Wednesday, August 24, 2016

சுகவனம் 2

Innamburan S.Soundararajan

சுகவனம் 2


Wed, Aug 24, 2016 at 1:57 PM



சுகவனம் 2




இன்னம்பூரான்

செவ்வாய் 23 08 2016

பிரசுரம்: வல்லமை: http://www.vallamai.com/?p=71382#respond

மனம் என்பதின் இருப்பிடம், அதன் வழித்தடங்கள் பற்றிய ஆய்வுகள் கணக்கில் அடங்கா. விஞ்ஞான ரீதியாக, அது மூளையின் செயலே என்ற கருத்து தற்காலம் பெரிதும் பேசப்படுகிறது. ஆழ்மனம் என்றால், அது உடல் அவயவமாகவே தென்படுவதில்லை. ஆனால், நம்மை அது தான் ஆட்டிப்படைக்கிறது என்பது அவரவர் அறிந்ததே. அந்த ஆட்டிப்படைத்தல் உடல் நலத்தை பெரிதும் பாதிக்கும் என்பதும் ஒரு அனுபவக்கூறு. நோயற்ற வாழ்வுக்கு மனோதிடம் உறுதுணை என்பதும் மறுக்க முடியாத சூத்திரம் என்பதை ஐயமுற அறிவதற்கு, 1976 லிருந்து இயங்கும் மேற்படி அமைப்பு மனித இனத்தின் காவல் தெய்வமாக இயங்கி வருகிறது. அண்மையில் அவர்கள் ஒரு நீண்ட ஆய்வின் பயனாக பத்து அறிவுரைகள் வழங்கியுள்ளனர். அதில் முதலாவது பற்றிய பதிவு இது. வாசுதேவன்,ருத்ரா, கோபால், லக்ஷ்மி நாரயணன் போன்றோர் கேட்டால் அவை யாவையும் அலசி, அவரவருக்கு ஏற்புடையதை நடைமுறைக்கு கொணரலாம். தமது உணர்ச்சிகளை இற்செறிக்காதீர்கள். நால்வரிடம் அது பற்றி கலந்தாலோசித்தால், அது பெரிதும் உதவும் என்பது முதல் அறிவுரை, விஞ்ஞான ஆய்வின் அடிப்படையில்.

சற்றே விவரமாக: தன் உணர்ச்சிகளை பகிர்ந்து கொளவது பலவீனமல்ல. அது தன்னலம் போற்றும் அணுகுமுறை. தன்னை பாதுகாத்துக்கொள்ளும் வழி. உன்னை அலக்கழிக்கும் சிக்கலை, அது அவிழ்க்கக் கூடும். இது எளிதில் நடக்கக்கூடியது இல்லை.  தீராத பிரச்னையை விசாலமாக விளக்குவதும் நலனே. அதற்காக, ஒரு பகிர்வை செயற்கையாக அமைத்து விட்டால், வேறு வினை வேண்டாம். இத்தகைய உரையாடல்கள் தான்தோன்றியாக, இயல்பாகவே அமைந்து விட்டால், நீங்கள் ஒரு பாலத்தை கடந்து விடுவீர்கள். முஸ்தீபுகள் செய்து கொள்ளாமல், நண்பர்களிடம் மனம் விட்டு பேசினால், தீர்வு கிடைப்பது எளிதாக அமையும் என்பது ஆய்வின் வெளியீடு. துவக்கும் போது பாலைத்திணை கற்கள் நெருடலாம். அவசரம் இல்லை. காலம் கடந்தாலும், தக்கதொரு சூழ்நிலை ஏற்படுகிறது என்பதும் ஆய்வின் முடிபு எனலாம்.

Mental Health Foundation Copyright © 2016.


சித்திரத்துக்கு நன்றி: 

Monday, August 22, 2016

சுகவனம் 1

Innamburan S.Soundararajan

சுகவனம் 1


Mon, Aug 22, 2016 at 3:17 PM


சுகவனம் 1


இன்னம்பூரான்
திங்கள்: 22/23 08 2016

பிரசுரம்: வல்லமை: http://www.vallamai.com/?p=71310

‘சுகவனம்’ என்ற இந்த தொடர் ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்று துவக்கப்பட்டதின் நீடிப்பு. உரியகாலம் இப்போது தான் வந்ததோ என்னவோ? சுகவனம் இயற்கை வளம் பொருந்திய கானகம் என்க. அது அவரவர் ஆரோக்கியத்தை அவரவரே கண்காணித்துக்கொள்ளவேண்டும் என்ற ஆர்வத்தின் உருவகம். அந்த விழிப்புணர்ச்சிக்கு அரசும், சமுதாயமும், மருத்துவ உலகமும் கைகொடுக்கவேண்டும். அவ்வாறு அவர்கள் இயங்காவிடின் அவர்களை நாம் வற்புறுத்தி, நல்வழிக்குக் கொணரவேண்டும்.

சான்றாக, கவிஞர் நா.முத்துக்குமார் அவர்களின் அகாலமரணம் கலையுலகுக்கும், கவிதையுலகுக்கும் மாபெரும் இழப்பு. மக்களின் சுகவனம் பற்றி நமது நாட்டில் அரசின்/ சமுதாயத்தின் கோட்பாடுகள் நோயாளியை வியாதியிலிருந்து மீட்க, அவரை முன்னிறுத்தி செயல்படவேண்டும். காமாலை நோயால் அவர் இறந்ததை எளிதில் தவிர்த்திருக்க முடியும் என்பதால், சோகமும் ஆத்திரமும் எனக்கு ஏற்படுகிறது. பல வருடங்களுக்கு முன்னால் டாக்டர் பார்த்தசாரதி என்ற மயக்கமருந்து கொடுக்கும் இளவயது மருத்துவர் காமாலையால் இறந்தார். அது அறுவை சிகிச்சை மையத்தில், சிக்கனம் கருதியோ, அக்கரையில்லாததாலோ, டாக்டர்களுக்கு பாதுகாப்பு வளையம் சரியாக அமையவில்லை. அவர் பலி கொடுக்கப்பட்டார். பல வருடங்களுக்கு முன், சென்னையில் ஒரு பிரபல ஆஸ்பத்திரியின் தலைவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க, அவர் கொடுத்த சுதந்திரத்தை பிரயோகித்து ஒரு தணிக்கை செய்து நான் அமைத்த ஒரு மூவர் குழு பல பரிந்துரைகளை அளித்தது. அவற்றை, உரிய நேரத்தில் கூறுகிறேன். ஒன்று மட்டும் இப்போது. அறுவை சிகிச்சை டாக்டர்களின் உயிரும் வெல்லம் தான். அவர்கள் ஒரு திரவத்தை அள்ளி, அள்ளி பூசிக்கொண்டு தான் அறுவை சிகிச்சைக்கு ஆயத்தம் செய்து கொள்வார்கள். அந்த ஆஸ்பத்திரியில் காலாவதியான திரவம் தரப்பட்டிருந்தது. அவற்றையெல்லாம் திரட்டி நாசம் செய்தேன். தலைவர் ஆமோதித்தார். இதை சொல்லவருவதற்குக் காரணம்: காமாலை நோயை மருத்துவர்கள் கையாளும் முறையில் உள்ள தவறுகள். சான்று கீழே உள்ள ஆங்கில ஆய்வுக் கட்டுரையின் சுருக்கமான தமிழாக்கமும், மூலமும்:

சுகவனம் நோயாளியின் நலனுக்கு முதல் மரியாதை கொடுக்கவேண்டும். 2014ஆம் வருடத்தில் அமல்படுத்தப்பட்ட சிகிச்சை முறைகள் காமாலை வியாதியை குணப்படுத்துவதில் ஒரு புரட்சியே கண்டது. அதன்படி பெரும்பாலான நோயாளிகளை குணப்படுத்த முடியும். ஆனால் மூன்று மாத சிகிச்சை திட்டத்தின் விலை லக்ஷக்கணக்கில் ஆகும். அமெரிக்காவில் கூட அந்தத் திட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டும் என்ற நடைமுறை. மற்றவர்களுக்கு அவஸ்தை தான் மிஞ்சும். இந்த அணுகுமுறை, மருத்துவ கோட்பாடுகளை மீறுகிறது. விஞ்ஞானம் இதை ஆதரிக்கவில்லை. மக்கள் சுகாதாரம் நாடி எடுக்கும் வழிமுறைகளை நீர்க்கச் செய்து விடுகிறது. மூலக்கட்டுரை படைத்த ஆய்வாளர் [Brian.R.Edin], இந்த தவறான அணுகுமுறையை டாக்டர்களும், அரசும் ஒழிக்கவேண்டும் என்கிறார். ஆங்கில மூலமும், அதன் மூலமும் கீழே.

இந்தியாவில் கேட்கவேண்டாம். அண்மையில் எனக்கு ஒரு அறுவை சிகிச்சை நடந்தது. அதற்காக, இங்கிலாந்திலிருந்து வந்திருந்த என் மைந்தன், ஒரு மயக்கமருந்து ஸ்பெஷலிஸ்ட்; வலி நிவாரணம், உறக்கம் சம்பந்தமான இன்னல்கள் ஆகியவற்றை ஆய்வு செய்பவர். அவர் இங்கு வியாதியஸ்தர்கள் படும் பாட்டைக் கண்டு திகைத்துப்போனார். இங்கு எல்லாமே சடங்குகள், சம்பிரதாயங்கள். வியாதியஸ்தன் ஒரு நம்பர். இந்த சூழ்நிலையில், தான் செய்த படைப்புகளுக்கு புகழ் பெற்று, திரவியம் இழந்த கவிஞர் நா.முத்துக்குமார் அத்யாவசியமான மருந்துகள் கொடுக்கப்பட்டாரா என்ற ஐயம் எழுகிறது. சிலருக்கு நினைவு இருக்கலாம். என் நண்பரும் தலித் கதாசிரியருமான திரு.க.சமுத்திரம் ஒரு விபத்துக்குள்ளானர். நினைவிழந்த அவரால் தன் நிலை கூற இயலவில்லை. மற்றவர் சொன்னதை அந்த தனியார் ஆஸ்பத்திரி ஏற்க வில்லை. காசு வை முதலில் என்று நிர்பந்தித்தார்கள். அவர் இறந்து போனார்.



Sound health policy puts patients first. Antiviral regimens approved in 2014 revolutionised treatment of hepatitis C virus (HCV) infection. Most patients can now be cured. These new regimens, however, were priced at US$83 320–150 000 for a 3-month course. Public and private payers in the USA responded by limiting coverage to patients with advanced fibrosis or cirrhosis, keeping the drugs from being used to prevent those stages. These restrictions defy medical guidelines, lack scientific justification, and undermine public health efforts to stem transmission. Instead of reducing barriers to care, the system has இன்னம்பூராerected new ones. As drug makers and payers battle over billions of dollars, the needs of patients have been cast aside. Physicians and governments have a duty to make sure health policy is driven by the needs of patients and public health. In this Personal View, I call upon these groups to lead the creation of a national consensus among all stakeholders that will allow the advances in therapeutics for HCV infection to be put to work to end the epidemic.


சித்திரத்துக்கு நன்றி: