Wednesday, January 15, 2014

ஜூபா! ஜூபா!

அப்டேட்: பின்னர்
15 01 2014

ஜூபா! ஜூபா!
இன்றைய சுபதினம்.
ஜூலை, 8/9, 2011
தேசியம் (நேஷனாலிட்டி), தேசாபிமானம், தேசபக்தி என்ற வரிசையில் தேசாபிலாஷைகளை பற்றி எழுத இன்று உத்தரவாகியது.தேசாபிலாஷை என்ற சொல்லுக்கு பொருள் காண, 1947ல் இந்திய திருநாடு இரண்டுப்பட்டுப்போனதும், ஒரு ராணுவ தலையீட்டுக்குப் பிறகு, பங்களா தேஷ் ஜனித்ததும், ஐக்கிய அமெரிக்க நாடு இரண்டு படும் போல் இருந்த போது, அதிபர் அப்ரஹாம் லிங்கன் தேசியத்தின் ஒருமைப்பாட்டை முன்னிறுத்தியதும், கனடாவில் இரு மொழியபிமானம் இல்லறம் நடத்துவதும், பெர்லின் சுவர் உடைந்ததும் என் நினைவில் வலா வருகின்றன. சேருவதோ, பிரிவதோ, தேசாபிலாஷையின் இலக்கு அல்ல. அதன் இலக்கு தன்னுடைய தேசாபிமானத்தை புரிந்து கொண்டு, தேசியத்தை பாதுகாப்பது.

ஜூலை, 8/9, 2011: தெற்கு சூடான் நாடு சுபஜெனனம். ஐ.நா.வின் 193வது நாடு; ஆஃப்பிரிக்காவிலிருந்து 54வது உறுப்பினர். வடக்கு, தெற்கு பிராந்தியங்களின் ஒரே அமைப்பாக இருந்த சூடானின் அதிபர் ஓமர் அல் பஷீரும், ஐ.நா. முதல்வர் பான் கீ மூன் அவர்களும் வருகை தந்ததும், முதலில் தெற்கு சூடானை சூடான் ஏற்றுக்கொண்ட சுபசூசகமும், புதிய நாட்டின் அதிபர் சல்வா கீர் அவர்களை மக்கள் கொண்டாடியதும் நன்நிமித்தங்களே.

பல்லாண்டுகளாக நிகழ்ந்த உள்நாட்டுப்போரில் உயிரிழந்த 1.5 மிலியம் போராளிகளுக்கு வீர வணக்கம். புரட்சித்தலைவரான ஜான் கரங்க், சமாதான உடன்படிக்கை வரும் முன், சற்றே முன், காலமானார். அவருடைய சமாதி/நினைவு மன்றத்தில் தான், தேசாபிமானத்திருவிழாவும், அஞ்சலியும், தொழுகையும். மக்களின் ஆர்வமும், ஆரவாரமும் திருவிழாவுக்கு மெருகு ஏற்றின. எழுத விஷயமும் ஆர்வமும் எக்கச்சக்கமாக இருந்தாலும், உலக வரலாற்றில் காணப்படாத ஒரு அரிய, நுட்பமான, பெருந்தன்மையின் சிகரமான தேசாபிலாஷையை காண்க; வியப்புடன் காண்க; புதிய நாட்டின் அதிபர் சல்வா கீர் அவர்களின் அரசியல் முதிர்ச்சியையும், மன்னித்தருளும் காந்திய தன்மையையும் கண்டு களித்துடுக.

சூடான் நாட்டு தேசியக்கொடி மரபுக்கேற்ற வகையில் இறக்கப்பட்டது. மக்களின் ஆரவாரம். தாரை தப்பட்டை முழங்க, தெற்கு சூடானின் கொடி ஏற்றப்பட்டது. மக்களின் பலத்த ஆரவாரம். பிறகு ஒரு பிரகடனம். 'அதிபர், இறக்கப்பட்ட பழைய சூடான் நாட்டுக்கொடியை திருப்பித்தரப்போவதில்லை என்றும், அதை நமது இணைந்திருந்த தேசியத்தின் சின்னமாக, கருவூலத்தில் பாதுகாக்கத் தீர்மானித்து விட்டார்.' மக்களின் ஆரவாரம் விண்ணை எட்டியது. ஐயா! அவர்கள் பட்ட இன்னல்களும் இழப்புகளும் கணக்கில் இட முடியாது. இனி வரப்போகும் பிரச்னைகளும், மலையளவு. தென்னாட்டு சிவனே போற்றி! இந்த தெற்கு சூடானையும் காப்பாற்றுவாயாக!
இன்னம்பூரான்
09 07 2011
உசாத்துணை:
http://tx.english-ch.com/teacher/trina/world_flags.gif.jpg

No comments:

Post a Comment