Saturday, March 15, 2014

சிக்குபுக்கு ரயிலே! ஜிக்குப்புக்கு ரயிலே! சாக்கோபுக்கு ரயிலே…

சிக்குபுக்கு ரயிலே! ஜிக்குப்புக்கு ரயிலே! சாக்கோபுக்கு ரயிலே
Update
15 03 2014
Inline image 1
இன்னம்பூரான்
15 03 2014
இன்றைக்கு கூடியும் கூடாத ஜாயிண்ட் பார்லிமெண்டரி கமிட்டி ‘புகழ்’ பி.சி. சாக்கோ அவர்கள் திருவாய் மலர்ந்தருளிய செய்திகள்:
1.காங்கிரசுக்கு ஊழல்களால் சோதனைக்காலம் என்று ‘சாக்கோபுக்கு ரயிலே’ ன்னு புஃப் புஃப்ன்னு ஊதினார். மாஜியாகப்போகும் பிரதமர் மீது ஒரு தாக்குத்தாக்கினார். பொருளியல் வல்லுனராகிய பிரதமர் பொருள் விளக்கம் செய்யவில்லையே ஊடகங்களுக்கு என்று பரிதாபப்பட்டார். யானும் தாம் தவறுகள் பல செய்தேன் என்று பச்சாதாபம் பட்டார்.  அவருடைய ‘அரசியல் இலக்கணமாகிய’ 2 ஜி ரிப்போர்ட்டை யாரும் விவாதிக்கவில்லையே என்று ‘சாக்கோபுக்கு ரயிலே’ ன்னு புஃப் புஃப்ன்னு ஊதினார்.
2. ஆ.ராசா! வா.ராசா! மத்தவங்க ஜே போடுவாங்க. நீங்க ஜீ ஜீ போடுவீங்க. முழுப்பூசணிக்காயை என்ன? பூசணித்தோட்டதையில்ல காணாம அடிச்சுட்டு, ‘அம்மா’ என்னை விமரிசிக்கக் கூடாதுன்னு, ஆடிட்டர் ஜெனெரலுக்கு என்ன தெரியும் என்று ஸ்டிஃப்பா டோஸ் கொடுத்து விட்டு ஜிக்குப்புக்கு ஜிக்குப்புக்கு ரயிலே.. னு ஜட்புட் ஜட்புட் னு எக்காளமிட்டார்.
3.ஊடே புகுந்த ஊடகம் ஒன்று: டிபாசிட் கூட கிடைக்காமல் அல்லாடுபவர்கள் அதிகரித்து வருகிறார்கள். முதல் தேர்தலில் 40 % டிபாசிட் இழந்தார்கள். அது ஏறிக்கிணே போவது மீட்டர் வட்டி மாதிரி. 11வது தேர்தலில் 13,952 வேட்பாளர்களில் 12,688 ஆசாமிகள் டிபாசிட் இழந்தார்கள். இதான் ஐயா பிரதிநிதித்துவம்! 2014ம் வருடம் அரசுக்கு எத்தனை வரவோ?
4.ஒரு ஊடகூகம்: பிஜேபிக்கு 195 சீட் கிடைக்குமாம். ஆனால் அதன் கூட்டணிக்கு மெஜாரிட்டி கிடைக்காது. ததிங்கணத்தோம். ஆனால், விஜயகாந்த் இன்னிக்கு ஆபத்பாந்தவனாக வந்தாரே. நாளை என்ன நடக்குமோ, நானறியேன். காங்கிரஸ் கூட்டணிக்கு 129 ஆம். ஆனால் அதன் கூட்டணிக்கு மெஜாரிட்டி கிடைக்காது. ததிங்கணத்தோம்.
5.காங்கிரஸ் பேரிகை தமுக்கவில்லை. 21ம்தேதி சிக்குபுக்கு ரயிலின் சங்கு ஊதுமாமே?

Image credit:http://img1.dinamalar.com/admin/Bookimages/44426.jpg






Friday, March 14, 2014

சொன்னால் விரோதம் :-$ :
Innamburan S.Soundararajan Fri, Mar 14, 2014 at 8:44 PM

சொன்னால் விரோதம்


இன்னம்பூரான்
14 03 2014
பெண்ணியம், பென்ணியம் என்று போட்டுக்கொடுப்பவர்கள், ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி, இலக்கை ஒதுக்கி, இங்கிதம் பேசுகிறார்கள், அங்கதமாக. பல இழைகள் யான் பழகும் குழுக்களில், மின்னல் அடிக்கின்றன, யதார்த்தை விலக்கி ! முதற்கண்ணாக, பெண்மையின் உரிமை காப்பாற்றப்படவேண்டும். டில்லியில் அதைத் தாக்கி கொலை செய்த பாவிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது, பிரச்னைக்கு தீர்வு அன்று என்பது உறுதி. கரையானை ஒரு நாள் மருந்து அடித்துக் கொல்ல முடியாது. அடித்தளம் புகுந்து வேரொடு களைய வேண்டும்.
இன்றைய அமெரிக்க செய்தி காண்க:
டார்ட்மத் காலேஜில் வன்முறைக்கு ஆளான ஒரு மாணவியின் அபயக்குரல் 50,000 ஆர்வலர்களை உந்தி அழைத்தது. அந்த காலேஜில் மாணவர் தளம் ஒன்றில் ‘வன்முறை கையேடு’ இருக்கிறதாம். அல்ட்ரா வயலெட் என்ற பெண்ணிய குழு விண்ணப்பம் ஒன்றை காலேஜுக்கு அனுப்பியும் உடனே மவுனம் தான் பதில்! ‘துஷ்டனை விரட்டு’ என்பது தான் கோரிக்கை. ஆனாலும், மவுனம் சர்வார்த்த சாதகம். டைட்டில் 9 என்ற சட்டம் இருக்கிறது (http://www2.ucsc.edu/title9-sh/titleix.htm). கேட்பார் இல்லை, ஹார்வேர்ட்டில் கூட !!! வன்முறையும், பாலின தாக்குதல்களும் அந்த டார்ட்மத் காலேஜில் பல்லாண்டு, பல்லாண்டாக இருக்கிறது. தாங்கொண்ணா நிலைக்கு வந்து விட்டோம் என்கிறார்கள், பெண்கள். இணைய தளத்தில் வந்து சமர் புரிவோம் என்கிறார்கள்.  இது நிற்க.
எனக்கு நல்லதோ, கெட்டதோ, பல பாலிய சீரழிப்புகளை பற்றி அறிய வேண்டிய நிர்பந்தம், பல வருடங்களாக எனக்கு அமைந்தது, கிட்டத்தட்ட அரைநூற்றாண்டு காலத்துக்கு. ஆயிரக்கணக்கான நபர்கள் இருக்கும் அலுவலகங்களில் நான் தான் கடைசி அப்பீல் என்று இருந்ததால், எல்லா ரகசியங்களும் என்னிடம் அம்பலம்.  நடுவு நிலை வகிக்க அந்த நிர்பந்தம் உதவியது. மக்கள் மன்ற ஆலோசகராக இருந்த போது, இங்கிலாந்தில் எண்ணற்ற கேசுகள் வர, நான் அவற்றை சட்டரீதியாக திரை போட்டு, தீஸிஸ் எழுத வேண்டி இருந்தது. என் மதிப்புகுந்த பெண்மணியிடம் அதை காட்ட வேண்டியிருந்தது. இதை அனுபவ குப்பையில் போட்டு விடுவார்கள், இதர பெருந்தகையோர். 
எனக்கு நல்லதோ, கெட்டதோ,அமெரிக்காவில் இந்த பிரச்னையை அன்றாடம் கையாளுபவர்களுக்கு, முதல் கட்டத்தில் உதவுவதற்காக, யான் படிக்க வேண்டிருந்த ‘வன்புணர்ச்சி’ ஆய்வு நூல்களையும், பரிகார கையேடுகளையும் பற்றி, நம்முடைய மதிப்புக்குரிய பேராசிரியர். நாகராஜனை தவிர, மற்றவர்கள் முக்காலும் முச்சூடம் கண்டு அறிந்து புரிந்து கொண்டவர்களா என்பதில் எனக்கு ஐயம் உண்டு. அந்த நூல்களின் உசாத்துணைக்கூட கொடுக்க எனக்கு தயக்கம். யாராவது தனிமடலில், பயன்படுத்த வேண்டிய காரணம் சொல்லிக்கேட்டால், எனக்கு அது சம்மதமானால், அனுப்புகிறேன். தனிமடல் ப்ளீஸ்.
Coming to the ‘red herrings afloat’, அமெரிக்காவில் இற்செறிக்கப்பட்ட ஆண்கள்/பெண்கள் இனம், இந்தியாவில் வீட்டில், சுற்றத்தில், தெருவில், பேட்டையில், ஊரில், மாநிலம் தோறும் பேயாட்டம் ஆடுகிறார்கள். இந்த அவலத்தை பற்றி சட்டம், அரசு, சமுதாயம், தனியார் கவலைப்படுவதில்லை.  They are bloody well ‘honour-bound’.  இதை படிக்கும்/படிக்காத எல்லா மனிதர்கள்/மனுஷிகளிடம் நான் கேட்பது: ‘மனசாக்ஷியை தொட்டு சொல்லுங்கள். நீங்கள் எழுதுவதற்கும், சுயமாக அறிந்து கொண்டதற்கும் என்ன வித்தியாசம்/ முரண்பாடு இருக்கிறது?’.
மனக்கிலேசத்துடன் தான் நான் இதை எழுதுகிறேன். எத்தனை நாட்கள் தான் நாம் சால்ஜாப்பில் காலம் தள்ளமுடியும்? பெண்களை தாழ்த்தும், இழிவு படுத்தும் வன்முறைகளை தடுக்க நாம் என்ன தான் செய்ய வேண்டும்? [பெண்களில் வன்முறை செய்து, கொலைகள் செய்து, நிர்தாக்ஷின்யமாக கொடுமைகள் செய்தவர்களை பற்றி என்னிடம் கேஸ்-ஸ்டடிகள் உளன. ஆனால், விவரம் கிடைப்பது அரிது. கிடைத்த வரை ஆண்: பெண் :: 98 : 02].
I have thrown the guantlet. You do what you like. If in doubt, read my evidence placed before the Verma Commission.
இன்னம்பூரான்






FABLES RETOLD: கதை கேளு! கதை கேளு!

MUTHTUPATTAN KATHAI [V & FINAL]





Wednesday, March 12, 2014

FABLES RETOLD: MUTHUPATTAN KATHAI [4]


FABLES RETOLD: MUTHUPATTAN KATHAI [4]





https://www.youtube.com/watch?v=3VuvtzCdg-Y

INNAMBURAN

The most powerful Indians in 2014

The most powerful Indians in 2014: No. 1-10

Express News Service || March 13, 2014 7:14 am

1
NARENDRA MODI, 63 M
2
RAHUL GANDHI, 43 M
3
SONIA GANDHI, 67 F
4
ARVIND KEJRIWAL, 45 M
5
PRANAB MUKHERJEE, 78 M
6
J Jayalalithaa, 66
7
MAMATA BANERJEE, 59 F
8
MAYAWATI, 58 F
9
Justice P Sathasivam, 64 M
10

Mohan Bhagwat, 63 M

Tuesday, March 11, 2014

தனி நபர் மஹாத்மியம் [1]

தனி நபர் மஹாத்மியம் [1]

திருமதி. அப்ராமோவிட்ஸ் (Sheppie Glass Abramowitz) ஒரு தனி நபர் படை. உலகளவில் அகதிகளை மீட்டு புத்துயிர் அளிப்பதில் 17 வருடமாக செயல்ப் படுகிறார். தவிப்பவர்களுக்கு பரிந்து பேசி, ஆகவேண்டியதை செய்வது ஒரு கலை; பயிற்சி; பணி; மனநிறைவு. அதற்கு அட்வகஸி என்று பெயர்.  அமெரிக்க அரசுக்கு இவ்வகையில் அகதிகளுக்கு அவர் செய்த பரிந்துரைகளும், அவற்றின் வெற்றியும் போற்றத்தக்கவை. தனியார் துறைகளுடனும், தன்னார்வக்குழுக்களுடன், அவர் இணைந்து செய்த தொண்டுகளின் புகழ் ஓங்கி நிற்கிறது. 1979-இல் பல்லாயிரக்கணக்கான கம்போடிய அகதிகள் தலை தெறிக்க ஓடோடி வந்த போது, இவர் ஓடோடி செய்த அவசர உதவிகளுக்கு, உலகம் கடன் பட்டுள்ளது. தற்பொழுது, அவர் பெண்ணின அகதிகள் கமிஷனர்.
தகவல்: ஹார்வேர்ட் பல்கலைக்கழக்த்தின் சட்டம்பள்ளி.
இன்னம்பூரான்
11 03 2014
பி.கு.ஆண் தனி நபர்களை தேடிக்கொண்டிருக்கிறேன்.

சித்திரத்துக்கு நன்றி: http://www3.law.harvard.edu/orgs/womeninspiringchange/files/2014/02/Sheppie-Abramowitz.jpg

Monday, March 10, 2014

இனிதே அமைய: 1 , 2 , 3 , ...

இனிதே அமைய: 1 , 2 , 3 , ...


நற்றாய் வணக்கம்

http://www.naamat.org/wp-content/uploads/2011/04/6A_1_Raphael-Lemkin-and-the-Genocide-Convention-788x1024.jpg
இன்னம்பூரான்
10 03 2014

இன்றைய சூழலில் அகிலாண்டேஸ்வரி அயர்ந்து போய்விட்டாள். உக்ரேனில் உலக்கை மோதலொலி. மலேசிய விமானம் மறைந்து போய்விட்டது. எங்கு பார்த்தாலும் சண்டை, சச்சரவு, கொலை, குத்து. புவனமெங்கும் பாவையருக்கு பாதுகாப்பு இல்லை என்ற தோற்றம்.

பாரதமாதா செய்வதறியாமல் தத்தளிக்கிறாள். அரசியல் டபராக்கள் எழுப்பும் ஒலி கர்ணகடூரமாக இருக்கிறது. தேனை வழித்தவன் தேன் கூட்டுக்குத் தீ மூட்டுகிறான். நாட்தோறும் ஒரு ஊழல் கசிகிறது. கோடிக்கணக்கில் அசகாய சுருட்டல். பிரதிநித்துவம் என்ற மக்களாட்சி தத்துவமே தேசிய தேர்தல் வரும் காலகட்டத்தில் கேள்விக்குறியாகி விட்டது. பாரதமாதா பார்வையிழந்த பச்சிளங்குழந்தை போல் பரட்டைத்தலையுடன் விசும்புகிறாள்.

தமிழ் பேசும் பகுதிகளில்  கல்வியில் ஊழல், மருத்துவத்தில் ஊழல். ஊழலில்லாத்துறையில்லையாம்: கல்லும், மண்ணும் காசு கொட்டும் கசானா. நிலம், நீச்சு, அறுவடைக்கு உத்தரவாதமில்லை. தாழ்த்தப்பட்டவர்கள் நசுக்கப்படுகிறார்கள். இனவாதம் தலை விரித்தாடுகிறது. வெட்டிப்பேச்சுக்கு பஞ்சமில்லை. கந்து வட்டி எக்காளமிடுகிறது. கொள்கை, கோட்பாடு எல்லாம் குப்பையிலே. தமிழன்னையோ தலை குனிந்து அழுகிறாள்.

வரலாற்றுப்போக்கில் அலசினால், இவையெல்லாம் புதிய தீவினைகள் அல்ல. ஆனாலும், மக்களின் சிந்தனையும், போக்கும், எழுச்சியும் தீர்வுகள் கண்டுள்ளன. காலசக்ரம் அவற்றையும் கபளீகரம் செய்துள்ளது என்றாலும், மக்களின் சிந்தனையும், போக்கும், எழுச்சியும் கடாசப்படவேண்டிய அலை வரிசையில் இல்லை.  1947-இல் இந்தியா விடுதலை பெற்றதே, இதற்கு சான்று. மக்களின் சிந்தனையும், போக்கும், எழுச்சியும், தீர்வுகளும் காண, விசை தனிமனிதர்களிடன் தான் உளது. அண்ணல் காந்தியும், அப்ரஹாம் லிங்கனும் உதாரணங்கள். அவர்கள் அவதார புருஷர்கள். பாமரனும் பட்டொளி வீசும் சாமரத்தை, அகிலாண்டேஸ்வரிக்கும், பாரதமாதாவுக்கும்,தமிழன்னைக்கும் வீசி, முப்பெரும் தேவிகளின் ஆயாசத்தைக் களைய முடியும், திரு. ராஃபேன் லெம்கின்னைப் போல.

‘இனவெறிக்கொலை’ (genocide) என்ற சொல்லை 1944-இல் அகராதியில் பதித்த இவர், 1933-இல் ‘இனவெறிக்கொலை’ க்கு எதிராக போராடத் தொடங்கினார். நாஜிகளை குற்ற விசாரணை செய்த நூரம்பெர்க் நீதி மன்றத்தில் அவர்களுக்கு எதிராக திறனுடன் வாதாடினார். தன்னுடைய சுற்றத்தில் 40 பேர் இனவெறிக்கு பலியானதை அப்போது தான் அவரால் அறிய முடிந்தது. ஐ.நா. இவரது கோட்பாடுகளை 1948-இல் ஏற்றுக்கொண்டது. அதற்கு பின்னும் எல்லா நாடுகளிலும் பிரசாரம் செய்த இவர், வறுமையில் உழன்று 1959-இல் மறைந்தார். ஒரு குக்கிராமத்தில் பிறந்த திரு. லெம்கின் ஒரு தனி நபர் சாதனையாளர். நமக்கு அவர் மாடல்.


இன்றிலிருந்து இனிதே அமைய: 1 , 2 , 3 , ...” பிரசாரம் தொடங்குகிறது. எந்த சமுதாய அமைப்பும் -அரசியல், தனியார் நிருவாஹம், சாதி, இனம் வகையறா, இந்த இழையின் இலக்கு அன்று. அவர்களை எல்லாம் நல்வழியில் திருப்பும் ஆற்றல் உள்ள தனி நபர் (ஆணும், பெண்ணும்) தான் எமது இலக்கு. நல்லதே நடக்கட்டுமே. இந்த ‘இனியவை 1, 2,3 ... பதிவுகளின் நோக்கு பலிக்கட்டுமே.
சித்திரத்துக்கு நன்றி: http://www.naamat.org/wp-content/uploads/2011/04/6A_1_Raphael-Lemkin-and-the-Genocide-Convention-788x1024.jpg

***

தனி நபர்களால் கடைப்பிடிக்கக் கூடியவை, இவை. நடைமுறையில் செய்து தான் பாருங்களேன்.

அன்பே அமுதசுரபியாம். அதுவே ஆணிவேராம். அதுவே இன்பசாகரமாம். அதுவே ஈர்க்கும் சக்தியாம். அதுவே உவகை பொங்கும் ஊற்றாம். ஊருக்குக் காவல் தெய்வம், அவளே. எழுத்தாலே ஏட்டை அலங்கரிப்பவள், அவளே. ஐயம் யாதுமில்லை, ஐயா. ஒற்றுமைக்கு அவள் தான் கலங்கரை விளக்கு. ‘ஓம்’ என்ற மந்திரமும் அவளே.
[1]




Sunday, March 9, 2014

கீழவெண்மணி அஞ்சலி

கீழவெண்மணி அஞ்சலி
http://photos1.blogger.com/blogger/5483/1279/1600/11_27_13_webdocumentary.jpg
இன்னம்பூரான்
09 03 2014
ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும், 
மாண்டார் வருவோரோ மாநிலத்தீர் !
என்று ஒளவை பிராட்டி பாடியிருந்தாலும், இன்று கருங்கல் நினைவு மண்டபம் அமைத்து 1968ல்
கீழ்வெண்மணி கிராமத்தில் தீயில் கொளுத்தப்பட்டு, கருகி செத்துப்போன 23 குழந்தைகளுக்கும், 16 மகளிருக்கும், ஐந்து ஆண்களுக்கும்  அஞ்சலி செலுத்தப்படும் போது, நாமும் நெடுஞ்சாங்கிடையாக வீழ்ந்து, இறைச்சியும், சாராயமும் படைத்தல் செய்து, மனமுருக கண்ணீர் சொரிந்து அவர்களுக்கு பிரிவுபசாரம் நடத்த கடமைப்பட்டுள்ளோம். விடுதலை பெற்றுவிட்டோம் என்று இந்த பாழாய்போன பூமியில் மார்த்தட்டிக்கொண்ட சண்டியர் அரசியலர், மேல்த்தட்டு துட்டுப்பிடுங்கிகள், சாமியை மதிக்காத பூசாரிகள், தெருப்பொறுக்கிகள், பகல் கொள்ளையர் ஆகியோரை குறைந்த பக்ஷம் கூலிஉயர்வு பணிவுடன் விண்ணப்பித்த பாவத்துக்கு உயிருடன் தகனம் செய்யப்பட்ட மக்கள், இந்த 44 நபர்களும்.
இனி நான் பேசவில்லை. லண்டன் பி பி சியின் 16 மார்ச், 2006 ஒலிப்பதிவு, கீழே. நீண்ட கட்டுரை. 
*
தமிழகத்தில் தலித்துகளின் நிலை குறித்து அவர்களது சென்னை நிருபர் டி.என்.கோபாலன் வழங்கும் புதிய பெட்டகத் தொடர்.

முதல் பாகம்

தீண்டத்தகாதவர்கள், பஞ்சமர்கள், அரிஜனங்கள், பட்டியல் இனத்தவர் என்று பல பெயர்களில் அழைக்கப்படும் தலித்துகளில்உரிமைகள் ஆண்டாண்டு காலமாக மறுக்கப்பட்டு வந்துள்ளது.
இந்தியா விடுதலைபெற்று 58 ஆண்டுகள் ஆன பின்னரும் தமது உரிமைகளுக்காக போராட வேண்டிய நிலையிலேயே அவர்கள் இன்னமும் இருந்துவருகிறார்கள்.
நாகப்பட்டினம் அருகே கீழவெண்மணி என்னும் கிராமத்தில் 1960களில் கூலி உயர்வு கேட்டுப் போராடிய தலித் விவசாய தொழிலாளர்கள் கடும் அடக்கு முறையை சந்திக்க நேர்ந்தது. அவர்களின் குடிசைகளுக்கு தீவைக்கப்பட்டபோது தலித் பிஞ்சுகள் கருகி சாம்பலாகியிருந்தன.
இந்த சம்பவம் பற்றிய தகவல்களுடன் ஆரம்பிக்கிறது தலித்துகள் பற்றிய டி.என்.கோபாலன் வழங்கும் தொடரும் துயரம் என்னும் நிகழ்ச்சித் தொடரின் முதல் பாகம்.
தேவேந்திரகுல வேளாளர் என்று அழைக்கப்படும் பள்ளர் இனத்தவர் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் அதிகம் வாழுகின்றனர்.
ஆதிதிராவிடர் என்றழைக்கப்படும் பறையர், அருந்ததியர் என்றழைக்கப்படும் சக்கிலியர்களைக் காட்டிலும் தேவேந்திரகுல வேளாளர்கள் பொருளாதார ரீதியில் சற்று முன்னேறியவர்களாகக் கருதப்படுகின்றனர்.
சில காலத்துக்கு முன் தென்மாவட்டங்களில் இடைநிலை சாதியினரான முக்குலத்தோர் என்றழைக்கப்படும் தேவர் இனத்தவருக்கும் தேவேந்திரகுல வேளாளருக்கும் இடையே மோதல்கள் ஆங்காங்கே நடந்த வண்ணம் இருந்தன.
சாதிக் கொடுமை பற்றி விழிப்புணர்வு அடைந்த தலித் மக்கள் அந்தத் தளையிலிருந்து வெளிவருவதற்காக முயற்சிகளை எடுத்தபோது - பொதுவள ஆதாரங்களில் தமக்கும் பங்கு உண்டு என்று ஆதிக்க சாதியினரிடம் உரிமைகோரியபோது இந்த மோதல்கள் எழுந்தன.
1995ல் திருநெல்வேலி மாவட்டம் கொடியங்குளத்தில் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தவருக்கு எதிராக பொலிசார் மோசமாக நடந்ததாக குற்றம்சாட்டப்படும் சம்பவம் பற்றியும், தென் மாவட்டங்களில் தற்சமயம் நிலைமை எப்படி மாறி வந்துள்ளது என்பது பற்றியும் இரண்டாம் பாகம் ஆராய்கிறது.
ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் 1940களிலும், ஐம்பதுகளிலும், பலரும் போற்றும் கம்யூனிஸ்ட் தலைவர் சீனிவாசராவ் தலைமையில் நடந்த பல்வேறு போராட்டங்கள் விளைவாக ஆதிதிராவிடர் நிலையில் கணிசமான மாற்றம் ஏற்பட்டிதருப்பதாகக் கருதப்படும் அங்கேயும் ஓரே அவலம்.
பறையர் அல்லது ஆதிதிராவிடர் என்றழைக்கப்படும் தலித் பிரிவினர் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் வாழ்கின்றனர். மாநிலத்தின் மக்கட்தொகையில் 19 சதம் தலித்துகள் என்றால் ஆதிதிராவிடர்கள் அதில் 70 சதம் இருப்பார்கள் எனக் கணக்கிடப்படுகிறது.
பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் குறிப்பிடத்தக்க அளவு கல்வியறிவு பெற்ற சமூகமாக அது கருதப்பட்டாலும், அவர்கள் பெரும்பாலும் நிலமற்ற கூலிகளாகவே இருக்கிறார்கள். அவர்கள் மீதான ஒடுக்குமுறையும் தொடர்வதாகவே ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
1997ஆம் ஆண்டு மதுரை அருகே உள்ள மேலவளவில் ஆதிதிராவிடர் இனத்தைச்சேர்ந்த அதன் பஞ்சாயத்து தலைவர் உட்பட ஆறுபேர் படுகொலை செய்யப்பட்டனர். எட்டாண்டுகள் பின்னரும் அங்கே தலித்துகள் தாங்கள் வஞ்சிக்கப்படுவதாகவே கூறுகின்றனர்.
மேல்சாதியினரோ பிரச்சினை எதுவுமே இல்லை, எல்லாம் சுமுகமாகவே இருக்கிறது என்றனர்.
வடமாவட்டங்களிலும் தலித்துகள் மீதான ஒடுக்குமுறை தொடர்கிறது.
பெரம்பலூர் பகுதியில் பருககல் கிராமத்தில் நாம் ஒரு தேனீர்கடையில் இரண்டுவித குவளைகளைப் பார்த்தோம். ஏன் அப்படி எனக் கேட்டபோது கடை உரிமையாளர் பதிலளிக்கமறுத்துவிட்டார்.
அங்கே இருந்த சில வன்னியர்கள் பாகுபாடு எதுவும் இல்லை என்றனர்.
அண்டைமாவட்டமான கடலூரிலோ சிறுத்த தொண்டமாதேவி என்ற கிராமத்தில் பாதுகாப்பற்ற சில ஆதிதிராவிடவீட்டுப் பெண்களை மேல்சாதியினர் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்துவதாக செய்திகள் இரண்டாண்டுகளுக்கு முன் வந்தன.
தலித் அமைப்பான விடுதலைச்சிறுத்தைகள் இயக்கத்தின் போராட்டத்திற்கு பின் அங்கே நிலைமை கட்டுக்குள் வந்தது.
வன்னியர்களின் பிரதிநிதியாக கருதப்படம் பாட்டாளி மக்கள் கட்சியும் விடுதலைச்சிறுத்தைகள் இயக்கமும் இணைந்து தமிழ்பாதுகாப்பு இயக்கம் இப்போது நடத்திவருவதால் வடமாவட்டங்களில் பதட்டம் சற்று தணிந்திருப்பதாக கருதப்படுகிறது.
கிராமப்புறங்களில் ஒரு சென்ட் நிலம் கூட இல்லாது, ஜீவிப்பதற்கு முற்றிலுமாக நில உடைமையாளர்களை சார்ந்து நிற்கிறார்கள் அருந்ததியர்.
நகர்புறங்களில் செருப்பு தைக்கும் தொழிலாளிகளாகவும் , மற்றும் துப்புரவுப் பணியாளர்களாகவும் நாம் இவர்களை சந்திக்கலாம்.
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறையில் ஆராய்ச்சி செய்துவரும் மாணவர் குருசாமி பல்கலைக்கழக வளாகத்திலேயே பிரச்சினை இருப்பதாக கூறினார்.
கிராமப்புறங்களில் மற்ற தலித் பிரிவினராலேயே தாங்கள் ஒதுக்கப்படுவதாகவும், துன்புறுத்தப்படுவதாகவும்கூட கம்பம் நகர அருந்ததியர் அமைப்பின் தலைவர் கிருஷ்ணன் புகார் கூறினார்.
ஆனால் தேவேந்திரகுலவேளாளர் தலைவர்களில் ஒருவரான பசுபதி பாண்டியனோ அப்படிஒரு சிக்கல் இருப்பதாகவே தன் கவனத்திற்கு வரவில்லை என்கிறார்.
புதிய தமிழகம் கட்சித்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இன்னமும் ஒருபடிமேலே போய் தேவேந்திரகுலத்தவர்க்கும், அருந்ததியருக்கும் இடையே பிரச்சினை இருப்பது எனக்கூறுவதே மேல்சாதியினரின் சதி என்கிறார்.
தேனிமாவட்டத்தில் ஒரு தலித் ஆர்வலர் அருந்ததியர் பின் தங்கியிருப்பதற்காகன காரணம் அவர்களே என்றார்.

துப்புரவுப்பணியாளர்களாகப் பணியாற்றும் ஆதி ஆந்திரர்கள் என்பவர்களும் அருந்ததியர்களாகத்தான் கருதப்படுகிறார்கள். இவர்கள் நிலை இன்னமும் பரிதாபத்திற்குரியதாகத்தான் இருக்கிறது.
சென்னையைச்சேர்ந்த தொழிற்சங்கத்தலைவர் புருஷோத்தமன் மலம் அள்ளும் பழக்கம் முற்றிலுமாக மறைந்துவிடவில்லை என்கிறார்.

தமிழகத்தில் வாழும் தேவேந்திரகுலவேளாளர், ஆதிதிராவிடர், அருந்ததியர் போன்ற தாழ்த்தப்பட்ட பிரிவினரின் அவலநிலை குறித்து இப்பெட்டக நிகழ்ச்சியின் கடந்த பகுதிகளில் பார்த்தோம்.
தலித்துகள் என்றழைக்கப்படும் இச்சமூகம் காலாகாலமாக பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வந்திருக்கிறது. திராவிட இயக்க எழுச்சியின் விளைவாக பிராமண ஆதிககம் கணிசமான அளவு தகர்க்கப்பட்டும்கூட, தலித்மக்களுக்கு சமூக அந்தஸ்து இன்றளவும் மறுக்கப்படுகிறது.
இந்து மத வரையறைகளுக்குள் சிக்கியிருப்பதால்தான் தங்களுககு இப்படிப்பட்ட அவமானங்கள், எனவே மதம் மாறுவதே தங்கள் பிரச்சினைக்கு சரியான தீர்வு என பல தலித் சிந்தனையாளர் கூறிவந்திருக்கின்றனர்.
பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் பலர் கிறித்துவர்களாக மாறியிருக்கின்றனர்.
பின்னர் கிறித்தவத்தில் நீதிகிடைக்காத தலித் மக்கள் இஸ்லாத்தை நாடத்துவங்கினர்.
இப்படியான மதமாற்றங்கள் தலித்துகளின் இந்தப் பிரச்சினைக்கு தீர்வாக அமைந்ததா, அமையுமா என்பதை இந்தப் பகுதியில் ஆராய்கிறார் எமது டி.என். கோபாலன்.
சாதி இறுக்கங்களுக்கு அப்பால் தலித் மக்களின் பிந்தங்கிய நிலைக்கு முக்கிய காரணமாக இருப்பது அவர்களது வறுமையும் எழுத்தறிவின்மையுந்தான் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
இம்மக்களில் 50 வீதத்துக்கும் அதிகமானோர் வறுமைக்கோட்டுக்குக் கீழ்தான் வாழ்கிறார்கள்.
இவர்களது உடமைகளும் மிகவும் குறைவானவையே.
இந்த நிலைகுறித்தும், இவற்றை சமூகம் எவ்வாறு கையாழுகிறது என்பது குறித்து இந்தப் பகுதியில் ஆராய்கிறார் டி.என்.கோபாலன்.
தலித்துகளின் நிலை குறித்து ஆராயும் இந்தப்பெட்டகத்தின் ஏழாவது பகுதியில், தாழ்த்தப்பட்ட மக்கள் அரசியல் அதிகாரத்தை அடைவதில் உள்ள பிரச்சினைகள் குறித்து ஆராயப்படுகிறது.
முக்கிய அரசியல் கட்சிகளில் தலித் இனத்தைச்சேர்ந்த தலைவர்களுக்கு முக்கிய இடம் தரப்படுவதில்லை அவர்கள் வெறும் காட்சிப்பொருளாகத்தான் வைக்கப்படுகிறார்கள் என்று கருதப்படுகிறது.
தலித்துகள் அதிகார மையங்களை வேகமாக நெருங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்கிறார் புதிய தமிழகம் கட்சித்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி.
தமிழ்த் தேசியம் குறித்த அணுகுமுறையில் தலித் அமைப்புகளுக்குள்ளேயே மாறுபட்ட கருத்துக்கள் இருக்கின்றன. புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, தலித்துகள் அரசியல் உரிமைகள் பெற வேண்டுமானால், தமிழ், திராவிடம் போன்ற முழக்கங்களைக் கைவிட வேண்டும் என்கிறார். ஆனால் , விடுதலைச் சிறுத்தைகளோ, இந்த விஷயத்தில் தமிழ் தேசியம் என்பது பிரிவினைவாதமல்ல தலித்துகளை உள்ளடக்கிய தமிழர்கள் தங்களது உரிமைகளைப் பெறுவதே என்று கூறுகிறார்கள்.
தலித் கட்சிகள் தலித்துகளை அணி திரட்டுவது என்பது அரசியல் ரீதியானதாக இல்லாமல் தனிநபர்களைச் சுற்றியதாகவே அமைந்திருக்கிறது என்பது யதார்த்தமான உண்மை என்கிறார் அரசியல் ஆய்வாளர் அ.மார்க்ஸ்.
உசாத்துணை:
சித்திரத்துக்கு நன்றி:http://photos1.blogger.com/blogger/5483/1279/1600/11_27_13_webdocumentary.jpg