Thursday, November 13, 2014

NEIGHBORS 4 THE WORLD DIABETES DAY




NEIGHBORS 4 THE WORLD DIABETES DAY






Dear Friends,

I share this chain of mails with you today,The Diabetes Day.  I was very hesitant.  But Common Cause demands that I share this with all in utter humility.

I do so.

Image credit: http://www.diabetesadvocacy.com/images/diabetes%20tattoo%20FB2.jpg


இன்னம்பூரான்


http://innamburan.blogspot.co.uk


http://innamburan.blogspot.de/view/magazine


www.olitamizh.com



Dr.Vijay Viswanathan drvijay@mvdiabetes.com

11/11/13
to me

Dear Sir

Thanks for your nice email and kind words

The piece in Tamil is really good.I will laminate it and place it in our Notice Board in our Hospital in Royapuram

Regrads
Dr Vijay

DR. VIJAY VISWANATHAN, MD., Ph.D., FICP, FRCP (London), FRCP (Glasgow)

Adjunct Professor
The Tamilnadu Dr.MGR Medical University

Member
Governing Body of Association of Physicians of India

Secretary
Diabetic Foot Society of India
Head & Chief Diabetologist
M.V.Hospital for Diabetes (P) Ltd

President,
Prof.M.Viswanathan Diabetes Research Centre
(WHO Collaborating Centre for Research, Education and Training in Diabetes)

No.4, West Mada  Church Street
Royapuram, Chennai - 600 013
Tamilnadu, India.
Ph: +9144 2595 4913 / 14 / 15
Fax : +9144 2595 4919
Website : www.mvdiabetes.com

*********************************************************************
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~1


முன் குறிப்பு:


இப்போதெல்லாம் எனக்கு அச்சம் அதிகரித்து வருகிறது; மிகுந்த பிரயாசையுடன் வெகுளியை அடக்கி வைக்க வேண்டியிருக்கிறது. ஏனென்றால், ‘மாயா மச்சீந்த்ரா’ சிகிச்சை முறைகளும், ‘வேருடன் பிடுங்கும்’ ‘மூலிகை வைத்தியமும், ‘நின்றாலும் குற்றமில்லை; அமர்ந்தாலும் குற்றமில்லை’ அறிவுரைகளும், அதுவும் குறிப்பாக நீரழிவு நோயை அழித்து விடும் சாதனைகளை பற்றியும் மடலாடும் குழுக்களில், லவலேசமும் ஆதாரமில்லாத கருத்துக்களும் உலவி வருகின்றன. அடித்துப்பேசுகிறார்கள். அசட்டுத்தனமான தளங்களிலிருந்து ஈயடிச்சான் காப்பி செய்து போடுகிறார்கள். இதில் பேராபத்து என்றவென்றால், சராசரி மனிதன் இதை எல்லாம் நம்பி, தரமான வைத்தியத்தைத் தவிர்த்து, பிணி மிகுந்து, கண்ணையும், காலையும், சிறுநீரகத்தையும் தொலைத்து செத்துப்போவார்கள். டிஸ்கி போட்டு கதை விட்டாலும், அந்த சராசரி மனிதனின் உயிர் உம்மை பிடித்து வாட்டும்; தேவையா?


எனக்கு அலோபதி வேதபாடமில்லை; மூலிகைகள் மீது மரியாதை; அலோபதி, ஆயுர்வேதம்/ஹோமியோபதி/யுனானி/ சித்தம் எல்லாவற்றிலும் அனுபவரீதியில் நல்லது/கெட்டது பார்த்திருக்கிறேன். நானொரு ‘அன்றொரு நாள்’ பைத்தியம். நவம்பர் 14 ஒரு முக்கியமான தினம். உலகெங்கும் நவம்பர் 14  ‘நீரழிவு’/ டயாபிட்டீஸ் பற்றிய விழிப்புணர்ச்சி தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. அதை முன்னிட்டு நான்  14 11 2011 அன்று எழுதிய கட்டுரையை மீள்பதிவு செய்கிறேன். வல்லமை இதழில், ஓராயிரத்துக்கு மேல், வாசகர்கள் இதை படித்ததாக புள்ளிவிவரம். சிலகாலம் முன்னால் தான் என் வலைப்பூவில் பதிவு செய்தேன். உலகத்து எல்லா பிரதேசங்களிலும் வாழும் தமிழர்கள் அடிக்கடி இதை படிப்பதாக அறிகிறேன்.


அதனால் தான் மீள்பதிவு. நான் கூறும் கருத்துக்களை யார் வேண்டுமானாலும் விமரசிக்கலாம். நிந்திக்கலாம். வரவேற்கலாம். எதிர்க்கலாம். எல்லாம் நல்வரவே. கேள்வி கேட்டால் பதில் சொல்கிறேன். கிண்டல் செய்தால் அதை வைத்து சுண்டல் செய்து விடுகிறேன். நான் இத்தனை விலாவாரியாக, கை நோவ எழுதுவது, பொது நலம் கருதி. ஆகவே, என் கட்டுரையை எதிர்ப்பவர்கள் உரிய ஆதாரம் தரவேண்டும் என பிரார்த்தனை.

அங்குமிங்கும் இடைவிடாமல் ஆய்வு நடந்து வருகிறது. அவற்றிலிருந்து, தனக்கு பிடித்தததை மட்டும் தேவவாக்கு ஆக பதிவு செய்யாதீர்கள்.




____________________________________________________

வல்லமை ஆரோக்கியத்தைப் போற்றும் இதழ். அது சம்பந்தமான ஆலோசனை கட்டுரைகள் மேலும் வர இருக்கின்றன. இத்தருணம் இங்கிலாந்தில் வசித்து வருபவரும், ‘வல்லமை’க்குப் பரிச்சியமானவரும் ஆன இன்னம்பூரானுடன் அளவளாவ நேர்ந்தது. அவர், பல வருடங்களாக தன் குடும்பத்திலும், சுற்றத்திலும், நண்பர் வட்டாரங்களிலும், பற்பல நோய்களின் தன்மையையும், நிவாரணத்தையும் பற்றி அனுபவப்பட்டவர். நீரழிவு தன்மையால் ஆரோக்கியம் குன்றிய நிலையிலும் சிறுநீரகம் ஒன்றை தானம் அளித்தவர். ஆலோசனை மையங்களில் தன்னார்வப்பணி புரிந்தவர். அத்துறையில் பட்டம் பெற்று தகுதி அடைந்தவர். இங்கிலாந்தில் மக்களுக்கு புரியும் வகையில், தரமுயர்ந்த, அவ்வப்பொழுது புதுப்பிக்கப்பட்ட ஆலோசனைகள் மக்களுக்கு இலவசமாகக் கிடைக்கின்றன என்று சொல்லும் அவர், அவற்றையும், தன் அனுபவத்தையும் ‘வல்லமை’ வாசகர்களுடன், வரவேற்பை பொறுத்து, நோயாளியின் அணுகுமுறையை முன்னிறுத்தி, பகிர்ந்து கொள்ள இணைந்துள்ளார். பரிக்ஷார்த்தமாக, இன்றைய தினம், நீரழிவு நோயை பற்றி,அவர் அனுப்பிய சிறிய அறிமுகக்கட்டுரை ஒன்றை, நன்றியுடன், பதிப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி.

-ஆசிரியர்


Mon, Nov 14, 2011 at 12:33 PM

________________________________________________________________________________________


நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ~1


சீரகச்சம்பாவும், சிட்டுக்குருவியும், சிங்கக்குட்டியும், நம்மைப்போல் டாக்டரிடம் ஓடுவதில்லை. ஆனால், மனித நாகரீகம் அவற்றையும் டாக்டரிடம் எடுத்துச் செல்கிறது. விவேகம் இங்கு கை கொடுக்கிறது. தனக்கு என்று வரும்போது, மனமும், உடலும்,‘அவரும் இவரும் சொன்னதும்’ ஒன்றையொன்று குழப்பி, திசை மாற்றி, உரியகாலத்தில் தக்கதொரு நிவாரணம் தேடுவதில் சிக்கல்கள் விளைவிக்கக்கூடும். இது என் அனுபவம். எனக்கு ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ ஆசான், ரத்னவேலு சுப்ரமண்யம் என்ற அக்காலத்து பிரபல டாக்டர். என் தந்தை ஒரு தீராதப்பிணியினால் பீடிக்கப்பட்டிருந்தார். டாக்டர் ரத்னவேலு சுப்ரமண்யம் அவரிடம்  நீங்கள் தான் உங்களுக்கு முதல் டாக்டர் என்றார். அதை படிப்பினையாக எடுத்துக்கொண்டேன். நாம் எல்லோரும் அறிந்த விஷயம்: டாக்டருக்கு எஃப். ஐ. ஆர். கொடுப்பது நாம் தான் என்பதும், அவரை சிறு தெய்வமாக அநேகர் கருதுவதும், அந்த நிலையில் நிறுத்தி வைக்கப்படுவதும். இந்த பின்னணியில், இன்றைய தின விழிப்புணர்ச்சியை அணுகுவோமாக.


உலகெங்கும் நவம்பர் 14 அன்று ‘நீரழிவு’/ டயாபிட்டீஸ் பற்றிய விழிப்புணர்ச்சி தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. ஊடகங்கள் எல்லாம் 522/346 மிலியன் டயபிட்டீஸ் நோயாளிகள் என்று புள்ளி விவரங்கள் தருகின்றன. இது என்ன 2ஜி ஆடிட் சமாச்சாரமா என்ன? இரண்டு மதிப்பீடுகள் கொடுத்து, நம்மை அதட்ட?  ஆனால், இது மட்டும் தெளிவு. தனி மனிதரும், மருத்துவத்துறையும், சமுதாயமும், அரசும் கூடி ஆவன செய்யாவிடின், வெள்ளம் தலைக்கு மேல். நாமே நம்மையும், வரும் தலைமுறைகளையும் வஞ்சித்தவர்களாவோம்.

நீரழியா வேதம்:

பிறந்த குழவி முதல் தொண்டு கிழவி வரை எல்லோரும் மிதமான உணவு, சத்துக்கள் குறையாத பதார்த்தங்கள், வேளாவேளை உண்பது, ஃபாஸ்ட் ஃபுட் தவிர்ப்பது என்று இருக்கவேண்டும்;
தினந்தோறும், தவறாமல் தேகப்பயிற்சி செய்யவேண்டும். உடல் நிலையை பொறுத்து, மருத்துவ ஆலோசனை உசிதம்;
நீரழிவு போராட்டம் ஒரு கலை. எல்லாம் மிதமாகவே என்பது தத்துவம். உரியகாலத்தில் உணவும், நேரம் தவறாத மருந்தும் வாழ்நெறி. எச்சரிக்கையாக இருப்பது விவேகம்.
‘கரணம். தப்பினால் மரணம்’ என்பார்கள். உஷாராக இருந்தால் குஷி தான். இல்லையென்றால், ரத்த அழுத்தம், நரம்பு தளர்ச்சி, கண் பார்வை மங்கல், சிறுநீரகக்கோளாறு. எல்லாம் மிஞ்சினால், அகால மரணம்.
என்னுடைய கணிப்பில் நீரழிவு ஒரு ஆரோக்கியம் குன்றிய நிலை,வியாதி என்பதை விட. நிச்சியமாக, அத்துடன், நீண்ட நாட்கள் வாழமுடியும். போக்கடிக்கமுடியாதது, இன்றைய மருத்துவம் அறிந்த வரை. போக்கடிப்பேன் என்று சூளுரைப்பவர்களை தவிர்ப்பது விவேகம்;
சிறார்களை ‘கஷ்குமுஷ்க்கு’ குண்டர் ஆக்காதீர்கள். எடை குறைத்தால், உடை சோபிக்கும். உப்பு குறைத்தால், நீங்களே சோபிப்பீர்கள்;
நீரழிவு வம்சபரம்பரை சொத்து. ஆகவே, முன்னோர்களை பொறுத்து, சந்ததியினர் இன்னல்படக்கூடும். இதையெல்லாம் பார்த்து இல்லறம் அமைப்பது எளிதல்ல. சாத்தியம். ஆனால், பிறக்கும் குழந்தைகளை விழிப்புணர்ச்சியுடன் வளர்க்கும் கடமை உளது;
இன்றைய மருத்துவ ஆலோசனை படி, வம்ச ஆஸ்திக்காரர்கள் கூட நீரழிவு நிலை வருவதை கணிசமாகத் தள்ளிப்போடமுடியும்;
 உலக சுகாதார மையத்தின் டயபிட்டீஸ் துறைத்தலைவர், டா. ரோக்லிக், “கணிசமான அளவுக்கு நீரழிவு நோய் வருவதைத் தடுக்கமுடியும். ஆனால், நாம் உரிய தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கவில்லையானால், தீவிரமானதும், உடல் நலத்தைக் குலைப்பதும், உயிரை குடிப்பதுமான இந்த வியாதி நிலை, உலகை மிகவும் பாதிக்கும்.
 மேலும் சொல்ல இருக்கிறதா? என்ற எதிரொலி கேட்கிறது. ஆம். இருக்கிறது. கேட்டால் பார்க்கலாம்.

(தொடரும்)

இன்னம்பூரான்

14 11 2011

___________________________________






இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

வண்ணாத்திக்கு வண்ணான் மேலெ ஆசை! ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும்: II 4

Dear Friends,

Today, we shall be celebrating the birthday of our First Prime Minister, Pandit Jawaharlal Nehru in different fora. The Congress party, of which he was a pillar,, is introducing a peevish element into it; To my mind, he’d frown upon this misadventure. Let us leave it aside and turn our attention to his favorite theme -children. today is ChIldren Day as well. Perchance, the quote in Neighbors 3, my thread in English is about bringing up children. I place below my note on him, three years ago.

With warm greetings
Innamburan

14 11 14


அன்றொரு நாள்: நவம்பர் 14: வண்ணாத்திக்கு வண்ணான் மேலெ ஆசை!
22 messages

Innamburan Innamburan Sun, Nov 13, 2011 at 7:31 PM

To: mintamil 

அன்றொரு நாள்: நவம்பர் 14:
வண்ணாத்திக்கு வண்ணான் மேலெ ஆசை!
ஜவஹர்லால் நேரு (14 11 1889 ~27 05 1964)

விடுதலை வீரர். மஹாத்மா காந்தியின் அரசியல் வாரிசு. இந்தியாவின் நீண்டகால முதல் பிரதமர். குழந்தைகளின் நண்பர். இன்று குழந்தைகள்   தினமாக விழா எடுப்பது முற்றிலும் பொருத்தமே. குமரியிலிருந்து லடாக் வரை, மேற்குக்கோடி ‘ரன் ஆஃப் கட்ச்’ லிருந்து கிழக்குக்கோடி24 பர்காணா வரை பெரும்பாலான இந்திய குடும்பங்கள் இவரை உறவினராகப் பாவித்தன. அவரை பற்றி எதை எழுதுவது? எதை விடுவது? எது தான் உங்களுக்கு தெரியாதது!  அக்காலம் அறியா தற்காலத்தவர்கள் சிலர் அவரை கடுமையாக விமரிசிப்பது உண்டு. ஒரு காலகட்டத்தில் இதழியல் மேதை ராமானந்த சட்டர்ஜி ( அவர் மூன்று தலைமுறைகளின் விழிப்புணர்ச்சியை உரம் போட்டு வளர்த்தவர்)  பிரசுரித்த மாடர்ன் ரிவ்யூவில் நேருவை கண்டிக்கும் போக்கில் ஒரு கட்டுரை வந்தது; ஒரே எதிர்ப்பு. பிறகு தான் தெரியவந்தது, அது அவரே எழுதியது என்று.  அந்த நேரு தற்கால விமர்சனங்களை, அவை உரிமை பிரகடனங்கள் என்று அனுமதித்து விடுவார்.
மனதில் இத்தருணம் தோன்றும் சில நினைவுகளை மட்டும் அசை போடுகிறேன்.

என்றோ படித்தது: ஜவஹர் கல்யாணத்திற்கு, அலஹாபாதிலிருந்து ஒரு பிரத்யேக ரயில் வண்டியில் மாப்பிள்ளை வீட்டார் டில்லி சென்றார்கள் என்று.
மெளண்ட்பேட்டனிடம் நேருஜி அமைச்சர்கள் பட்டியல் இருந்த கவரை கொடுத்தார். பிரித்தால் வெத்துப்பேப்பர்! அத்தனை நெருக்கடி. ஞாபகமறதி. இந்த மாதிரி 500 பக்கங்கள் எழுதலாம், இன்றே.

அப்பா சொன்னது: மோதிலால் நேருவின் மாளிகை ‘ஸ்வராஜ்பவன்’ அவரால் ஒரே மகன் ஜவஹர் பேரில் கிரயம் செய்யப்படுகிறது. மகனாக அல்ல. காங்கிரஸ் கட்சியின் அக்ராசனராக. பார்த்தது: நான் நேருஜியை ஆவடி காங்கிரஸ்ஸில் முதல் முறையாக பார்த்தேன். ஜன வெள்ளம். ஜிப்பா ஜேபியில் இருந்த மூக்குக்கண்ணாடியை தேடி, அமர்க்களப்படுத்தி விட்டு, அது கிடைத்தவுடன் அவர் சிரித்த அசட்டுச்சிரிப்பின் வசீகரம் அபரிமிதம், போங்கள்!. பிறகு, 1961-2 என்று ஞாபகம். ஆம். சொன்னதை எல்லாம் மறுபடியும் சொல்கிறேனோ? வயசு ஆயிடுத்தோல்லியோ! மின் தமிழில் புதியவர் வருகையும் உளது. சித்தரஞ்சன் ரயில் இஞ்சின் தொழிற்சாலைக்கு வந்திருந்தார். தேனீர் விருந்தின் போது என் மகனை தூக்கிவைத்துக்கொண்டார். இருவரும் ஒரே சமோசாவை சுவைத்தனர். இரவு விருந்தில் ரொம்பவும் சகஜமாகப் பழகினார். அப்பாவும் பொண்ணுமாக, அவரும் வஸந்தாவும் பேசி மகிழ்ந்தனர். என் கையில் கட்டு. கேலி செய்தார். மறு நாள், அசன்சால் ரயில் நிலையத்தில், வரும் ரயில் வண்டியில், கதவைத் திறந்து கொண்டு நிற்கிறார்! செக்யூரிடியாவது! மண்ணாங்கட்டியாவது! ஒரே ஆரவாரம். மக்களுக்கு அவர் வண்ணாத்தி. அவருக்கு மக்கள் வண்ணன். அப்படி ஒரு ஆசை. 

அடுத்த வருடமே, அவர் அலுவலகம் இருக்கும் கட்டிடத்தில் எனக்குப் பணி. அடிக்கடி தரிசனம் கிடைக்கும். வழி விட்டு, நமஸ்தே சொன்னால், அவரும் பதில் மரியாதை தெரிவிப்பார். ஒரு நாள் எதிர்பாராத விதமாக பார்த்துக்கொண்டபோது, அவருடைய சிவந்த முகம், கருப்பாக, குழம்பிக்கிடந்தது. அத்வானத்தைப்பார்த்து நடந்தார். மரியாதையுடன் தள்ளி நின்ற நாங்கள் யாருமே அவர் கண்ணில் படவில்லை. பிறகு தான் தெரிந்தது, ராணுவ அமைச்சர் வீ.கே.கிருஷ்ணமேனனிடன் ராஜிநாமா கடிதம் வாங்கச்சென்றார், என்று. வீ.கே.க. அவருடைய நண்பர். சைனா யுத்தம் உச்சகட்டம். யாருக்கும் வீ.கே.கே. மீது நம்பிக்கை இல்லை. இருந்தும், பண்புடன் நண்பரை நடத்தினார், பிரதமர்.

எனக்கோ பார்லிமெண்ட் ட்யூட்டி. ஓடினேன். ஒய்.பி.சவான் புதிய ராணுவ அமைச்சர் என்று பிரதமர் அறிவித்தவுடன் கரகோஷம் வானை பிளந்தது. அருகில் இருந்தேனா! அவருடைய அகத்தில் மகிழ்ச்சி இருந்ததாக, முகத்தில் தெரியவில்லை. குடியரசு தினவிழா. சைனா யுத்தம். உச்சகட்டம். பிரதமரின் தலைமையில் ராஜ்பத் ராஜபாட்டையில் நடை ஊர்வலம். இப்படியெல்லாம் தற்காலத்தலைமுறையால் கற்பனை கூட செய்யமுடியாது. ஜான் லால் ஐ.சி.எஸ். தலைமையில் ஒரு இருவர் குழு, பிரதமரை அடை காத்து, மேடைக்கு அழைத்து வர. அடியேன் இரண்டாமவன். அந்தக்காலத்தில் தடால் புடால் ஏற்பாடுகள் கிடையாது. துணியாய் துவண்டு வந்து சேர்ந்தார், நேருஜி. கவலையுடன் டாக்டர்கள். அவருடைய பழைய கேடிலக் காரில் ஏற்றி செல்ல வேண்டும் என்று திட்டம். அது வசமாக கேட்டுக்கதவில் சிக்கிக்கொண்டது. ஏதோ குருட்டு அதிர்ஷ்டம், என் வசம் ஒரு ஜீப் ரகஸ்யமாக இருந்தது. காரிலிருந்து இறக்கி, இவரை ஜீப்பில் ஏற்றிக்கொள்வதற்குள் அவசரம். ஜனாதிபதியின் சாரட் மேடையை நெருங்கிவிட்டது. பிரதமர் அவரை வரவேற்கவேண்டும். கைபேசியாவது, கால் பேசியாவது! எப்படியோ சங்கேதம் செய்து சாரட் புரவிகளை சற்றே தாமதப்படுத்தினோம். ஜீப்பில் ஏறியவுடன் புன்முறுவல். களைத்த புன்முறுவல். அந்தக்காலத்து அதிகாரிகளின் பண்பு போற்றத்தக்கது. திரு.ஜான் லால் என்னை அறிமுகப்படுத்தி, ஜீப் ரகசியத்தை உடைத்தார். ‘ஹோஷியார் லட்கா ஹை’ என்றார், நேருஜி. எனக்கு உச்சி குளிர்ந்தது.

பிறகு ஒரு நாள், நேருஜி மீது திரு.ராம் மனோஹர் லோஹியா நம்பிக்கையில்லா தீர்மானம் கொணர்ந்தார். உத்தியோகஸ்தர் வரிசையில் எக்கச்சக்ககூட்டம். முண்டியடித்துக்கொண்டு , ஒத்தைக்கால் தவத்தில் நின்று குறிப்பு எடுத்தேன். கடுமையான தாக்குதல். லோஹியாவும் நேருவும், விடுதலைப்போரில் தோளுக்குத் தோள் கொடுத்த நண்பர்கள். லோஹியா வீசிய கடுஞ்சொற்களின் சூடு தகித்தது. நேருவின் முகத்தில் உணர்ச்சி கொப்பளித்தது. ஆனால், பாருங்கள். தேதி/தொடர்பு நினைவில் இல்லை. லோஹியா சிறையில். ஜன்ம தினம். ஒரு கூடை அல்ஃபான்சா மாம்பழம். அனுப்பியது, அவரை சிறையிலிட்ட நேருஜி.
ஒரு நாள் வசமாக மாட்டிக்கொண்டோம். ஒரு ஆவணத்தில், வரிசையாக, மூன்று ஸெளந்தரராஜன்கள்! பிரதமரின் வியங்கோள் வினா: Who are these Soundararajans?. எங்கள் உயரதிகாரி ஹரீஷ் ஸரீன் ஐ.சி.எஸ் அவர்கள் பிரதமரிடம் நல்ல பரிச்சியம் உள்ளவர். அவர் ஒரு நாள், ஏதோ ஒரு பிரமேயமாக, இவர்கள் தான் அந்த திரிமூர்த்திகள் என்று சொல்லி வைத்தார். கொள்ளை சிரிப்பு.

நான் 1964ல் மாற்றல் செய்யப்பட்டு வேறு வேலையில் சேர்ந்து விட்டேன். 25 வருடங்கள் கழித்து நேருபூமியான அலஹாபாத்தில் வேலை. அக்காலம் ஸ்வராஜ் பவனில் ஏலம். நேருஜியின் உடைமைகள் சில ஏலம் போடப்பட்டன. எனக்குக் கட்டுப்படியாகாத விலையில் போன அங்கவஸ்திரம் ஒன்றை அலுவலக செலவில், முறையான விதிகள் படி, வாங்கி, கண்ணாடி போட்டு வைத்தேன். என் செலவில் ஒரு கம்பிளைச்சால்வை வாங்கிக்கொண்டேன். இப்போது நல்ல குளிர், இங்கே. போத்திக்கொண்டு இருக்கிறேன், இப்போது.
இன்னம்பூரான்
14 11 2011

GSun, Nov 13, 2011 at 8:23 PM

பசுமை நிறைந்த நினைவுகளே,
பாடிக்களித்த பறவைகளே
என்று பாடலாம் போல் இருக்கிறது உங்கள் நினைவலைகள். 
அக்காலம் அறியா தற்காலத்தவர்கள் சிலர் அவரை கடுமையாக விமரிசிப்பது உண்டு//
இதில் நானும் உண்டு.  ஆகவே உங்களுக்குத் தெரிந்ததை சொல்லக் கூடியவற்றைக் கட்டாயம் பகிர்ந்து கொள்ளுங்கள். பகிர்வுக்கு நன்றி.

2011/11/13 Innamburan Innamburan <innamburan@gmail.com>

அன்றொரு நாள்: நவம்பர் 14:
வண்ணாத்திக்கு வண்ணான் மேலெ ஆசை!

இன்னம்பூரான்
14 11 2011

செ Sun, Nov 13, 2011 at 11:01 PM

இந்த இழை ஒரு வரலாற்று பேழை.

Mon, Nov 14, 2011 at 2:09 AM

நன்றி ஐயா நினைவுகளைப் பகிர்ந்து பதிப்மைக்கு. இளைஞர் படித்துப் பயன் பெற வேண்டிய தகவல்கள் பலவும்... இவ்விழைகளில் வருகின்றன.
“இந்த இழை ஒரு வரலாற்றுப் பேழை“ மட்டுமல்ல நினைவுகளின் சுரங்கமும் கூட..... தோண்டத்தோண்ட தங்கக்கட்டிகள்....
தொடருக....


--

rMon, Nov 14, 2011 at 2:21 AM

நல்ல, கூர்மையான, இளமைக்கால நினைவுகள்!
எனக்கும் நேரு மாமா பத்திக் கொஞ்சம் தெரியும்! அவர் பிறந்த நாள் குழந்தைகள் நாள் என்று முதல் முதலாக அறிவிக்கப்பட்டபோது பள்ளியில் ஒரு பச்சை சோப்பு டப்பா பரிசு கொடுத்தார்கள் எனக்கு! ஏன் என்று எனக்குப் புரியவில்லை! :-)….

cMon, Nov 14, 2011 at 5:15 AM

ஆகா, அருமை .... மறைந்திருக்கும் புதையல் அனைத்தும் மெல்ல மெல்ல வெளி வரும் போல் உள்ளதே..... இ ஐயா செய்யும் மாயம் இப்போதெல்லாம் எல்லை கடந்து கொண்டிருக்கிறது.... வாழ்க வாழ்க பல்லாயிரம் ஆண்டு! ராஜம் அம்மா, சீதாம்மா பேரா. நாகராஜன் ஐயா , கண்ண் பரமாத்மா....இப்படி அனைத்து புதையல் தளங்களையும் இழுத்துக் கொண்டு வந்து வெளிப்படுத்த வேறு யாரால் ஆகும்.... சூப்பரோ சூப்பர்!
[Quoted text hidden]
--

                                                            


Nehru-1.tif
211K

Innamburan Innamburan Mon, Nov 14, 2011 at 7:31 AM

தன்யனானேன். பற்பல தங்கச்சுரங்கங்கள்.   சாம்பவசிவத்தின் அப்பா, திருநாவுக்கரசின் தந்தை, புலவர் முத்துக்கருப்பனாரின் தந்தை போன்றோரின் பாமரகீர்த்தி வரவேண்டும். ஒரு வேடிக்கை. அந்த சிறியக்கூட்டத்தில், நேருஜி என் மூன்று வயது மகனை தட்டிக்கொடுத்தார். அவன் ஹிந்தியில் அப்போது பிளந்து கட்டுவான். 'முஜ்ஸே ஹாத் மிலாயகா? நஹீன்?' (எனக்கு கைலாகு கொடுப்பீர்களா? இல்லையா?). என்று முறைத்தான். கைலாகு கொடுத்து, தூக்கிக்கொண்டு, பக்கத்தில் இருந்த இருக்கையில் அமர்ந்து, இருவரும் நிதானமாக,சிற்றுண்டி அருந்தினார்கள். நாங்கள் காத தூரத்தில்.இன்னம்பூரான்
14 11 2011
இன்னம்பூரான்
[Quoted text hidden]


Nehru-1.tif
211K

cMon, Nov 14, 2011 at 8:14 AM

எத்துனை அருமையான நினைவலைகள்! புலிக்குப் பிறந்தது பூனையாகுமா என்று நிரூபித்து விட்டார் தங்கள் மகன், முளை விடும் போதே! வாழ்த்துகள் அவருக்கும்.பகிர்விற்கு நன்றி ஐயா.
[Quoted text hidden]
[Quoted text hidden]


Nehru-1.tif
211K

N. K.Mon, Nov 14, 2011 at 10:09 AM

நான் காந்தித்தாத்தாவைப் பார்த்ததில்லை. ஆனால் நேரு மாமாவைப் பார்த்திருக்கிறேன். 

அப்போது மானாமதுரைவாசம். நேருமாமா வைகைப் பாலத்தைக் கடந்து எங்கோ செல்கிறாராம். காலையிலிருந்து கையில் சின்னக் கொடியுடன் நாங்களெல்லாம் பாலத்தின் மீது காத்திருந்தோம். சில மணி வாட்டலுக்குப் பிறகு வண்டி வந்தது. நேருமாமா ஷெர்வாணியுடன் கையசைத்த வண்ணம். சென்ற முறை டெல்லி போன போது இந்த டெல்லி தர்பார் கருப்பு சூட்டொன்று வாங்கி வந்தேன். எப்போதாவது போடுவதுண்டு. (http://www.subaonline.net/nakannan/ ஒரு சின்னப்படம் இங்கு ஒளிந்து கொண்டு இருக்கிறது). எப்படித்தான் அந்த வேகாத வெய்யிலில் அந்தவுடை போட்டுக்கொண்டு சிரிக்க முடிகிறதோ?


2011/11/14
ஆகா, அருமை .... மறைந்திருக்கும் புதையல் அனைத்தும் மெல்ல மெல்ல வெளி வரும் போல் உள்ளதே..... இ ஐயா செய்யும் மாயம் இப்போதெல்லாம் எல்லை கடந்து கொண்டிருக்கிறது.... வாழ்க வாழ்க பல்லாயிரம் ஆண்டு! ராஜம் அம்மா, சீதாம்மா பேரா. நாகராஜன் ஐயா , கண்ண் பரமாத்மா....இப்படி அனைத்து புதையல் தளங்களையும் இழுத்துக் கொண்டு வந்து வெளிப்படுத்த வேறு யாரால் ஆகும்.... சூப்பரோ சூப்பர்!

--



GMon, Nov 14, 2011 at 11:10 AM

தேட வேண்டி இருக்கே படத்திலே.  நானும் பள்ளி நாட்களிலேயே நேருவைப் பார்த்தேன். அனைவரின் நெஞ்சிலும் பசுமையான நினைவுகள்.
2011/11/14 N. Kannan


நா.கண்ணன்

[Quoted text hidden]

Mon, Nov 14, 2011 at 11:13 AM

Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
எழுதுங்க அம்மா.  எங்க குடும்பத்திலே இப்போப் பெரியவங்க அந்தக் காலங்களைப் பற்றிச் சொல்லக் கூடியவர்களே இல்லை. ...  எதிரே ரேடியோ மாமா என்று அழைக்கப்பட்ட ரேடியோ பட்டாபியின் வீடு இருக்கும்.






N. K Mon, Nov 14, 2011 at 11:54 AM

2011/11/14 Geetha Sambasivam
> தேட வேண்டி இருக்கே படத்திலே.  நானும் பள்ளி நாட்களிலேயே நேருவைப்
> பார்த்தேன். அனைவரின் நெஞ்சிலும் பசுமையான நினைவுகள்.
>
படம் பார்த்து கதை சொல் :-))

அது கருப்பு கோட்டு! வட இந்திய மந்திரிகள் போட்டுக்கொள்வது!

க.>

[Quoted text hidden]

rMon, Nov 14, 2011 at 4:29 PM

ஜோரான படங்கள்!! முறைத்த பார்வைக் கண்ணன், அரும்புமீசைக் கண்ணன், குறும்புச் சிரிப்புக் கண்ணன் ... இப்படியெல்லாம் உருவாகிவந்திருக்கிறீர்கள்! "குடும்ப நூலகம்" தொடங்கவேண்டும் என்று ஒரு முறை சொல்லியிருந்தீர்கள். செய்துவிட்டீர்களே! பாராட்டு!
:-) :-) :-)

NMon, Nov 14, 2011 at 11:10 PM

எனக்குக் கூர்தலியல் (பரிணாமவியல்) பிடிக்கும்! அதன் விளைவு. நான்
தொட்டிலில் தவழ்ந்து கொண்டிருக்கும் படமுண்டு. யார் வீட்டில் கிடக்கிறது
என்று தெரியவில்லை. தேடிப்பிடித்து அங்கு போட வேண்டும்.

யாரோ கேட்டார்கள்! நீ பதின்ம வயது கண்ணனாக மாறும் வாய்ப்புக் கிடைத்தால்
போவாயா என்று. மாட்டேன் என்று தோன்றுகிறது. வாழ்வு தந்த அனுபவங்களுக்கு
நன்றியுடையவனாகி இப்போது உள்ள அனுபவப்புரிதலுடன் இருக்கவே ஆசை. மீசை
வைத்துக் கொண்டால் கொரியாவில் பயப்படுகிறார்கள் :-)



2011/11/15 rajam <rajam@earthlink.net>:
> ஜோரான படங்கள்!! முறைத்த பார்வைக் கண்ணன், அரும்புமீசைக் கண்ணன், குறும்புச்
> சிரிப்புக் கண்ணன் ... இப்படியெல்லாம் உருவாகிவந்திருக்கிறீர்கள்! "குடும்ப
> நூலகம்" தொடங்கவேண்டும் என்று ஒரு முறை சொல்லியிருந்தீர்கள்.
> செய்துவிட்டீர்களே! பாராட்டு!
> :-) :-) :-)

[Quoted text hidden]

கி.கா Tue, Nov 15, 2011 at 9:36 AM

ஐயா ‘இ‘னா அவர்களுக்கு வணக்கம்.
> அன்றொரு நாள்:
நவம்பர் 14:
>> ஜவஹர்லால் நேரு (14 11 1889 ~27 05 1964)
>காரைக்குடிக்கு வந்து மத்தியமின் வேதியல் ஆய்வுக் கூடத்தைத் திறந்து
வைத்த போது எடுத்த புகைப்படங்களைப் பார்த்து மகிழ்ந்துள்ளேன்.  அவற்றைச்
சேகரித்து வள்ளல் பிறந்தநாள் அன்று மின்தமிழிலில் வெளியிட
முயற்சிக்கிறேன்.

> மனதில் இத்தருணம் தோன்றும் சில நினைவுகளை மட்டும் அசை போடுகிறேன்.> அடுத்த வருடமே, அவர் அலுவலகம் இருக்கும் கட்டிடத்தில் எனக்குப் பணி. அடிக்கடி
> தரிசனம் கிடைக்கும். வழி விட்டு, நமஸ்தே சொன்னால், அவரும் பதில் மரியாதை
> தெரிவிப்பார்.
இதற்கெல்லாம் ஒரு கொடுப்பினை உள்ளதல்லவா!


> ஏலம். நேருஜியின் உடைமைகள் சில ஏலம் போடப்பட்டன. எனக்குக் கட்டுப்படியாகாத
> விலையில் போன அங்கவஸ்திரம் ஒன்றை அலுவலக செலவில், முறையான விதிகள் படி,
> வாங்கி, கண்ணாடி போட்டு வைத்தேன்.
படம் இருந்தால் அன்போடு போடுமாறு வேண்டுகிறேன்.

என் செலவில் ஒரு கம்பிளைச்சால்வை
> வாங்கிக்கொண்டேன். இப்போது நல்ல குளிர், இங்கே. போத்திக்கொண்டு இருக்கிறேன்,
> இப்போது.
இப்போதும் இப்படியொரு கொடுப்பினை உண்டல்லவோ!
இதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.

அன்பன்
கி.கா.




rose.jpg
3K

கி.காTue, Nov 15, 2011 at 9:39 AM

ஐயா கண்ணன் அவர்களுக்கு வணக்கம்.

சிறுவன், மாணவன், பட்டதாரி, ஆய்வாளர், ஆய்வு நிறைஞர் என அடுத்தடுத்த
படங்கள் அனைத்தும் அருமை. வயது கூடிக்கொண்டே போக.... முடிகுறைந்து கொண்டே
போகிறது.

On 11/15/11, Narayanan Kannan <nkannan@gmail.com> wrote:
> எனக்குக் கூர்தலியல் (பரிணாமவியல்) பிடிக்கும்! அதன் விளைவு. நான்
> தொட்டிலில் தவழ்ந்து கொண்டிருக்கும் படமுண்டு. யார் வீட்டில் கிடக்கிறது
> என்று தெரியவில்லை.குழந்தைப் படத்தையும் பார்க்க ஆவல்.

Innamburan Innamburan Tue, Nov 15, 2011 at 10:09 AM
To: 
நன்றி,  அந்த படங்களை வெளியிடுங்கள். பார் அட் லா அவர்களின் விசிறியாகிய  நான் காரைக்குடி வந்து, மத்திய மின் வேதிய ஆய்வுக்கூடத்தின் முதல் டைரக்டர் டாக்டர் பி.பி.டே அவர்களை பேட்டி கண்டு எங்கேயோ பிரசரிக்கக்கொடுத்தேன். வேதிய ஆய்வில் ஆர்வமிருந்தால், என்னை வேலைக்கு எடுத்துக்கொள்வதாகச் சொன்னார். நான் தான் வேறு திசையில் சென்று விட்டேன்.
[Quoted text hidden]

N. KTue, Nov 15, 2011 at 10:29 AM

2011/11/15 கி.காளைராசன் <kalairajan26@gmail.com>:
> ஐயா கண்ணன் அவர்களுக்கு வணக்கம்.
>
> சிறுவன், மாணவன், பட்டதாரி, ஆய்வாளர், ஆய்வு நிறைஞர் என அடுத்தடுத்த
> படங்கள் அனைத்தும் அருமை. வயது கூடிக்கொண்டே போக.... முடிகுறைந்து கொண்டே
> போகிறது.
>
 Purely genetics! ஐயா!

எனக்கு விவரம் தெரிந்த போது என் தந்தை என் போன்ற தலையுடன்தான் இருந்தார்.

முழுக்க மொட்டையடிக்கூட ஆசையுள்ளது. முடி குறையக் குறைய அழகு கூட
வாய்ப்புள்ளது. என்னைப் பொறுத்தவரை நான் எனக்கு முக்கியம் என்பதை நான்
பார்ப்போருக்கு சகிக்கக்கூடியவனாக உள்ளேனா என்பதில் அக்கறை கொள்கிறேன்.
இது ஆப்பிள் நிறுவனத்தின் நோக்கு!

T TTue, Nov 15, 2011 at 3:57 PM

பார்த்தேன், படித்தேன்

இன்றுதான் இணையத் தொடர்பு கிடைத்தது

மிகவும் அருமை

அன்புடன்

Tue, Nov 15, 2011 at 4:40 PM



முடி குறையக் குறைய அழகு கூட
வாய்ப்புள்ளது.

ஆண்களைப் பொருத்தவரை இது ஓரளவு உண்மையே! :-) அழகு என்பதைவிட மெருகு என்ற சொல் இன்னும் நன்றாகப் பொருந்தும். 


முழுக்க மொட்டையடிக்கூட ஆசையுள்ளது.


முழுக்க மொட்டையடிக்கவும் வேணாம்;  கலிக்கு வந்துவிட்டுப் போகும்வரையிலாவது ... மீசை/தாடி வைத்துக்கொள்ளவும் வேணாம்! மீசை/தாடி எனக்குப் பயம். :-) :-) :-) 


Neighbor 3: Ambrose Bierce

Sweater, n. Garment worn by child when its mother is feeling chilly.” 

-Ambrose Bierce





Ambrose Bierce (1842 - 1914?) pierced through the layers of received wisdom that all of us subscribe to, to some extent or the other.
 An irrepressible writer, his vehemence as a critic, his motto "Nothing matters", and the sardonic view of human nature that informed his work, all earned him the nickname "Bitter Bierce". His father bore the uncommon first name Marcus Aurelius. Ambrose Bierce was known to encourage younger writers; His style often embraces an abrupt beginning, dark imagery, vague references to time, limited descriptions, impossible events and the theme of war. Because of his penchant for biting social criticism and satire, Bierce's long newspaper career was often steeped in controversy. On several occasions his columns stirred up a storm of hostile reaction. His year of death bears a ?. You know why?

Coming to the Quote: he mocks at the brainwashing that the parents indulge in. 

Dissent is welcome. Endorsemant is also welcome. Diversions most welcome.

Reference: Wikipaedia

KYM 8

KYM 8

New Delhi: Vijay Sampla, who was once a plumber, scaled new heights on Sunday with his induction in the Narendra Modi ministry that is apparently aimed at 2017 Assembly polls in Punjab where the BJP hopes to play the Dalit card to woo the Scheduled Caste community.
After SAD leader Harsimrat Kaur Badal, 53-year-old Sampla, a prominent Dalit leader and a first-time MP, is the second Lok Sabha MP from Punjab to become a Union Minister.
Sampla won the recent Lok Sabha elections from the reserved Hoshiarpur seat.
Vijay Sampla, once a plumber becomes a minister in Modi government

Sampla, a prominent Dalit leader and a first-time MP, is the second Lok Sabha MP from Punjab to become a Union Minister.

The BJP had contested the 2012 assembly elections along with Shiromani Akali Dal led by Chief Minister Prakash Singh Badal but following its victory in Assembly polls in neighbouring Haryana there is speculation in political circles that BJP may seek a larger share of seats in Punjab or could even go it alone.
Sampla is a matriculate who had in the past worked in the Gulf as a plumber before setting up his own business in Punjab.
Sampla began his political journey after being elected Sarpanch of his village and has also held several important positions in the state BJP unit including having been its Vice President. He also has been the Chairman of Punjab State Forest Development Corporation and also the Chairman of Punjab State Khadi and Village Industry Board.

Courtsey: IBN Alive

Tuesday, November 11, 2014

தொபக்கட்டீர் ! 2

தொபக்கட்டீர் ! 2

– இன்னம்பூரான். 
‘… விபரீத புத்தி!’ பழமொழிகளை, அதுவும் வடமொழி கலப்பிலே எழுத அச்சமாக இருக்கிறது. ஆனாலும் அவை இயல்பாகவே உண்மை உரைக்கின்றன. சில ஜந்துக்கள், கூண்டோடு கூண்டாக, திருட்டு ஏணியில் வானமேறி, தன்மானம் இழந்தவர்கள். அந்த வெள்ளைக்காலர் திருடர்கள் அபரிமிதமாகவே குழப்பி, ஆட்டைத் தூக்கி மாட்டில் போடுவார்கள். மாட்டைத் தூக்கி ஆட்டில் போடுவார்கள். தலைகீழ் நிற்பார்கள். அர்த்தராத்திரியில் பிடித்தக் குடையை அநாமதேய பினாமிகளுக்கு பரிசளிக்கும் பேமானி ஆவார்கள். எதிர்வீட்டில் அடகு பிடிப்பார்கள். பக்கத்தூர் வங்கியிலே, இல்லாளுக்குகூட தெரியாமல், மர்ம நம்பர் கணக்கு வைப்பார்கள். ஹவாலாவில் மூழ்கி எழுவார்கள். ஏழு தலைமுறைக்கு சொத்து சேர்த்து, பெற்ற பிள்ளைக்குக் கூட கிடைக்காதபடி, முடக்கிப் போடுவார்கள். தருமமிகு சென்னை வீட்டு சொந்தக்காரர்களும், அரசு ஊழியர்களும், காலங்காலமாக, அரசை வஞ்சித்து,கையூட்டு மரபை பேணி வளர்க்கவே, வளர்த்த கடா நெஞ்சில் பாய்கிறது. அப்பன் சேத்த சொத்து, பெற்ற பிள்ளைக்குக் கூட கிடைக்காமல் போகலாம். கடந்த சில வருடங்களில் தலை விரித்து பேயாட்டம் ஆடி, பொது சொத்தை அபகரித்து, விதிமுறைகளை மீறி, பொய்க்கணக்கு எழுதி, பொல்லாதவர்களுடன் கூட்டமைத்த கஜானா களவாளிகள் எக்கச்சக்கம். அவர்களில் பலர் உங்களுக்கு அறிமுகமான பிராணிகள் தான். புலியையும், எலியையும் கூண்டில் வைக்கும் மக்கள், கொசுவையும், ஈயையும் நசுக்கும் நாம், இந்த தருமமிகு சென்னைவாழ் இராக்கதர்களை உலவ விட்டிருக்கிறோம். வேலி நம் நிலத்திலும், அடுத்தவன் நிலத்திலும், புறம்போக்கு நிலத்திலும் மேய்கிறது, கேட்பார் இல்லாமல். எந்த தனிமனிதரையும் சுட்டாத இந்த பொது அறிமுகம் முற்றிற்று. இனி அடைமொழிகள் வாரா. இது இந்த தொடருக்கு சிறப்புப்பாயிரம் என்க. ஒவ்வொரு இழையிலும் இதுவும், ஈற்றடியும் திரும்ப, திரும்ப வரும்.


சீனாவின் மாபெரும் எயில் (சுவர்) உலகப் பிரசித்தி. அதற்குப் போட்டியாக தருமமிகு சென்னையில், நவம்பர் 8, 2014 அன்று ஒரு மாபெரும் வேலியின் திருவுருவம் அவதாரமாகி இருக்கிறது. அதைச் சற்றே அவதானிப்போம். சவுகார்பேட்டையின் நாரயணமுதலி தெருவில், ஜூன் 23, 2014 அன்று ஒரு கட்டிடம் தீயில் உருக, ஒரு உயிர் கருகியது. நமது மதிப்புக்குரிய, உள்ளூர் சுப்ரமண்யம் சுவாமியாகிய ‘ட்ராஃபிக் ராமசாமி அவர்கள், தகுந்த சான்றுகளுடன், சட்டவிரோதமான கட்டிட ஊழல்களை பற்றி ஒரு பொதுநல வழக்குத் தொடர்ந்தார். திடுக்கிட்டுப் போன உயர் நீதிமன்றம் ஆகஸ்ட் 7க்குள் உண்மை நிலவரம் தெரிவிக்க வேண்டும் என்று மாண்புமிகு சென்னை கார்ப்பரேஷனுக்கும், CMDAக்கும் ஆணையிட்டது. குட்டும் வெளிப்பட்டது. கார்ப்பரேஷனின் ஆய்வுப்படி, ஜியார்ஜ் டவுனில் அதற்குட்படுத்தப்பட்ட 11,304 கட்டிடங்களில் 72 தான் முறைப்படி கட்டப்பட்டனவாம். அதாவது ஒன்பது மீட்டருக்கு குறைவான அகலம் உள்ள சாலைகளில் முறைப்படி கட்டப்பட்டவை 0.00063% ! ஒன்பது மீட்டருக்கு அதிகமான அகலம் உள்ள சாலைகளில் முறைப்படி கட்டப்பட்டவை: 66/3146[0.02%]! இது CMDA தகவல். இது ஒரு புறமிருக்க, புரசைவாக்கம் மில்லர் தெருவில், அக்டோபர் 27.2014 அன்று ஒரு கட்டிடம் இடிந்து வீழ்ந்தது. மவுளிப்பாக்கத்து கவுளியின் பிலாக்கண ஓலம் முடிந்தபாடில்லை.

சட்டமீறலை ஒத்துக்கொண்ட அரசு வழக்கறிஞர் குறித்த கெடுவுக்குள் இடிப்பதும் இன்னல், வீட்டு சொந்தக்காரர்களை தண்டிப்பதும் கடினம் என்றதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் ஒரு திட்டம் போட்டுக்கொண்டு வரச்சொல்லி, வழக்கை டிசம்பர் 18க்கு ஒத்தி வைத்தது. டவுன் ப்ளானிங் சட்டப்படி, இடிப்பதைத் தவிர வேறு வழியில்லை. ஜார்ஜ் டவுனில் டாம் டாம் அடிச்சு, டுமீல் வெடி வச்சு இடிச்சாக்கூட மனை மீதி. விலை கூடிப்போகும். லக்ஷம் மாடி வீடு கட்டும் கோடீஸ்வர்கள் வருவார்கள். நூறு வருடத்துக்கு அப்றம், அதையும் இடிச்சு கோடி மாடி வீடு கட்டினாலும் கட்டுவார்கள். மனித ஜன்மம் அப்டி. ரொம்ப விரட்டினா, 1078ம் மாடியில் திடீர் பிள்ளையார் கோயில் கட்டி விடுவார்கள்.

சில வினாக்கள் எழுகின்றன:
1.அரசு அதிகாரிகள்/அரசியல்வாதிகள் அயோக்கியர்கள் என்று வாய் கிழிய பேசுபவர்கள், பொது ஜனம் இழைத்த இந்த ஊழலுக்கு யாரை குற்றம் சாற்றுவார்கள்? தன் தலையிலேயே சகதி வாரி போட்டுப்பார்களா?

2.கூண்டோடு கைலாசம் என்று ஒரு சொலவடை உண்டு. இங்கே கூண்டோடு கையூட்டா? உடலையே ஊட்டு வைப்பார்களோ?

3. எப்படியும் கார்ப்பரேஷன் ஊழியர்களும் CMDA ஊழியர்களும், பெரும்பான்மை மக்களும் செய்த இந்த கூட்டுக்களவாணித்தனத்துக்கு பரிகாரம் என்ன?

4. லஞ்சம் ஒழிக்க வந்த முதல் சட்டத்திலேயே, சந்தானம் கமிட்டி பரிந்துரை படி, லஞ்சம் கொடுத்தவர்களையும் தண்டிக்க வேண்டும். சொத்து குவித்தவர்கள் மீது வழக்குத் தொடர்வது போல், லஞ்சம் கொடுத்ததற்கு ஆவணமில்லை என்றாலும், உண்மை நிலையை ஆராய்ந்து தண்டனை வழங்க வேண்டுமோ?

5.‘டிசம்பர் 18 வரை காத்திருப்போமா, வவுத்துலெ நெருப்பைக்கட்டிக்கொண்டு? கைது செய்! கைது செய்!’ என்று குரல் கொடுத்து, குரல்வவளையை நெறிக்கும் மகாஜனத்தை என்ன செய்யலாம்?!
ஆக மொத்தம் தொபக்கட்டீர் !
எந்த புற்றில் எந்த பாம்போ?!
யாரு கண்டா?


-#-
சித்திரத்துக்கு நன்றி: http://cdn.toonvectors.com/images/35/69723/toonvectors-69723-940.jpg

பிரசுரம்: http://www.vallamai.com/?p=52286

இன்னம்பூரான்
http://innamburan.blogspot.co.uk
http://innamburan.blogspot.de/view/magazine
www.olitamizh.com

KYM7

KYM7


National » Other States

Published: November 12, 2014 03:35 IST | Updated: November 12, 2014 03:35 IST

From activist to Minister, Nadda has come a long way 

Kanwar Yogendra
Jagat Prakash Nadda
Jagat Prakash Nadda

He could be the third pole of power in the already polarised politics of the Bharatiya Janata Party in the State

The rise of Jagat Prakash Nadda from an Akhil Bhartiya Vidyarthi Parishad activist in the sleepy town of Bilaspur to a Union Heath Minister has upset a number of senior leaders in the hill State. He could be the third pole of power in the already polarised politics of the Bharatiya Janata Party in the State between the P.K. Dhumal and Shanta Kumar groups, say party insiders. 
There are some who believe that he would strengthen the Shanta Kumar group that has been pushed into oblivion by the dominant faction led by Mr. Dhumal and his son Anurag Thakur.
The BJP, which came into existence after the failure of the Janata Party experiment in 1980, was led by Mr. Shanta Kumar, who became Chief Minister twice and was considered an unchallenged leader of the party. His supremacy was questioned first by the then PWD Minister and Rajput leader Jagdev Chand. To counter the increasing influence of Mr. Chand, another leader from the district of Hamirpur was propped up by Mr. Kumar. He made Mr. Dhumal, another Rajput leader, to contest and win the Lok Sabha election from the State.
But the BJP’s national leadership preferred Mr. Dhumal over Mr. Kumar in the 1998 Assembly elections and made him the Chief Minister. 
After that there was no looking back for Mr. Dhumal, who became Chief Minister twice and Lok Sabha MP four times before his present post of Leader of Opposition. His son also became a Lok Sabha MP. He is now a BCCI joint secretary and president of the Himachal Cricket Association.
But now with the entry of Mr. Nadda into the national political scene, the party cadre are already looking up to him for a leadership role in the 2017 Assembly elections. 
Printable version | Nov 12, 2014 6:52:49 AM | http://www.thehindu.com/news/national/other-states/from-activist-to-minister-nadda-has-come-a-long-way/article6588352.ece


ஆலப்பாக்கமும் அக்க்ம்பக்கமும் II 3

ஆலப்பாக்கமும் அக்க்ம்பக்கமும் II 3


தமிழ் இலக்கியம் -1

"மையோ! மரகதமோ!மறிகடலோ!மழை முகிலோ!ஐயோ! இவன் வடிவு! என்பதோர் அழியா அழகு உடையான்!

Inline image 1


கம்பன் இராமனின் அழகை வருணனை செய்ய இயலவில்லையே என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்த ஒரு உத்தியை கையாண்டார், ஒரு மங்கலமிழந்த சொல்லை, கவினுணர்வுடன் ஒரு பொலிவுடன் திகழும் செய்யுளில் புகுத்தி. இனி, யாம் இங்கு கம்பராமாயணத்தை பற்றி பேச போவதில்லை. இங்கு பேசப்படுவது இலக்கிய சுவை, தங்கு தடையின்றி, வரையறை இன்றி. இலக்கியசுவை நடை பழக, புலமை இன்றியமையாத தேவை அல்ல. அது தேவையெனில், இந்த இடுகை இத்தருணமே மட்டுறுத்தபடவேண்டும், மாணவர்கள் எழுத துணிவு கொள்ளலாகாது என்ற கோட்பாட்டின் அடிப்படையில். அப்படி ஒன்று இருக்குமானால், அதை புறக்கணித்து, மேலும் எழுத விழைகிறேன்.

ஏன் எழுதுகிறாய்? யாருக்கு எழுதுகிறாய்? போன்ற வினாக்கள் புதியவை அல்ல. இலக்கியத்தின் உடன்பிறப்பே இவை. புகழ் வாய்ந்த படைப்பாளிகளில் பலர், தனக்காகவே எழுதவதாகவும்/ படைப்பு தன்னிச்சையாக நிகழ்ந்ததாகவும்/ யாவருக்கும் எழுதுவதாகவும் சொல்வதுண்டு. சிலர் எழுதுவதுடன் சரி. அவர்கள் இத்தகைய வினாக்களை பொருட்படுத்துவது இல்லை. அவர்களில் யானுமொருவனோ என்ற ஐயம் எழுந்தாலும், எழுதுவது என்னமோ தொடர்கிறது. அது போகட்டும். இன்று மணிமேகலையை பற்றி சில சிந்தனைகள் வலம் வருகின்றன. 

சிலப்பதிகாரத்தை போல் மணிமேகலைக்கு  ரசிகர் பட்டாளமுண்டா என்றால், இல்லை என்று தான் தோற்றம். இங்கு அவற்றை சிலம்பு என்றும், மேகலை என்றும் குறிப்பிடப்படுகிறது. சிலம்பில் காதல் மலர்ந்தது; மேகலையில் அது உலர்ந்தது. சிலம்பு வாழ்வியல் சார்ந்தது; இன்பத்திலிருந்து துன்பம் சென்றடைவது; காப்பியத்தலைவி பத்தினிப்பெண்; சிலம்பு என்ற அஃறிணைப்பொருள் அதன் தலைப்பு. இளங்கோ அடிகள் என்ற சமணத்துறவியினால் இயற்றப்பட்டது. மதசார்பற்றது என்றும் சொல்லலாம். ''...சமயக்கணக்கர் மதிவழி கூறாது, உலகியல் கூறி பொருளிது வென்ற வள்ளுவன்..." என்றார் கல்லாடர். அது இங்கும் தகும் எனலாம்.

மணிமேகலை துறவியல் சார்ந்தது; இன்ப துன்பங்களை கடந்த கருணைக்கடல்; காப்பியத்தலைவி இளம்பெண்துறவி; அவர் பெயரே தலைப்பு; ஆசிரியர் சீர்த்தலை சாத்தனார் என்ற கூலவாணிகன். அங்கு கவுந்தி அடிகளும், இங்கு அறவாணர் என்ற பெளத்த துறவியும் குருமுகம். அங்கு ஊழ்வினை சுற்றி வருகிறது; இங்கு முன்பிறவி சுற்றி வருகிறது. 

வேறுபாடுகள் இவ்வாறு இருப்பினும், சிலம்பை போல் மேகலைக்கு  ரசிகர் பட்டாளம் இல்லை என்பதற்கு அவை காரணமாக இருக்கலாம் என்றாலும், சிலம்பின் தொடர்பே மேகலை. சிலம்பின் தலைவன் மகளே மேகலையின் தலைவி. இரு ஆசிரியர்களும் சம காலத்தவர்; நண்பர்கள். மேகலையின் ஆசிரியரின் உந்துதலால் தான், சிலம்பு படைக்கப்பட்டது. எங்கு சிலம்பு முடிகிறதோ, அங்கு மேகலை தொடர்கிறது. 

மூலம் ஒன்று; மொழிந்த கதை இரண்டு. அமைப்பிலும் ஒப்புமை உண்டு. இரண்டும் முப்பது காதைகளைக் கொண்டவை. அகவலால் ஆனவை. இரண்டும் விழாவில், முறையே மணவிழா, இந்திரவிழாக்களில் தொடங்குகின்றன. குடிமக்கள் காப்பியங்கள், ஊழ், இயற்கை இகந்த நிகழ்ச்சிகள் இரண்டிலும் உண்டு. வரிகள், சொற்றொடர்கள் ஒப்புமை கொண்டுள்ளன. சிலம்பின் சிறு கூற்றுக்கு  பெரு விளக்கம் தருகிறது மேகலை; அது போல் மேகலை செய்திக்குகட்கு சிலம்பு சான்றாக நின்றது... இங்ஙனம் இரண்டும் இணைந்தும், பிணைந்தும் செல்கின்றன. [மது.ச. விமலானந்தம்:2003: தமிழ் இலக்கிய வரலாறு:சென்னை: அபிராமி: ப: 85]

இவ்வாறு இருந்தும், சிலம்பை போல் மேகலைக்கு  ரசிகர் பட்டாளம் இல்லை என்பதற்கு காரணம் மேகலையின் அறிவுரையோ என்றும் வியப்பு தோன்றுகிறது. அதையும் பார்த்து விடுவோம். 
   
   "...அறம் எனப்படுவது யாதெனக் கேட்பின்,
    மறவாது இது கேள்! மன்னுயிர்க்கு எல்லாம்
   உண்டியும் உடையும் உறையுளும் அல்லது
   கண்டது இல்..."

இத்தகைய ஈகையும், கொடையும் பாடாண்திணை இலக்கியத்தில் மட்டும் தான் பொருந்தும், அன்றாட வாழ்க்கையில் இயலாது என்று மேகலையின் இலக்கிய சுவையையும், மறுக்க இயலாத மனிதநேயத்தையும் கண்டு ஒதுக்கி விட்டோமா என்ன?

இது ஒரு புறமிருக்க,  "மையோ! மரகதமோ!மறிகடலோ!மழை முகிலோ!ஐயோ! இவன் வடிவு! என்பதோர் அழியா அழகு உடையான்!
என்பதற்கு ஆங்கிலத்தழுவல் தேடினேன். தேடினேன். தேடிக்களைத்தேன். எனக்குத் தோன்றியது, சைலஜா:
"A thing of beauty is a joy for ever."
(இது முற்றுப்பெறவில்லை.)

இன்னம்பூரான்
24 04 2010
_____________________________________________________________________________________________________________மூன்று வருடங்களுக்கு முந்திய பதிவு ஆயினும், இதற்கு புதிய உயிர்மை பெற அவா. மணிமேகலையை பற்றி என் மாணவப்பதிப்புக்கு பிறகு
அந்த பெருங்காப்பியத்தை பற்றிய முனைவர் ராஜத்தின் அருமையான தொடரொன்று  மின் தமிழில் பதிவானது; மரபுவிக்கியில் சேகரம் செய்யப்பட்டது.
சித்திரத்துக்கு நன்றி:http://poetryinstone.in/wp-content/themes/aspire-10/stampfinal-full.jpg

இன்னம்பூரான்
23 05 2013







இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com