Thursday, November 13, 2014

NEIGHBORS 4 THE WORLD DIABETES DAY




NEIGHBORS 4 THE WORLD DIABETES DAY






Dear Friends,

I share this chain of mails with you today,The Diabetes Day.  I was very hesitant.  But Common Cause demands that I share this with all in utter humility.

I do so.

Image credit: http://www.diabetesadvocacy.com/images/diabetes%20tattoo%20FB2.jpg


இன்னம்பூரான்


http://innamburan.blogspot.co.uk


http://innamburan.blogspot.de/view/magazine


www.olitamizh.com



Dr.Vijay Viswanathan drvijay@mvdiabetes.com

11/11/13
to me

Dear Sir

Thanks for your nice email and kind words

The piece in Tamil is really good.I will laminate it and place it in our Notice Board in our Hospital in Royapuram

Regrads
Dr Vijay

DR. VIJAY VISWANATHAN, MD., Ph.D., FICP, FRCP (London), FRCP (Glasgow)

Adjunct Professor
The Tamilnadu Dr.MGR Medical University

Member
Governing Body of Association of Physicians of India

Secretary
Diabetic Foot Society of India
Head & Chief Diabetologist
M.V.Hospital for Diabetes (P) Ltd

President,
Prof.M.Viswanathan Diabetes Research Centre
(WHO Collaborating Centre for Research, Education and Training in Diabetes)

No.4, West Mada  Church Street
Royapuram, Chennai - 600 013
Tamilnadu, India.
Ph: +9144 2595 4913 / 14 / 15
Fax : +9144 2595 4919
Website : www.mvdiabetes.com

*********************************************************************
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~1


முன் குறிப்பு:


இப்போதெல்லாம் எனக்கு அச்சம் அதிகரித்து வருகிறது; மிகுந்த பிரயாசையுடன் வெகுளியை அடக்கி வைக்க வேண்டியிருக்கிறது. ஏனென்றால், ‘மாயா மச்சீந்த்ரா’ சிகிச்சை முறைகளும், ‘வேருடன் பிடுங்கும்’ ‘மூலிகை வைத்தியமும், ‘நின்றாலும் குற்றமில்லை; அமர்ந்தாலும் குற்றமில்லை’ அறிவுரைகளும், அதுவும் குறிப்பாக நீரழிவு நோயை அழித்து விடும் சாதனைகளை பற்றியும் மடலாடும் குழுக்களில், லவலேசமும் ஆதாரமில்லாத கருத்துக்களும் உலவி வருகின்றன. அடித்துப்பேசுகிறார்கள். அசட்டுத்தனமான தளங்களிலிருந்து ஈயடிச்சான் காப்பி செய்து போடுகிறார்கள். இதில் பேராபத்து என்றவென்றால், சராசரி மனிதன் இதை எல்லாம் நம்பி, தரமான வைத்தியத்தைத் தவிர்த்து, பிணி மிகுந்து, கண்ணையும், காலையும், சிறுநீரகத்தையும் தொலைத்து செத்துப்போவார்கள். டிஸ்கி போட்டு கதை விட்டாலும், அந்த சராசரி மனிதனின் உயிர் உம்மை பிடித்து வாட்டும்; தேவையா?


எனக்கு அலோபதி வேதபாடமில்லை; மூலிகைகள் மீது மரியாதை; அலோபதி, ஆயுர்வேதம்/ஹோமியோபதி/யுனானி/ சித்தம் எல்லாவற்றிலும் அனுபவரீதியில் நல்லது/கெட்டது பார்த்திருக்கிறேன். நானொரு ‘அன்றொரு நாள்’ பைத்தியம். நவம்பர் 14 ஒரு முக்கியமான தினம். உலகெங்கும் நவம்பர் 14  ‘நீரழிவு’/ டயாபிட்டீஸ் பற்றிய விழிப்புணர்ச்சி தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. அதை முன்னிட்டு நான்  14 11 2011 அன்று எழுதிய கட்டுரையை மீள்பதிவு செய்கிறேன். வல்லமை இதழில், ஓராயிரத்துக்கு மேல், வாசகர்கள் இதை படித்ததாக புள்ளிவிவரம். சிலகாலம் முன்னால் தான் என் வலைப்பூவில் பதிவு செய்தேன். உலகத்து எல்லா பிரதேசங்களிலும் வாழும் தமிழர்கள் அடிக்கடி இதை படிப்பதாக அறிகிறேன்.


அதனால் தான் மீள்பதிவு. நான் கூறும் கருத்துக்களை யார் வேண்டுமானாலும் விமரசிக்கலாம். நிந்திக்கலாம். வரவேற்கலாம். எதிர்க்கலாம். எல்லாம் நல்வரவே. கேள்வி கேட்டால் பதில் சொல்கிறேன். கிண்டல் செய்தால் அதை வைத்து சுண்டல் செய்து விடுகிறேன். நான் இத்தனை விலாவாரியாக, கை நோவ எழுதுவது, பொது நலம் கருதி. ஆகவே, என் கட்டுரையை எதிர்ப்பவர்கள் உரிய ஆதாரம் தரவேண்டும் என பிரார்த்தனை.

அங்குமிங்கும் இடைவிடாமல் ஆய்வு நடந்து வருகிறது. அவற்றிலிருந்து, தனக்கு பிடித்தததை மட்டும் தேவவாக்கு ஆக பதிவு செய்யாதீர்கள்.




____________________________________________________

வல்லமை ஆரோக்கியத்தைப் போற்றும் இதழ். அது சம்பந்தமான ஆலோசனை கட்டுரைகள் மேலும் வர இருக்கின்றன. இத்தருணம் இங்கிலாந்தில் வசித்து வருபவரும், ‘வல்லமை’க்குப் பரிச்சியமானவரும் ஆன இன்னம்பூரானுடன் அளவளாவ நேர்ந்தது. அவர், பல வருடங்களாக தன் குடும்பத்திலும், சுற்றத்திலும், நண்பர் வட்டாரங்களிலும், பற்பல நோய்களின் தன்மையையும், நிவாரணத்தையும் பற்றி அனுபவப்பட்டவர். நீரழிவு தன்மையால் ஆரோக்கியம் குன்றிய நிலையிலும் சிறுநீரகம் ஒன்றை தானம் அளித்தவர். ஆலோசனை மையங்களில் தன்னார்வப்பணி புரிந்தவர். அத்துறையில் பட்டம் பெற்று தகுதி அடைந்தவர். இங்கிலாந்தில் மக்களுக்கு புரியும் வகையில், தரமுயர்ந்த, அவ்வப்பொழுது புதுப்பிக்கப்பட்ட ஆலோசனைகள் மக்களுக்கு இலவசமாகக் கிடைக்கின்றன என்று சொல்லும் அவர், அவற்றையும், தன் அனுபவத்தையும் ‘வல்லமை’ வாசகர்களுடன், வரவேற்பை பொறுத்து, நோயாளியின் அணுகுமுறையை முன்னிறுத்தி, பகிர்ந்து கொள்ள இணைந்துள்ளார். பரிக்ஷார்த்தமாக, இன்றைய தினம், நீரழிவு நோயை பற்றி,அவர் அனுப்பிய சிறிய அறிமுகக்கட்டுரை ஒன்றை, நன்றியுடன், பதிப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி.

-ஆசிரியர்


Mon, Nov 14, 2011 at 12:33 PM

________________________________________________________________________________________


நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~1


சீரகச்சம்பாவும், சிட்டுக்குருவியும், சிங்கக்குட்டியும், நம்மைப்போல் டாக்டரிடம் ஓடுவதில்லை. ஆனால், மனித நாகரீகம் அவற்றையும் டாக்டரிடம் எடுத்துச் செல்கிறது. விவேகம் இங்கு கை கொடுக்கிறது. தனக்கு என்று வரும்போது, மனமும், உடலும்,‘அவரும் இவரும் சொன்னதும்’ ஒன்றையொன்று குழப்பி, திசை மாற்றி, உரியகாலத்தில் தக்கதொரு நிவாரணம் தேடுவதில் சிக்கல்கள் விளைவிக்கக்கூடும். இது என் அனுபவம். எனக்கு ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ ஆசான், ரத்னவேலு சுப்ரமண்யம் என்ற அக்காலத்து பிரபல டாக்டர். என் தந்தை ஒரு தீராதப்பிணியினால் பீடிக்கப்பட்டிருந்தார். டாக்டர் ரத்னவேலு சுப்ரமண்யம் அவரிடம்  நீங்கள் தான் உங்களுக்கு முதல் டாக்டர் என்றார். அதை படிப்பினையாக எடுத்துக்கொண்டேன். நாம் எல்லோரும் அறிந்த விஷயம்: டாக்டருக்கு எஃப். ஐ. ஆர். கொடுப்பது நாம் தான் என்பதும், அவரை சிறு தெய்வமாக அநேகர் கருதுவதும், அந்த நிலையில் நிறுத்தி வைக்கப்படுவதும். இந்த பின்னணியில், இன்றைய தின விழிப்புணர்ச்சியை அணுகுவோமாக.


உலகெங்கும் நவம்பர் 14 அன்று ‘நீரழிவு’/ டயாபிட்டீஸ் பற்றிய விழிப்புணர்ச்சி தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. ஊடகங்கள் எல்லாம் 522/346 மிலியன் டயபிட்டீஸ் நோயாளிகள் என்று புள்ளி விவரங்கள் தருகின்றன. இது என்ன 2ஜி ஆடிட் சமாச்சாரமா என்ன? இரண்டு மதிப்பீடுகள் கொடுத்து, நம்மை அதட்ட?  ஆனால், இது மட்டும் தெளிவு. தனி மனிதரும், மருத்துவத்துறையும், சமுதாயமும், அரசும் கூடி ஆவன செய்யாவிடின், வெள்ளம் தலைக்கு மேல். நாமே நம்மையும், வரும் தலைமுறைகளையும் வஞ்சித்தவர்களாவோம்.

நீரழியா வேதம்:

பிறந்த குழவி முதல் தொண்டு கிழவி வரை எல்லோரும் மிதமான உணவு, சத்துக்கள் குறையாத பதார்த்தங்கள், வேளாவேளை உண்பது, ஃபாஸ்ட் ஃபுட் தவிர்ப்பது என்று இருக்கவேண்டும்;
தினந்தோறும், தவறாமல் தேகப்பயிற்சி செய்யவேண்டும். உடல் நிலையை பொறுத்து, மருத்துவ ஆலோசனை உசிதம்;
நீரழிவு போராட்டம் ஒரு கலை. எல்லாம் மிதமாகவே என்பது தத்துவம். உரியகாலத்தில் உணவும், நேரம் தவறாத மருந்தும் வாழ்நெறி. எச்சரிக்கையாக இருப்பது விவேகம்.
‘கரணம். தப்பினால் மரணம்’ என்பார்கள். உஷாராக இருந்தால் குஷி தான். இல்லையென்றால், ரத்த அழுத்தம், நரம்பு தளர்ச்சி, கண் பார்வை மங்கல், சிறுநீரகக்கோளாறு. எல்லாம் மிஞ்சினால், அகால மரணம்.
என்னுடைய கணிப்பில் நீரழிவு ஒரு ஆரோக்கியம் குன்றிய நிலை,வியாதி என்பதை விட. நிச்சியமாக, அத்துடன், நீண்ட நாட்கள் வாழமுடியும். போக்கடிக்கமுடியாதது, இன்றைய மருத்துவம் அறிந்த வரை. போக்கடிப்பேன் என்று சூளுரைப்பவர்களை தவிர்ப்பது விவேகம்;
சிறார்களை ‘கஷ்குமுஷ்க்கு’ குண்டர் ஆக்காதீர்கள். எடை குறைத்தால், உடை சோபிக்கும். உப்பு குறைத்தால், நீங்களே சோபிப்பீர்கள்;
நீரழிவு வம்சபரம்பரை சொத்து. ஆகவே, முன்னோர்களை பொறுத்து, சந்ததியினர் இன்னல்படக்கூடும். இதையெல்லாம் பார்த்து இல்லறம் அமைப்பது எளிதல்ல. சாத்தியம். ஆனால், பிறக்கும் குழந்தைகளை விழிப்புணர்ச்சியுடன் வளர்க்கும் கடமை உளது;
இன்றைய மருத்துவ ஆலோசனை படி, வம்ச ஆஸ்திக்காரர்கள் கூட நீரழிவு நிலை வருவதை கணிசமாகத் தள்ளிப்போடமுடியும்;
 உலக சுகாதார மையத்தின் டயபிட்டீஸ் துறைத்தலைவர், டா. ரோக்லிக், “கணிசமான அளவுக்கு நீரழிவு நோய் வருவதைத் தடுக்கமுடியும். ஆனால், நாம் உரிய தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கவில்லையானால், தீவிரமானதும், உடல் நலத்தைக் குலைப்பதும், உயிரை குடிப்பதுமான இந்த வியாதி நிலை, உலகை மிகவும் பாதிக்கும்.
 மேலும் சொல்ல இருக்கிறதா? என்ற எதிரொலி கேட்கிறது. ஆம். இருக்கிறது. கேட்டால் பார்க்கலாம்.

(தொடரும்)

இன்னம்பூரான்

14 11 2011

___________________________________






இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

No comments:

Post a Comment