Saturday, June 20, 2015

நாளொரு பக்கம் 48

நாளொரு பக்கம் 48
Sunday, the 12th April 2015



பெருமை உடையார் இனத்தின் அகறல்,
உரிமை இல் பெண்டிரைக் காமுற்று வாழ்தல்,
விழுமிய அல்ல துணிதல், - இம் மூன்றும்
முழு மக்கள் காதலவை.             
- திரிகடுகம் 9


சான்றோர் பெருந்தன்மை உடையவர்கள். அவர்களின் நட்பு பெருமை தரும். பல விதங்களில் நம்மை மேன்மை படுத்தும். அத்தகைய அருமையான கொடுப்பினையை இழப்பது மதி கெட்ட மாந்தர் செயல். 

இல்லறமல்லது நல்லறமன்று என்பதற்கு நல்லாதனார் ஒரு மென்மையான விளக்கம் தருகிறார். ஆண் பெண் கூடி வாழ்வது தான் இயல்பு. அதன் பொருட்டு திருமணம் போன்ற உரிமை மரபுகள் உளன. அதீதமான காமத்தினால் உந்தப்பட்டு, உரிமை மீறும் வகையில் பெண்டிர் சம்பந்தம் வைத்துக்கொள்வது தகாத செயல்; மூடர்கள் தான் அதில் ஈடுபடுவார்கள். நாம் தான் தினந்தோறும், இதையெல்லாம், ‘சொல்வதெல்லாம் உண்மை!’ என்ற தொல்லைக்காட்சி தொடரில் கண்டு வருகிறோமே! 

இவ்வுலகில் பயனற்ற செயல்களுக்கு பஞ்சமில்லை.  தமிழில் அவற்றை சுட்டுவதற்கு சுவையான பழமொழிகளுண்டு: ‘குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டுவது’, ‘வேலையில்லா அம்பட்டன் பூனையை சிரைத்தானாம்’..... 
தமிழனின் நகைச்சுவை பாராட்டத்தக்கது தான்.
-#-
சித்திரத்துக்கு நன்றி: http://images.sodahead.com/polls/003566617/1519493852_waste_of_time_answer_1_xlarge.jpeg


No comments:

Post a Comment