Sunday, July 5, 2015

நாளொரு பக்கம் 55

நாளொரு பக்கம் 55


Sunday, the 19th April 2015

விளியாதான் கூத்தாட்டுக் காண்டலும், வீழக்
களியாதான் காவாது உரையும், தெளியாதான்
கூரையுள் பல் காலும் சேறலும், - இம் மூன்றும்
ஊர் எலாம் நோவது உடைத்து

- திரிகடுகம் 11

ஒரு நாட்டிய அரங்கம். யாவரும் பார்க்க விழையும் பிரபல நர்த்தகிகளின் நாட்டியம் அறிவிக்கப்பட்டாலும், அழைப்பு இல்லையேல் நுழைவு இல்லை. அங்கு சென்று வாயிற்காப்போரின் மறுப்பை பெறுவது தவிர்க்கக்கூடிய அவமானம். பொது மன்றத்திலோ அல்லது ராஸ்தாவிலோ, ஒருவன், குடி போதையில், உளறிக்கொட்டி, கிளறி மூடுகிறான். ஏளனத்துக்கு ஆளாகிறான்? தேவையா? அன்றே சொன்னாள், அவ்வைப்பாட்டி, ‘ மதியாதார் தலை வாசல் மிதியவேண்டாம்.’ நம்மிடம் நம்பிக்கை இல்லாமலோ, பிடித்தம் இல்லாமலோ, வெறுப்பினாலோ, விலக்க விரும்புவர்கள் இல்லத்துக்கு படையெடுப்பது, அவமதிப்பை தேடிப்பிடிக்கும் அசமஞ்சம். அதையும் தவிர்க்கவேண்டும் என்று உபாயம் சொல்கிறார், நல்லாதனார். 

-#-
சித்திரத்துக்கு நன்றி: http://screencrave.com/wp-content/uploads/2009/05/theunivitedheader09-5-1.jpg

No comments:

Post a Comment