Friday, May 20, 2016

இன்னம்பூரான் பக்கம் [5]: அதுவும், இதுவும் [1]

இன்னம்பூரான் பக்கம் [5]: 
அதுவும், இதுவும் [1]
இன்னம்பூரான்
20 05 2016

நாங்கள் பக்தி சுற்றுலா சென்றபோது, ஆலயங்கள் நிறைந்த ஊரொன்றுக்கு சென்றிருந்த போது, நடை சாத்திவிடுவார்களோ என்னமோ, துரித தரிசனம் செய்து வாருங்கள் என்று உள்ளூர் நிருபர் எச்சரித்தார். ‘என்ன? ஏது? எதற்கு காலையில் கோயிலடைக்கவேண்டும்?’ என்று விசாரித்தோம். ஊரில் பெரிசு ஒருவர் தவப்புதல்வர். அவர் சாகக்கிடக்கிறார். விளக்குக்கம்பத்தில் அப்டேட் செய்கிரார்கள் என்றார்கள். 

அப்டேட் பதாகை:
7 15 காலை 24 08 201#: ஐயா மூர்ச்சை.
7 55 காலை 24 08 201#: ஐயா மூர்ச்சை தெளியவில்லை.
6 15 மாலை 24 08 201#: ஐயா ஆஸ்பத்திரியில். டாக்டர்கள் நம்பிக்கை.
7 15 காலை 25 08 201#: ஐயா வெண்டிலேட்டரில். பெரிய டாக்டர் சென்னையிலிருந்து வந்தார்.
7 27 மாலை 25 08 201#: உறவினர்களை கூப்பிடச்சொல்லிவிட்டார், சென்னை டாக்டர். அவர் புறப்பட்டும் போய் விட்டார். கை நிறைய தக்ஷிணை.
7 33 காலை 26  08 201#: ஐயா இயற்கை எய்தினார்.
9  37 காலை 26 08 201#: ஐயா சிவலோக பிராப்தி அடைந்தார் என்று ஊடகங்களில் தகவல்.

10 15 காலை 26 08 201#: சப்பரம் கட்டினார்கள். அமர ஊர்தி அது தான்.

7 15 மாலை 26  08 201#:  தற்காலம் எல்லா லோகங்களும் ஸூப்பர் டூப்பர் இணைய தளத்தில் பேசிக்கிறாங்களே. ஶ்ரீஹரி கோட்டாவுக்கு சிவ லோகத்திலிருந்து எஸ்.எம்.எஸ். ‘அய்யா இன்னும் வரவில்லையே, எங்கே போய்ட்டார்?

உடனே அசரீரி: போக வேண்டிய இடத்துக்கு போயாச்சு, காலை 11 மணி 26 08 அன்று தகனம் ஆனவுடன் !
சித்திரத்துக்கு நன்றி:

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com