Saturday, June 18, 2016

இன்னம்பூரான் பக்கம் [6] பெண்ணியம்: புதிய பார்வை [2]

இன்னம்பூரான் பக்கம் [6] 
பெண்ணியம்: புதிய பார்வை [2]



பிரசுரம்: http://www.vallamai.com/?p=69673
Saturday, June 18, 2016, 19:01
இன்னம்பூரான்
ஜூன் 16, 2016

கொள்ளிவாய் பிசாசு, பேய், குட்டிச்சாத்தான் ஆகியவை கண்டு அஞ்சுபவர்கள் ஆண் வர்க்கத்தைக் கண்டு நடுங்கவேண்டியதில்லை. ஆண்வர்க்கம் பேய்,பிசாசுகளுக்கு விலக்கு. ‘பெண் என்றால் பேயும் இரங்கும்’ என்பார்கள். ஆண்வர்க்கம் கிறங்குவதுடன் சரி.

சில வருடங்களுக்கு முன் ஒரு மஞ்சள் நீராட்டு விழாவுக்கு அழைப்பு வரவே, எனக்கு செல்லமான அந்த சிறுமிக்கு என்ன பரிசு வாங்கலாம் என்று புரியவில்லை. தருணம் கிடைத்த போது, அவளையே கேட்டேன். ‘… உங்களிடம் கேட்க எனக்கு தயக்கம் இல்லை. எனக்கு இதெல்லாம் என்ன என்றே புரியவில்லை. கொஞ்சம் கிலியாகக் கூட இருக்கிறது. அம்மா ஏதோ கொஞ்சம் சொன்னாள். சரியாக புரியவில்லை. இதையெல்லாம் விளக்கிக் கூறும் புத்தகம் ஒன்றும், ஷீலா அணிந்திருக்கும் நெளி (ஒரு அழகிய வகை மோதிரம்) போல ஒன்று வாங்கி வரவும்…’ என்றாள். [‘பெரியவளான‘ அவள் ஒரு சிறுமி.] 

அவளை, சந்தேகங்கள் மட்டுமல்ல. இனம் தெரியாத பயம் ஒன்றும் சூழ்ந்திருந்தது. அது சில பழைய உண்மை சம்பவங்களை முன் கொணர்ந்தது. கிட்டத்தட்ட எழுபது ஆண்டுகளுக்கு முன் ஒரு கர்நாடகமான குடும்பத்து சிறுமி ஒருவள் பூப்படைந்ததும், குடும்பமே ஒன்று திரண்டு, அந்த நிகழ்வை மறைத்து, உடனடியாக கிடைத்த மாப்பிள்ளைக்கு அவளை வரித்தார்கள்; அவனும் அற்பாயுளில் மறைந்தான். இது எந்த தெய்வத்துக்குப் பிரீதி என்று இன்று கூட எனக்கு புரியவில்லை. அது போகட்டும். அந்த காலகட்டத்து மற்றொரு செய்தியும் கிடைத்தது. பூப்படைந்தவுடன் தனிமை படுத்தப்பட்ட சிறுமிக்கு ஒன்றுமே புரியவில்லை. அச்சமும், பயமும், பீதியும் அவளை ஆட்கொண்டன. ஒரே உதறல். நோ ஆறுதல். பெற்றோர்களுக்கு பட்டு வாங்கவும், புட்டு அவிக்கவும் தான் நேரம் இருந்தது. பாவப்பட்ட அந்த ஜென்மம் துணைக்கு அமர்த்தப்பட்ட சிறுமியை தழுவியவாறு தூங்கினாளாம். இதற்கும் முந்திய இங்கிலாந்து கதை ஒன்று உளது. பூப்படைந்ததை, யாரும் விளக்காததால், ஒரு மர்மமான விகாரமாகக் கருதி ஒரு சிறுமி தன்னையே மாய்த்துக்கொண்டாள். அந்த சோகமான நிகழ்வு ஒரு நன்செயலுக்கு வித்திட்டது. ‘Befrienders International’ என்ற புனிதமான தன்னார்வ அமைப்பு உருவாகி, எத்தனையோ மன சஞ்சலங்களை நிவர்த்தி செய்து, பலரின் வாழ்க்கையை சீர்படுத்தியுள்ளது. அதன் மறுபதிப்பாகத் தான் ‘ஸ்நேஹா’ என்ற அமைப்பு சென்னையில் அற்புதமான சேவை செய்து வருகிறது. சரி, விஷயத்துக்குத் திரும்பி வருவோம்.

பெண்ணியத்தின் புதிய பார்வைக்கு, பெண்ணினம் செய்யக்கூடிய பணிகள் கொஞ்சநஞ்சமில்லை. இந்த தொடரில் ஆணாதிக்கம், வன்முறை, பெண்ணின் மேன்மை, இருபாலாரும், எதிரும் புதிருமாக நிற்காமல் இணைந்து வாழ்வதின் மகிமை, மேலும் பற்பல விஷயங்கள் பேசப்படும். பட்டியலிட்டு, கோர்வையாக எழுதினால் தான் தெளிவு கிடைக்கும். அதனால், எந்ததொரு பகுதியும் பெண்ணியத்தின் புதிய பார்வையின் முழுமையான புத்தகமாக அமையாது. அந்த எல்லையை புரிந்து கொண்டு வரக்கூடிய கருத்துக்கள் மிகவும் உதவும். அவை தாராளமாகவே மாற்றுக்கருத்துக்களாக இருக்கலாம், வசை பாடாமல்.

சிறார்கள் வளர்வதற்கும், சிறுமிகள் வளர்வதற்கும் இடையே பல வித்தியாசங்கள் இருக்கின்றன. அரும்பு மீசையும், கனத்த குரலும், அலை பாயும் கண்களும், முரட்டுத்தனமும் சிறார்கள் வளரும்போது தோன்றும் சின்னங்கள். அவை நல்வரவுகளே. அவனை அவை பாதித்து அலக்கழிப்பதில்லை. கொஞ்சம் விட்டுப்பிடித்தால் (திட்டமிட்டு) அவர்களை சமாளித்து விடலாம். உடலும், மனமும் நன்கு உரமிட்டு வளர உதவமுடியும். சிறுமிகளின் வனப்பு கூடுவதை கலையுணர்வுடன் பார்த்தால் அது ஒரு கண்கொள்ளாக்காட்சி. இறைவனின் வரம். இருபாலாருக்கும் பாலியல் ஈர்ப்பு ஏற்படுவது திண்ணம். அது இயற்கை. உடனுக்குடன் பாலியல் கனவு நனவாகுவது எந்த சமூகத்திலும் இயலாது என்பதால், கலக்கம், குழப்பம், சகபாடிகளிடமிருந்து தப்பும் தவறுமான செய்திகள் ஆகியவை இருபாலாரையும் பாடாய் படுத்தும். இது நாம் யாவரும் அனுபவத்தில் கண்டது தான். 

ஆனாலும் பூப்பெய்வது எப்போது நிகழும் என்பது தெரியாது என்பதாலும், சில பெற்றோர்கள் தக்கதொரு ஆலோசனை அளிப்பதைத் தள்ளிப்போடுவதாலும், அதனுடைய உடனடி பாதிப்பு பீதி அளிப்பதாக இருப்பதாலும், இந்த வாழ்வியல் நிகழ்வை பற்றி ஆண்கள் அறிந்து கொண்டதும், அதற்கு அனுசரித்து நடப்பதும் மிக குறைவு. சற்றே ஆங்கிலம் கலப்பதில் தவறு ஒன்றுமில்லை. செய்தி சேரவேண்டும். அவ்வளவு தான்.முன்னோடியாக ஒரு ஜோக். புருஷனும் பொஞ்சாதியும் (ஷிகாகோ சாதி நூல் நினைவுக்கு வருகிறது.)பலமுறை ஒத்திகை (பெண்ணரசியிடம் பேசவேண்டியதை) பார்த்த பின் அம்மாக்காரி மென்மையாக அணுகி, ‘இந்த பாலியல் விவகாரம்…’ என்று ஆரம்பித்தவுடன், பெண் சொன்னாளாம், ‘உனக்கு என்ன தெரிய வேண்டும். ஆண்டவனை – கூகிளாண்டவனை கேட்டு சொல்கிறேன்’ என்றாளாம் !

“…As knowledge has accumulated about human development during puberty and beyond, and about the development of the brain in particular, it has become clear that the notion of adolescence as a stage of sexual maturation is far too simplistic.

1. Many interlinked neuroendocrine changes and processes influence adolescent behaviour, as well as the way young adults think and make decisions.

2.A better understanding of these changes and their dynamic extension into early adult life offers not only an opportunity for a new approach to minimising risks to health and wellbeing, but also a moment to engage young people during years that have such far-reaching consequences for their future adult life, and even for future generations…”.

சித்திரத்துக்கு நன்றி:

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

No comments:

Post a Comment