Thursday, January 15, 2015

என்னத்தைச்சொல்ல ? 7: கோலமும் அலங்கோலமும்: ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும்: II [4]



என்னத்தைச்சொல்ல ? 7:
ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும்: II [4]
கோலமும் அலங்கோலமும்
இன்னம்பூரான்
15 01 2015.
மங்கலம் இங்குப் பொங்கவில்லை. கிட்டத்தட்ட 35 வருடங்களுக்கு முன் உயரதிகாரி மாற்றப்பட்டவுடன், ஒப்பந்தங்களின் விலை கூடின என்று ஒரு ஆடிட் ரிப்போர்ட் கொடுத்தேன். மேலாவில் அதை ஏற்க தயங்கினார்கள்: அது புதுமையாக இருந்தது காரணம். ஆனால், சான்றுகள் பலமாக இருந்தன.ஆடிட் ரிப்போர்ட்டில் பிரசுரம் ஆகிவிட்டது. அது போல, ஒரு பொறுப்பான அதிகாரி பத்து வருடங்களுக்கு முன் ஓய்வில் சென்று விட்ட பின் தெலிங்கானாவின் அடிலாபாத் மாவட்டத்தின் ‘கோலம்’ ஆதிவாசிகள் அலங்கோலப்படுத்தப்பட்டனர். அவ்வப்பொழுது தலையெடுக்கும் வியாதி வெக்கைகள் அவர்களை தீர்த்துக்கட்டின. கடந்த குளிர் காலத்தில், ஜெய்னூர், சிர்பூர் மண்டலங்களில் வசித்த 65 கோலம் மக்களில் 20 பேர் மரித்தனர். அரசும் அதிகாரிகளும் அவர்களை தூசு என்று ஒதுக்கிவிட்டதால், அவர்கள் பயங்கரமாக அனாதையாகினர். அரசு அளிக்கும் மக்கள் நல திட்டங்கள் ஒன்றாவது அவர்களை தொடக்கூட இல்லை. சோத்துக்குப் பஞ்சம். 5000 மக்களை பற்றி ஆராய்ந்தபோது, அவர்கள் பயரிட்ட நெல்லை அவர்கள் விற்கவேண்டி இருந்தது. காட்டில் பொறுக்கிய ‘இப்பா’, ‘மஹுவா’ செத்த பிராணிகளின் மாமிசம் போன்றதை வேறு வழியில்லாமல், தின்றதால், உடலில் திடமில்லை. நஞ்சு ஏறியது, உடலில். கல்வி என்று பார்க்கப்போனால், மூன்று வருடங்களாக, பள்ளியாசிரியரே கிடையாது. சின்னஞ்சிறார்களும் கடுமையாக உழைத்தால் தான், கொஞ்சநஞ்ச வருமானம். இன்றும் அதே கதி தான். ரேஷன் அரிசியும் ‘லபக்’. சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் பற்றி அவர்கள் கேள்விப்பட்டது கூட கிடையாது.
ஹீனமான குரலில் கொத்தப்பல்லி கோலம்குடா என்ற நற்நூர் மண்டலத்தின் கிராம ஊழியர், ‘எங்களுக்கு பழையமாதிரி, ஒரு நல்ல மேற்பார்வை அதிகாரி வேண்டும்’ என்று வேண்டுகிறார்.
உரிய அதிகாரம் கொடுத்து அனுப்பினால், நான் சம்பளம் வாங்காமல் அந்த அலங்கோலப்படுத்தப்பட்ட கோலம் மக்களுக்கு உழைக்கத்தயார். 
இவர்களின் இன்னல்களை யார் நமது பிரதமர் மோடிக்கு எடுத்துச்சொல்வார்கள்?

மேற்படி அழுகுரலுக்கு ஆதாரம் கீழே. ஹிந்து இதழ் காப்புரிமை படங்களை நாம் போடக்கூடாது.நீங்கள் ஆதாரத்துக்கு சென்று பார்த்து, ரத்தக்கண்ணீர் விடுங்கள்.

© The Hindu
-#-

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

No comments:

Post a Comment