Monday, February 10, 2014

பாருக்குள்ளே நல்ல நாடு எம் பாரத மணித்திருநாடு…! ~4

பாருக்குள்ளே நல்ல நாடு எம் பாரத மணித்திருநாடு…! ~4
Inline image 1


‘நல்ல மாட்டுக்கு ஒரு சூடு’ என்ற சொலவடை தற்கால இந்தியாவின் ‘தற்கொலை மரபுகளை’ குறிக்கிறது என்றால் மிகையல்ல. தனியார் நிர்வாகமானாலும் சரி, அரசு நிர்வாகமானாலும் சரி, கறார், கண்ணியம், கட்டுப்பாடு, தணிக்கை, திரை விலக்கல் ஆகியவை உதவும். குறை காண்பதை விட நிறை செய்வதே உயர்வு என்பது என் கருத்து. நமது அணுகுமுறை பற்றி சில தகவல்கள்:

போனமாதம் அமெரிக்காவின் ஆகாய பயண நிர்வாகம் இந்தியாவின் விமான சேவையில் நம்பிக்கை இழந்ததை அறிவித்தது. இந்திய ஆகாய பயண நிர்வாகம் கறாராக இல்லாததால், இந்த அறிவிப்பு என்று சொல்கிறது. விளைவு: நமது ஆகாய பயண வளர்ச்சி குன்றும். “The lack of commitment to safety is a serious concern...India’s approach has been one of reacting to threats in order to scrape through and meet minimum requirements – and in this case, not even achieving that.” என்ற தர்ம அடி வேறே. சொல்லப்போனால், 2003-2008 ஐந்து வருடங்களில் 3 கோடி அதிக விமானபயணங்கள். ஆனால், கறார் நிர்வாகம் ஆட்குறைவால் திண்டாடியது. 928 ஊழியர்களின் வேலையை 400 ஊழியர்கள் ‘பார்த்துக்கொண்டார்கள்’.
‘ஜுகாத்’ என்ற ஹிந்தி சொல்லின் பொருள்: சட்புட் என்று தற்காலிக ஒட்டு வேலை. இந்தியர்கள் தாங்கள் ஜுகாத்வாலாக்கள் என்று பறை சாற்றுகிறார்கள். வேறு வினை வேண்டாம். தரம், உயர்தரம் எல்லாவற்றையும் குழி பறித்து புதைத்து விடும் இந்த ஜுகாத்.
இந்தியாவின் மருந்து உற்பத்தி $26 பிலியன் டாலர் மதிப்புள்ளது; அதில் பாதி வளர்ந்த நாடுகளுக்கு ஏற்றுமதி. ஜுகாத்வாலாக்கள் அதன் புகழை/ வளர்ச்சியை தவிடுபொடி செய்கிறார்கள். இது உள்குத்து. தர நிர்ணய இலாக்காவில் ஆயிரம் ஊழியர்களின் வேலையை 124 ஊழியர்கள் ‘பார்த்துக்கொண்டார்கள். அதனால் தான் தற்கொலை மரபு என்கிறேன்.
ஒரு காலத்தில் டப்பா கார்கள் மட்டுமே படைத்த இந்தியா தற்காலம் பல விதமான கார்களை உற்பத்தி செய்தாலும், தரம், பாதுகாப்பு என்றால் இரண்டாம் பக்ஷம் தான்.
அணுசக்தி மின் நிலையங்கள் எப்போதுமே சர்ச்சையில். அதை நடுவுநிலையில் நின்று கறார் தணிக்கை செய்வதில்லை. யாருக்கு நஷ்டம்?


2014ல் ஆட்சியை பிடிக்கபோகும் புது அரசு ஜுகாத் மனோபாவத்தை ஒழித்து, வெளிப்படையாக கறார் நிர்வாகம் நடத்தாவிடின் இந்தியா ‘பாருக்குள்ளே நல்ல நாடாக’ இருக்கும் தகுதியை தொலைத்து பல சூடுகள் போட்டுக்கொண்டு மிரண்டு போன மாடு ஆகிவிடும்.

இன்னம்பூரான்

10 02 2014

உசாத்துணை:

http://www.ft.com/cms/s/0/bb4458cc-9029-11e3-a776-00144feab7de.html?ftcamp=crm/email/2014210/nbe/AsiaPacificBusiness/product&siteedition=uk#axzz2svWvqBYD

சித்திரத்துக்கு நன்றி:https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh1w08C4r0e3_E1e0KyZOhwKAX1Jqa3J1AfZxSH_6koJeselO-SIRge319V2n7n0LUncgXFrEk5SpsnNw0opzPuY0LnSdaT_FAFscZG0DoqVd2kohBMzQqPFlzkfuMlAeq-mmu-bij500oK/s1600/card2028.jpg

No comments:

Post a Comment