Wednesday, June 11, 2014

மோடியும், நீயும், நானும். 3

மோடியும், நீயும், நானும். 3


இன்னம்பூரான்
ஜூன் 11, 2014: 20:38 IST/21.00 IST

இந்திய ஜனநாயக மரபின் படி ஜனாதிபதியின்  சொற்பொழிவு, மோடி அரசின் கொள்கையின் எதிரொலியே என்றாலும், பிரதமரின் நன்றி நவிலலும் இந்திய ஜனநாயக மரபே. அந்த தருணத்தில் பிரதமர் மோடி கூறிய கருத்துக்களின் சாராம்சம்.

  1. மாநிலங்களும், மத்திய அரசும் ஆரோக்கியமான கூட்டுறவுடன் இயங்கினால், நாடு வளரும்;
  2. பலமான அடித்தளம் வேண்டுமென்ற மக்களின் கோரிக்கை சம்பிரதாயமானது அல்ல.
  3. ஆக்கபூர்வமான ஆலோசனைகளுக்கு நன்றி நவின்ற பிரதமர், இருள் நீங்கும் என்றார்;
  4. குறுகிய/பிராந்திய பாகுபாடுகளை களைந்து, அரசியல் முரண்களை பெரிது படுத்தாமல், வெற்றி, தோல்வி ஆகியவற்றை மறந்து நாம் யாவரும் தேசநலனை பாராட்டவேண்டும்;
  5. எங்கெங்கும் பரந்த நோக்கமுடைய சமத்துவமே வேண்டும்; 
  6. தேசத்தின் எல்லா அவயவங்களும் அத்தியாவசியமானவை; கட்டுப்பெட்டி திட்டங்கள் அதற்கு உதவா;
  7. ஜனநாயகம் கணக்குக்கேட்கும்; நாட்டின் நலன், பாதுகாப்பு தான் முக்கியம்; வலிமை வேண்டும்;
  8. பாலியல் வன்முறைகளை அரசியல் கருவியாக நோக்கக்கூடாது; மாவோயிஸ்ட் பிரச்னை பற்றி அந்தந்த மாநிலங்களுடன் கலந்தாலோசிக்கவேண்டும் என்றார்;
  9. லஞ்ச வாவண்யம் ஒழிக்க கொள்கை அடிப்படை வகுக்கவேண்டும், முதலில், என்றார்; அதன் பொருட்டு இயங்குவதில் மூடி மெழுகுவது கூடாது என்றார்;
  10. நாடாளுமன்ற உறுப்பினர் மீது எஃப் ஐ ஆர் போடப்பட்டால், ஒரு வருடத்துக்குள் தீர்வு காணவேண்டும் என்ற அவர், கறுப்புப்பணம் பற்றிய கமிட்டி அமைக்கப்பட்டதை சுட்டினார்.
  11. முந்தைய அரசுகள் தேசீய வளர்ச்சிக்கு பணி புரிந்திருந்தை சுட்டிக்காட்டி, அதன் வேகம் போதாது என்றார்; 
  12. மட்டமான அரசு நிர்வாகம் நீரழிவு நோயை விட மோசம் என்ற பிரதமர், மக்களுக்கு சுபிக்ஷம் கிடைத்தால் தான் நாடு வளரும் என்றார்;
  13. நிர்வாகத்தின் மீது மக்களின் நம்பிக்கை குலைந்து விட்டது என்ற பிரதமர், அதை மீட்பது தான் அவசரம் என்றார்;
  14. அரசியல் கட்சிகளை விட தேசம் தான் முக்கியம் என்ற பிரதமர், தான் எல்லா கட்சிகளின் ஒத்துழைப்பை நாடுவதாக சொன்னார்.
-#-

சித்திரத்துக்கு நன்றி: http://www.sobernation.com/wp-content/uploads/2011/12/gratitude.jpg

No comments:

Post a Comment