிலர் அவரை கடுமையாக விமரிசிப்பது உண்டு//
இதில் நானும் உண்டு.  ஆகவே உங்களுக்குத் தெரிந்ததை சொல்லக் கூடியவற்றைக் கட்டாயம் பகிர்ந்து கொள்ளுங்கள். பகிர்வுக்கு நன்றி.

2011/11/13 Innamburan Innamburan <innamburan@gmail.com>

அன்றொரு நாள்: நவம்பர் 14:
வண்ணாத்திக்கு வண்ணான் மேலெ ஆசை!

இன்னம்பூரான்
14 11 2011

செல்வன் 13 November 2011 23:01

Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
இந்த இழை ஒரு வரலாற்று பேழை.

--
செல்வன்

Thiruvengada Mani T.K. 14 November 2011 02:09


நன்றி ஐயா நினைவுகளைப் பகிர்ந்து பதிப்மைக்கு. இளைஞர் படித்துப் பயன் பெற வேண்டிய தகவல்கள் பலவும்... இவ்விழைகளில் வருகின்றன.
“இந்த இழை ஒரு வரலாற்றுப் பேழை“ மட்டுமல்ல நினைவுகளின் சுரங்கமும் கூட..... தோண்டத்தோண்ட தங்கக்கட்டிகள்....
தொடருக....
திருவேங்கடமணி
[Quoted text hidden]
--
Dr.T.K.Thiruvengada Mani

[Quoted text hidden]

rajam 14 November 2011 02:21

நல்ல, கூர்மையான, இளமைக்கால நினைவுகள்!
எனக்கும் நேரு மாமா பத்திக் கொஞ்சம் தெரியும்! அவர் பிறந்த நாள் குழந்தைகள் நாள் என்று முதல் முதலாக அறிவிக்கப்பட்டபோது பள்ளியில் ஒரு பச்சை சோப்பு டப்பா பரிசு கொடுத்தார்கள் எனக்கு! ஏன் என்று எனக்குப் புரியவில்லை! :-)
பின்னாளில் ... எங்கள் பூமி மாமா (பிறகு ஒரு நாள் அவர் பாமரகீர்த்தி பற்றி எழுதுகிறேன்) சித்ரா ஸ்டுடியோ ஆரம்பித்துத் தடபுடலாகப் போய்க்கொண்டிருந்தபோது அவர்தான் ஊருக்கெல்லாம் ஃபொட்டாக்ரஃபர். நேரு மதுரைக்கு வந்தபோது பூமி மாமா எடுத்த படம், அவர் மகள் சித்ராவுடன்.  







Nehru-1.tif
211K

Geetha Sambasivam 14 November 2011 02:45


உங்கள் பூமி மாமா பெயர் பாரதியா?? காக்காத்தோப்புத் தெரு போகும் வழியில் குடியிருந்தாரா?  படம் அருமை!  
[Quoted text hidden]


Nehru-1.tif
211K

rajam14 November 2011 03:07


இவர் பெயர் பாரதி இல்லெ, கீதா. இவர் பேரே "பூமி"தான். சீக்கிரமா இவர் பத்திச் சொல்ல ஆசை. எங்க அப்பாவின் சிறுபிள்ளைத் தோழர். இப்பொ காலமாயிட்டார். எங்க குடும்பத்துக்கு ரொம்ப அணுக்கமானவர். மிக மிக நயமான மனிதர். அவர்போல் அவ்வளவு அழகான, பண்புள்ள மனம் கொண்ட மனிதரை நான் பார்த்தது அரிது. 






coral shree 14 November 2011 05:15

ஆகா, அருமை .... மறைந்திருக்கும் புதையல் அனைத்தும் மெல்ல மெல்ல வெளி வரும் போல் உள்ளதே..... இ ஐயா செய்யும் மாயம் இப்போதெல்லாம் எல்லை கடந்து கொண்டிருக்கிறது.... வாழ்க வாழ்க பல்லாயிரம் ஆண்டு! ராஜம் அம்மா, சீதாம்மா பேரா. நாகராஜன் ஐயா , கண்ண் பரமாத்மா....இப்படி அனைத்து புதையல் தளங்களையும் இழுத்துக் கொண்டு வந்து வெளிப்படுத்த வேறு யாரால் ஆகும்.... சூப்பரோ சூப்பர்!
[


Nehru-1.tif
211K

Innamburan Innamburan 14 November 2011 07:31

தன்யனானேன். பற்பல தங்கச்சுரங்கங்கள்.  பூமி மாமா, சாம்பவசிவத்தின் அப்பா, திருநாவுக்கரசின் தந்தை, புலவர் முத்துக்கருப்பனாரின் தந்தை போன்றோரின் பாமரகீர்த்தி வரவேண்டும். ஒரு வேடிக்கை. அந்த சிறியக்கூட்டத்தில், நேருஜி என் மூன்று வயது மகனை தட்டிக்கொடுத்தார். அவன் ஹிந்தியில் அப்போது பிளந்து கட்டுவான். 'முஜ்ஸே ஹாத் மிலாயகா? நஹீன்?' (எனக்கு கைலாகு கொடுப்பீர்களா? இல்லையா?). என்று முறைத்தான். கைலாகு கொடுத்து, தூக்கிக்கொண்டு, பக்கத்தில் இருந்த இருக்கையில் அமர்ந்து, இருவரும் நிதானமாக,சிற்றுண்டி அருந்தினார்கள். நாங்கள் காத தூரத்தில்.இன்னம்பூரான்
14 11 2011
இன்னம்பூரான்
den]


Nehru-1.tif
211K

coral shree 14 November 2011 08:14


எத்துனை அருமையான நினைவலைகள்! புலிக்குப் பிறந்தது பூனையாகுமா என்று நிரூபித்து விட்டார் தங்கள் மகன், முளை விடும் போதே! வாழ்த்துகள் அவருக்கும்.பகிர்விற்கு நன்றி ஐயா.
[


Nehru-1.tif
211K

N. Kannan 14 November 2011 10:09


நான் காந்தித்தாத்தாவைப் பார்த்ததில்லை. ஆனால் நேரு மாமாவைப் பார்த்திருக்கிறேன். 

அப்போது மானாமதுரைவாசம். நேருமாமா வைகைப் பாலத்தைக் கடந்து எங்கோ செல்கிறாராம். காலையிலிருந்து கையில் சின்னக் கொடியுடன் நாங்களெல்லாம் பாலத்தின் மீது காத்திருந்தோம். சில மணி வாட்டலுக்குப் பிறகு வண்டி வந்தது. நேருமாமா ஷெர்வாணியுடன் கையசைத்த வண்ணம். சென்ற முறை டெல்லி போன போது இந்த டெல்லி தர்பார் கருப்பு சூட்டொன்று வாங்கி வந்தேன். எப்போதாவது போடுவதுண்டு. (http://www.subaonline.net/nakannan/ ஒரு சின்னப்படம் இங்கு ஒளிந்து கொண்டு இருக்கிறது). எப்படித்தான் அந்த வேகாத வெய்யிலில் அந்தவுடை போட்டுக்கொண்டு சிரிக்க முடிகிறதோ?

நா.கண்ணன்
2011/11/14 coral shree <coraled@gmail.com>
ஆகா, அருமை .... மறைந்திருக்கும் புதையல் அனைத்தும் மெல்ல மெல்ல வெளி வரும் போல் உள்ளதே..... இ ஐயா செய்யும் மாயம் இப்போதெல்லாம் எல்லை கடந்து கொண்டிருக்கிறது.... வாழ்க வாழ்க பல்லாயிரம் ஆண்டு! ராஜம் அம்மா, சீதாம்மா பேரா. நாகராஜன் ஐயா , கண்ண் பரமாத்மா....இப்படி அனைத்து புதையல் தளங்களையும் இழுத்துக் கொண்டு வந்து வெளிப்படுத்த வேறு யாரால் ஆகும்.... சூப்பரோ சூப்பர்!

-- 
[Quoted text hidden]

Geetha Sambasivam 14 November 2011 11:10


தேட வேண்டி இருக்கே படத்திலே.  நானும் பள்ளி நாட்களிலேயே நேருவைப் பார்த்தேன். அனைவரின் நெஞ்சிலும் பசுமையான நினைவுகள்.


Geetha Sambasivam 14 November 2011 11:13


எழுதுங்க அம்மா.  எங்க குடும்பத்திலே இப்போப் பெரியவங்க அந்தக் காலங்களைப் பற்றிச் சொல்லக் கூடியவர்களே இல்லை.  பூமி என்னும் பெயரும் கேள்விப் பட்டமாதிரிதான் இருக்கு. சித்ரா ஸ்டுடியோ தெரியும். யார் சொந்தக்காரர் என்ற அளவுக்குத் தெரியாது.  என் அப்பாவின் நண்பர் டவுன்ஹால் ரோடில் கிருஷ்ணா ஸ்டுடியோ வைத்திருந்தார்.  எதிரே ரேடியோ மாமா என்று அழைக்கப்பட்ட ரேடியோ பட்டாபியின் வீடு இருக்கும்.


[Quoted text hidden]

N. Kannan 14 November 2011 11:54

:
> தேட வேண்டி இருக்கே படத்திலே.  நானும் பள்ளி நாட்களிலேயே நேருவைப்
> பார்த்தேன். அனைவரின் நெஞ்சிலும் பசுமையான நினைவுகள்.
>

படம் பார்த்து கதை சொல் :-))

அது கருப்பு கோட்டு! வட இந்திய மந்திரிகள் போட்டுக்கொள்வது!

க.>

[Quoted text hidden]

rajam 14 November 2011 16:29


ஜோரான படங்கள்!! முறைத்த பார்வைக் கண்ணன், அரும்புமீசைக் கண்ணன், குறும்புச் சிரிப்புக் கண்ணன் ... இப்படியெல்லாம் உருவாகிவந்திருக்கிறீர்கள்! "குடும்ப நூலகம்" தொடங்கவேண்டும் என்று ஒரு முறை சொல்லியிருந்தீர்கள். செய்துவிட்டீர்களே! பாராட்டு!
:

Narayanan Kannan 14 November 2011 23:10


எனக்குக் கூர்தலியல் (பரிணாமவியல்) பிடிக்கும்! அதன் விளைவு. நான்
தொட்டிலில் தவழ்ந்து கொண்டிருக்கும் படமுண்டு. யார் வீட்டில் கிடக்கிறது
என்று தெரியவில்லை. தேடிப்பிடித்து அங்கு போட வேண்டும்.

யாரோ கேட்டார்கள்! நீ பதின்ம வயது கண்ணனாக மாறும் வாய்ப்புக் கிடைத்தால்
போவாயா என்று. மாட்டேன் என்று தோன்றுகிறது. வாழ்வு தந்த அனுபவங்களுக்கு
நன்றியுடையவனாகி இப்போது உள்ள அனுபவப்புரிதலுடன் இருக்கவே ஆசை. மீசை
வைத்துக் கொண்டால் கொரியாவில் பயப்படுகிறார்கள் :-)

நா.கண்ணன்

கி.காளைராசன் 15 November 2011 09:36


ஐயா ‘இ‘னா அவர்களுக்கு வணக்கம்.
> அன்றொரு நாள்:
நவம்பர் 14:
>
> ஜவஹர்லால் நேரு (14 11 1889 ~27 05 1964)
>
காரைக்குடிக்கு வந்து மத்தியமின் வேதியல் ஆய்வுக் கூடத்தைத் திறந்து
வைத்த போது எடுத்த புகைப்படங்களைப் பார்த்து மகிழ்ந்துள்ளேன்.  அவற்றைச்
சேகரித்து வள்ளல் பிறந்தநாள் அன்று மின்தமிழிலில் வெளியிட
முயற்சிக்கிறேன்.

> மனதில் இத்தருணம் தோன்றும் சில நினைவுகளை மட்டும் அசை போடுகிறேன்.
> அடுத்த வருடமே, அவர் அலுவலகம் இருக்கும் கட்டிடத்தில் எனக்குப் பணி. அடிக்கடி
> தரிசனம் கிடைக்கும். வழி விட்டு, நமஸ்தே சொன்னால், அவரும் பதில் மரியாதை
> தெரிவிப்பார்.

இதற்கெல்லாம் ஒரு கொடுப்பினை உள்ளதல்லவா!


> ஏலம். நேருஜியின் உடைமைகள் சில ஏலம் போடப்பட்டன. எனக்குக் கட்டுப்படியாகாத
> விலையில் போன அங்கவஸ்திரம் ஒன்றை அலுவலக செலவில், முறையான விதிகள் படி,
> வாங்கி, கண்ணாடி போட்டு வைத்தேன்.

படம் இருந்தால் அன்போடு போடுமாறு வேண்டுகிறேன்.

என் செலவில் ஒரு கம்பிளைச்சால்வை
> வாங்கிக்கொண்டேன். இப்போது நல்ல குளிர், இங்கே. போத்திக்கொண்டு இருக்கிறேன்,
> இப்போது.

இப்போதும் இப்படியொரு கொடுப்பினை உண்டல்லவோ!
இதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.

அன்பன்
கி.காளைராசன்

[Quoted text hidden]


rose.jpg
3K

கி.காளைராசன் 15 November 2011 09:39


ஐயா கண்ணன் அவர்களுக்கு வணக்கம்.

சிறுவன், மாணவன், பட்டதாரி, ஆய்வாளர், ஆய்வு நிறைஞர் என அடுத்தடுத்த
படங்கள் அனைத்தும் அருமை. வயது கூடிக்கொண்டே போக.... முடிகுறைந்து கொண்டே
போகிறது.

Innamburan Innamburan 15 November 2011 10:09
To: mintamil@googlegroups.com
நன்றி, காளை ராஜன். அந்த படங்களை வெளியிடுங்கள். பார் அட் லா அவர்களின் விசிறியாகிய  நான் காரைக்குடி வந்து, மத்திய மின் வேதிய ஆய்வுக்கூடத்தின் முதல் டைரக்டர் டாக்டர் பி.பி.டே அவர்களை பேட்டி கண்டு எங்கேயோ பிரசரிக்கக்கொடுத்தேன். வேதிய ஆய்வில் ஆர்வமிருந்தால், என்னை வேலைக்கு எடுத்துக்கொள்வதாகச் சொன்னார். நான் தான் வேறு திசையில் சென்று விட்டேன்.
[Quoted text hidden]

N. Kannan 15 November 2011 10:29


2011/11/15 கி.காளைராசன் <kalairajan26@gmail.com>:
> ஐயா கண்ணன் அவர்களுக்கு வணக்கம்.
>
> சிறுவன், மாணவன், பட்டதாரி, ஆய்வாளர், ஆய்வு நிறைஞர் என அடுத்தடுத்த
> படங்கள் அனைத்தும் அருமை. வயது கூடிக்கொண்டே போக.... முடிகுறைந்து கொண்டே
> போகிறது.
>

 Purely genetics! ஐயா!

எனக்கு விவரம் தெரிந்த போது என் தந்தை என் போன்ற தலையுடன்தான் இருந்தார்.

முழுக்க மொட்டையடிக்கூட ஆசையுள்ளது. முடி குறையக் குறைய அழகு கூட
வாய்ப்புள்ளது. என்னைப் பொறுத்தவரை நான் எனக்கு முக்கியம் என்பதை நான்
பார்ப்போருக்கு சகிக்கக்கூடியவனாக உள்ளேனா என்பதில் அக்கறை கொள்கிறேன்.
இது ஆப்பிள் நிறுவனத்தின் நோக்கு!

நா.கண்ணன்

[Quoted text hidden]

Tthamizth Tthenee 15 November 2011 15:57


பார்த்தேன், படித்தேன்

இன்றுதான் இணையத் தொடர்பு கிடைத்தது

மிகவும் அருமை

அன்புடன்
தமிழ்த்தேனீ

2011/11/15 N. Kannan <navannakana@gmail.com>:

[Quoted text hidden]

rajam 15 November 2011 16:40




முடி குறையக் குறைய அழகு கூட
வாய்ப்புள்ளது.

ஆண்களைப் பொருத்தவரை இது ஓரளவு உண்மையே! :-) அழகு என்பதைவிட மெருகு என்ற சொல் இன்னும் நன்றாகப் பொருந்தும். 


முழுக்க மொட்டையடிக்கூட ஆசையுள்ளது.


முழுக்க மொட்டையடிக்கவும் வேணாம்;  கலிக்கு வந்துவிட்டுப் போகும்வரையிலாவது ... மீசை/தாடி வைத்துக்கொள்ளவும் வேணாம்! மீசை/தாடி எனக்குப் பயம். :-) :-) :-) 
[Quoted text hidden]
[Quoted text hidden]





தணிக்கைக்குணுக்கு-2



தணிக்கைக்குணுக்கு-2

Innamburan S.Soundararajan 13 November 2013 09:28





தணிக்கைக்குணுக்கு-2
Inline images 1
Wednesday, November 13, 2013, 4:55


இன்னம்பூரான்

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். பத்து நாட்களுக்கு முன்னால் 30 10 2013 அன்று தமிழ்நாட்டு சட்டசபையில் சமர்ப்பிவிக்கப் பட்ட ஆடிட் ரிப்போர்ட்டிலிருந்து ஒரு சோறு. அந்த கூத்தைக்கேளுமையா. 1400 ஊழியர்களின் மாதாந்திர சேமிப்பை கஜானாவில் கட்டி விடவேண்டும், அத்துடன் கார்ப்பரேஷன் பங்கையும் கட்டி விடவேண்டும் என்று 2003லேயே வந்த அரசாணையை திரஸ்கரித்தது,திருச்சி கார்ப்பெரேஷன் என்று ஆடிட் குற்றம் சாட்டியது, அந்த ரிப்போர்ட்டில். பத்து வருடமா இதற்கு என்று கேட்டு விடாதீர்கள். அந்த சேமிப்பை விதி மீறி வங்கிகளில் தங்க வைப்பதிலும் மாதக்கணக்காக தாமதம். முனிசிபல் கார்ப்பரேஷன் இதனால் விளைவித்த நஷ்டம் ரூபாய் 33.40 லக்ஷம். இது எந்த தெய்வத்துக்கு ப்ரீதி? என்ன தான் பதில் சொல்றாக என்று பார்த்தால்:

ஆடிட் கிட்ட சொன்னது: எதிர்பாராத தாமதம் என்ற சால்ஜாப்பு.

டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம்: ஆடிட்காரன் சொன்னது பழங்கதை; விதிப்படி செய்து விட்டோமே 2013ல். ஞொய்ங்!

( 2003லிருந்து தாமதமேனோ? -மவுனம்.)

சில ஆவணங்கள் கிடைக்கவில்லை. அதான் தாமதம். (என்ன ஆவணமோ? ஆடிட் ரிப்போர்ட்படி அந்த சால்ஜாப்பு சொல்லவே இல்லையே.)

எனக்கு என்னமோ தோன்றுவது இது தான்: என்னப்பா குப்பற விழுந்துட்டாயே. காயம் பட்டதா?

ரத்தத்தைத் துடைத்துக்கொண்டு பதில்: விழுந்தேனா? நல்லாருக்கு போ! இது புருடா வித்தை.


Image Credit: http://2.bp.blogspot.com/-crEqfwq7Tac/TngFR_bxj8I/AAAAAAAAEZE/G3Cm5UjEPHQ/s320/kunukku.JPG


பிரசுரம்: http://www.vallamai.com/?p=39962#comments


இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Tuesday, November 12, 2013

Just because I enjoyed this caper, I forward what I got  in the net.
Image credit to the original photographers.
Innamburan
12 11 2013

Your dog's reaction when you get home.

Your cat's reaction when you get home.

How you know a dog is hungry.

How you know a cat is hungry.

How a dog feels after misbehaving.

How a cat feels after misbehaving.

How a dog feels when you get him a doggie friend.

How a cat feels when you get it a kitty friend.

How a dog steals food.

How a cat steals food.

When a cat annoys a dog.

When a dog annoys a cat.

A dog's reaction to getting wet.

A cat's reaction to getting wet.

A dog's relationship with birds.

A cat's relationship with birds.

Dog's reaction to a walk.

Cat's reaction to a walk.

Cat at 6 a.m. on Sunday
Oh yes, only it's 4:30 a.m. every day.

Dog at 6 a.m. on Sunday
Until one has loved an animal, a part of one's soul remains unawaken

ராபெர்ட் லூயி ஸ்டீவென்சன்:அன்றொரு நாள்: நவம்பர் 13

அன்றொரு நாள்: நவம்பர் 13 ராபெர்ட் லூயி ஸ்டீவென்சன் (13 11 1850 ~.. 12 1894)

Innamburan Innamburan 13 November 2011 16:05

அன்றொரு நாள்: நவம்பர் 13
ராபெர்ட் லூயி ஸ்டீவென்சன் (13 11 1850 ~.. 12 1894)
பிரதிபலிப்பு, எதிரொலி, பிம்பம், நிழல் ஆகிய/அவை போன்ற சொற்கள் ராபெர்ட் லூயி ஸ்டீவென்சனுக்கும் எனக்கும் உள்ள பிணைப்பை குறிக்கலாம் என்று எழுதும் போதே, எனக்கு சிரிப்பு பொத்துக்கொண்டு வருகிறது. இன்றைய தினம் 1850 ல் எடின்பரோவில் பிறந்து, வக்கீல் தொழிலுக்கு முழுக்குப் போட்டுவிட்டு, பிரிட்டனில் சிறுகதை இலக்கியத்திற்கும், குழந்தைகள் இலக்கியத்துக்கும் வித்திட்டு, புதினங்கள் பல எழுதி, வாசகனோடு ஒரு அன்யோன்ய உறவை ஏற்படுத்திக்கொண்டு, நாடகம், கவிதை, கட்டுரை, இலக்கிய விமர்சனம், இலக்கிய கோட்பாடுகள்,வாழ்க்கை வரலாறு,பயணக்கட்டுரை, இதழிலக்கியம்,காதல் கதைகள், சிறுவர் சாகசக்கதைகள், கற்பனை ஓட்டங்கள்,கட்டுக்கதைகள்,எல்லாவற்றிலும் சக்கை போடு போட்டு, புகழ் படைத்த ராபெர்ட் லூயி ஸ்டீவென்சன் எங்கே? பாடபுத்தகத்தைத் தவிர வேறு ஆங்கிலபுத்தகத்தை கல்லூரி செல்லும் வரை கண்ணில் காணாத நான் எங்கே? இது நிற்கவேண்டாம்!
  1. பாளையங்கோட்டை சைண்ட் சேவியர் கல்லூரியில் இண்டெர்மீடியட். தமிழில் மட்டுமே
படித்த எனக்கு ஆங்கிலத்தில் மட்டும் சொல்லிக்கொடுத்தால் என்ன புரியும்? சுட்டுப்போட்டாலும் ஒரு சொல் கூட புரியவில்லை. ஒரு நாள் காலை குடுகுடுப்பைக்காரன், ‘நல்ல காலம் பொறக்குது‘ என்று சொல்லிவிட்டு போக, அன்றே அதுவும் பிறந்ததே, அதை சொல்லுங்கள்! டைஃபாய்ட். நோ காலேஜ். ஆனால் உசிரு ஊசல். எப்படியோ பிழைத்துக்கொண்டேன். நோ காலேஜ். அவ்வளவு நாட்கள் போகவில்லை. பொழுது போவது எப்படி? அங்கொரு முனிசிபல் நூலகம். ஆர்தர் மீ எழுதிய என்ஸைக்ளோபீடியாவிலிருந்து நிறைய ஆங்கில நூல்கள். சில தமிழ் நூல்கள். Kidnapped என்ற ராபெர்ட் லூயி ஸ்டீவென்சனுடைய நூல் எடுத்து வந்தேன். அன்றிரவு தூங்கவில்லை. அடுத்த நாள்: ராபெர்ட் லூயி ஸ்டீவென்சனுடைய Treasure Island. தினந்தோறும் ஆர்தர் மீ படனம். சில மாதங்களுக்கு பிறகு, ‘நீ எல்லா புத்தகங்களையும் படித்து விட்டாய்‘ என்றார், லைப்ரேரியன். மேலும் படிக்க வசதி செய்து கொடுத்தார். அன்று பிடித்த புத்தக மோகம் இன்று வரை விடவில்லை.
1954: நேர் காணல். ஏதோ ஒரு கேள்விக்கு சொல்ல நேர்ந்தது, ‘ நான் உங்கள் முன்னால்  வந்ததற்கு ஹேது ராபெர்ட் லூயி ஸ்டீவென்சனும், பாளையங்கோட்டை முனிசிபல் நூலக லைப்ரேரியனும் தான்.” போதும் சொந்த சாஹித்யம்.

மறுபடியும் ராபெர்ட் லூயி ஸ்டீவென்சனுக்கு வருவோம். ஜனரஞ்சகத்துக்கு புகழ் பெற்ற ராபெர்ட் லூயி ஸ்டீவென்சனின் புகழ் மங்க தொடங்கியது முதல் உலக யுத்த காலகட்டத்தில். மரபுக்கு மாண்பு மங்க ஆரம்பித்தது. 1973ல் வெளிவந்த ஆக்ஸ்ஃபோர்ட் இலக்கிய தொகுப்பில் உள்ள இரண்டாயிரம் பக்கங்களில், இவருடைய பெயர் காணவில்லை! இப்போது கொஞ்சம் பரவாயில்லை. நூலகத்தில் முன்வரிசையில் இவருடைய Treasure Island. மறுபடியும் படிக்கப்போகிறேன்.
இன்னம்பூரான். 
13 11 2011
rls5n.jpg

உசாத்துணை:

Subashini Tremmel 13 November 2011 17:27



2011/11/13 Innamburan Innamburan <innamburan@gmail.com>
..

  1. பாளையங்கோட்டை சைண்ட் சேவியர் கல்லூரியில் இண்டெர்மீடியட். தமிழில் மட்டுமே
படித்த எனக்கு ஆங்கிலத்தில் மட்டும் சொல்லிக்கொடுத்தால் என்ன புரியும்? சுட்டுப்போட்டாலும் ஒரு சொல் கூட புரியவில்லை. ஒரு நாள் காலை குடுகுடுப்பைக்காரன், ‘நல்ல காலம் பொறக்குது‘ என்று சொல்லிவிட்டு போக, அன்றே அதுவும் பிறந்ததே, அதை சொல்லுங்கள்! டைஃபாய்ட். நோ காலேஜ். ஆனால் உசிரு ஊசல். எப்படியோ பிழைத்துக்கொண்டேன். நோ காலேஜ். அவ்வளவு நாட்கள் போகவில்லை. பொழுது போவது எப்படி? அங்கொரு முனிசிபல் நூலகம். ஆர்தர் மீ எழுதிய என்ஸைக்ளோபீடியாவிலிருந்து நிறைய ஆங்கில நூல்கள். சில தமிழ் நூல்கள். Kidnapped என்ற ராபெர்ட் லூயி ஸ்டீவென்சனுடைய நூல் எடுத்து வந்தேன்.

பொழுது நல்ல வழியில் தான் போயிருக்கின்றது.  :-)
அன்று வாசித்த நூலின் பெயர் இன்றும் உங்களுக்கு ஞாபகம் இருக்கின்றது.  மிகவும் இளம் வயதில் எனது அம்மா வங்கிக் கொடுத்த ஒரு கதை புத்தகம் ஒன்று எனக்கு இன்றும் நினைவுள்ளது. பச்சை மிளகாய் இளவரசி என்பது நூலின் பெயர்.  சில விஷயங்கள் மனதின் ஆழத்தில் பதிந்து விடுன்கின்றன. புத்தகங்களும் தான்.

சுபா

Geetha Sambasivam13 November 2011 20:27


ஆங்கிலத் துணைப்பாட நூலாகப் படித்தது கிட்நாப்ட், ட்ரெஷர் ஐலன்ட் இரண்டும்.  மறுபடி படிக்கணும் போலத்தான் இருக்கு.  பார்க்கலாம். 
2011/11/13 Innamburan Innamburan <innamburan@gmail.com>
[Quoted text hidden]

Innamburan Innamburan 13 November 2011 20:50
To: mintamil@googlegroups.com
G


Kidnapped

&

Treasure Island


I

[Quoted text hidden]

Geetha Sambasivam 13 November 2011 21:05

Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
thank you sir, for the immediate response.