Saturday, May 16, 2015

நாளொரு பக்கம் 17

நாளொரு பக்கம் 17
Wednesday ,the 11th March 2015



கல்லார்க்கு இன்னா ஒழுகலும், காழ்க் கொண்ட
இல்லாளைக் கோலால் புடைத்தலும், இல்லம்
சிறியாரைக் கொண்டு புகலும், - இம் மூன்றும்
அறியாமையான் வரும் கேடு. 
~ திரிகடுகம் 3

கல்வியும், அதன் நன்கொடையான அறிவும் வாழ்வை சிறப்புற அமைக்கின்றன. கற்றாருக்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு. அன்னாருடைய நட்பு நமக்கும் அறிவை புகட்டி நமது தரத்தை உயர்த்தும். அதை வலியுறத்தவே, புலவர் ‘கல்லார்க்கு இன்னா ஒழுகலும்’ -
கற்றறியாதவருடன் நட்பாய் இருப்பது வேண்டா என்றார். இல்லறம் அல்லது கணவனும் மனைவியும் இங்கிதமாக குடித்தனம் நடத்தினால் தான் நல்லறம் ஆகும். அதை வலியுறத்தவே, ‘காழ்க் கொண்ட
இல்லாளைக் கோலால் புடைத்தலும்’ -கற்புடை மனைவியை அடித்தல் வேண்டா என்றார். அவரவது இல்லங்களில். நல்ல எண்ணம் இல்லாதவர்கள், தரங்கெட்ட இயல்பினர், சிற்றறிவினால் குற்றம் புரிபர்கள் ஆகிய தன்மை உடையவர்களை அனுமதிக்காமல் இருப்பது விவேகம். கற்றறியாதவருடன் நட்பாய் இருப்பதும், கற்புடை மனைவியை அடித்தலும், சிற்றறிவினரை தம் வீட்டுள் சேர்ப்பதும் அறியாமையினால் விளைகின்ற கேடுகளாகும்.
-x-


சித்திரத்துக்கு நன்றி: http://www.muthukamalam.com/images/picture/neededucation.jpg

No comments:

Post a Comment